14 டிசம்பர் 2020

கருங்காலி


🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது

🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே எமது வனங்களில் வளர்ந்து பயன் தந்த நமது மரங்களில் ஒன்று கருங்காலி. எமது வளங்களில் ஒன்றாக காலநிலையை  சீர்ப்படுத்தி, பருவ காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட பெரு மரங்கள் கருங்காலி, நீல வேம்பு, முதுரை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டு இலங்கையில் இயற்கை வனங்கள் வெறும் 20 % அளவில் சுருங்கி இருக்கின்றன. மீண்டும் காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவது மென்மேலும் இயற்கையை  சினம் கொள்ள வைக்கும்.

அதனால் எமது நோக்கம் மரங்களை அழிப்பதாக,  தற்காலிக பொருளாதார நோக்கம் கொண்டதாக இருக்காமல் அழிக்கப்பட்ட மரங்களை உருவாக்கி எமது பெருளாதாரத்தை நிலையானதாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு தரும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். 

அழிந்து வரும் பெரு விருட்சங்கள் மீண்டும் துளிர்க்க வேண்டும்.

🌺 கருங்காலி தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரத்தை  பச்சைத் தங்கம் என்பார்கள்.

🌺 கருங்காலிப் பயலே’ என்று எதற்கும் அசையாத உறுதி கொண்ட மனிதர்களையும் 

„“கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் “ என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.

🖤 கருங்காலி மரங்களை கருங்காலியாலான பிடியுடைய கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி துரோகத்தின் சின்னமானது. மரம் வெட்டும் கோடாலி மண்வெட்டிகளுக்கு கைப்பிடியாக கருங்காலி மர கம்புகள் பயன்படுத்ததும்  காரணத்தால் கூட இருந்து குழி பறிக்கும் நபரை “கருங்காலி“ என்றும் கூறுவர்.

🌳கருங்காலி மரம்

கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன. இம்மரம்  அரிதாகவே காணப்படுகிறது. தூய கருப்பு கருங்காலி 150 வயதுக்கு மேற்பட்ட மரங்களிலிருந்து மட்டுமே வருகிறது.

🚫 இலங்கையில், கருங்காலி ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் மற்றும் கருங்காலி அறுவடை மற்றும் விற்பனை சட்டவிரோதமானது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

🚫 இந்திய வனத்துறையால் காடுகள் மற்றும் மலைகளில் வெட்ட அரசால் தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் அழிந்து வரும் மர இனங்களில் ஒன்றாகும்.  

✅ மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. கருங்காலி அற்புதமான மருத்துவக் குணங்கள் கொண்ட அபூர்வமான மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முற்றிய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறும். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும். 

மரங்கள் மனிதனுக்கு ஆதாரமானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். நல்ல சக்திகளை(passitive Energy) நமக்கு பெற்று தந்து நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை(negative Energy) களையும் மாற்றும் ஆற்றல் கருங்காலி மரத்திற்க்கு உண்டு.

கருங்காலி ஒரு அடர்த்தியான கருப்பு / பழுப்பு கடின மரமாகும், கருங்காலியில் Diospyros பல இனங்கள் உண்டு.  இதில் பெர்சிமோன்களும் உள்ளன. 

Ebony Tree Trivia மற்ற வகை மர கருங்காலிகளைப் போலல்லாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்க முடியாது. அது மிகவும் அடர்த்தியானது, அது கீழே மூழ்கும்.. இது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மெருகூட்டும்போது கண்ணாடி போல் பளபளக்கும்அ.லங்கார மரமாக மதிப்புமிக்கதாக மாறுகின்றது. 

“கருங்காலி “என்ற சொல் பண்டைய எகிப்திய hbny இலிருந்து பண்டைய கிரேக்கம் throughβενος (enbenos) வழியாக, லத்தீன் மற்றும் மத்திய ஆங்கிலத்தில் வந்தது. பண்டைய எகிப்திய கல்லறைகளில் செதுக்கப்பட்ட துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட பயன்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. 

எகிப்தில், கருங்காலி பெரும்பாலும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது பின்னர், ரோமானியப் பேரரசும் கருங்காலி மரத்திற்கான தேவையில்  பெரும்பகுதி இந்திய Diospyros இனங்களால் பூர்த்தி செய்யப்பட்டது.  இந்தியாவில் இருந்து முக்கியமாக வர்த்தகம் செய்யப்படும் இரண்டு கருங்காலி இனங்கள் D. melanoxylon மற்றும் D. ebenum ஆகும். 

இருப்பினும், D. ebenum  "கோடுகள் அல்லது அடையாளங்கள் இல்லாமல் ஒரு கருப்பு மரத்தை மட்டுமே தருகிறது ..." 

இந்த மரம் முதன்முதலில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமுக்கு கொண்டு வரப்பட்டது. மற்றும் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பாவின் ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவில் கருங்காலி அறுவடை செய்யப்பட்டுள்ளது, பிரிட்டிஷ் வருகையின் போது கருங்காலி மரங்கள் பெரிய அளவில் வெட்டப்பட்டது, மிகவும் அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துவதன் பெருகி வளர  விடப்படவில்லை. துணைக் கண்டத்தில் இனங்கள் அதிகம் வளர விடப்படவில்லை, 

இலங்கையில் (அப்போதைய இலங்கை) ஆங்கிலேயர்களுக்கு மிகவும் தேவைப்படும்  ஏராளமான மரங்கள் இருந்தன. இந்த மரத்தின் முக்கிய ஆதாரமாக சில பங்குகள் பெரிதும்  அழிந்து விட்டாலும் இன்றும் உள்ளன. 

உயிரினங்களின் உயர் மதிப்பு மற்றும் விஞ்ஞான நிர்வாகத்துடன் உறுதியளிக்கும் திறன் இருந்தபோதிலும் அது விஞ்ஞான உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. இலங்கை இந்தியாவின்  இம்மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை செய்து உள்ளது. 

🌳
கருங்காலி மரம் பொதுவான பெயர்கள்:

Gaboon கருங்காலி, ஆப்பிரிக்க கருங்காலி, நைஜீரிய கருங்காலி, Cameroon கருங்காலி

கருங்காலி மரங்களின் வகைகள்: வெவ்வேறு கருங்காலி மர வகைகள்:

• அமெரிக்க கருங்காலி மரம், டியோஸ்பைரஸ் வர்ஜீனியா

• கருப்பு கருங்காலி மரம்

• இலங்கை எபோனி மரம், தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது

• காபோன் கருங்காலி மரம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது

• மக்காசர் கருங்காலி மரம்இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது 

• மலேசிய பிளாக்வுட் மரம்

• Mun கருங்காலி மரம்

• Persimmon கருங்காலி மரம் 

• Diospyrus வர்ஜீனியா

வெள்ளை கருங்காலி மரம்

✳️ கருங்காலி இனங்களில் தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Diospyros ebenum (சிலோன் கருங்காலி) வானிலை மற்றும் காலநிலை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது. 

இன்று கிடைக்காத மிகச் சிறந்த தரம்: மிகவும் கடினமானது, துளைகள் இல்லாமல், மெருகூட்ட எளிதானது.16 - 19 ஆம் நூற்றாண்டுகளில் தளபாடங்கள் கட்டுமானத்தின் சிலோன் கருங்காலி வகையானதாக இருந்தது.

✳️ Kamerun-கருங்காலி (Diospyros crassiflora) மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.இது உலக சந்தையில் மிகவும் பரவலான கருங்காலி ஆகும், இது பெரும்பாலும் ஆழமான கருப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் பெரும்பாலும் சாம்பல் நரம்புகளுடன். சுமார் 10%  மட்டுமே ஒரே மாதிரியான கறுப்பைக் காட்டுகின்றன.

✳️ மடகாஸ்கர் கருங்காலி (Diospyros perrieri) மிகவும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது.இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட Diospyros celebica (சுலவேசி கருங்காலி) மற்றும் அதன் ஆடம்பரமான, பல வண்ண மர தயாரிப்புக்கள்  மதிப்புள்ளது. மொரிஷியஸ் கருங்காலி, Diospyros tessellaria. 

17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் பெரும்பாலும் (16 ஆம் நூற்றாண்டின் முடிவில் ) ஆடம்பர வர்த்தகத்திற்கான சிறந்த பெட்டிகளும் பாரிஸில் தயாரிக்கப் பட்டன. மரத்தின் அடர்த்தியான கடினத்தன்மை சுத்திகரிக்கப்பட்ட மோல்டிங்கிற்கு மிகக் குறைந்த நிவாரணத்தில் (அடிப்படை-நிவாரணம்) வழக்கமாக உருவகப் பாடங்களில் அல்லது செம்மொழி அல்லது கிறிஸ்தவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு செதுக்குவதன் மூலம் மிகச்சிறிய விரிவான சித்திர பேனல்களை ஒரு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்தது. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் மிகச்சிறந்த தச்சர்களுக்கு “எபனிஸ்ட்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது 

கருங்காலி - பிரபஞ்ச ஆற்றல் வாங்கி தரும் ஒரு வங்கி. நீடித்த அறுவடையின் விளைவாக, ஆப்பிரிக்கா  உள்நாட்டு கருங்காலி மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்ட்டு பல இனங்கள் இப்போது மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் ஒன்றாக இருப்பினும் இலங்கை,மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் இம்மரம் வளர்கிறது. 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (அதிக குளிர் மற்றும் குளிர் பிரதேசங்கள் தவிர) கலப்பு இலையுதிர் காடுகளிலும், வனாந்திர மலை அடிவாரங்களிலும் பரவலாக காணப்படும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும்.

🌳

பொதுப்பண்பு :  கருங்காலி மரம் சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.

ஒருங்கமைந்த இலைகளை கொண்டது. 30 – 50 சோடி இலைகள் ஒன்றினைந்து கொத்தாக காணப்படும்.நெற்றானது 10 15 செ.மீ நீளமுடையது மற்றும் 2 – 3 செ.மீ அகன்றது. பூக்கள் வெண்மையானது. உடல், தண்டு, கிளை, இலை எங்கும் முட்கள் கொண்ட மரம் அது. முட்கள் பார்க்கவே அழகாக இருந்தன. கருங்காலியின் முட்கள் அதன் தற்காப்பு. இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், முற்றியபின் செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும். 

🌳

பொருளாதார முக்கியத்துவம்

முக்கிய பயன்கள் :

கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. கருங்காலி மரம் வலிமையானதாகவும், தேக்கை விட விலை உயர்ந்ததாகவும் பல்வேறுபட்ட பயன்களைத் தர வல்லவை. 

இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர்.

அதாவது வைரம் பாய்ந்த கட்டை.  மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.அது கருப்பு நிறத்தில் இருக்கும்.ஆனால் அதற்க்கு மேல் உள்ள பகுதி இயல்பான நிறத்தில் இருக்கும். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும் கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

மரம் :
கருங்காலியில் கட்டில், அலமாரி மட்டுமல்லாமல் உலக்கை செய்வதும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இதன் பட்டை, பிசின், வேர் ஆகியன மருத்துவப் பயன்களைத் தருகின்றன.

இதன் மரம் கடினமானது மற்றும் எளிதில் அறுபடும் தன்மையற்றது. எனவே இம்மரம் வேளாண் உபகரணங்கள், வீட்டு தூண்கள், எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இம்மரம் படகு மற்றும் சக்கரம் தயாரிக்க பயன்படுகிறது.

இயற்கை சாயம் செய்யப் பயன்படுகிறது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் பழ நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது என்றால் அது தான் நமது சிறப்பு.

அடர் கருங்காலி சாயம் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு வண்ணமூட்ட பயன்படுகிறது . அச்சு மை தயாரிக்கவும் பயன்படுகிறது.

பசுந்தாழ் தீவனம் :

இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கோந்து :

இம்மரத்தின் தரமான கோந்தை தரவல்லது. கருங்காலி மரத்தின் பிசின்  பற்களுக்கு வலிவூட்டும், ஈறுகளில் ரத்த கசிவை தடுக்கும்,பற்களுக்கு உறுதிதன்மை கொடுக்கும்,

மரப்பாச்சி பொம்மை:

பிளாஸ்டிக் பயன்பாடு வருவதற்க்கு முன்பு குழந்தைகளுக்கு விளையாட கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மை தருவார்கள்,அது இருக்கும். 

கொலு பொம்மைகள்:

கொலுவில் வைக்கப்படும் பெரும்பாலான பொம்மைகள் வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தில் தான் செய்யப்படும். தற்போது மர பொம்மைகள் செய்து கருநிற சாயத்தில் ஊற வைத்த பொம்மைகள் கிடைக்கிறது. கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொம்மை எனில் நீரில் மூழ்கும். 

மரக்கட்டை:

மிக கடினமாகவும், அறுப்பதற்கும் கடினமாக இருக்கும். இவை வேளாண் உபகரணங்கள், கருவிகள், கைப்பிடி தயாரிக்கப்படுகிறது. கருங்காலி மரத்தை எளிதில் கரையான் அரிக்காது,உடைபடாது, அதிர்ச்சி தாங்கியாகவும் இருக்கும். கோடாலி,

கொந்தாளம்,மண்வெட்டி,களைவெட்டி போன்ற இரும்பு ஆய்தங்களுக்கு கைபிடி ஆக கருங்காலி மரம் தான் பயன்பட்டது. 

ஒட்டுப்பலகை தயாரிக்க :

கோந்து எடுக்க வெட்டப்பட்ட இதன் மரத்துண்டுகளை கொண்டு ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகிறது.

எரிபொருள் :

இம்மரம் 5200 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது. மேலும் இம்மரம் தரமான கரி தயாரிக்க பயன்படுகிறது.

விறகு கட்டை:

கலோரி அளவு – 5200கி


🌳

மருத்துவப் பயன் 

🔹இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. 

நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும். கொழுப்பை குறைக்கும்

🔹 கருங்காலி வேர் : வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

🔹 கருங்காலி மரப்பட்டை :

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.

🔹கருங்காலி மரத்தின் பிசின் கரப்பான் நோயினை போக்கவல்லது.

🔹பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.

🔹கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

🔹இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

🌳

நம்பிக்கைகளும் முக்கியத்துவமும் 

கருங்காலி மரத்தை நம்மக்கள் பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம் இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், (கெட்ட)எதிர் மறை சத்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது எனும் நம்பிக்கை உண்டு. 

உலக்கை:

முற்காலங்களில்  பூப்பெய்தும் பெண்கள்அமர்ந்து இருக்கும் இடத்திற்க்கு (பச்சை மட்டையில் கட்டிய குடில்) முன்பு கருங்காலி உலக்கையை போட்டு பாதுகாப்புக்கு வைப்பார்கள். கெட்ட சக்தி (எதிர்மறை சக்தி) தடுக்கவும்  இரத்த வாடையால் வரும் விலங்குகளை வரவிடாமல் தடுக்க,வந்தால் விரட்ட உலக்கையை வைப்பார்கள்.

தண்டம்:

சித்தர்கள்,ரிசிகள்,ஞானிகள் ' Y ' வடிவ வைத்து இருக்கும் கட்டையை தண்டம் என்று அழைப்பார்கள். இதனை கொண்டு தலையில் வைத்தோ அல்லது உடல் பாகங்கள் மீது வைத்தோ நல்ல வாக்கு (வார்த்தைகள்) கூறி ஆசி தருவார்கள்,இந்த தண்டம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகதான் இருக்கும்.

மாலை :  -கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய (சேவு) பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து யோகம்,தியானம், வழிபாடு செய்பவர்கள்,மந்திர ஜபம் செய்பவர்கள் அணிந்து கொள்வார்கள். 

அனைத்து கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்.

தாயத்துகள்:

நரிகுறவர் இன மக்கள் தரும் தாயத்துகள் அனைத்திளும் கருங்காலி கட்டை உறுதியாக இருக்கும்.

குறி சொல்லும் கோல்:சங்க காலத்தில் குறி சொல்லும் குறவஞ்சி பெண்கள் கருங்காலி மரத்தினால் ஆன கோல் (குச்சி) ஒன்றை கையில் வைத்து இருப்பார்கள்,குறி கேட்க வருபவர்கள் கையில் இந்த கோலை வைத்து அழுத்தி (தொட்டு) குறி சொல்வார்கள்.

ஆன்மிக நம்பிக்கை   

ஒவ்வொரு தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும், ராசிகாரர்களுக்கும், நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த தனி விருட்சங்கள் உண்டு.ஆனால் அனைத்து தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும் உகந்த விருட்சங்களில் (மரம்) குறிப்பிடதகுந்த மரம் கருங்காலி.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டைகளில் சிறு துண்டு எடுத்து பால் மற்றும் நீரில் கழுவி பிறகு அதற்க்கு உரிய பூஜை முறைகள் தெரிந்தால் செய்து பின் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்,கையில் சட்டை பையில் வைக்கலாம்.

🌳

ஏற்றுமதி முக்கியத்துவம் / சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்  

மிக பெரிய  தாவரவியல் பூங்காவின் கருங்காலி மற்றும் ரோஸ்வுட் நிபுணர் மடகாஸ்கர்  கருங்காலி   மர வர்த்தகத்தை "ஆப்பிரிக்காவின் இரத்த வைரங்களுக்கு  சமமானது"  என்கின்றார்.

நவீன பயன்பாடுகள்

சிலுவைகள், மற்றும் கறுப்பு பியானோ, ஆர்கன் (இசை) மற்றும் ஹார்ப்சிகார்ட் விசைகள், வயலின், வயோலா, மாண்டோலின், கிட்டார், டபுள் பாஸ் மற்றும் செலோ கைரேகைகள், டெயில்பீஸ்கள், ஆப்புகள், chinrests, மற்றும் வில் தவளைகள் இந்த கருப்பு மரத்திலிருந்து பல பிளெக்ட்ரம்கள் அல்லது கிட்டார் தேர்வுகள் தயாரிக்கப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக ஒரு பியானோவில் உள்ள கருப்பு விசைகள் கருங்காலி மற்றும் வெள்ளை விசைகள் தந்தங்களால் செய்யப்பட்டவை.

பாரம்பரியமாக, சதுரங்க செட்களில் உள்ள கருப்பு துண்டுகள் கருங்காலியில் இருந்து தயாரிக்கப்பட்டன. பாக்ஸ்வுட் அல்லது தந்தங்கள் வெள்ளை துண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

நவீன ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ்-பாணி சரிகை தயாரிக்கும் பாபின்கள், சிறியதாக இருப்பதால், அவை பெரும்பாலும் கருங்காலியால் ஆனவை மற்றும் பித்தளை அல்லது வெள்ளி கம்பி மூலம் பிணைக்கப்படும்போது அலங்காரமாக இருக்கும். 

அதன் வலிமை காரணமாக, பல கைத்துப்பாக்கி பிடிப்புகள் மற்றும் துப்பாக்கி முன்-முனை கருங்காலியால் செய்யப்பட்டவை. 

🚫 2012 ஆம் ஆண்டில் கிப்சன் கிட்டார் நிறுவனம் 1900 ஆம் ஆண்டின் லேசி சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையால் சோதனை செய்யப்பட்டது, இது அச்சுறுத்தப்பட்ட வன விலங்குகள், மரங்களை  இறக்குமதி செய்வதைத் தடைசெய்கிறது. 

🌳

வேளாண் மேலாண்மை 

        விதை ,நாற்று, மண் காலநிலை  

மண் : வண்டல் மண் கலந்த மணல், மணற்பாங்கான மண், கரிசல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் : 900 – 1200 மீ உயரம் வரை வளரும்.

மண் pH : 6 மற்றும் 7

மழையளவு : 500 – 2000மி.மீ 

வெப்பநிலை : 37 – 43 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரும்.

நிலப்பரப்பு : சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகியவற்றில் நன்கு வளரும்.

மரப்பண்பு :

அதிக ஒளியை விரும்பும் மரமாகும். நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது. பனியை தாங்கி வளரக் கூடியது. மிதமான தீயை தாங்கி வளரக் கூடியது.

வளரியல்பு : இலையுதிர் மரம்

🌳

விதைகள் நாற்று

நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இயற்கை முறையில் பெருக்கமடையக் கூடிய வீதம் சற்று குறைவாகவே இருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

தகுந்த சூழ்நிலைகளிருப்பின் விதைகள் மூலம் பெருக்கமடையும் தன்மையுடையது. இது ஒரு எளிதான சிறந்த முறையாகும்.

இம்மரம் இளம் வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளமான விதையை தரக்கூடியது. 

விதைகள் மரத்திலிருக்கும் பொழுது பூச்சிகளின் பாதிப்பு இருப்பதில்லை. எனவே விதைகள் மரத்திலிருக்கும் பொழுதே சேகரித்துக்கொள்ள வேண்டும்.

நெற்றானது நவம்பர் முதல் பிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ச்சியடைகிறது.

முதிர்ந்த நெற்று சேகரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்து எடுக்க வேண்டும். ஒரு கிலோ  எடையில் 4590 நெற்றுகளிருக்கும்.

நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கப்படுகிறது. 6-8 மாதங்கள் வரை விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் சேமிக்கலாம். ஒரு கிலோ எடையில் 40000 விதைகளிருக்கும்.

1 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 5 – 17 சதவிகிதமிருக்கும். 2 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 9 சதவிகிதமிருக்கும்.

ஒவ்வொரு தனி மரமும் 0.5 – 2 கிலோ விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.

விதைப்பதற்கு முன் சல்பியூரிக் அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

கொதித்து ஆறிய நீரில் 6 மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதகால இடைவெளியில் விதைப்பு செய்வது சிறந்ததாகும்.

நாற்றாங்கால் படுக்கை:

விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படவேண்டும். விதைகளானது 20 செ.மீ இடைவெளியில் விதைக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு வரிசைகளுக்கிடை

யேயான இடைவெளி 2 செ.மீ என இருக்க வேண்டும். 0.5 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.

விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்திக்கு நீர் இறைக்க வேண்டும்.

விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 3 வார முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது. விதை முளைப்புத்திறன் 70 – 80 சதவிகிதமாகும். 

மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த பிறகு 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.

பாலித்தீன் பை மரக்கன்று:

22 x 9 செ.மீ அல்லது 23 x 13 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை நிறப்ப வேண்டும். நைட்ரோஜீனஸ் உரம் பைக்கு 2 கிராம் வீதம் மே – ஜுன்கால இடைவெளியில் 4 முறை இட வேண்டும்.

50 – 60 செ.மீ உயரம் வளர்ந்த அல்லது 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுலை மாத காலத்தில் நாற்றுகள் நடப்படுகிறது.

நடுகை 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

பாலித்தீன் பை கன்று:

மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.நாற்றுகள் நடப்படுவதற்கு முன் குழிகளுக்கு நீர் இறைக்க வேண்டும்.

கர்னைகள் நடவு: 12-15 மாத வயதுடைய மரத்தில் இருந்து நாற்று குச்சி பெறப்படுகிறது.10 மி.மீ சுற்றளவு கொண்ட குச்சிகள் இம்முறை நடவு செய்யப்படுகிறது.பருவ மழை நின்றவுடன் இம்முறையில் நாற்றகள் உற்பத்தி செய்ய வேண்டும்

பசுந்தீவன நடவு: இம்முறை நடவிற்கு 5 x 5மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.4 - 5 வருடங்கள் வரை கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.

களையெடுத்தல் :

முதல் வருடம் - மூன்று முறை

இரண்டாம் வருடம் - இரண்டும முறை

நடப்பட்ட பண்ணையில் ஆகஸ்டு – செப்டம்பர் மாதகால இடைவெளியில் களையெடுத்தல் வேண்டும்.

பக்க கிளைகளை நீக்குதல்:

5 வருடமான மரத்திற்கு பக்க கிளைகளை நீக்க வேண்டும். அதன் பின் 10, 15, 20 மற்றும் 25ம் வருடங்களில் பக்க கிளைகளை நீக்க வேண்டும்

🌳

இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

கருங்காலி மர கன்றுகள் வனத்துறை நர்சரிகளில் உறுதியாக கிடைக்கும் மேலும் மற்ற நர்சரிகளில் கிடைக்கும் அல்லது சொல்லி வைத்தால் வாங்கி தருவார்கள்.

இந்த கன்றுகளை வாங்கி வீடு,தோட்டம்,பொது இடம்,கோவில் இவற்றில் வைத்து பராமாரிக்கலாம்.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டை மற்றும் அதன் பொருள்கள்

மரம் அறுவை ஆலை அல்லது மர சேமிப்பு ஆலைகளில் கிடைக்கும்,அவர்களிடம்  கருகாலி(நாட்டு மரம்) வேண்டும் என்று கேளுங்கள்,இல்லை என்றால் வரும் போது தகவல் தர சொல்லுங்கள்,சதுராஅடி அல்லது எடை கணக்கில் தருவார்கள்

கருங்காலியினால் செய்யப்படும் பயன்பாட்டு  பொருட்கள் படத்தில் பாருங்கள்.

https://www.facebook.com/100000786292216/posts/3484256921610483/?d=n

13 டிசம்பர் 2020

அவித்த பீட்ரூட்..

பீட்ருட் 

பிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார். 

இது அவித்த பீட்ரூட்.. 
மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு  காற்று  புகாமல்  பாக்கெட் செய்து  100 °C  யில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 

தோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல்   நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி. 

பொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது. 

அப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம். 

ஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இதை குறித்து முன்னரே தற்சார்பு  குழுவில் எழுதி இருந்தேன். விவசாய  உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது   விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம். 

சுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும்  குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில்  அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து  பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள். இங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக  இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட்  ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.

https://www.facebook.com/100000786292216/posts/3483198908382951/?d=n

Sustainable Development Goal - 2 நிலையான அபிவிருத்தி இலக்கு

Awareness, pre-warning

விழிப்புணர்வு,முன் எச்சரிக்கை 

மூன்று சம்பவம் 

ஒன்று : 2015  எங்கள் பக்கம் நூறு வருடங்களுக்கு பின் கடும் வெள்ளம். ஆறுகள் நிரம்பி, வீடுகளின் நிலவறைக்குள் எல்லாம் தண்ணீர். பாலங்கள்  நிறைந்து பலமிழந்து வாகனங்கள் தடை  செய்யப்படடன. பல கோடி மில்லியன் Fr அழிவு. 

அம்மா நம்ம வீட்டுக்குள் சுனாமி வருது எங்கள் வீட்டு பால்கனி கதவுகளை இழுத்து முடுங்கோ என்று அன்றைய  மழைக்கு என் மகன்  வர்ணனை  செய்தான். 2004 டிசம்பர் சுனாமி அத்தனை ஆழமாக அவனுள் பதிவாகி இருந்தது. 

மலையிலிருந்து தொடர்ந்து மழை எப்போதும் அணை உடையும். பாலம் உடையும் என ஊடகங்கள், பத்திரிக்கை வானொலிகள் எச்சரித்து  கொண்டிருந்தன. 

நாங்கள் வேலை செய்யும் நண்பர்கள்  20 பேர்  ஒரு தோழி வீட்டில் விருந்து. பாதி விருந்தில் அணை உடைந்தது என பக்கத்து  வீட்டிலிருந்து சொல்ல .. அப்படியே போட்டது போட்டபடி ... ஓட்டம். 

எனக்கு பிள்ளைகளை விட்டு விட்டு  வந்த பதட்டம் ( 4 & 7 வயதுகள் ) பாலங்கள் கடந்து மேட்டில் என் வீடு. எப்படி வீட்டுக்கு போவது என்று அழுது கொண்டிருந்த என்னை  இழுத்து கொண்டு  ரோட்டுக்கு வந்து சிக்னலுக்கு நின்ற காரின் சொந்தக்காரரிடம் கேட்காமல் ஏறி  உட்கார்ந்து விட்டாள் தோழி. பாதி வழி கார்.. மீது நடை என்று வீட்டுக்கு போனேன்.

அன்று அணை உடையவில்லை. அது உடையவே இல்லை.  நீர்  நிறைந்து விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்ட்து. ஆனால் அதிக நீர் அழுத்தம் பாலங்களை பலமற்றதாக்கி இருந்தது. மழை தொடர்ந்தால் எதுவும் நடக்கலாம் எனும் நிலை இருந்தது. கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும்  கனரக வாகனங்கள் தடை செய்தார்கள். 

அடுத்து வந்த  மாதங்கள் முழுதும் பகுதி பகுதியாக வடிகான்கள், பாலங்கள், பாதைகள் விரிவு படுத்தப்பட்டு வெள்ளம் தேங்காதபடி நீர் ஓடும் வழிகளை செம்மை படுத்தினார்கள். ஆறு மாதங்களுக்கும் மேல் பாதைகளை அடைத்து  வாகனத்தில் ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய பாலம் தடை  செய்து  மூன்று கிலோ மீற்றர்கள்  சுத்தி வந்தோம். 

இது மக்களுக்கானது..! 

இரண்டு : பிரான்ஸ் நீஸ் தீவிர வாத தாக்குதல் தொடர்ந்து சுவிஸில் சில இடங்களில் முக்கியமாக  பிரதான புகையிரத நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவு, குண்டு வெடிப்பு ..  நள்ளிரவில் வாகனங்கள் கடும் சோதனை 

மூன்று: ஆறுமணிக்கு மேல்  தனியே வெளியில் திரியும் சிறுவர்களை கடத்தி செல்கின்றார்கள் என்று  பள்ளிகளில் பரப்பப்பட்டு  யார் அந்த மர்ம மனிதர் என  பதட்டப்படுத்தி ஒரு தற்காப்பு பயிற்சி.முதல் ஒரு வாரம் பயத்தில் ஆறு மணிக்கு முன் வீட்டுக்குள் வந்த பிள்ளைகள் அடுத்த வாரம் நான்கைந்து பேர் வெளியில் செல்ல யாரோ  முகமூடிஸோடு  அவர்களில் ஒருவரை பிடிக்க வர இவர்கள் பயப்படாமல் அவனை துரத்த ...

மிகைப்படுத்தல் ..  தான்..! 

அந்தந்த நேரம் மக்களுக்கு  விழிப்புணர்வு,தற்பாதுகாப்பு, முன்னேற்பாட்டுக்கு  நல்லது செய்யும் என்றால் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்  „“ 

 சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சரியானதை தவறு என்பது போல் தவறொன்றை சரியென நம்ப  வைக்கும். எமது சமூகத்தின் மனநிலை அப்படி..! சில சம்பவங்களுக்கு  மிகைப்படுத்தல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு உருவாக்குகின்றது. 

நடக்காதவைகளை நடந்தது, நடக்கவில்லை எனும்   நிறுவுவதை விட நிரூபிக்க எடுக்கும் நேரத்தை  இப்படி ஒரு சம்பவம் எமக்கும் நடக்கலாம்.. எச்சரிக்கை உணர்வு...தனி நபர்  சிந்தனைக்குள் சிறந்த  விழிப்புணர்வை உருவாக்கும். 

ஒரு கொலை, தற்கொலை நடந்தால் அது எப்படி நடந்திருக்கும் எனும் கற்பனைகளும், விபரங்களும் மிகைப்படுத்தப்படுவது  ஆபத்தான பின் விளைவுகளை உருவாக்கும் என்பதால்  சுவிஸ்  போன்ற வளர்ந்த நாடுகளில் இவ்வாறான செய்திகளை பகிர்வதற்கு  ஊடகங்களும்  கட்டுப்பாட்டுடன் செயல் படும். பல சம்பவங்கள் பக்கத்து வீட்டுக்கும் தெரியாமல் இருக்கும். காவல் துறை,குற்றப்புலனாய்வு நிர்வாகம்  உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும்  அடக்கி ஆளுகை.செய்வார்கள். காரணம் மனிதர்களில் உளவியல் சார்ந்தது. 

எங்கள் சமூகத்தில்  நடப்பது என்ன? 

மிகைப்படுத்த  வேண்டியவைகளை  அரசியல் அதிகார விருப்பு வெறுப்பு டன்  அணுகுவதும், அடக்கி ஒடுக்க வேண்டியதை சமூகத்துக்கு தீமைகளை பகிர்ந்து பரபரப்பு உருவாக்கி தவறுகளுக்கு துணை செய்கின்றோம்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் இயற்கை கால நிலை மாறுகின்றது. ஆனாலும் சில பகுதிகளில் வெள்ளம் புயல் அதிக அழிவு தருகின்றது. சில பகுதிகளில் தகுந்த முன்னேற்பாடு உயிர் பொருள் இழப்புகளை தடுக்கின்றது. 

எங்கள் பகுதியில் சில நேரம்  பெரிய  அலாரம் அடிக்கும். இராணுவ முகாம், தீயணைப்பு என்று மக்கள் எவ்வாறு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றும் சில சோதனைகள் ...  குடி நீர் நிறுத்துவார்கள், (  திருத்த வேலை முன் அறிவித்து செய்தாலும் )  மின்சாரம் நிறுத்தி  

எதுவும் நடக்காது  எனும் நம்பிக்கை தருவதை விட இப்படியும்  நடக்கலாம் எனும் உணர்த்தல் பல நன்மைகளை உருவாக்குகின்றது.

மக்கள் சமூக விழிப்புணர்வுக்கு பிழைப்படுத்தலும் , மக்கள் சமூக நலன்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மக்கள் சமூக செயல்பாடுகளில் நெகட்டிவ் விமர்சனங்களை அல்ட்சியப்படுத்தவும் பக்குவப்பட்ட சமூகம் நோக்கி முன் செல்லுகின்றது.

💥💥

வெள்ளம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் சமூக ஆயத்தத்தின் தாக்கம் 

தொழில்நுட்ப முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை திறன்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில். மேலும், சமூக தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிகள் பேரழிவால் தூண்டப்படும் இழப்புகளை கிட்டத்தட்ட ஒரு பாதியில் குறைக்க உதவும்.

சமூக தயார்நிலை, குறிப்பாக, ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, வெள்ள அனுபவத்தின் பின்னடைவு memory நினைவகம் தொடர்பானது. அதிகாரிகள் மீதான நம்பிக்கை, அல்லது சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் போன்ற மனித நடத்தை பண்புகளால் வலுவாக பாதிக்கப்படுகிறது

கூடுதலாக, திறமையான இடர் குறைப்பு சேவைகள் இருக்கும்போது சமூக விலகல், பொறுப்புகள், செயல்திறன் குறைப்பு நடவடிக்கைகளின் செலவுகள், அல்லது ஊடகங்கள்,அபாயகரமான தன்மை மற்றும் தனிப்பட்ட மறுப்பு ஆகியவை வெள்ள தணிப்பு நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வு அறிக்கை யில்   

 சுவிஸ் சூரிச் யுனிவசிட்டி குறிப்பிடுகின்றது.

முதல் நிலையான அபிவிருத்தி இலக்கு - வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல். 

First Sustainable Development Goal - End Poverty. 

பேசுவோம்..!

Nishanthi

12.12.2020

https://www.facebook.com/100000786292216/posts/3482293218473520/?d=n 

12 டிசம்பர் 2020

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள் 


உணவு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும்.உலகிலும் விவசாயப் பொருட்களுக்கான தேவை எப்போதுமே உயர்ந்த பக்கத்திலேயே இருக்கும், எனவே, ஒரு தொழில்முனைவோராக, நீங்கள் இந்த கோரிக்கையை மையமாகக் கொண்டு ஒரு வேளாண் வணிகத்தை அமைக்கலாம், உங்களுக்காக மகத்தான பொருளாதாரத்தை  பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு இளம் ஆர்வமுள்ள தொழில்முனைவோரும் விவசாயம் சார்ந்த வணிகத்தில்  ஆர்வம் காட்ட பல காரணங்கள் உள்ளன. விவசாயத்தில் முடிவற்ற வாய்ப்புகள் உள்ளன,

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வணிகத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது? 

உங்கள் சொந்த லாபகரமான வேளாண் ஏற்றுமதி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது?

விவசாயத்திற்கான அரசாங்க கடன்கள் மற்றும் மானியங்களை எவ்வாறு பெறுவது?

உங்கள் வேளாண் வணிகத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க  வேண்டும்? 

விவசாயத்தில் தொடங்குவதற்கான சிறந்த வழி அதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்து கற்றுக்கொள்வதாகும்.

சந்தைப்படுத்தல் & தொழில்நுட்ப அறிவு 

நான் எப்போதும் குறிப்பிடுவதைப் போலவே, எந்தவொரு வேளாண் அடிப்படையிலான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் தயாரிப்பின் தேவை குறித்து சரியான சந்தைப்படுத்தும் வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிந்து  கொள்ள வேண்டும். 

சரியான விவசாய வணிகத் திட்டத்திற்குச் செல்வதற்கு முன் அதை நீங்கள் திட்டமிட்ட வேண்டும். 

ஒருவர் அவர்களின் ஆர்வம் /முயற்சி  மற்றும் மூலதனம்...! 

வணிகத்தில் எவ்வளவு முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார் என்பதன் அடிப்படையில் ஒரு வணிக யோசனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வணிக யோசனை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே நீங்கள் ஒரு விவசாய வணிக திட்டத்தை உருவாக்க வேண்டும்.

1) விவசாய பண்ணை : விவசாயத்திற்கு ஏற்ற வெற்று நிலம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு விவசாய பண்ணை  தொடங்கலாம். உள்ளூர் தேவைகளுக்கான பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்யலாம். நல்ல தரத்தை பராமரிப்பது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

2) மரம் பண்ணை : ஒரு மர பண்ணை மரங்களை வளர்த்து அவற்றை விற்று பணம் சம்பாதிக்கிறது. மரங்களை வளர்ப்பதற்கு கணிசமான நேரம் தேவைப்படுவதால் இந்த வணிகத்தில் பணம் சம்பாதிப்பதற்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது. சிறந்த சிறு பண்ணை வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு சில பராமரிப்பு செலவு தேவைப்படலாம். இவ்வாறான முயற்சிகள்  மூலம் வன வளத்தை உருவாக்கும் திட்டமும் நிறைவாகும்.  ( என்ன மரங்கள் நடலாம் ..? அடுத்த பதிவில்) 

3) கரிம உர உற்பத்தி :  மண்புழு உரம் அல்லது கரிம உர உற்பத்தி வீட்டு வணிகமாக மாறியுள்ளது. இதற்கு அதிக முதலீடு தேவையில்லை மற்றும் உற்பத்தி செயல்முறையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது மிகவும் எளிதானது.

4) உர விநியோகத்தின் வணிகம் : சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றது. இந்த வணிகத்தில், நீங்கள் பெரிய நகரங்களிலிருந்து உரங்களை வாங்கி கிராமப்புறங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும். இது சிறிய நகரங்களில் தொடங்குவதற்கான மிகச் சிறந்த சிறு விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

5) உலர் பூ வியாபாரம்  : உலர் பூக்களின் வணிகம் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது. உங்களிடம் காலியான நிலம் இருந்தால், நீங்கள் பூக்களை வளர்க்கலாம், அவற்றை உலர வைக்கலாம் மற்றும் கைவினைக் கடைகள் அல்லது பொழுதுபோக்கிகு கடைகள் மூலம் விற்கலாம்.

6) காளான் வளர்ப்பு: வளரும் காளான்களின் வணிகம் குறுகிய காலத்தில் பெரிய லாபத்தைப் பெற முடியும். இது குறைந்த முதலீட்டில் தொடங்கப் படலாம்.அதற்கு குறைந்த இடமும் தேவைப்படுகிறது. ஹோட்டல், உணவகங்கள் மற்றும் வீடுகளில் காளான்களுக்கு அதிக தேவை உள்ளது.

7) கோழி வளர்ப்பு: கடந்த சில தசாப்தங்களில் கோழி வளர்ப்பு வணிகம் ஒரு தொழில்நுட்ப-வணிகத் தொழிலாக மாறியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். நீங்கள் சிறிய வருமான பண்ணை யோசனைகளைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

8 ) ஹைட்ரோபோனிக் கடை : ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒரு புதிய தோட்ட தொழில்நுட்பமாகும், இது வளரும் தாவரங்களுக்கு மண்ணைப் பயன்படுத்தாது,  உற்பத்தி செய்து கொள்வது. ஹைட்ரோபோனிக்  விற்பனை நிலையம் ஹைட்ரோபோனிக் கருவிகளைக்கையாண்டு  வணிக மற்றும் வீட்டு உபயோகத்திற்காக விற்பனை செய்யப்படும் தாவரங்களையும் உருவாக்குகிறது.

9) ஆர்கானிக் கிரீன்ஹவுஸ்கரிம கிரீன்ஹவுஸ் வணிகம் வளர நல்ல  வாய்ப்பை கொண்டுள்ளது, ஏனெனில் கரிமமாக வளர்க்கப்படும். பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக, இந்த முயற்சி குடும்பத்தால் நடத்தப்படும் சிறிய பண்ணைகளில் செய்யப்பட்டது, ஆனால் இப்போது மக்கள் கரிம கிரீன்ஹவுஸ் தயாரிப்பதற்காக நிலத்தை வாங்குகிறார்கள்.

10) தேனீ வளர்ப்பு : ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், தேனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வழியில் தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த வணிக வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த வணிகம் தேனீக்களை அன்றாட கண்காணிப்புடன் நெருக்கமான கண்காணிப்புடன் செயலாகின்றது. 

11) மீன் வளர்ப்பு - மீன் வளர்ப்பு வணிகம் மிகவும் இலாபகரமான வணிகமாகும், ஒரு பெரிய தொகையை பெற முடியும். நவீன நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம், உற்பத்தியையும் தரத்தையும் பெரிதும் மேம்படுத்த முடியும். தொடங்குவதற்கு மிதமான அதிக முதலீடு தேவைப்படும் மிகவும் இலாபகரமான வேளாண் வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும்.

12) நத்தை வளர்ப்பு - நத்தை வளர்ப்பு வணிகமானது மனித நுகர்வுக்காக நில நத்தைகளை வளர்க்கும் செயல்முறையாகும். நத்தைகளில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, குறைந்த கொழுப்பு மற்றும் மனித உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை மனதில் வைத்து, அவர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வணிக வாய்ப்பு நவீன தொழில்நுட்பத்தின் ஒழுக்கம் மற்றும் குறிப்பிட்ட அறிவைக் கோருகிறது.

13) பழம் மற்றும் காய்கறி ஏற்றுமதி - பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கலாம், அதில் நீங்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேகரித்து சர்வதேச அளவில் விற்க வேண்டும். இந்த வணிகத்திற்கு, நீங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகள் மற்றும் உள்ளூர் சந்தைகளை அறிந்து கொள்ள வேண்டும். தொடங்குவதற்கான சிறந்த விவசாய ஏற்றுமதி வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும்.

14) ஒரு பூக்கடை - மலர்களை விற்பது மிகவும் இலாபகரமான சில்லறை வணிகமாகும். மலர் ஏற்பாடு மற்றும் பூங்கொத்துகள் எப்போதும் பரிசளிப்பு, திருமணங்கள் போன்றவற்றில் அதிக தேவை உள்ளது. சில புதுமை மற்றும் படைப்பாற்றலுடன். இந்த வணிகத்தில் நீங்கள் அதிசயங்களைச் செய்யலாம்.

15) விளக்குமாறு உற்பத்தி - பல நூற்றாண்டுகளாக, விளக்குமாறு தரையைத் துடைப்பதற்கும், பணியிடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை அகற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. விளக்குமாறு உற்பத்தியின் செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் குறைந்த மூலதன முதலீட்டில் திட்டத்தை தொடங்கலாம். நல்ல தரம் மற்றும் போட்டி விலையை பராமரிப்பது குறுகிய காலத்தில் நல்ல லாபத்தை தரும்.

16) பழச்சாறு உற்பத்தி - பழச்சாறுகளின் உற்பத்தி செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலைத் தொடங்கும்போது சுகாதாரம், சுவை மற்றும் பழத்தின் தரம் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

17) நிலக்கடலை பதப்படுத்துதல் - இந்த வணிகத்திற்காக நல்ல தரமான மூலப்பொருளை (நிலக்கடலை) வாங்க முடிந்தால், அதை மிதமான மூலதனத்துடன் தொடங்கலாம். பதப்படுத்தப்பட்ட நிலக்கடலை உலகம் முழுவதும் நல்ல சந்தை திறனைக் கொண்டுள்ளது.

18) காடை வளர்ப்பு - காடை வளர்ப்பு என்பது லாபகரமான முட்டை மற்றும் இறைச்சிக்கு காடைகளை வளர்ப்பது. உலக அளவில், தினசரி குடும்ப ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதால் காடை வளர்ப்பு வணிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

19) தேயிலை தோட்டம் - தேயிலை இலைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த வணிகத்திற்கு பெரும் ஆற்றல் உள்ளது. தேயிலை ஆலைகளுக்கு பொதுவாக அமில மண் மற்றும் அதிக மழை தேவைப்படுகிறது, இருப்பினும் அவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்திற்கு எங்கும் வளர்க்கப்படலாம். எனவே, தேயிலை வளர்ப்பதற்கு உங்கள் நிலைமை பொருத்தமானதாக இருந்தால், நீங்கள் இந்த தொழிலில் செல்ல வேண்டும். அதிக மூலதனம் தேவைப்படும் நல்ல விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

20) மளிகை ஷாப்பிங் போர்டல் - தொழில்நுட்பம் மற்றும் ஈ-காமர்ஸின் வருகையால், மக்கள் அன்றாட மளிகை பொருட்களை வாங்குவதற்கு மணிநேரம் செலவிடுவது மிகவும் வீணானது. மளிகைப் பொருள்களை தங்கள் வீட்டு வாசலில் வழங்குமாறு ஆர்டர் செய்வதை அவர்கள் விரும்புகிறார்கள், எனவே மளிகைப் பொருட்களை வழங்கும் மின்-ஷாப்பிங் போர்ட்டலில் ஒருவர் தொடங்கலாம்.

21) மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது - வணிக மட்டத்தில் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது மிகவும் இலாபகரமான விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும். நீங்கள் மூலிகைகள் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தால், போதுமான நிலம் இருந்தால், நீங்கள் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதைத் தொடங்கலாம். மருத்துவ மூலிகை வியாபாரத்தில் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சில உரிமங்களை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

22) கற்றாழை ஏற்பாடு - கற்றாழை ஒரு உட்புற அல்லது வெளிப்புறமாக அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கற்றாழை தாவரங்கள் ஒரே கொள்கலனில் மகிழ்ச்சியுடன் வாழலாம். எனவே, படைப்பாற்றலின் தொடுதலுடன், நீங்கள் அழகான கற்றாழை ஏற்பாடுகளை செய்யலாம். இது மிகவும் இலாபகரமான மற்றும் சுய பலனளிக்கும் வணிகமாகும்.

23) ஜட்ரோபா வேளாண்மை - ஜட்ரோபா பயோடீசல் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. Cm விவசாய வணிக யோசனைகளை உருவாக்கும் மிகவும் பிரபலமான பணம் இதுவாகும், ஏனெனில் இது பற்றி மிகச் சிலரே அறிவார்கள். சில ஆராய்ச்சி செய்து, சில அறிவைப் பெறுவதன் மூலம், இந்த வணிகத்தை நீங்கள் எளிதாகத் தொடங்கலாம்.

24) சோள வேளாண்மை - சோளம் அல்லது மக்காச்சோளம் மாறுபட்ட காலநிலை நிலைமைகளின் கீழ் பயிரிடக்கூடிய பல்துறை பயிர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மக்காச்சோளம் தானியங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது குடும்பத்தில் மிக உயர்ந்த மரபணு ஆற்றலைக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தையும் நல்ல தரமான விதைகளையும் செயல்படுத்துவதன் மூலம் ஒருவர் பம்பர் பயிரைப் பெறலாம்.

25) உருளைக்கிழங்கு தூள் - சிற்றுண்டி உணவுத் தொழிலில் உருளைக்கிழங்கு தூள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பிசைந்த உருளைக்கிழங்கு தேவைப்படும் எந்த செய்முறையிலும் இதைப் பயன்படுத்தலாம். காய்கறி கிரேவி மற்றும் சூப்களை சாப்பிட தயாராக இது ஒரு தடிப்பாக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

26) ஆடு வளர்ப்பு - உலகளவில் பயன்படுத்தப்படும் இறைச்சி உற்பத்தி செய்யும் முக்கிய விலங்குகளில் ஆடு ஒன்றாகும். இந்த காரணத்திற்காக, ஆடு வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக ஒரு பொருளாதார தொழிலாக வளர்ந்து வருகிறது.

27) மண் பரிசோதனை - மண் பரிசோதனை என்பது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கண்காணிக்கப் பயன்படும் ஒரு நுட்பமாகும், அதே போல் வெவ்வேறு பயிர்களுக்கு துல்லியமான உர பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். அரசாங்க சான்றிதழுடன் மண் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவுவது சிறந்த சிறு பண்ணை வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

28) வேளாண் பிளாக்கிங் - வேளாண்மையைப் பற்றி நல்ல அறிவை எழுத்தில் வைத்திருந்தால், நீங்கள் வேளாண் வலைப்பதிவிற்கு முயற்சி செய்யலாம். விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான வலைப்பதிவுகள் இதில் உள்ளன. கிராமப்புறங்களில் இணையத்தின் வருகையுடன், விவசாயிகள் தங்கள் விவசாய திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களின் விவசாய பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு நியாயமான ஆலோசனை தேவை. பூஜ்ஜியத்திலிருந்து குறைந்த முதலீட்டில் தொடங்க இது விவசாய தொடர்பான சிறந்த வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

29) தீவன வளர்ப்பு வணிகம் - தீவனம் என்ற சொல் வீட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக வழங்கப்படும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அவை தாங்களாகவே மேயும் உணவு அல்ல. பார்லி, ஓட்ஸ், அல்பால்ஃபா போன்ற இந்த நோக்கத்திற்காக குறிப்பாக வளர்க்கப்படும் தாவரங்கள் உள்ளன. பசுக்கள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு உணவளிக்க தீவனம் பயன்படுத்தப்படுகிறது, எப்போதும் அதிக தேவை உள்ளது.

30) ரோஜா வளர்ப்பு - ரோஜா அதிக வணிக மதிப்பு கொண்ட ஒரு மலர். இது பூ ஏற்பாடுகளிலும் பூங்கொத்துகளிலும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தோட்டக்கலைகளில் ஆர்வமாக இருந்தால், அதை லாபகரமான வணிகமாக மாற்றலாம். இது சிறிய நிலத்தில் தொடங்கப்படலாம்.

31) முயல் வளர்ப்பு - வணிக அளவில் முயல்களை வளர்ப்பது தொடங்கப்பட்டுள்ளது. அங்கோரா முயல்கள் முக்கியமாக கம்பளிக்கு வளர்க்கப்படுகின்றன.ஒரு கிலோ உடல் எடை அடிப்படையில் கம்பளி உற்பத்தி செய்யும் சிறந்த முயல்கள் தரத்திற்கு நன்கு அறியப்பட்டவை.

32) வேளாண் ஆலோசனை - நீங்கள் ஒரு குறிப்பிட்ட விவசாயத் துறையில் நிபுணராக இருந்தால், நீங்கள் விவசாய ஆலோசனை வணிகத்தை ஏற்கலாம். விவசாயிகளுக்கு பல கட்டங்களில் நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படுவதால் இந்த வணிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

33) பால் பண்ணை - பால் பதனிடும் தொழில் :பாலிலிருந்து, பால்பவுடர், தயிர் வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. 

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை ஒருபோதும் குறையாது. வணிக பால் பண்ணை என்பது மிகவும் இலாபகரமான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக யோசனைகளில் ஒன்றாகும். பால் தவிர, இது பெரிய அளவில் எருவை உற்பத்தி செய்கிறது. இந்த தொழிலைச் செய்யும்போது எப்போதும் சுகாதாரம் மற்றும் தரம் இருக்க வேண்டும்.

34) மசாலா பதப்படுத்துதல் - கரிம மசாலாப் பொருட்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அதிக தேவை உள்ளது. செயலாக்கம் மற்றும் பேக்கேஜிங் முறைகள் மிகவும் சிக்கலானவை அல்ல, மிதமான மூலதனத்துடன் தொடங்கலாம்.

35) காய்கறி விவசாயம் - சிறிய பண்ணை வருமான யோசனை ,உங்களிடம் போதுமான நிலமும் மனித ஆற்றலும் இருந்தால், நீங்கள் காய்கறி விவசாயம் தொடங்கலாம். தரமான விதைகள் மற்றும் உரங்களுடன் தயாரிக்கப்படும் காய்கறிகள்  வருமானத்தை உறுதி செய்கிறது.

36) சோயா பீன்ஸ் விவசாய உறுதி செய்கிறது. - சோயா பால், சோயா மாவு, சோயா சாஸ், சோயா பீன் எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்ய சோயா பீன் தேவைப்படுகிறது. உங்களிடம் சிறிய காலியான நிலம் இருந்தால், அதை லாபகரமான தொழிலாக மாற்ற சோயா பீன் விவசாயத்தைத் தொடங்கலாம்.

37) இயற்கை நிபுணர் - இயற்கை கட்டிடக்கலை பற்றி நல்ல அறிவைக் கொண்டவர் இயற்கை நிபுணர். இது தள பகுப்பாய்வு, நில திட்டமிடல், நடவு வடிவமைப்பு, புயல் நீர் மேலாண்மை, கட்டுமான விவரக்குறிப்பு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் தற்போதைய அனைத்து கட்டிடக் குறியீடுகளையும் அனைத்து சட்டரீதியான இணக்கத்தையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.

38) திலபியா வேளாண்மை - திலபியா என்பது ஒரு வகையான மீன், அதன் தேவை குறிப்பாக அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அதிக லாபம் ஈட்டும் இந்த வணிகத்தை நீங்கள் தொடங்கலாம்.

39) தோட்டக்கலை பயிர் வேளாண்மை - தோட்டக்கலை வல்லுநர்கள் பழங்கள், தாவரங்கள் மற்றும் காய்கறிகள், பசுமை இல்லங்களில் பூக்கள், மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவைக் கொண்ட நர்சரிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த வியாபாரத்தில் பயிர்கள் மற்றும் முறைகளின் தேர்வு மிகவும் முக்கியமானது.

40) சான்றளிக்கப்பட்ட விதை வியாபாரி - விதை சான்றிதழ் என்பது தரமான சோதனை ஆகும், இதன் மூலம் விதைகள் பரிசோதிக்கப்பட்டு முறையான செயல்முறையுடன் சரிபார்க்கப்படுகின்றன. எளிமையான சொற்களில், ஒரு பெட்டி அல்லது விதை பாக்கெட் ஒரு சான்றிதழ் திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதாக கணினி சான்றளிக்கிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே விற்கும் தொழிலை நீங்கள் தொடங்கலாம். இந்த வணிகத்தை நிறுவ சில முறைகள் உள்ளன. அதற்கு உங்களுக்கு எந்த நிலமும் தேவையில்லை. ஒப்பந்த வேளாண்மை மூலம் இதைத் தொடங்கலாம்.

41) கிரீன்ஹவுஸ் மலர் ஏற்றுமதி - ஏற்றுமதி சார்ந்த பூக்களை மட்டுமே உற்பத்தி செய்வதற்காக பலர் கிரீன்ஹவுஸை நிறுவுகிறார்கள். இது மிகவும் இலாபகரமான வணிக யோசனைகளில் ஒன்றாகும், இதற்கு கணிசமான மூலதன முதலீடு மற்றும் செயல்முறை குறித்த நல்ல அறிவு தேவைப்படுகிறது.

42) உருளைக்கிழங்கு சிப் உற்பத்தி - இது உருளைக்கிழங்கு சில்லுகள் மற்றும் பிரஞ்சு-பொரியல் தயாரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய அளவிலான தொழில் ஆகும். உலக சந்தையில் ஒரு உருளைக்கிழங்கு சில்லுகள் மற்றும் பிரஞ்சு-பொரியல்களுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது. குறைந்த முதல் நடுத்தர மூலதனத்துடன் தொடங்குவதற்கு இது மிகவும் இலாபகரமான தொழில் .

43) மீன் நண்டு, இறால் பதனிடும் தொழில் 

44) பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும்   தொழில் 

45) விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள்,  வேளாண் கருவிகளை தேவைப்படும் போது வாடகைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

46 ) விவசாய இயந்திரங்கள் / கருவிகளைப் பழுது பார்ப்பதற்கான தொழில் 

47) கணினிw வழி வேளாண் தொழில்நுட்ப தகவல்களைப் பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தல்

48 ) 


49 )

50 ) 

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்