23 அக்டோபர் 2020

வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல..!

 ஏமாந்து போவது.. ! 

நமக்கான நம்பிக்கை துரோகங்கள் தானே ஏமாற்றத்தை தரும்? 

ஒரு பெண் ஏமாந்து போனாள் என்றால் அது அவள் அறியாமல் செய்யும் ஒரு விடயத்தில் நம்பிக்கை பொய்த்து போகும் போது தானே? நம் எதிர்பார்ப்பு, அன்பு நம்பிக்கை பொய்க்கும் என்றே தெரிந்து கண்ணை மூடி கொண்டு செயல்பட்டு அதன்  பின்  வரும் விளைவுக்கு பெயர் ஏமாற்றம் இல்லை.

வனிதா விடயத்தில் அவ தெரிந்து செய்யும் அத்துமீறல்களை ஏமாற்றம் என்று சொல்ல முடியுமா? தெரிந்து தானே தனக்கு பப்ளிசிட்டி தேடி கொள்கின்றாள்?  

திருமணம் என்றொரு வீடியோ... என்ன நடக்குது என்று அறிய அதை பார்த்து தொலைத்தேன். அது சர்ச் வெட்டிங் இல்லை, அவங்க வீட்டில் செய்தாங்க.. இது பொம்மை கல்யாணம் என்று தான் உடனே நான் யோசித்தேன்.. அதுக்கேற்றது போல் அடுத்த நாளே அது லீகல் இல்லை. இல்லீகல்.. எங்க திருப்திக்கு செய்தது ( முதல் மனைவியை உரசி பார்க்கும் திட்டம்) என்று அறிக்கை விடடார். 

அன்று இல்லீகல் என்று சொன்ன பிறகும் என் ஏமாற்றம் வரணும்?

முதலில் அவள் எதை தேடுகின்றாள்? 

அவள் தேடலின் விளைவு இன்னொரு பெண் பாதிக்கப்படும் நிலையில் யார் இங்கே பரிதாபத்துக்கு உரியவர்? 

                      "பெண்களுக்கு ஆண் துணை வேண்டும். சிங்கிள் மதராக இருப்பது எளிதான விஷய்ம் இல்லை. என் மகளுக்கு அப்பா வேண்டும். தினமும் அவள் வாழ்க்கையில் சந்தித்து, அவளோடு வாழும்படியான ஒரு தந்தை வேண்டும். அது இல்லாததால் டாடி இஷ்யூஸ் வருகிறது. எனக்கே இந்த வயதில் அப்படி அப்பா இல்லாததால் தான் இப்படி பீட்டர் பாலிடம் போய் விழுந்தேன்" - வனிதா 

                        ஏற்கனவே திருமணமான ஒருவன், அந்த பெண்ணுக்கு உண்மை இல்லாதவன் இவைக்கு மட்டும் உண்மையாக இருப்பான் என நம்புவது யார் தவறு? அந்த முதல் மனைவி நிலை என்ன?  அவளும் பெண் தானே?  

இவர்கள் போல் பெண்ணுங்க இன்னொரு பெண்ணுக்கு, குழந்தைக்கு செய்யும் ஏமாற்றம் அநீதிக்கு யார் வீடியோ விடுவது? 

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் பெண். தன் குழந்தைங்க மன நிலை குறித்து யோசிக்க வேண்டாமா? 

அந்த பெண்குழந்தைகள் இவரின் செய்கையில் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளுமோ? யாருக்கு தெரியும்? 

இத்தனை வயதுக்கு பின் அந்த டீன் ஏஜ் பெண்களுக்கு இன்னொரு அந்நிய ஆண் அப்பாவாக மாற முடியுமா?  இல்ல அவனுக்கு தான் அந்த பிள்ளைகளை தன் பெண் குழந்தை எனும் பாசம் வருமா?

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார் பாருங்கோ. அங்கே தான் இந்த வனிதாவின் கெட்டித்தனம் இருக்குது. எல்லோரையும் நல்ல ஞாபக மறதி கேஸ் என்று நினைத்து கொண்டாள்.அவள் என்ன அள்ளி விட்டாலும் பாவம் பரிதாபம் என்று இல்லை திட்டி தீர்த்தும் தனக்கு வருமானம் தேடி தருவாங்க என்ற நம்பிக்கையை எல்லோரும் காப்பாத்தி இருக்கீங்க.( உங்களுக்காக geogle  ல் தேடினேன். Comment link  உறுதி படுத்தி கொள்ளுங்கோ) 

அப்பா இருந்தால் இதெல்லாம் நடக்காது என்கின்றார். ஆனால் அவர்கள் அப்பா இருந்த போது அப்பாவை மதித்தது இல்லை.

அப்போதும் பெற்றோர் பற்றி கண்டபடி பேசி அவமானப்படுத்தினர் என்பது என் நினைவு. 

பெற்றோரையும், கூட பிறந்தவர்களையும் மிக கேவலமாக பேசி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்தார் என்று அதுவும் இதே மீடியாவில் தான் விவகாரமானது. 

இது இன்னும் எத்தனை காலத்திக்கு....! உடலில் அழகும்,கவர்ச்சியம்  இருக்கும் வரை தானே எல்லாம்? 

அப்புறம்..? 

இங்கே பலர் ( முக்கியமாக பெண்கள், அதுக்கு 100, 1000 க்கணக்கில் லைக் வேறு )  அவவின் தைரியத்தை பாராட்டி ஆதரவு தந்து எழுதும் அளவுக்கு வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல. நல்ல முன் மாதிரியும் இல்லை. 

வனிதா நல்ல வியாபாரி...! 

வனிதா தான் செய்யும் பிழைகளை  மறைத்து தனக்கு  சார்பாக பேசி பரிதாபம் அல்லது அவமானம்  ரெண்டிலும் காசு சம்பாதிக்க தெரிந்து கொண்ட நல்ல வியாபாரி. தன்னை மூலதனமாக்கி சம்பாதிக்க தெரிந்த யதார்த்தவாதி. அவர் வளர்ந்த, வாழ்ந்த சூழலில் அது தான் அவருக்கு தெரியும். இது தான் முடியும். 

இதை கணவனை இழந்து அல்லது பிரிந்து வாழும் சாதாரண பெண் தானும் தன் பிள்ளைகளும் உயிர் வாழனும் எனும் நிலையில்  பிழைக்க வேறு வழி இன்றி  செய்தால் அவளுக்கு எங்கள் சமூகம் கொடுக்கும் பெயர் வேறு . 

தன்னம்பிக்கையோடும் ஆளுமையோடும் வாழும் ஏழைப்பெண்ணுக்கு ஒரு நீதி.. இம்மாதிரி உடல்  அழகை மூலதனமாக்கும் பெண்களுக்கு ஒரு நீதி. 

மாற வேண்டியது அவள் அல்ல ., எங்கள் சமூகத்தின் சிந்தனை.

எனக்கு இந்த டாப்பிக்கே எழுதும் இஷ்டம் இல்லை. ஆனால் நம்ம பெண்ணுங்க பலருக்கே பல புரியல்ல எனும் போது பேசிதானே ஆகணும்.

வனிதா பெண்ணிய வாதியும் இல்லை. சிங்க பெண்ணும் இல்ல


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!