10 அக்டோபர் 2020

ஆப்பிள் வற்றல்

 பிசியோ தெரபியே செய்து உடல் அசைத்து களைத்து வந்து  நிடோ பால் கோப்பி & ( இலங்கை சுக்கு மல்லி கோப்பி  ) ஆப்பிள் வற்றலும் இன்றைய பின்னேர சிறு உணவானது. 

ஆப்பிள் வற்றல்  தங்கை ( Jeruscha Jeeva) வீட்டு ஆப்பிள் மரத்து பழங்களை வற்றலாக பதப்படுத்தி, Johannisbeeren பழங்களில் ஜாமும்  செய்து எனக்கும் கொடுத்தாள் ❤️

நீங்களும் செய்யலாம். ( மாதக்கணக்கில்  வைத்து உண்ணலாம்). கடைகளில் 100 gr பாக்கட் 3 SFr. சீசன் காலத்தில் மலிவாக ஆப்பிள் கிடைத்தால் வற்றல் செய்து பிள்ளைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

ஆப்பிள் பழங்களை கழுவி  நடுவில் இருக்கும் விதை நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கி நல்ல கோடை வெயிலில் உலர்த்தி எடுக்கலாம். அல்லது back ofen இல் வைத்து கிரில் setting இல் காய விடலாம். 

( கடந்த வருடம் நானும் செய்தேன். இவ்வருடம் நான்உணவு பொருட்கள் ஒன்றுமே பதப்படுத்தவில்லை 🖤)

ஆப்பிள் வற்றல்2 கருத்துகள்:

  1. ஆப்பிள் வற்றல் - இது வரை கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி நிஷா.

    பதிலளிநீக்கு
  2. மாங்காய் வத்தல் போல் நல்ல சுவையாக இருக்கும். பழம் மலிவாக கிடைத்தால் செய்யலாம்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!