30 அக்டோபர் 2020

COVID 19 கையுறை அணிந்தால் பாதுகாப்பானதா..? -1

 நண்பர் குடும்பம் ஒன்றை சந்தித்தேன். 

கைகளில் பிளாஸ்டிக் கையுறை, மாஸ்க் என்று முழுமையான தற்பாதுகாப்போடு இருந்தார்கள்.  அங்கிருந்த மேசையில் கையிலிருந்த பை வைக்கும் முன்  என் கைகளுக்கு சானிடைசர் தடவி பின் அமர்ந்தேன். இப்போதெல்லாம் அப்படித்தான்.  

🔹

கொரோனா வைரஸ் கிருமிகள்ல்லோருக்கும்  சுவாசத்தினுள் சென்று நோய் தீவிரமாவது இல்லை. சிலருக்கு சுவாசத்தினுடாக நுரையீரலுக்குள் சென்று அழர்ச்சியாக மாறி உயிராபத்தை தருகின்றது.இருமும் போது, தும்மும் போது வெளிவரும் சுவாசத்துளிகள் ( பேசும் போது வெளிப்படும்

எச்சில் துளிகள், கண்ணீர் துளிகள் ) மூலம் வைரஸ் வெளிப்படும். ஒவ்வொரு துளியும் தன் வீரியத்தை  இழக்கும் முன்  நேரடியாகவோ எங்கள் கைகளின் மூலமோ  வாய் அல்லது மூக்கின் சுவாசத்தினுடாக உள் நுழை நுழைந்து விடும். இந்த துகள்கள் சில நிமிடங்களிலிருந்து பல மணி நேரம் வரை தான் சேரும் பொருளின் தன்மைக்கு ஏற்றபடி உயிர் வாழ்வதால்  அதிவேகமாக பரவி கொண்டிருக்கின்றன. 

அதனால் தான் முகத்தை  முக்கியமாக வாய் மற்றும்  மூக்கை மூடும்  மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் கைகளுக்கு கிருமி நாசினி  தடவுங்கள் அல்லது சோப் போட்டு கைகளை கழுவுங்கள்.  ஓரளவு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்கின்றார்கள் வல்லுநர்கள். 

▪️ வீட்டிலிருந்து வெளியில் செல்லும் முன் 

▪️ பொது  போக்குவரத்தில் ஏறும் முன் (  கைப்புடி ) 

▪️ உள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தால் அங்கிருக்கும்  இருக்கை & பிடி கை ப்பிடிக்கும் முன் 

▪️ பஸ்ஸிலிருந்து பிடித்து இறங்கியதும் 

▪️ கடைகளில் பொருள் காவும் வண்டில் எடுக்கும் முன் 

▪️ கடைகளில் பொருள்களை வாங்கி வெளியே வந்ததும்  

▪️ பார்க்கிங் ல் நிற்கும் எங்கள் கார் கதவு திறக்கும் முன் 

கைகளை கழுவும் வாய்ப்பு இல்லாத இடங்களில் உள்ளே வெளியே நுழையும் போதெல்லாம் 15 - 20 நிமிட  இடைவெளிக்குள் அடிக்கடி சானிடைசர் முழங்கை வரை தடவி கொள்வேன். அசந்து போயி கையின் பாகங்கள் முகத்துக்கு நேரே மூக்கை தடவி, மாஸ்க் சரிப்படுத்தி விடுவதால்  மாஸ்க் அணிவதை மட்டும்  பாதுகாப்பென எண்ணாமல் கைகளிலும் சற்று கவனம் எடுத்து கொள்வேன். 

இப்போதெல்லாம் எங்கேனும் போய்  அமர்ந்ததும்  இயல்பான பழக்கத்தில் என் பையிலிருந்து சானிடைசர் கைகளுக்கு பூசி கொண்டு  ரயிலில், பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு அடுத்து நிற்கும் நபருக்கு சானிடைசர் டப்பி நீட்டினால் சந்தோசமாக உள்ளங் கைகளை விரிப்பார்கள். ஒரு துளி கிருமி நாசினி தானம்செய்து பெரும் புன்னகையை யுடன் “ mersi “ பெற்று கொள்வேன். 

அந்த வழக்கத்தில் அவர்களுக்கும் நீட்டினேன்.உடனே தாங்கள் கையுறை அணிந்து இருப்பதால் சானிடைசர் வேண்டாம் என்றார்கள். நானும் ஒன்றும் பேசாமல் ஒன்றரை மீற்றர் இடைவெளி விட்டுஅமர்ந்து கதைக்க ஆரம்பித்தோம். 

சிறிது நேரத்தில் கவனிக்க ஆரம்பித்தேன். 

அவர்களின் கையுறை அணிந்த கைகள் இரு கன்னத்திலும் நாடியோடு ஊன்றியபடி அடிக்கடி மாஸ்க்கை சரி செய்து இழுத்து விட்டு கொண்டிருந்தது..

🔻

இங்கே இரண்டு முக்கிய விழிப்புணர்வு   புரிந்தும் அறியாமலும் பயனின்றி பயன்படுத்தபடுகின்றது.அது என்ன என்று உங்களுக்கு புரிகின்றதா..? 

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்காது. அதே நேரம் எமக்கு தெரியும் என்று நாம் நினைப்பது எல்லாம் சரியானதாகவும் இருக்காது. COVID 19 தற்பாதுகாப்பில் அவர்கள் செயல்பாடு சரியானதா? தவறானதா? ஏன் எனும் விளக்கம் உங்களுக்கு புரிந்ததை இங்கே எழுதுங்கள். அது பலருக்கு தெளிவை தரும்.

கையுறை அணிந்தால் வைரஸ் பாதுகாப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!