31 அக்டோபர் 2020

தீபாவளி பலகாரங்கள் ரெடி - 2020

                          “ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” 

 மீன் பிடிக்க தெரிந்தவர்களின் பசிக்கு மீன் குழம்பு வைத்து கொடுப்பதை விட அவர்களிடமிருந்து மீன் குழம்பு வாங்கி உண்பது உழைப்புக்கு கொடுக்கும் உயர்ச்சியாக இருக்கும் என்பது என் எண்ணமும் செயலுமாக இருக்கின்றது. அதனால் உழைத்து உயர முயற்சி எடுக்கும் பெண்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். 

          “ சொல் அல்ல செயல் சிறப்பு” 

தானும் சமூகமும் உயர்வு பெற வேண்டும் எனும் அயராத முயற்சியில் தனக்காகவும், தன்னை போன்ற பெண்களுக்காகவும்,தனித்துவத்தை நிரூபிக்க போராடும் பெண் இவள் அம்பிகை..😍 இவள் முயற்சிக்கு உங்கள் ஆதரவை கொடுங்களேன்..🙏

கொரோனா வைரஸ் கொடுத்த வலிகளால்  சோர்ந்து உடைந்த  நண்பர்களுக்கு தீபாவளி பலகாரம் சப்ரைஸ் கிப்ட் ..🎁 

கேரளா, நாகர்கோவில் ஸ்பெஷல் ..! பலவருடம் கல்யாண சமையலில் அனுபவம் வாய்ந்தவர கைப்பக்குவத்தில்  தமிழ் நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு  உங்கள் நேசிப்பை வெளிப்படுத்தும் அன்புப் பரிசாக 💝 நீங்கள் விரும்பும் தீபாவளி பலகாரங்கள் உங்கள் சார்பில் அனுப்பி வைப்பார்கள்...! 

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

                தீபாவளி பலகாரங்கள் ரெடி

• லட்டு

• அதிரசம்

• அச்சுமுறுக்கு

• மனோகரம்

• முந்திரி கொத்து 

                      இனிப்புகள் கிலோ ரூ.200/-

• காரச்சேவு

• ஓமப்பொடி 

• மிக்சர்

                       காரத்துக்கு கிலோ ரூ.180/-

• நேந்திரன் வாழை சிப்ஸ் -ரூ.230/-

• நேந்திரன் வாழை உப்பேறி( கேரளா கல்யாண ஸ்பெஷல்) கிலோ ரூ. 220/-

• கைசுத்தல் முறுக்கு  அளவும் சுற்றும் பொருத்து ஒன்றுக்கு 4 முதல் கிடைக்கும். 

     🔹 3 கிலோவிற்கு மேல்வாங்குபவர்களுக்கு  விசேஷசலுகையும் உண்டு. 

     🔹 தீபாவளி ஸ்பெஷல் பலகார பெட்டி ஒரு பார்சல் ரூ. 500 /- 

  🏤: கொரியர் கட்டணம் தனி. 

  👨‍🍳:  S Ambika

  📞:   8825418364

 ✅   அனைத்து இனிப்புகளும் நாட்டு சர்க்கரையில் செய்து தருகின்றோம்

✅ 🏡 வீட்டு தயாரிப்பு : 

                           சிறிய, பெரிய அளவுகளில்  தேவைகளுக்கு ஏற்றபடி ஆர்டர்க்கு பின் தனி கவனமெடுத்து உங்களுக்காக பக்குவமாக செய்து தருவோம். 

                  ❤️ உங்கள் ஆதரவுக்கு நன்றி ❤️

Link : தீபாவளி பலகாரங்கள் ரெடி

Face book : சொல் அல்ல செயல் சிறப்பு” 
30 அக்டோபர் 2020

COVID 19 கையுறை அணிந்தால் பாதுகாப்பானதா..? -1

 நண்பர் குடும்பம் ஒன்றை சந்தித்தேன். 

கைகளில் பிளாஸ்டிக் கையுறை, மாஸ்க் என்று முழுமையான தற்பாதுகாப்போடு இருந்தார்கள்.  அங்கிருந்த மேசையில் கையிலிருந்த பை வைக்கும் முன்  என் கைகளுக்கு சானிடைசர் தடவி பின் அமர்ந்தேன். இப்போதெல்லாம் அப்படித்தான்.  

🔹

கொரோனா வைரஸ் கிருமிகள்ல்லோருக்கும்  சுவாசத்தினுள் சென்று நோய் தீவிரமாவது இல்லை. சிலருக்கு சுவாசத்தினுடாக நுரையீரலுக்குள் சென்று அழர்ச்சியாக மாறி உயிராபத்தை தருகின்றது.இருமும் போது, தும்மும் போது வெளிவரும் சுவாசத்துளிகள் ( பேசும் போது வெளிப்படும்

எச்சில் துளிகள், கண்ணீர் துளிகள் ) மூலம் வைரஸ் வெளிப்படும். ஒவ்வொரு துளியும் தன் வீரியத்தை  இழக்கும் முன்  நேரடியாகவோ எங்கள் கைகளின் மூலமோ  வாய் அல்லது மூக்கின் சுவாசத்தினுடாக உள் நுழை நுழைந்து விடும். இந்த துகள்கள் சில நிமிடங்களிலிருந்து பல மணி நேரம் வரை தான் சேரும் பொருளின் தன்மைக்கு ஏற்றபடி உயிர் வாழ்வதால்  அதிவேகமாக பரவி கொண்டிருக்கின்றன. 

அதனால் தான் முகத்தை  முக்கியமாக வாய் மற்றும்  மூக்கை மூடும்  மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் கைகளுக்கு கிருமி நாசினி  தடவுங்கள் அல்லது சோப் போட்டு கைகளை கழுவுங்கள்.  ஓரளவு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்கின்றார்கள் வல்லுநர்கள். 

▪️ வீட்டிலிருந்து வெளியில் செல்லும் முன் 

▪️ பொது  போக்குவரத்தில் ஏறும் முன் (  கைப்புடி ) 

▪️ உள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தால் அங்கிருக்கும்  இருக்கை & பிடி கை ப்பிடிக்கும் முன் 

▪️ பஸ்ஸிலிருந்து பிடித்து இறங்கியதும் 

▪️ கடைகளில் பொருள் காவும் வண்டில் எடுக்கும் முன் 

▪️ கடைகளில் பொருள்களை வாங்கி வெளியே வந்ததும்  

▪️ பார்க்கிங் ல் நிற்கும் எங்கள் கார் கதவு திறக்கும் முன் 

கைகளை கழுவும் வாய்ப்பு இல்லாத இடங்களில் உள்ளே வெளியே நுழையும் போதெல்லாம் 15 - 20 நிமிட  இடைவெளிக்குள் அடிக்கடி சானிடைசர் முழங்கை வரை தடவி கொள்வேன். அசந்து போயி கையின் பாகங்கள் முகத்துக்கு நேரே மூக்கை தடவி, மாஸ்க் சரிப்படுத்தி விடுவதால்  மாஸ்க் அணிவதை மட்டும்  பாதுகாப்பென எண்ணாமல் கைகளிலும் சற்று கவனம் எடுத்து கொள்வேன். 

இப்போதெல்லாம் எங்கேனும் போய்  அமர்ந்ததும்  இயல்பான பழக்கத்தில் என் பையிலிருந்து சானிடைசர் கைகளுக்கு பூசி கொண்டு  ரயிலில், பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு அடுத்து நிற்கும் நபருக்கு சானிடைசர் டப்பி நீட்டினால் சந்தோசமாக உள்ளங் கைகளை விரிப்பார்கள். ஒரு துளி கிருமி நாசினி தானம்செய்து பெரும் புன்னகையை யுடன் “ mersi “ பெற்று கொள்வேன். 

அந்த வழக்கத்தில் அவர்களுக்கும் நீட்டினேன்.உடனே தாங்கள் கையுறை அணிந்து இருப்பதால் சானிடைசர் வேண்டாம் என்றார்கள். நானும் ஒன்றும் பேசாமல் ஒன்றரை மீற்றர் இடைவெளி விட்டுஅமர்ந்து கதைக்க ஆரம்பித்தோம். 

சிறிது நேரத்தில் கவனிக்க ஆரம்பித்தேன். 

அவர்களின் கையுறை அணிந்த கைகள் இரு கன்னத்திலும் நாடியோடு ஊன்றியபடி அடிக்கடி மாஸ்க்கை சரி செய்து இழுத்து விட்டு கொண்டிருந்தது..

🔻

இங்கே இரண்டு முக்கிய விழிப்புணர்வு   புரிந்தும் அறியாமலும் பயனின்றி பயன்படுத்தபடுகின்றது.அது என்ன என்று உங்களுக்கு புரிகின்றதா..? 

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்காது. அதே நேரம் எமக்கு தெரியும் என்று நாம் நினைப்பது எல்லாம் சரியானதாகவும் இருக்காது. COVID 19 தற்பாதுகாப்பில் அவர்கள் செயல்பாடு சரியானதா? தவறானதா? ஏன் எனும் விளக்கம் உங்களுக்கு புரிந்ததை இங்கே எழுதுங்கள். அது பலருக்கு தெளிவை தரும்.

கையுறை அணிந்தால் வைரஸ் பாதுகாப்புCOVID 19 கையுறை அணிந்தால் பாதுகாப்பானதா..? - 2

 COVID 19 கையுறை அணிந்தால் பாதுகாப்பானதா..? 

வாய் மூக்கு கண் பகுதிகளை கைகளால் தொடாமல் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கிய விழிப்புணர்வு.

கையுறை அணிந்தாலும் அதே கைகளோடு மாஸ்க் சரிபடுத்துவது. முகத்தில் கைகளை வைப்பது தவறானது. அதற்கு கையுறை அணியாமல் இருக்கலாம். முகம் தொட்டு விட கூடாது என்பதற்காகவே கையுறை அணிந்து கைகளுக்கு பாதுகாப்பு  கொடுப்பது...!

COVID 19 நோய் தொற்றி இருக்கும் தும்மல், இருமல் மூலம் வெளிவரும் துகள்களை பல மணி நேரம் உயிர் வாழும். நோய் தொற்றாளரிடமிருக்கும் வைரஸ் துகள்கள் வெறும் கைகள்அல்லது கையுறை அணிந்த கைகள் மூலம் தொடும் இடமெல்லாம் தங்கி கொள்ளும். 

ஆரோக்கியமாக இருக்கும்  நபர் அவ்விடங்களை, பொருள்களை தொட்டு ( கையுறை அணிந்திருந்தாலும்) அந்த கைகளால்  முகத்தை தடவி கொள்வர் என்றால் அதன் மூலம் வைரஸ் சுவாசத்தினுடாக நுழைந்து விடும். 

கைகளை ஓடும் நீரில் கழுவுதல்  

கிருமி தொற்று நீக்கி ( 60 % ஆல்ககால் இருக்க வேண்டும் )  கைகளில் தடவி கொள்வது வைரஸ் தடுப்பு தற்பாதுகாப்புகானது. 

🔹 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் 

கைகளுக்கு கையுறை அணிந்து கொண்டாலும் அக்கைகள் மூலம் முகத்துக்கு தடவி கொள்ள கூடாது. 

வெளியில் செல்லும் அவசியம் நேரிடும் போது பொது இடங்களில் இருக்கும் பொருள்களை தொடாமல் தவிர்ப்பது மிகவும் சிரமம். அதனால் தான் தொற்று நீக்கி தடவி கைகள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முன்னேற்பாடு செய்து இருக்கின்றார்கள். 

பொது மலசல கூடங்கள் பாவிக்காமல் தவிர்க்க முடிந்தால் சிறப்பு. அப்படி பயன் படுத்தும் அவசியம் என்றால் பயன்படுத்தும் முன்னும் பின்னும் தொற்று நீக்கியினால் சுத்தம் செய்து பயன் படுத்த வேண்டும். 

வீட்டிலும்  மலசல கூடங்கள், கைகழுவும் இடங்களில்  ஒவ்வொருவர் பயன் பாட்டுக்கு பின்னரும்  சானிடைசர் தொற்று நீக்கி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். 

வெளியே மக்கள் புழங்கும் இடங்களுக்கு சென்று வீட்டுக்குள் நுழைந்ததும் கைகளை நன்றாக கழுவ  வேண்டும். அதன் பிறகே மாஸ்க் கழட்ட வேண்டும். 

மாஸ்க் பயன்பாடும் கவனத்துக்குரியது. 

🔹 கையுறைகளை கழற்றிய பின் கைகளை நன்கு கழுவ வேண்டும். 

🔻 வெளியிலிருந்து வந்து உடனே அதே கையுறை அணிந்த கை அல்லது வெறும் கையால் மாஸ்க் கழட்ட கூடாது

🔹 மாஸ்க் கழற்றிய பின்னும் கைகளை நன்கு கழுவ வேண்டும். 

🔻பயன் படுத்திய மாஸ்க், கையுறை டிஸ்போஸ் செய்வதிலும் அவதானம் தேவை.

COVID 19 கையுறை அணிந்தால் பாதுகாப்பானதா..?

சுவிட்சர்லாந்தின் "கோவிட் 19 சிறப்பு சூழ்நிலை" அறிவிப்புக்கள்..!

சுவிட்சர்லாந்தின்  "கோவிட் 19 சிறப்பு சூழ்நிலை" அறிவிப்புக்கள்..! 

கோவிட் -19 இன் தொற்று பரவல் "அதிவேகமாக" அதிகரித்து வருவதாக ஜனாதிபதி சிமோனெட்டா சோமருகா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நடவடிக்கைகள் "போதுமானதாக இல்லை"  என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

இன்று அறிவித்திருக்கும்  புதிய விதிகள் சுவிட்சர்லாந்து முழுவதும் பொருந்தும். இருப்பினும், மண்டலங்களின் வைரஸ் தொற்று பரவும் தீவிர நிலைக்கு ஏற்றபடி கடுமையான விதிகளை பின்பற்றலாம்.

டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ( இவை வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளன. ) 

உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில், குழந்தைகளுடன் குடும்பங்களைத் தவிர, அதிகபட்சம் நான்கு பேர் ஒரு மேஜையில் உட்காரலாம். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளது.

50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. (பாராளுமன்ற மற்றும் சமூக கூட்டங்களைத் தவிர்த்து அனைத்து விளையாட்டு, கலாச்சார மற்றும் பிற நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்.) 

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனியார் அறைகளில் நிகழ்வுகளுக்கான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.( தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போலவே. தனிப்பட்ட முறையில் பல நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால் ) 

பொது இடங்களில் 15 நபர்களுக்கும் மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளன.

15 க்கும் மேற்பட்டவவர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு மற்றும் கலாச்சார விழாக்கள் உட்பட அனைத்து ஓய்வு நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு மற்றும் கலாச்சார ஓய்வு நிகழ்ச்சிகள் 15 பேர் வரை போதுமான இடைவெளி கொண்ட உள்ளரங்குகளில்  அனுமதிக்கப்படுகின்றன. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் தொழில்முறை துறையில் பயிற்சி, போட்டிகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. 

பாடும்போது பல துளிகள்  வெளியேற்றப்படுவதால், அமெச்சூர் பாடகர்களின் நிகழ்ச்சிகள்

தடைசெய்யப்பட்டுள்ளன.  தொழில்முறை பாடகர்கள் ஒத்திகை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அரசியல்ஆர்ப்பாட்டங்கள்,வாக்கெடுப்புகள்,முன்முயற்சிகளுக்கான கையொப்பங்களை சேகரிப்பதற்கு அனுமதி உண்டு ...! 

நவம்பர் 2 திங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வகுப்பறை கற்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

பல்கலைக்கழகங்கள் நவம்பர் 2 திங்கள் முதல் தொலைதூரக் கல்விக்கு மாற வேண்டும். 

பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (இலக்கணப் பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி) நேருக்கு நேர் கற்பித்தல் அனுமதிக்கப்படுகிறது.

                      மாஸ்க் ( முகமூடி) 

         தேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது:

அக்டோபர் 19 முதல், பொதுவில் அணுகக்கூடிய உட்புற இடங்களிலும், பொது போக்குவரத்துக்காக காத்திருக்கும் பகுதிகளிலும், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் அனைத்து நபர்களுக்கும் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகும். 

கடைகள், நிகழ்வு இருப்பிடங்கள், உணவகங்கள், மதுக்கடைகளில் அல்லது வாராந்திர,கிறிஸ்துமஸ் சந்தைகள், வணிக வளாகங்களின் வெளிப்புறபகுதிகளிலும் நாளை முதல் முகமூடி அணிய வேண்டும். 

மக்கள் கூடும் பொது இடங்களில் தேவையான தூரத்தை பராமரிக்க முடியாத இடங்கள்,பிஸியான 

தெருக்களின் நடைபாதைகள், கடவைகளிலும் முகமூட அணிய வேண்டும்.  

பணியிடங்களுக்கிடையேயான தூரத்தை பராமரிக்க முடியாவிட்டால் (எ.கா. தனிப்பட்ட அலுவலகங்கள்) முகமூடித் தேவை பணியிடத்திலும் பொருந்தும். முதலாளிகள் முடிந்தவரை வீட்டு அலுவலகத்தை இயக்கி, பணியிடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேல்நிலை நிலை பள்ளிகளில் நாளை முதல் முகமூடி தேவைப்படுகிறது.

12 வயது வரையிலான குழந்தைகள், மருத்துவ காரணங்களுக்காக முகமூடி அணிய முடியாதவர்கள், உணவகங்கள் & மதுக்கடைகளிலும் விருந்தினர்கள் மேஜையில் உட்கார்ந்திருக்கும்போது முகமூடித் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். 

🔹

மண்டலங்களை கலந்தாலோசித்த பின்னர், பெடரல் கவுன்சில் "கோவிட் 19 சிறப்பு சூழ்நிலையை" அதற்கேற்ப மாற்றியது. பயண தனிமைப்படுத்தலுக்கான விதிகளையும் சரிசெய்து, விரைவான சோதனைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். 

கோவிட் -19 நோய்த்தொற்றை கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சோதனைகளுக்கு (பி.சி.ஆர் சோதனைகள்) கூடுதலாக, விரைவான ஆன்டிஜென் சோதனைகளையும் நவம்பர் 2, 2020 முதல் பயன்படுத்தபடும். 

இன்று புதன்கிழமை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளின்படி, சுவிஸ் பல்கலைக்கழகங்கள் நேரடி வகுப்புகள் மூடப்பட்டு  திங்கள்கிழமை நவம்பர் 2, 2020  முதல் தொலைதூரக் கல்விக்குச் செல்ல உள்ளன.

28.10.2020

சுவிட்சர்லாந்தின் "கோவிட் 19 சிறப்பு சூழ்நிலை" அறிவிப்புக்கள்..!

சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..!

 சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..! 

20.10.2020 

சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே அவற்றின் லிமிட் வரம்பில் உள்ளன. எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவு) படுக்கைகள் இன்னும் 15 நாட்கலில் நிறைந்து விடும். “மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் இனி சிகிச்சையளிக்க முடியாது. ” என்று உயர் சுகாதார அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

🇨🇭 "கொரோனா வைரஸின் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஜெனிவா, ஃப்ரிபோர்க்.  இரண்டு கன்டோன்களும்சுவிஸ் இராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளன. 

🇨🇭 Neuenburg நர்சிங் ஊழியர்களை தனியார் கிளினிக்குகளில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கிறது: கோவிட் -19 தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நியூசெட்டல் மாநில கவுன்சில் இன்று நர்சிங் ஊழியர்களையும் தனியார் கிளினிக்குகளின் பொருள் வளங்களையும் உதவி கோர Kanton Neuenburg  முடிவு செய்திருக்கின்றது. 

🇨🇭 Jura : ஜூரா மருத்துவமனை நாளை ( 28.10) முதல் அவசர மற்றும் அவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. 

🔹

8.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் 135,000 க்கும் அதிகமானோர்  கொரோனா வைரஸ் பொசிட்டிவ் உறுதிப்படுத்த பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2,000 பேர் இறந்துள்ளனர்.

பல மண்டலங்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்திருந்தன, ஆனால் பொதுமக்கள் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை. "முடிந்த போதெல்லாம் வீட்டிலேயே இருங்கள்" என்று( Coordinated Medical Service ) Martin Ackermann வலியுறுத்தி இருக்கின்றார்.

சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலைமை..!

இனி எல்லாமே சீனா தான்

இனி எல்லாமே சீனா தான்


சீன் சீனா வரும் சீனா 

இனி எல்லாமே சீனா தானா

இதுவும் உன் சீனா..? 


சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா 

சிறுக்கி கிறுக்கி வந்தான் சீனா 

ஒரு மனுச பையன் வந்தாலும்

வேலி கட்டி வெச்சாலும் 

ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு

தப்புகள் இல்லயென்றால் 

தத்துவம் இல்லையடா 


எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ

அவ்விடத்தில் முத்தம் இட்டா

பிடிச்ச நோய் ஓடி போகும்

உச்சியிலே துடி துடிச்சா

உடம்புக்குள்ளே உடுக்கடிசா

பிடிச்ச பேய் ஓடி போகும்

உசிரை  விட்டு ஓடிப்போகும். 


அர்த்தமில்லா வார்த்தைகளின்

அர்த்தங்களை அறிவிக்கவே 

சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்

சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்

விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்

விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்


பாட்டு தான் மாற்றி  போடுவோம்.

இனி எல்லாமே சீனா தான்

29 அக்டோபர் 2020

சின்னவளாக இருந்த போது குப்பி லாம்பும் சிம்லி லாம்பும்

எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வராத 1985-1990 காலத்தில் குப்பி லாம்பும் சிம்லி லாம்பும் கூடி வாழ்ந்தோம். 

இறுக்கமான மூடி கொண்ட ஜாம் போத்தல் ( கண்ணாடிபோத்தல் )  நடுவில் ஓட்டை போட்டு  நீளமான துணியால் சுற்றிய சுருளை அதில் நுழைத்து  மண்ணெண்ணெய் ஊற்றி போத்தலினுள் திரியை  நனைத்து துணிசுசுருள் போத்தலுக்குள் சுருண்டு கிடக்க மூடிக்கு மேலிருக்கும் திரியை கொளுத்தி விடுவோம்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது நான்கு விளக்கு வேண்டும்.கண்ணாடி போத்தல் விளக்கு திரியை அடிக்கடி மேலே தூண்டி விடணும். வெளியில் கொண்டு செல்ல ஏலாது. காற்றில் அணைந்து போகும், கொஞ்சம் வசதி  வந்த பின்  சிமிலி  விளக்கும் இணைந்து கொண்டது. சிம்லி விளக்குக்கு கீழ் பக்கம் அலுமினியம் போத்தல் என்று நினைக்கின்றேன். திரி தூண்டும் பிடி இருக்கும். மண்ணெண்ணெய் ஊற்றி மூடி மேலே  விளக்குத்திரி சுற்றி வர கண்ணாடி இருக்கும். திரி அடிக்கடி தூண்டும் அவசியம் இல்லை. எலாஸ்டிக் போல் ஒரு தடடையான துணி நின்று எரியும். குப்பி லாம்பு துணிச்சுருள் போல் டக்கென்று எரியாது. கொஞ்சம் நேரமெடுக்கும்.கொஞ்சம் உயர்ந்த இடத்தில் கொழுவி விட்டால் அறையெங்கும் வெளிச்சம் பரவி தெரியும். வெளிச்சத்தின் அளவு கூட்டி குறைக்கும் வசதியும் உண்டு. சீக்கிரம் காற்றில் அணையாது. அதற்கென விசேஷ தட்டையான திரித்துணி சிம்லி லாம்பு முடிக்குள் நுழைக்கணும். அது பெரிய வேலை என்றால் தினமும் பின்னேரம் விளக்கு எல்லாம் துடைத்து கழுவி காய வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தயாராக வைக்கணும். சிமிலி லாம்பு கண்ணாடி கை தடுமாறி உடைந்தால் அடுத்த கண்ணாடி வாங்க இனி எவ்வளவு நாளாகுமோ என்று  அழுகை வரும். இருந்தாலும்  அரை குறையாக மேல் பக்கம் உடைந்தால் அது முழுக்க உடையும் வரை பாவிப்போம். சுத்தி இருக்கும் கரி புகை துடைத்து சுத்தம் செய்யும் போது கவனம் சிதறினால் கை யின் சதை தூண்டும் போகும் ..!  

குப்பி லம்புக்கு 50 அல்லது 100 மில்லி மண்ணெண்ணெய் ஒரு விளக்குக்கு போதும். காப்போத்தல், அரைக்காபோத்தல் என்ற அளவுகளில் எண்ணெய் வாங்குவோம்ல். சிம்லி லாம்புங்கு ஒரு போத்தல் எண்ணெய் வேண்டும். அப்போதெல்லாம்  வருமானத்தை பொறுத்து வீடுகளின் விளக்குகளும் எரியும். 

பின்னேரத்தில் ஒருக்கா வாசல் கூட்டி குப்பை அள்ளி மஞ்சள் தண்ணீர் தெளித்து நுளம்பு க்கு ( கொசு) வேப்பிலை புகை க்கு விறகும் கொளுத்தி  எல்லாம் தயார் செய்தால் தான் நுளம்பு கடிக்காமல் சிமெந்து பூசின தரையில் உட்கார்ந்து விட்டு பாடம் செய்யலாம். 

ஒரு குப்பி லாம்பை நடுவில் வைத்து அந்த வெளிச்சத்தில் கொப்பி வைத்து புத்தகத்தில் இருப்பதை எழுதியது எல்லாம் பெரும் கலை. சிம்லி லாம்பு என்றாலும் மேசை போல்  சிமெந்து பூசிய உயர்ந்த விறாந்தையில் வைத்து விட்டு வீட்டு பாடம் செய்வோம். 

வீட்டில் மூத்த பிள்ளை. கெட்டிக்கார பிள்ளை என்பதால் நான் படிக்க தனி குப்பி லாம்பு இருக்கும். மண்ணெண்ணெய் வாங்க காசு இல்லை என்றால் .. தெரு மூலையில் இருக்கும் தெரு விளக்கின் கீழ் அல்லது நகுலேஸ் ஆன்டி வீட்டு விறாந்தையில் போய் படிப்பேன். 

பெற்றோல் மாக்ஸ் லைட் தான் அக்கால ரியூப் லைட்.. நான் சின்னவளாக இருந்த காலத்தில்  கலியாண  விசேஷம் எல்லாம் வீட்டுக்கு முன் தெருவெல்லாம் அடைத்து பந்தல் போட்டு பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில்  மூன்று நாள்,ஐந்து நாள் என்று ஸ்பீக்கர் கட்டி கொண்டாடுவார்கள் சின்ன பிள்ளைகள் எங்களுக்கு பெட்ரோல் மாக்ஸ் லைட் வெளிச்சம் பெரும் கொண்டாட்டம் தான். 

சிலர் தெரு மின்சார கம்பியிலிருந்து பின்னேரம் ஆறு மணிக்கு பின் வயர் கொழுவி கரண்ட் எடுத்து லைட் எரியும். சில வீடுகளில் வயரிங் செய்து வீடு கட்டி இருப்பாங்க. ஆனால் மின்சாரம்  இணைப்பு இருக்காது. அப்படியானவர்களும் இரவில் வயர் கொழுவி களவாக கரெண்ட் இழுத்து கொள்வர். அதுக்கெல்லாம் டிரிக் தெரிந்த திறமையானவர்கள் இருந்தார்கள். 

கரெண்ட் இல்லை என்று அன்று கவலைகள் இல்லை. பவுர்ணமி இரவில் முற்றத்தில் பாய் விரித்து குப்புற படுத்து கதை கேட்போம். சில கதைகள்  வாரக்கணக்கில் தொடராக தொடரும். நுளம்பு கடிக்கு வேப்பிலை புகை. நேரத்துக்கு சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கி விடியலில் எழுந்து வாசல் கூட்டி குளித்து பள்ளி செல்வோம். முதல் நாள் மிஞ்சின சோத்தில் தண்ணி ஊத்தி வைப்பாள் அம்மா. அதில் உப்பும் தேங்காப்பூவும் போட்டு பிசைந்து தின்போம். பகல் ஒரு மணி பள்ளியால் வந்து சாப்பிடும் வரை பசி தாங்கும். 

மாதம் ஒரு  புதன் ருவாகினியில் தமிழ் படம். பக்கத்துக்கு வீட்டு விறாந்தையில் அப்பாவின் சாரம்  குளிருக்கு இதமாக போர்த்தி கொண்டு ரோச் லைட் பாதுகாப்பில் போய் பாதியில் தூங்கி விடுவோம்.வீட்டுக்கு   வெளியே கொல்லைக்கும் ரோச் லைட் வெளிச்சத்தில் தான் போக வேண்டும்  

சுற்றி வர இருள் இருந்தும் அன்றைக்கு இன்றைய காலம் போல் திருட்டு கொலை, கொள்ளை இல்லையே..? ஏன் என்று என்றேனும் சிந்தித்து இருக்கின்றோமா?

சின்னவளாக இருந்த போது குப்பி லாம்பும் சிம்லி லாம்பும்


27 அக்டோபர் 2020

தன் நலன் காப்பதே பொது நலனாக மாற்றம் பெறுகின்றது.

இந்த பதிவு யாருக்கும் ஆலோசனை இல்லை. அவரவர் தன்னை தானே உணர்ந்து சிந்திக்க சொல்லும் பதிவு மட்டுமே.. உணர்வோர் உணருங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்போர் கடந்து செல்லுங்கள்.   ❤️நிஷா❤️

இதோ இப்போது வரை எனக்கு தெரிந்த பலர் கொரோனா வைரஸ் பொசிட்டிவ் என்று  தகவல் தந்துகொண்டிருக்கிபறார்கள். எங்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரவி கொண்டிருப்பதாகவும் அறிந்து கொள்ள முடிகின்றன. அங்கே. இங்கே என்ற சேதி .. நம் வீட்டு வாசலில் வந்து கொண்டிருக்கின்றது. 

உங்களுக்கு சுனாமி என்றால் என்னவென்று தெரியும் தானே? அந்த சுனாமி அலையை விட  பத்து மடங்கு பெரிய அலை ஒன்று உங்களை நோக்கி வரப்போகின்றது என்றால் என்ன செய்விர்கள்? 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன் நலன் காப்பதே பொது நலனாக மாற்றம் பெறுகின்றது என்பதை எங்களில் பலர் உணராமல் இருக்கின்றோம். 

ஆரம்ப அறிகுறிகளை உணரும் போதே சோதனை செய்து தற்காத்து கொள்ளுங்கள் என்று  சுகாதாரத்துறை  அறிவித்தும் கூட கண்டு கொள்ளாமல் காய்ச்சலோடும் பலர் அங்கும் இங்கும் பயணிக்கின்றார்கள். மறைத்து செயல் படுகின்றார்கள். இதன் மூலம் ஆபத்தை தானே உருவாக்கி கொள்கின்றார்கள்.  COVID 19  பரவி கொண்டிருக்கும் வேகத்தை அவதானிக்கும் போது ஒரு Corona Virus Positive  தொற்றாளர் அறிகுறி வெளிப்படும் சில நாட்களுக்குள் 100  பேருக்கு நோயை கடத்துகிறார் என்றால் அந்த 100  பேர் 10000  பேருக்கு  பத்து மடங்கு ஜெட் வேகத்தில்  பரப்பி கொண்டே செல்கின்றார்கள். அதாவது எங்களில் ஒருவர் அறிந்தே செய்யும் பிழையால் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்தை நோக்கி நகர்த்துகின்றோம். 

ஆரம்ப சிறு அறிகுறிகள் தெரியும் போதே தாமாக முன் வந்து  COVID 19 - PCR சோதனை செய்வது எங்களுக்கு நல்லது தான் செய்யும். எங்களுக்கு நோய் தொற்று உறுதிப்பட்டால் ஒதுங்கி  இருப்பதன் மூலம் எங்களை சார்ந்த உறவுகளை பாதுகாத்து கொள்வதோடு, உங்கள் உடல் ஆரோக்கியம், நோய்கள் குறித்த மருத்துவர் ஆலோசனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி  கொள்ள முடியும். ( மேலை நாடுகளில் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள முடியும் ) நோய் இருப்பதை மறைத்து வீட்டினுள் இருந்து சுவாசம் தீவிரமானால் உடனடி உதவி கிடைக்காது. அதுவே சோதனை உறுதி செய்தால் உங்கள் உடல் நிலையின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முன் ஏற்பாடுகளை குறித்து உங்கள் மருத்துவரே அறிவித்து விடுவார். 

இலங்கையில் தனிமை படுத்தும் இடங்களில் உடனடி மருத்துவ முதலுதவி ( ஒட்சிசன், வென்டிலேற்றார் உதவி, உளவியல் சார்ந்த பயிற்சி, சத்தான உணவு ) கிடைத்து விடுகின்றது. தனித்து இருக்காமல் இன்னும் சிலருடன் பேசி பழகும் வாய்ப்பும் கிடைக்கும். 

என்னுடைய மகளின் தோழிக்கு கடந்த வரம் தொண்டை வறட்சியாக இருந்திருக்கின்றது. காய்ச்சல் ,இருமல் இல்லை. ஆனால் தொண்டை நம நம வென இருக்க ( பொதுவாக பருவகால மாற்றங்களின் போது ஒரு வகை ஃப்ளு வைரஸ் பரவும் ) வழக்கம் போல் மூலிகை வெந்நீர் குடித்து அலைந்து திரியாமல் தன தோழிகளை சந்திப்பதை தவிர்த்து  தானே மருத்துவரை தொடர்பு கொண்டு  PCR  சோதனைக்கு  சென்று முடிவு நெகடிவ் என்று தெரிந்த பின் தோழிகளுக்கும் அறிவித்து இருந்தாள்.  18 வயது தான் அவளுக்கு. சிறு வயது என்றாலும் தன்னை பாதுகாக்கும் பக்குவம் இருக்கின்றது அல்லவா? 

நான் செல்லும் Swiss சர்ச்  ( 100  நபர்களுக்கும் மேல் ) lock down அறிவித்தவுடன் அரசின் அறிவிப்புகளை அப்படியே அமுல் செய்து யூன் மாதம் மீண்டும் எல்லாம் நார்மலுக்கு வந்த பிறகும் செப்டம்பர் வரை சபை கூடுதலை தவிர்த்து கொண்டார்கள். செப்டம்பர் ஆரம்பித்து இப்போது மீண்டும் வைரஸ் பரவலை அறிந்து அரசின் முடக்கத்துக்கு முன்பே கூட்டம் கூடுவதை தவிர்ப்பதே ஞானமான காரியம் என்று அறிவித்து இருந்தார்கள்.

விழிப்புணர்வு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் கடந்த ஆறு மாதங்களாக அவதானிக்கின்றேன். இந்த கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு  மக்களுக்குள் போதாது.அரசாங்கங்கள் சமூக வலைத்தளங்களினுடாக பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் கண்டு கொள்வது இல்லை. 

அரசுகள் அதிவேக  நடவடிக்கை எடுப்பது முக்கியமானது தான் என்றாலும் அரசு நடவடிக்கை மட்டும் போதாது. ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும். என்னால் Covid 19  பரவ  கூடாது எனும் விழிப்புணர்வு முக்கியம். 

மாஸ்க் அணிவது, சானிடைசர் நோய்க்கிருமி நாசினி பயன்பாடு  குறித்தும் தெளிவான புரிதல்கள் தேவை. ஓடி ஒளிவதும் தேடிப்பிடிப்பதும், தீவிரவாதிகளை தேடுவது போல் பத்திரிகை, இணையதளங்களில் பரபரப்பூட்டுவதும் தவிர்க்கபட வேண்டும். 

கொரோனா வைரஸ் உயிர் கொள்ளும் ( எழுத்து பிழை இல்லை) நோயாக இன்னும் பரிமாணம் எடுக்கவில்லை என்றாலும் நிகழ் நிலைகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது உயிர் கொள்ளும் நோயாக மாற்றி கொள்கின்றோமோ எனும் அச்சம் உருவாகின்றது. 

அரசுகள் பொருளாதாரம் குறித்து கவலை கொள்ள மக்கள் தேவையற்ற விடயங்களில் அக்கறை, ஆர்வம் செலுத்தி பொசிட்டிவ் எனும் பெயரில் எங்களை எதிர்வு கொண்டு வரும் ஆபத்தை உணர்த்தும் வாய்ப்பை தவிர்க்கின்றோம். 

எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் எனும் அறிவு எங்களுக்கு வேண்டும். 

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் வேகம் மிகவும் ஆபத்தானதாக மாறி கொண்டிருப்பதை உலகளவில் COVID 19 குறித்து கூர்ந்து அவதானிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது. 

பயம், பதற்றம், பரபரப்பு என்று உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயங்கி மனதை ஏமாற்றி கொள்கின்றோம். நாடு தீப்பற்றி எரியும் போது பிடில் இசை ரசிக்க முடியாது. 

இவ்வாறான விழிப்புணர்வு, முன் எச்சரிக்கை பதிவுகளை பொது நலன் கருதி நேரத்தை செலவிட்டு ( மொழி பெயர்த்து ) போடுவதை விட  ஒரு நடிகையின் கிளிசரின் கண்ணீருக்கு , ஒரு புகைப்படம், ஒரு சாப்பாட்டு தட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சமூக நலன் சார்ந்த பதிவுகளுக்கு கிடைப்பது இல்லை. 

இந்த பூமி, இந்த சமூகத்தில் நாங்கள் மட்டும் இல்லை. எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் வாழ்க்கை  இங்கே தான் ஆயத்தமாக வேண்டும். பொதுமக்கள் ஆதரவில்லாமல்.அரசோ, வல்லுனர்களோ எதையும் சாதிக்க முடியாது. 

புரிந்து கொள்ளுங்கள்...!

coronavirus_வதம்_செய்யும்

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா


1918-1919 இலங்கையில் தொற்றுநோய்( Spanish influenza )

இலங்கையில் 1918-1919 இன் Spanish influenza தொற்றுநோயால் மொத்த மக்கள் தொகை இழப்பு 307 000. இலங்கை மக்கள் தொகையில் சுமார் 6 · 7% ஆகும். 

உலகளவில் 50 முதல் 100 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் 3 முதல் 5%) இத்தொற்றால் உயிரிழந்தனர். 

இலங்கையில் தொற்றுநோய் 1918 அக்டோபர் தொடக்கத்தில் இரண்டு தனித்தனி (வடக்கு மற்றும் தெற்கு) பகுதிகளிலும், மார்ச் 1919 ஆரம்பத்தில் மூன்றாவது (மத்திய) பிராந்தியத்திலும் உயர்ந்தது.

1918-1919 உலகளாவிய தொற்றுநோய்களின் போது, ​

 1918 ஜூன் இல் இலங்கையில் முதன்முதலில் தொற்றுநோய் பதிவாகியுள்ளது.

  1918 செப்டம்பர் மாதத்தில், இறப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது அந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பெரும்பாலான இடங்களில் இறப்பு விகிதம் உயர்ந்தது. 1918 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையில் ஒரு மில்லியனுக்கான இறப்பு விகிதம், இலங்கை பதிவாளர் ஜெனரலின் கூற்றுப்படி 1917 ஆம் ஆண்டை விட 170 மடங்கு அதிகமாக இருந்தது, இலங்கையில் தொற்றுநோயால் ( நிமோனியா ) ஏற்பட்ட இறப்பு குறித்த முந்தைய மதிப்பீடுகளை விடமக்கள்தொகை இழப்பு மதிப்பீடு கணிசமாக அதிகமாக  இருந்தது. 

இலங்கை தீவில் தொழில்நுடபம் வளர்ச்சி குறைந்து  உலகத்துடனும், உள்ளுருடனும் போக்குவரத்து குறைவாக இருந்த காலத்தில் 1918 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயால்  பொங்கி எழுந்தது . ( 1918-1919 ) தொற்றுநோய் "இன்ஃப்ளூயன்ஸா" பரவலாகவும், அபாயகரமாகவும் உயர்ந்தது.

மேலும் விரிவான தகவல்கள் ஆங்கிலத்தில் உண்டு. இப்பதிவில் இலங்கை எதிர்கொண்ட இழப்பு மேலோட்டமாகவே எழுதி உள்ளேன். தெளிவாக  முழு மொழிபெயர்ப்புக்கு கொடுக்கும் நேரம் பயனுடையாக இல்லை. யாரும் முக்கியத்துவம் தருவதும் இல்லை. ஆர்வமுள்ளோர் இந்த லிங்கில் பாருங்கள் 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4181474/

🔹

உலக வரலாற்றில் மிகவும் அழிவுகரமான உலகளாவிய தொற்றுநோய்களில் 1918-19ல் பரவிய  Spanish influenza   ஒன்றாகும். 

உலகளவில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மனித வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமாகி இருந்தது. 

தொற்றுநோயிலிருந்து இறப்பு விகிதம்

20 முதல் 40 மில்லியன், 

20-50 மில்லியன்

40-50 மில்லியன்

50-100 மில்லியன்

20, 30 , 40 மில்லியன் என்று ஒவ்வொரு முறையிலும் இழப்பு வீதம் உயர்ந்து கொண்டே இருந்தது. Photos in Geogle 

இன்ஃப்ளூயன்சா (காய்ச்சல்) மற்றும் COVID-19 க்கு என்ன வித்தியாசம்?

H1N1 இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) மற்றும் COVID-19 இரண்டும் தொற்று சுவாச நோய்கள், ஆனால் அவை வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுகின்றன. COVID-19 ஒரு புதிய கொரோனா வைரஸால் (SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது) ஏற்படுகிறது. இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் வைரஸ்கள் தொற்றினால் ஏற்படுகிறது.

காய்ச்சலுக்கும் COVID-19 க்கும் இடையில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலை விட COVID-19  எளிதில் பரவுவதாகவும், சிலருக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.

அறிகுறிகளைக் காண்பிப்பதற்கும் அதிக காலம் எடுத்து கொள்கின்றது,  தொற்றுநோயாக தொடர்வதற்கும் அதிக காலம் ( வருடங்கள்) ஆகலாம். 

மற்றொரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், காய்ச்சலிலிருந்து பாதுகாக்க ஒரு தடுப்பூசி உள்ளது. COVID-19 ஐத் தடுப்பதற்கான தடுப்பூசி தற்போது இல்லை. 

நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான சிறந்த வழி வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் மற்றும் COVID-19 இன் சில அறிகுறிகள் ஒத்திருப்பதால், அறிகுறிகளின் அடிப்படையில் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டைக் கூறுவது கடினமாக இருக்கலாம், மேலும் நோயறிதலை உறுதிப்படுத்த சோதனை தேவைப்படலாம். 

காய்ச்சல் மற்றும் கோவிட் -19 பல குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் இரண்டிற்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.ஒவ்வொரு நாளும் மேலும் பலவற்றைக் கற்றுக் கொண்டாலும், COVID-19 மற்றும் அதை ஏற்படுத்தும் வைரஸ் பற்றி இன்னும் நிறைய தெரியவில்லை. 

காய்ச்சலுக்கும் COVID-19 க்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த கூடுதல் தகவல்கள். 

அடுத்த பதிவில் ..!

1918-1919 இலங்கையில் தொற்றுநோய்( Spanish influenza 

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

COVID 19 - சீனாவில் வெற்றிகரமான கட்டுப்படுத்த பட்டிருக்கின்றது.-2

 பகுதி 2 

COVID-19 ஐ கட்டுப்படுத்த உலகம் போராடி வரும் நிலையில், சீனா தொற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்த முடிந்தது. அது எப்படி சாத்தியமானது?

தற்கால நடப்பு நிலை COVID-19  in 🇨🇳 

               • 24.10  முதல் நபர் Virus positive 

               • 25-10 -  26.10  PCR Test .. Test 

               • 27.10  முழு நகரும் உடனடி lockdown. 

சின்ஜியாங்கின் ( Xinjiang ) வடமேற்கு பிராந்தியத்தில் இருக்கும் காஷ்கரில்  ( Kashgar ) ஒரு நபர் (17 வயது garment factory worker) 24 ம் திகதி சனிக்கிழமை  கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகு. 25 அக்டோபர்  ஞாயிற்றுக்கிழமை 138 புதிய அறிகுறி இல்லாத கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறிந்துள்ளதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. அறிகுறியற்ற தொற்றாளர்களை  சீனா ‘உறுதிப்படுத்தப்பட்ட  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  ’என வகைப்படுத்தவில்லை,  அவ்விடங்களில் இதுவரை அறிகுறிகள் உள்ளவர்களின்  வைரஸ் positive  எதுவும் பதிவாகவில்லை.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 10 நாட்களில் இது முதல் புதிய உள்ளூர் நோய் தொற்றாளர்கள் (Shandong  மாகாணத்தில் கிங்டாவோ  Qingdao நோய் பரவலுக்கு பின்) ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு உள்ளூர் COVID கிளஸ்டரின் தளமாக ஜின்ஜியாங் இருந்தது, இதன் விளைவாக தலைநகர் உரும்கி முழுமையாக பூட்டப்பட்டது; இருப்பினும், ஆகஸ்ட் 15 முதல் இப்பகுதியில் புதிய தொற்றாளர்கள்  எதுவும் பதிவாகவில்லை.

எனினும் கஷ்கர், சின்ஜியாங்கில் (Kashgar, க்ஸிஞ்சிங்) அதிகாரிகள் சனிக்கிழமை இரவு ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கினர், இது அந்த பிராந்தியத்தின் 4.75 மில்லியன் மக்களை உள்ளடக்கி இருந்தது. அதாவது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 24.10- 25.10 ஒரே நாளில் 2.84 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமைக்குள் மீதமுள்ள மக்கள் சோதிக்கப்படுவார்கள் என்று ( அரசாங்க)  நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்கர் ஒரு பண்டைய பட்டு சாலை நகரமாகும், இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. 

அறிகுறிகள் அற்ற, உறுதிப்படுத்தப்படாத தொற்றாளர்கள் வெறும் 138 நபர்கள் தான் என்ற அசட்டுதனம் இல்லாமல்

பொருளாதாரம்,அரசியல் ஆதாரம் என்றெல்லாம் யோசித்து காலம் கடத்தாமல் அங்கே வைரஸ் பொசிட்டிவ், இங்கே பொசிட்டிவ் என்று கூவி அறிக்கை விடாமல், தகரம் அடைத்து தனிமை படுத்தாமல் ஒட்டுமொத்தமாக நகரின் 4.75 மில்லியன் மக்களும் -  பல்கலைக்கழகங்களைத் தவிர அனைத்து பள்ளிகளையும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதாக காஷ்கர் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, 

ஆனால் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்திருக்கும். காஷ்கர் பிராந்தியத்தில் உள்ள நான்கு நகரங்கள் ‘அதிக ஆபத்து’ உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் கடுமையான பயண மற்றும் இயக்க கட்டுப்பாடுகள்  நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Link :China

1919 நவம்பரில் சீனாவில் எதோ வைரஸ் பரவி , எதோ ஒரு நகரில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களைமுடக்கி ஒரே நாளில் பெரிய மருத்துவமனை,ஒரே நாளில் ஆயிரம் படுக்கை எல்லாமே ஓரிரு நாளில்  நடந்து முடிந்தது. மாஸ்க் எனும் முக மூடி, மனிதர்களுக்கு சானிடைசர் குளியலும், இறந்தவர்களை குவியலாக புதைத்ததும் வீட்டு செல்ல பிராணிகளை கூட வீட்டு விடாமல் முகத்தை மூடி எதிர்ப்பு குரல்களை ஒடுக்கி சீனா போன்ற நாட்டின் பொருளாதார தன்னிறைவும், அதன் கட்டமைப்பும் காரணமாகி இருக்கலாம் என்றாலும் அவை எல்லாவற்றுள்ளும் முக்கியமான காரணம் மக்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் என்பதை ஒப்புக்கொண்டு ஆக வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை சீன அரசியல் வாதிகளும் மக்களும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்தவில்லை என்பதை சீனாவின் முடக்கப்படாத பகுதி சீனா நண்பர்கள் மூலம் அறிய முடிகின்றது.,

ஒரு மாநகரத்தை பல மில்லியன் மக்களை வீட்டுக்குள் முடக்கும் முடிவை எடுக்க சில மணி நேரங்களே போதுமாக இருந்தது எனும் துணிச்சலையும் என்னமோ மேஜிக் போல் யாருக்கோ தானே என்று வேடிக்கை பார்த்தோம். 

நோய் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே இணைய தளங்களை தடை செய்து, தொலைபேசி தொடர்புகளை தடுத்து, ஊடகங்களை தம் வசப்படுத்தி அனைத்துக்கும் மேல் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின் ஆதரவையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. 

அதிவேக அதிரடி நடவடிக்கையில் தன் நாட்டினுள் உருவான வைரஸ் அரக்கனை கட்டுப்படுத்தி விட்டார்கள் என்று நிம்மதி அடையும் நேரம்  பிப்ரவரியில் இத்தாலிக்குள் நுழைந்த வைரஸ் தொற்றாளர் ஒருவரால் வெறும் மூன்று நாட்களுக்குள் கொத்து, கொத்தாய் பல உயிர்களை இழந்த பின்னே ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆறுதலாக தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியது. 

( முதல் அலையின் போது சீனா எப்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்பதையும், ஏனைய நாடுகள் எவ்வாறு முன்னேற்பாடுகள் செய்ய முடியும் என்பதையும் தெளிவாக வெளியிடவில்லை ) 

வேகம் .. சர்வாதிகார வேகம் விவேகமற்ற முடிவு என்று ஜனநாயக நாட்டில் வாழும் அனைவரும் விமர்சித்தார்கள். சீனாவில் பரவிய வைரஸ் தானே? அனுபவிக்கட்டும் எனும் அல்டசியத்துடன் மனிதாபிமான உதவிகளை கூட செய்யாமல் வேடிக்கை பார்த்தார்கள். 

சீனாவில் கொரோனா வைரஸ் தானே உருவானதா? திட்டமிட்டு உருவானதா?

அமெரிக்க-சீனா உரசல், பேசி வைத்து எல்லாம் நடத்துகின்றார்கள், அரசியல், பொருளாதார நாடகம், சீனா உண்மை நிலை மறைக்கின்றது,  இந்த வைரஸ் தரும் இழப்புகளுக்கு சீனாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனும்  விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ( அவ்வாறு சிந்தனை திருப்பல்களுக்கு திட்டமிட்டு திருப்பபடுகின்றோம் ) பாதுகாப்பு மற்றும்  அறிவியல் பூர்வமாக நடவடிக்கைகளை கவனித்து, சிந்தித்து  அழுத்தம் கொடுக்க முடியாதவாறு சீனாவை குறித்த  எதிர்மறை  கருத்து பரவலாக்கபட்டிருக்கின்றன. 

ஏனைய நாட்டு அரசு நிர்வாகங்களுக்கும் மக்களுக்கும்  சீனா தொற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் எப்படி கட்டுப்படுத்த முடிந்தது எனும் வழி காடடலை தருகின்றது தானே? 

தொடர்வோம்

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

#coronavirus_வதம்_செய்யும்

China Part 2COVID 19 - சீனாவில் வெற்றிகரமான கட்டுப்படுத்த பட்டிருக்கின்றது. - 1

 COVID-19  சீனாவில் வெற்றிகரமான கட்டுப்படுத்த பட்டிருக்கின்றது.

            🔹 கொரோனா வைரஸ் உருவான சீனாவில் வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. 

             🔹 பொருளாதாரம் மீண்டும் அதிகரிக்கிறது. 

உலகமோ அல்லோகல்ல படுகின்றது. நோய்த்தொற்று வேகமாக பரவுகின்றன.உயிர்கள் மலிந்து பொருளாதாரம் சிதைந்து மேற்குலக நாடுகள் அதிர்கின்றன. 

செப்டம்பர் 22, 2020  ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2) ஐ "சீனா வைரஸ்" என்று குறிப்பிடுகிறார். "இந்த பிளேக்கை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்டதற்கு" சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். 

டிரம்பிற்குப் பின்னர் பொதுச் சபையில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட நாடுகளை “அறிவியலின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் ..இந்த தொற்றுநோயை வெல்ல ஒரு கூட்டு சர்வதேச முயற்சியைதொடங்கவும்” வலியுறுத்தினார். "பிரச்சினையை அரசியலாக்கும் அல்லது களங்கப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் நிராகரிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார்.

அக்டோபர் 4, 2020 நிலவரப்படி, 

சீனா 90 604 கோவிட் -19  பொசிட்டிவ் நோயாளர்கள்  மற்றும் 4739 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 7382194 பொசிட்டிவ் நோயாளர்களையும்

209 382 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் சீனாவை விட 20 மடங்கு சிறிய மக்கள் தொகை உள்ளது, ஆயினும் இது COVID-19 இன் ஐந்து மடங்கு மற்றும் இறப்புகளை விட பத்து மடங்கு அதிகமாகும். இவை அனைத்தும் கேள்வியை எழுப்புகின்றன: 

சீனா எவ்வாறு தனது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிந்தது?

COVID-19 ஐ கட்டுப்படுத்த உலகம் போராடி வரும் நிலையில், சீனா தொற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்த முடிந்தது. 

அது எப்படி சாத்தியமானது?

மேற்கு நாடுகள் சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? 

தொடர்வோம் 

China -2

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

24 அக்டோபர் 2020

Swiss பூமியில் சொர்க்கம்..2

ஊரை சுற்றி 

இருக்கையில் அமர்ந்து 

இயற்கையையும் சுட்டு🪂🪂

ஹைய்ய்ய்

Photos by me 😍

@Ringgenberg Burgseeli Swiss பூமியில் சொர்க்கம்..1

அழகே...! 

ஒவ்வொரு நொடியிலும் அழகே..! 💕💕

இலை உதிர் காலம்  அழகே..!  🧡


ஓடும் பேருந்திலிருந்து @Interlaken OST  🧡

Photo by me❣️


              மரத்தின் கீழிருந்து இரண்டாவது சூட்டிங் 💛


              மரத்தின் கீழிருந்து இரண்டாவது சூட்டிங் 💛

Photo by me❣️

தலைவாரிப் பூச்சூடி..💕

மகளும் நானும்...💕💕

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் 

பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை


மாறுவது நெஞ்சம் மாற்றுபவர் யாரோ..?


 மனங்கள் சிரிப்பை இழந்து ä

தனிமையால் உயிர்ப்பை தொலைக்கின்றன


உள்ளங்கள் வெறுப்பில் எரிவதனால் 

உறவுகள் உரிமை இழக்கின்றன 


பாசத்தின் பாதையை பேதங்கள் மூட 

நேசமெனும் வேஷங்கள் கலைக்கின்றன.


எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் 

கழுத்தை நெரிக்கின்றன 


அன்பு வற்றி கசப்புகள் நிறைந்து. 

வாழ்க்கை தொலைக்கின்றன.


பற்றிய பற்றுகள் அறும் நொடியில்  

சிறகுகள் முளைக்கின்றன..!


ஈற்றில்  இறுகிடும் இதயம் 

துடிப்பை மறக்கின்றது


மாறுவது நெஞ்சம் 

மாற்றுபவர் யாரோ..? 


#coronavirus_வதம்_செய்யும்

23 அக்டோபர் 2020

பெண்களுக்கு ஆண் துணை வேண்டும்.,!

 ""பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை“  வனிதா

ஆணோ, பெண்ணோ தனித்து வாழ்ந்து சாதித்தவர்கள் அநேகர் தான். அதெல்லாம் அவரவர் வாழும் சூழலை பொறுத்தது. 

கணவன் எனும் பெயரில் ஒருவர் இருந்தும் இல்லாமல் நேர்மையாக நிமிர்ந்து வாழ்ந்து , உழைத்து தன்னையும், தன் பிள்ளைகளையும் பாதுகாத்து, படிக்க வைக்கும்  பெண்களை என்ன சொல்விர்கள்? 

எப்போதும் மேல் தட்டு பணக்கார செலிபிறட்டி  சமூகத்தை வைத்து  நிஜ உலகு குறித்து முடிவுக்கு வர முடியாது. வரவும் கூடாதுங்க..! 

பெண்களுக்கு துணை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதுக்கு பின் அவங்களே பக்குவப்பட்டு விடுவார்கள். ஆண்கள் இளவயது  திமிரில் துணை வேண்டாம் என்பர், வயது போன பின்பு யோசிப்பார்கள். 

அதே போல் ஒரு பெண்ணுக்கு துணை என்பது கணவனாக  மட்டும் இல்ல.. மகன், பேரன், நண்பன், அண்ணன் தம்பி சகோதர உறவில் கிடைக்கும் பாசம், கொஞ்சம் அக்கறை கூட போதுமாக இருக்கும். ஆனால் ஆண்களால் அது முடியாது. 

இன்றைய சூழலில் பலர் ஒரே வீட்டில் மனதாலும், உடலாலும் பிரிந்து குடும்பம், கௌரவம் என்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

சேர்ந்து வாழ்வோர் பிரிந்து வாழ, பிரிந்து வாழ்வோர் சேர்ந்து வாழ ஆசை படுவது தான்யதார்த்த நிலை ( அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை ) 

அவ்வளவு தான்..! 

அப்படியே இதையும் பாருங்கோ..வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல..!

 ஏமாந்து போவது.. ! 

நமக்கான நம்பிக்கை துரோகங்கள் தானே ஏமாற்றத்தை தரும்? 

ஒரு பெண் ஏமாந்து போனாள் என்றால் அது அவள் அறியாமல் செய்யும் ஒரு விடயத்தில் நம்பிக்கை பொய்த்து போகும் போது தானே? நம் எதிர்பார்ப்பு, அன்பு நம்பிக்கை பொய்க்கும் என்றே தெரிந்து கண்ணை மூடி கொண்டு செயல்பட்டு அதன்  பின்  வரும் விளைவுக்கு பெயர் ஏமாற்றம் இல்லை.

வனிதா விடயத்தில் அவ தெரிந்து செய்யும் அத்துமீறல்களை ஏமாற்றம் என்று சொல்ல முடியுமா? தெரிந்து தானே தனக்கு பப்ளிசிட்டி தேடி கொள்கின்றாள்?  

திருமணம் என்றொரு வீடியோ... என்ன நடக்குது என்று அறிய அதை பார்த்து தொலைத்தேன். அது சர்ச் வெட்டிங் இல்லை, அவங்க வீட்டில் செய்தாங்க.. இது பொம்மை கல்யாணம் என்று தான் உடனே நான் யோசித்தேன்.. அதுக்கேற்றது போல் அடுத்த நாளே அது லீகல் இல்லை. இல்லீகல்.. எங்க திருப்திக்கு செய்தது ( முதல் மனைவியை உரசி பார்க்கும் திட்டம்) என்று அறிக்கை விடடார். 

அன்று இல்லீகல் என்று சொன்ன பிறகும் என் ஏமாற்றம் வரணும்?

முதலில் அவள் எதை தேடுகின்றாள்? 

அவள் தேடலின் விளைவு இன்னொரு பெண் பாதிக்கப்படும் நிலையில் யார் இங்கே பரிதாபத்துக்கு உரியவர்? 

                      "பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை. என் மகளுக்கு அப்பா வேண்டும். தினமும் அவள் வாழ்க்கையில் சந்தித்து, அவளோடு வாழும்படியான ஒரு தந்தை வேண்டும். அது இல்லாததால் டாடி இஷ்யூஸ் வருகிறது. எனக்கே இந்த வயதில் அப்படி அப்பா இல்லாததால் தான் இப்படி பீட்டர் பாலிடம் போய் விழுந்தேன்" - வனிதா 

                        ஏற்கனவே திருமணமான ஒருவன், அந்த பெண்ணுக்கு உண்மை இல்லாதவன் இவைக்கு மட்டும் உண்மையாக இருப்பான் என நம்புவது யார் தவறு? அந்த முதல் மனைவி நிலை என்ன?  அவளும் பெண் தானே?  

இவர்கள் போல் பெண்ணுங்க இன்னொரு பெண்ணுக்கு, குழந்தைக்கு செய்யும் ஏமாற்றம் அநீதிக்கு யார் வீடியோ விடுவது? 

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் பெண். தன் குழந்தைங்க மன நிலை குறித்து யோசிக்க வேண்டாமா? 

அந்த பெண்குழந்தைகள் இவரின் செய்கையில் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளுமோ? யாருக்கு தெரியும்? 

இத்தனை வயதுக்கு பின் அந்த டீன் ஏஜ் பெண்களுக்கு இன்னொரு அந்நிய ஆண் அப்பாவாக மாற முடியுமா?  இல்ல அவனுக்கு தான் அந்த பிள்ளைகளை தன் பெண் குழந்தை எனும் பாசம் வருமா?

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார் பாருங்கோ. அங்கே தான் இந்த வனிதாவின் கெட்டித்தனம் இருக்குது. எல்லோரையும் நல்ல ஞாபக மறதி கேஸ் என்று நினைத்து கொண்டாள்.அவள் என்ன அள்ளி விட்டாலும் பாவம் பரிதாபம் என்று இல்லை திட்டி தீர்த்தும் தனக்கு வருமானம் தேடி தருவாங்க என்ற நம்பிக்கையை எல்லோரும் காப்பாத்தி இருக்கீங்க.( உங்களுக்காக geogle  ல் தேடினேன். Comment link  உறுதி படுத்தி கொள்ளுங்கோ) 

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார். ஆனால் அவர்கள் அப்பா இருந்த போது அப்பாவை மதித்தது இல்லை.

அப்போதும் பெற்றோர் பற்றி கண்டபடி பேசி அவமானப்படுத்தினர் என்பது என் நினைவு. 

பெற்றோரையும், கூட பிறந்தவர்களையும் மிக கேவலமாக பேசி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தார் என்று அதுவும் இதே மீடியாவில் தான் விவகாரமானது. 

இது இன்னும் எத்தனை காலத்திக்கு....! உடலில் அழகும்,கவர்ச்சியம்  இருக்கும் வரை தானே எல்லாம்? 

அப்புறம்..? 

இங்கே பலர் ( முக்கியமாக பெண்கள், அதுக்கு 100, 1000 க்கணக்கில் லைக் வேறு )  அவவின் தைரியத்தை பாராட்டி ஆதரவு தந்து எழுதும் அளவுக்கு வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல. நல்ல முன் மாதிரியும் இல்லை. 

வனிதா நல்ல வியாபாரி...! 

வனிதா தான் செய்யும் பிழைகளை  மறைத்து தனக்கு  சார்பாக பேசி பரிதாபம் அல்லது அவமானம்  ரெண்டிலும் காசு சம்பாதிக்க தெரிந்து கொண்ட நல்ல வியாபாரி. தன்னை மூலதனமாக்கி சம்பாதிக்க தெரிந்த யதார்த்தவாதி. அவர் வளர்ந்த, வாழ்ந்த சூழலில் அது தான் அவருக்கு தெரியும். இது தான் முடியும். 

இதை கணவனை இழந்து அல்லது பிரிந்து வாழும் சாதாரண பெண் தானும் தன் பிள்ளைகளும் உயிர் வாழனும் எனும் நிலையில்  பிழைக்க வேறு வழி இன்றி  செய்தால் அவளுக்கு எங்கள் சமூகம் கொடுக்கும் பெயர் வேறு . 

தன்னம்பிக்கையோடும் ஆளுமையோடும் வாழும் ஏழைப்பெண்ணுக்கு ஒரு நீதி.. இம்மாதிரி உடல்  அழகை மூலதனமாக்கும் பெண்களுக்கு ஒரு நீதி. 

மாற வேண்டியது அவள் அல்ல ., எங்கள் சமூகத்தின் சிந்தனை.

எனக்கு இந்த டாப்பிக்கே எழுதும் இஷ்டம் இல்லை. ஆனால் நம்ம பெண்ணுங்க பலருக்கே பல புரியல்ல எனும் போது பேசிதானே ஆகணும்.

வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல


18 அக்டோபர் 2020


 பிரிவு என்பது காயம் 

யாராலும் குணப்படுத்த முடியாது. 


நினைவுகள் என்பது பரிசு 

யாராலும் திருட முடியாது. 


உணர்வு என்பது உயிர்ப்பு 

யாராலும் பிரிக்க முடியாது 


மனம் ஒரு குரங்கு 

தாவிக்  கொண்டே இருக்கும்


உறவு என்பது  வடு 

எவருமே  நிரந்தரம் இல்லை


வாழ்க்கை என்பது அனுபவம் 

அதை வாழ்ந்து தான் உணரணும்


இறப்பு தருவது நிம்மதி 

அனைத்திலிருந்தும்  விடுதலை

{( நிம்மதி) உண்மையா என்று எனக்கு தெரியல்ல🙄  உங்களுக்கு தெரியுமா.,? }


17 அக்டோபர் 2020

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'..!

 “  பசித்தவனுக்கு தொடர்ந்து மீன்  பிடித்து கொடுப்பதை  விட  மீன் பிடிக்க கற்று கொடு” 

மீன் பிடிக்க கற்று கொடுத்து விட்டால் போதாது.. ..மீன் பிடிக்கும் உபகரணம்  பெற்றும் கொடுக்க வேண்டும்..! 

மீன் பிடிக்க உபகரணமும், அறிவும் போதுமா.. ? 

இல்லை! 

மீன் பிடிக்க கூடிய  சூழல் வேண்டும்..! 

மீன் கிடைக்கும் எனும் நம்பிக்கையும், பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்..! 

( ஆறு, கடல், குளம் போன்ற நீர் நிலைகள் இல்லாத இடத்தில மீன் பிடிக்க மட்டும் தெரிந்திருப்பது பயனற்று போகும்) 

எங்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் மீட்சிதிட்டங்களுக்கு இவ்வாறான ஒருங்கிணைந்த ஒரு முனைப்பு தேவை. 

நாம் செய்யும் உதவிகள் தற்காலிகமானதாக இல்லாமல் நீண்டகால தூர நோக்கத்தில் எங்கள் தமிழ் சமூகத்தை தெளிவும், உறுதியுடனும் மீட்சி படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக திட்டமிட்டு சிறுவர் கல்வி மேம்பாடு எனும் இலக்கில் கடந்த வருடம் மட்டக்களப்பில்  சில முன்னேற்பாடுகளை எடுத்திருந்தேன். 

இவ்வருடம் இலங்கை சென்று நேரில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கும்  திட்டம் இருந்தது. எனது உடல் நிலை மற்றும் கொரோனா வைரஸ் lockdown  காரணமாக எதையும் செயல் படுத்த முடியாத நிலையில் ... இன்னும் ஒரு வருடங்களும் அதற்கு மேலும் காலத்தை விரயமாக்கி  காத்திருப்பதை விட

வடக்கு,கிழக்கு,மலையக தமிழ் மக்களின் 

கல்வி தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஐந்து வருடங்களாக ஏதிர்கால இளையோர் சமூகத்தின் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பணியில்  E-Kalvi Charity Inc.

அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பில் கிராமத்து பள்ளி ஒன்றின் (களுமுந்தன் வெளி ) இலவச கற்பித்தல் வகுப்புகளுக்கான  வருடாந்த செலவுகளை முழுமையாக பொறுப்பெடுத்து இருக்கின்றேன்.  

அங்கும்,இங்கும், எங்கும் என்று அலை பாயாமல் இனி வரும் காலங்களில் என் முழு கவனத்தையும் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கான பணியில்  செலுத்தி  மட்டக்களப்பில் இன்னும் பல  திட்டங்களை உருவாக்க வேண்டும். 

எமது  ஈழத்து சமூகத்தின் கல்வி மீட்சிக்காக

🔹 வகுப்பறை 

🔹 இணைய, மின்சார இணைப்பு வசதி, 

🔹 லப்டப், ப்ரொஜெக்ட்டர்கள் போன்ற முன்னேற்பாடுகளும், 

🔹 சமூக பற்றும், திறமையும் கொண்ட ஆசிரியர்கள் 

🔹 பள்ளி அதிபதின் ஒத்துழைப்பு 

புலம் பெயர்ந்து வசதி வாய்ப்போடு வாழும் நாங்கள் எமது உதவிகளை கடலில் கரைத்து விடும் பெருங்காயம் போல்  பத்தோடு பதினொன்று என்று  தொடராமல்  சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் எங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி    மேம்படுத்தும் சவால் மிக்க பணியில் ஒரு பள்ளியை பொறுப்பில் எடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவி செய்யலாமே ..? 

நீங்கள் படித்த பள்ளியின் தற்போதைய கல்வி தரம் எப்படி இருக்கின்றது? உங்கள், எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் கல்வி தரம் மேம்பட  நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளலாமே ..! வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி  Kumaravelu Ganesan நீண்ட காலம் கிட்ட தட்ட இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்கள் அவதானித்து தனி மனித விருப்பு வெறுப்புக்களை கடந்து சமுகப்பணிகளை முன்னெடுத்து செல்லும் அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும், மனித நேயமும் கொண்ட உங்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி ஐயா. 

சாரிட்டி அறிமுகம் தந்தமைக்கு நன்றி Yoga Valavan Thiya ஐயா. 

இப்பதிவுக்கான நோக்கம் ... விருது, விருந்து, பாராட்டு, பெருமைக்கானது அல்ல..!  இது போல் நீங்களும் ஒரு பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வீர்கள் எனும் நம்பிக்கைக்கானது.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

நன்றி ❣️

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா