05 ஏப்ரல் 2020

Covid 19 காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.

எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள்  தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:

முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர  இடைவெளியைப் பேண வேண்டும்;

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள்  ஒரே குளியலறையை /  கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);

உணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;

தும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய  தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;

பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில்  இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு  அப்புறப்படுத்துங்கள்;

மிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,

அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும்  தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.

சிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.


Srilanka  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!