30 ஏப்ரல் 2020

விரயமாகும் விவசாய உற்பத்திகளை சமநிலை படுத்தும் வழி காட்டிகள்


30.04.2020 
இன்று வியாழன் அதிகாலை 5.50 இருந்து சொறிக்கல்முனை கிராமத்தில் 380 Kg கத்தரிக்காய் 

27.04.2020 
திங்கள் இரண்டாம் கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராம விவசாயிகளிடமிருந்து 1117 Kg கத்தரிக்காய் (1Kg -25/ )

25.04.2020
கடத்த சனிக்கிழமை முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து கத்தரிக்காய் 1Kg 20/= மற்றும் வெண்டிக்காய் 1Kg 30/= க்கும் 650 Kg மரக்கறிகள்  இது வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து இருக்கின்றார்கள் 

⬇️d

திடீர் ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையினை முடங்கி போட்டது 

உள்ளூர் விவசாய   உற்பத்திகள் வெளியூருக்கு செல்ல முடியாமல் தேங்கி விரயமாவதாக தினம் ஒரு விவசாயியின் குரல் வலியோடும் வெளி வருகின்றது.

ஒரு பக்கம் உணவு இல்லை ..! 
இன்னொரு பக்கம் அதிக விளைச்சல் பயன் படுத்துவோர் இல்லை....!

இரண்டையும் சமநிலை படுத்தும்கடமை  அப்பகுதி  அதிகாரிகளுக்கு உண்டு.
இப்பிரச்சனைக்கு மிக எளிதான தீர்வுகளை முன்னெடுத்து வழி காட்டி இருக்கின்றார்கள் எங்கள்  இளையோர்..!👏


வினோஜ் குமார் பல்கலை பல்கலை கழக மாணவன், இளம் விஞ்ஞானி 

இவர் தலைமையில் சிறு குழுவொன்று தன்னார்வலர்களாக இணைந்து ஊரடங்கு கால நிவாரணப்பணிகளை மேற்கொண்டு 
வருகின்றார்கள் 

கடந்த சில தினங்களில் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க சென்றிருந்த போது மரக்கறிகள் ( வெண்டி மற்றும் கத்தரி ) விற்கப்படாமல் பாதைகளில் கிடப்பதைக் கண்டு பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள் பார்வைக்கு கொண்டு  சென்றிருக்கின்றார்கள். 

அவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு சிறப்பான தீர்வு ஒன்றையும் இந்த இளம் தன்னார்வலர்கள் மூலம் செயல் படுத்தி இருக்கின்றார் 😇

அதனையடுத்து ஒவ்வொருவரும் நாளும் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து காரைதீவில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு  பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள்  காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இருவரும்  இணைந்து இளம் தன்னார்வலர் குழுவுக்கு வழி காட்டி விவசாயிகள் மற்றும் மக்கள் தேவைகளை சரியான நேரத்தில் தெளிவாக சமப்படுத்தி இருக்கின்றார்கள்.👏😇

அதே போல் ஏனைய பகுதி விவசாய உற்பத்தி பொருள்களையும் மக்கள் தேவைகளையும் காலமறிந்த் இணைக்கும் பணியில் அதிகாரிகள் தம் கடமைகளை உணர்ந்து செயல் படலாமே? 


நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்களான இளையோர் நேரடியாக விவசாய தோட்ட்ங்கள் சென்று தானே தமக்கு தேவையானதை பறித்து கொள்வதால் வேலையாள்  ஆள் கூலி இல்லாமல் நேரடி கொள்வனவு விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருவருக்கும் நஷ்டம் இல்லாமல் 
இருக்கும்.

உடனுக்குடன்  பறித்து கொள்வதால்  நன்கு ஐந்து நாள்கள் வைத்து சமைக்கலாம் என்பதால் நிவாரண பொருளில் பருப்பு மின் ரின் போன்ற இறக்கு மதி பொருள்களை தவிர்த்து உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முன் உரிமை கொடுக்கலாம்.


டிப்ஸ் 🙇🏻

நன்நீர் நிறைந்த அகன்ற பாத்திரத்தில் கத்தரிக்காய் போட்டு வைத்தால் வாடாமலும் அழுகாமல் இருக்கும் , இலங்கையில் நாங்கள் வாழ்ந்த போது கத்தரிக்காய் மலிவான காலத்தில் வாங்கி கிணற்றில் போட்டு தினம் தேவைக்கு எடுத்து சமைப்போம்

இவ்வாறான திடடமிடட சீரான செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவிப்பதும் பகிர்ந்து பரப்புவதும்  இன்னும் பலருக்கு விழிப்புணர்வை தரும்.

இப்படியான முன் மாதிரிகளை பின் பற்றுவோர் தங்கள் காலத்துக்கு ஏற்ற சிறந்த செயல் பாடுகளை பகிருங்கள். பலருக்கு அது வழிகாட்டிடலாக இருக்கும் 


Nisha 🙏

25 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 5

சமூகம் நெருக்கடியை சந்திக்கும் போது அவர்கள் தனியே இல்லை, நாங்க கூட இருக்கின்றம் என உணர்த்த எங்கட கைக்குள் களமும் காலமும் நேரமும் இருக்கும் வரை தான் நான் இங்கே என் ஆலோசனைகள் பகிர்வேன்

கை தூக்கி விட என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன்

காலம் கடந்து, சூழல் சுழலுக்குள் சுழல ஆரம்பித்த பின் ஐயோ அம்மா பசிக்குது, பட்டினி
என்றழுதாள்  கண்ணை மூடி போய் கொண்டிருப்பேன்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்” 
( குறள் விளக்கம் தேடி புரிந்துக்கோங்கோ )

இத்துணுண்டு எறும்புக்கு கூட மாரி காலத்துக்கு தனக்கான உணவை சேமிக்கணும் என தெரியுது।

மனிதர்கள் என்னவென்றால் அதிகம் உழைத்தால் சமுர்த்தி தடை செய்வார்களாம்
அரசும் தனியாரும் நிவாரணம் தர மாடடார்களாம்😡

ஏலேய் மெத்த படித்த மானிடா!
அகப்பையில் இருந்தால் தான் சட்டியில் வரும்..!

உங்களுக்கு இலவசம் தர அரசுகள் உலகவங்கியிடமும் அமெரிக்காவிடம்,சீனாவிடமும் வாங்கிய கடனுக்கு  அடிமையாகி।  நாடே திவாலாகி போனது.

அவர்களே இனி ததிங்கிணத்தோம் ஆட போகினம்! இனி எங்கிருந்து இலவசம் தட்டுவார்கள் என நம்புறீங்க?

கடந்த காலம் பேசி
நிகழ்கால லாபம் பார்த்து
எதிர்காலத்துக்கு கல்லறை கட்டுவது தான் உங்கட விருப்பம் எண்டால்....?

நிஷா 😴😴😴
🙇‍♂️🙇🏻🙇‍♀️🙇‍♀️🙇🏻🙇‍♂️

Link:கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। -3

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 4

இச் சிறுபோகத்தில் நெல்லைப்பயிரிடுவதற்கு போதியளவான நீரில்லாவிடில் அங்கு மறு வயற் பயிர்களை செய்கை பண்ணுங்கள். 

இதற்காக இலங்கை அரசாங்கம் பெரும் உதவிகளை செய்கின்றது.  நீங்கள் கால் ஏக்கர் முதல் அரை ஏக்கர் வரை பயிர் செய்தால் உங்கள் விதைகளிற்கு ஏற்படும் முழுச் செலவையும் அரசாங்கம் வழங்கும்.  அதே போன்று அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை பயிரிட்டால் விதைக்கு ஏற்பட்ட செலவில் அரைவாசியை அரசாங்கம் மானியமாக திரும்பவும் வழங்கும். அது மாத்திரமல்ல சுமார் 14 பயிர்களிற்கு உத்தரவாத விலை தரப்பட்டுள்ளது. எனவே உங்கள் விளைபொருட்களைசந்தைப்படுத்த பிரச்சினைகள் ஏற்படாது. இது பற்றிய முழுமையான விபரங்களை விவசாய அமைச்சின் சுற்று நிருபம் வௌியிட்ட பின்னர் தருகின்றேன். விதைகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் பிரதேச விவசாயப் போதனாசிரியரை நாடவும். தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவரிடமே பெற முடியும். அருமையான  சந்தர்ப்பம் தவற விடாதீர்கள். மேட்டு நிலக் காணிக்கும் இச்சலுகைகள் உள்ளன.

🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀

இப்படியான ஏற்ற நேரத்துக்கு தகுந்த ஆலோசனைகள் வழி காடடல்கள் தரும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்களிப்போடு  இனி வரும் காலத்தை எதிர்கொள்ள தயாராகுவோம் வாருங்கள் 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகள் இப்போதைக்கு முடியாது 
பன்றி காய்சசலை விட பத்து மடங்கு கொடியதாம்😭 நான் சொல்லல,Who  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்குது 

அப்படியே வெளிநாட்டு வேலை, பயணம் என இப்போதைக்கு திடடம் போட வேண்டாமாம் 
எல்லாமே முடங்கி போனதால் நோயோடு பட்டினி சாவும் வருமாம்.அல்லது வளர்ந்த பணக்கார நாடுகள் தாம் வாழ Africa நாட்டின் வளங்களை கொள்ளையடித்து இனி அங்கே சுரண்ட ஒண்ணுமில்லை. என்றானதால் ஆசிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்பும். வளம் கொழிக்கும் பூமிகளில் வளங்கள் வறளும் வரை வாரி செல்லும்.

கொஞ்சமேனும் புத்தியாயிருந்தால் பிழைத்துக்குவிங்க.காசு, பணம், நகை எல்லாம் பசிக்கு தின்ன ஏலாது கண்டியளோ? 

ஓடி ஓடி உழைத்தும் அழுற பிள்ளைக்கு ஒரு நாளைக்கு ஒரு வாய் சோறு கொடுக்க முடியல என்றால் எப்படி உணருவீர்கள்?

அதனால் தான் சொல்றம்.

நாங்க நீங்க சமூகமா சேர்ந்து எங்கள் தேவைக்கு பயிர் இடனும்.

அதிகம் கைக்காசு போடாமல் அரசாங்கம் தரும் உதவி சலுகை குறித்தும் உங்களுக்கு வரும் தடைகள் குறித்தும் அதிகாரிகள் வல்லுநர்கள் பார்வைக்கு கொண்டு போய்  சேர்க்க குரூப் இல் சேர்ந்து பயன் பெறுங்கோ.அனுபவசாலிகளும் ஆலோசனை தருவாங்க!
கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 3

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”உலகம் பேரிடர்களை சந்திக்கும் காலங்களில் எல்லாம் மக்கள் தம் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கான நெருக்கடியை எதிர்கொள்கின்றார்கள்!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி கொண்டிருக்கும் இக்காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!

உலக நாடுகள் தனிமை படுத்த பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில்  பலவகை பஞ்சங்கள் ஏற்பட்டு, பட்டினிச் சாவு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக, ஐ.நாவின் உலக உணவு திட்ட இயக்குனரகம் எச்சரித்துள்ளது।

குறைந்த மற்றும் நடுத்தர வளர்ச்சியடைந்த நாடுகளில் 265 மில்லியன் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதை சமீபத்திய ஆய்வுகளும் கணிப்புகளும் குறிப்பிடுகின்றன।

இலங்கை அரசு  இனி வரும் உணவு பற்றாக்குறையை  எதிர்கொள்ள வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றது!

எங்கள் தேசத்தில்  கொட்டி கிடங்கும் இயற்கை வளங்களை திடடமிட்டு பயன் படுத்தினால் நாங்களும்  எங்கள் மக்களும் வர இருக்கும் ஆபத்துக்களை எதிர் கொண்டு பிழைக்க முடியும்।

தற்சார்பு வாழ்க்கை, வீட்டு தோட்டம், விவசாய செய்திகள், துணுக்குகள், ஆலோசனைகள், அனுபவங்களை பகிர்ந்தும் அதற்கான செயல் பாடுகளை முன்னெடுத்து செல்ல ஆர்வம் காட்டுவோரை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு இக்குழு ஆரம்பிக்க பட்டுள்ளது।

இலங்கை விவசாய அதிகாரிகள், விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், அனுபவசாலிகள் இணைந்து பங்களிப்பை தருகின்றார்கள்!

நாமும் நம்மை சார்ந்தோரும் கொரோனாவிலிருந்தும் 
அதன் விளைவாக உருவாக்கப்போகும் பசி பட்டினியிலிருந்தும் பாதுகாக்கப்பட ஒன்று பட்டு செயல் படுவோம்!

காலத்தே பயிர் செய்ய வேண்டிய அவசியத்தை எங்கள் நண்பர்கள் உறவுகளுக்கும் உணர்த்துவோம்!

குழுவை லைக் செய்வதன் மூலம் பலர் பயன் பெறுவார்கள்!

நன்றி🙏

23 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 2தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண் விரயமே.

தனி மனிதர் தற்சார்பு முயற்சி வெற்றி பெற  ஒரே நேரத்தில் பல்வேறு முயற்சிகள் தேவை அதுவே சமூகம் இணைந்து முயற்சிக்கும் போது இலகுவானதாகவும், அதிக பலன் தருவதாகவும் இருக்கும்

அவரவர் தேவைக்கும் மேல் உற்பத்தி செய்வது  தவிர்க்க வேண்டும்.அனைவரும் ஒரே இலக்கில் ஒரே  பயிர்களை விதைப்பதும் தவிர்க்க வேண்டும்.

எல்லோரும் தக்காளியும். கீரையும், வெண்டியும், மரவள்ளியம் நடடால் தற்சார்பு வாழ்க்கை நிறைவு பெறுமா?

இல்ல...!

ஒரு குடும்பம் இனி வரும் நெருக்கடிக்கு தயாராக்குவதாக எடுத்து கொள்வோம்.

வீடடை சுற்றி இருக்கும் நிலத்தில் மரவள்ளி நடடால் பசிக்கு உதவும்.அதுவே தினமும் உணவாக உண்ண முடியுமா?அலுத்து, சலித்து போகுமா இல்லையா?

அப்படி எனில் என்ன தான்  செய்யணும்?

வீட்டுத்தோட்டம் செய்யும் ஒருவரிடம் கீரை, காய், பழம் இருக்கும் இது மட்டும்  தற்சார்பு வாழ்வுக்கு
போதாது.பால் முடடை அரிசி போன்ற ஏனைய பொருட்க்களை பெற்றால் தான் நிறையுணவை அவன் பெறுவான்.சோப்பு சீப்பு போன்ற ஏனைய அத்தியாவசிய பொருள்களும் வேண்டும்.அதற்கு பணம் தேவை.

எனில்.......?

தன் தேவைக்கு மேல் கிடைக்கும் உற்பத்தியை  பண்டமாற்று செய்யும் வாய்ப்பு இருந்தால் ( பணமாவோ பொருளாகவே பெற முடியும் போது தான் ) தற்சார்பு வாழ்க்கை முழுமை பெறும்!

கோழி வளர்க்கும் ஒருவர் முடடையும் இறைச்சியும் கொடுத்து அரசி பெறுவார்.
ஒரு கிராமத்தில் 5 பசுவும் மாடும் வைத்திருந்தால்  அந்த கிராமத்தில் இருக்கும் 100 குழந்தைக்கு தினமும் பால் கிடைக்கும்( அங்கர் மா இல்லை எனும் கவலை இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் ) கீரை, காய், கனி, கிழங்குவகை நெல், முடடை, பால் இறைச்சி என எல்லாமே எமது தேவைக்கு ஏற்ற உற்பத்தி, தற்சார்பு வாழ்வுக்கு முக்கியம்.

அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் குறுகிய, நீண்டகால பயன் தரும் திடடமிடல், வழி காடடல் இருக்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் ஒன்றில் பத்து நூறென பெருக்கும்  ஆர்வமும் நுண் திறனும் கொண்டவர்கள் இன்னமும் தமது ஆற்றலை பெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாது  இருக்கின்றார்கள்.உங்கள் ஊரிலே  இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பதன் மூலம் நிறைந்த பயனை பெறலாம்.

இக்காலத்தில் நிவாரணம் வழங்கும் பலர் தம் சுற்று வடடாரம்  கடந்து 20 - 30  கிமி பயணிப்பதை விட அவர்களின் ஒட்டு மொத்தமனித ஆற்றலை  தாம் வாழும் பிரதேசத்தை தற்சார்பு வாழ்க்கை நோக்கிய இலக்கில் செலுத்தி மாதிரி கிராமங்களை உருவாக்குவார்கள் என்றால்  அவர்களை பின் தொடர்ந்து பலர் தம்மை தாமே
உணர்ந்து.உருவாக்கி கொள்வார்கள்..! உரமாகுவார்கள். கிராமங்கள் செழித்து உயிர்க்கும் போது நகரங்கள் பிழைக்கும்!

நினைவில் கொள்ளுங்கள்....!
தற்சார்பு வாழ்க்கை என்பது பறப்பதற்கு வழி காடடாது!
உயிர் பிழைப்பதற்கு நிச்சயம் வழி காட்டும்!
( பிழைத்த பின் பறக்கவும் வலிமை தரும் 😀)

பணப்புழக்கம் குறைந்தாலும் பண்டமாற்று தொடர்ந்து நடந்தால் தான் தற்சார்பு வாழ்க்கை வெற்றி பெறும் என்பதனால் மக்களுக்கு இதை உணர்த்தி உண்மையில் ஆர்வம் காட்டுவோர், சமூகம், எதிர்காலம் என சிந்திப்போர்  விடாமுயற்சியும், ஆர்வமும் இருப்போரை இணைத்து கொள்ளுங்கள்.

கிராமங்கள் தோறும் ஆற்றலும்,ஆர்வமும் உள்ளவர்களை இணைந்து சமூக குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்।
இந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பண்டமாற்று செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்

1. வீட்டு தோட்டம்
***************
1️⃣ சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு சொல்வாங்க!

எதை எதை எப்போது எங்கே எவ்வாறு விதைத்தால் பலன் அதிகம் என தகுந்த ஆலோசனைகளை பெற்று நிலத்தில் அன்றாட தேவையான  காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை,கறிவேப்பிலை,வாழை, மா, பப்பாசி,போன்றவையும் நட ஊக்கப்படுத்துங்கள்

அதே போல் ஒரே நேரம் அனைத்து விதையும் நடாமல் விதைக்கும் காலம், அறுவடை காலங்கள், கணக்கிட்டு தேவையான அளவு  வருடம் முழுதும் பயன் தருவது போல் கால இடைவெளி வீட்டு நட வேண்டும்.

ஒரு கிராமத்தில்  100  குடும்பம் இருக்கும் எனில் எல்லோரும் சம காலத்தில் கீரை, தக்காளி,வெண்டி பயிரிடுதல் தவறானது. எல்லோரும் மரவள்ளி நடுகை செய்வதும் பயனின்றி போகும். எல்லோர் வீட்டு தோட்டமும் ஒரே நேரம்  கீரை, தக்காளி  விளையும் எனில் என்ன நடக்கும் என  யோசித்து பாருங்கள். சலித்து போகும்
எங்கள் ஆற்றல் விரயமாகி போகும்.

✅ இன்னார் இதை என நெறிப்படுத்தி காலத்தை பயனுடையதாக்க வேண்டும்

அதனால் தோட்டம்  போடும் முன் காலத்துக்கு தக்க ஊடு பயிர், பல பயிர், இரடடைபயிர் குறித்தும் தெளிவாக அறிந்து
நீர்ப்பாசன வசதி  குறித்தும் முன் கூட்டி திடடமிட்டு கொள்ளுங்கள்.

நாலு தக்காளி கண்டு என்றாலும்
நீர் வேண்டும்.கீரை பாத்தி நீரினுள் வேண்டும்

2️⃣ மரவள்ளி, உருளைக்கிழங்கு போன்றவைகளும்  ஊருக்குள் இருக்கும் விளை நிலங்களில் நட ஆற்றல் உள்ளோரை ஊக்கப்படுத்துங்கள்.

3️⃣ பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்.

🙏  வீட்டுதோட்டம் உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதால் செயற்கை உரங்களை தவிர்த்து கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்.2. விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, பால் தரும் பசுமாடு  ( ஜெரசி வேண்டாம் ) ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுததுவதன் மூலம்
✅ இயற்கை உரம் கிடைக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.

✅ முடடை, பால்,இறைச்சி போன்ற தேவைகளும் நிறைவாகும்

உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்।.

 4. மழை நீர் சேமிப்பு தற்சார்பு வாழ்வுக்கு  அத்தியாவசியமானது.

5. தற்சார்பு வாழ்க்கை நோக்கிய திடடமிடலில் மிக முக்கியமானது மின்சாரம்
இலங்கை போன்ற வெப்பப்பிரதேசங்கள்  சூரிய சக்தியில் மின்சாரம் பெறும் வழிகளை குறித்தும் ஆராய்ந்து செயல் படுத்துவீர்கள் என்றால் தற்சார்பில் முழுமையடைந்த வெற்றி பெற்ற மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கி இருப்பீர்கள்

☀️ புலம் பெயர்ந்து வாழும் எங்கள்உதவி  என்பது அவரவர் சொந்த கிராமத்தை இவ்வாறான மாதிரி கிராமங்களாக மாற்றும் இலக்கில் இருக்க வேண்டும்.

☀️  இங்கே எழுதும்  ஆர்வமிருக்கும் சிலர் இணைந்து இவ்வாறான கிராமம் ஒன்றை  முன் மாதிரியாக உருவாக்கி வழி காடட வேண்டும்.

🙋🏻‍♀️ மாதிரி தற்சார்பு கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு என்னால் முடிந்த வரை  உதவ நான் தயாராக இருக்கின்றேன்

ஏந்திப்பிழைக்க அல்ல ,
எழுந்து நிமிர்ந்து ஜெயிக்க வழி காட்டுவோம்

இந்த ஆலோசனை கிராமங்களுக்கானது
என்பதனால் எப்போதும் போல் வியாபார ரீதியில் தோட்டம்  செய்யும்  விவசாயிகளை பாதிக்காது இருக்க அவர்கள் விளைச்சல்கள் நிலம் இல்லாத நகர வாசிகளுக்கும்
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்ய, மதிப்பு கூட்டி விற்கும் வாய்ப்புக்கள் குறித்தும் ஆலோசித்து செயல் படுத்த வேண்டும்.

Nisha 🙏
https://www.facebook.com/100000786292216/posts/2839779066058275/?d=n

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 1
இனி வரும் காலத்தில் உணவு தட்டுப்பாட்டைசமாளிக்க தற்சார்பு வாழ்க்கை க்கு தயாராக்குங்கோ

வீட்டு தோட்டம் போடுங்கோ கீரை பாத்தி கட்டுங்கோ என்றதும்

பலர் உணர்ந்து தோட்டம் குறித்த அவசியம் புரிந்திருப்பது தெரியுது.

இன்று 20 மேற்பட்ட  நண்பர்கள் தோடடம் குறித்து பகிர்ந்ததை அவதானிக்க முடிந்தது .

பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி இலடசங்களாகும் போது இல்டசியம் வெல்லும்.  ஒரு எழுத்து ஓராயிரம் மாற்றம் உருவாக்கும்.

ஒருவரின் மாற்றம் அவர் சார்ந்த சமூகத்தை உயர்த்தும்.

நாங்களும் சுவிஸில் தோடடம் போட்டிருக்கோம்

ஆனால் எல்லோரும் ஒரே போல் வீடடுக்கொரு தோடடம் ஒரே மாதிரி  போட்டால் இதையே தொழிலாக செய்வோர் நிலை என்ன?

இதை குறித்தும் கொஞ்சம் சிந்திக்கணும்

நெருக்கடி நிலை இன்னும் முடியல்ல

விவசாயிகளும்  தோட்டம்  செய்வோரும் என்றும் எமக்கு முக்கியம்

அப்படியே
கோழி வளர்ப்பு
ஆடு, மாடு வளர்ப்பு
தையல்
இட்லி, தோசை, வடை, இடியப்பம் சம்பல்
மசாலா பொருட்க்கள் அரைத்து கொடுப்பது
ஊறுகாய், சட்னி வகை என அவரவர் வசதிக்கு ஏற்ற படி மிக குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்யும் படி உற்சாகம் கொடுங்கோ

2009 - 2020  இப்படி இன்னாருக்கு  வாங்கி கொடுத்தோம் எனும் பதிவே இலங்கை சனத்தொகையை தாண்டி கொண்டிருக்கு போல
அதை விடுவோம்

தற்சார்பு வாழ்க்கையில்
பண்டமாற்றுக்கும் முக்கிய பாகம் உண்டு

காசில்லை எண்டால் என்ன ?
நீ முடடை கொடு,
நான் கத்தரிக்காய் கொடுக்கின்றேன் என கூட மாத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமம் தோறும் அந்தந்த  மக்கள் தமது பொது பிரச்சனைகளை இப்படி சமூகவலை தளம் ஊடாக வெளிக்கொண்டு வருவீர்கள் எனும் அதுவும் அரசின் மேல் மடட கவனத்துக்கு போகும் வாய்ப்பு இருக்குது

வெற்று பொழுதை வெற்றி பொழுதாக்குவதும் நம்  கைகளில் தான்

வாழ்க்கை வாழ்வதுக்கே

Photos thanks geogle

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -1
Nisha


19 ஏப்ரல் 2020

Swiss Matterhorn மலை உச்சியில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி 🇮🇳

சுவிட்சர்லாந்தின் சின்னமான மூவாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Matterhorn முக்கோண வடிவ மலை பாறை உலக மக்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின்  அவசியத்தை உணர்த்தும் நோக்கதில்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டின் தேசியக்கொடியோடு  ஒளிர்கின்றது.

இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு வரையிலும், அதிகாலை 2:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையிலும் மலை மின் விளக்குகளால் ஒளிரும் படியான  ஒழுங்குகள்.  செய்யப்பட்டிருக்கின்றன 

ஒளி என்பது நம்பிக்கை! 
இந்த அர்த்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் பரவும் இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடையாளத்தை கொடுக்க Zermatt கிராமத்து மக்கள் விரும்புகின்றார்கள்.

Zermatt Tourismus ஏற்பாட்டில் உலக நாடுகளின் தேசியக்கொடியோடு Swiss மாநிலங்களின் கொடிகளும் ஒளிர வைக்கப்படுகின்றன.

India 🇮🇳:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கொரோனா tநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு பெரிய நாட்டில்நோய் பரவலை தடுக்கும் சவால்கள்  மிகப்பெரியவை! 

நாம் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் பலத்தையும் கொடுக்க வேண்டும். எனும் நோக்கத்தோடு  18.04.2020 விடிகாலை  3.30 மணிக்கு தேசியக்கொடி மின் விளக்குகளால் ஒளிர்ந்தது.


24.03.2020 ஆரம்பித்து இது வரை மலை மேல் உதிக்கும் ஒளி உணர்த்தியவை 

24.03.2020 : ஒளி என்பது நம்பிக்கை!
25.03.2020 : ஒற்றுமை
26.03.2020 : stayhome, நேசிப்பு 
28.03.2020 : Italy 
31.03.2020 : அனைவருக்கும் 
01.04.2020 : Kanton Tessin
02.04.2020 : ஆதரவு
03.04.2020 : stayhome
05.04.2020 : Portugal
06.04.2020 : நம்பிக்கை
07.04.2020 : Kantone Genf und Waadt
08.04.2020 : இப்போது கனவு காணுங்கள் - பின்னர் பயணம் செய்யுங்கள்
09.04.2020 : France , Spain 
10.04.2020 : ஐக்கிய இராச்சியம்
11.04.2020 : Easter 
12.04.2020 : மெழுகுவர்த்தி
13.04.2020 : AllOfUs
14.04.2020 : Germany
15.04.2020 : Japan 
16.04.2020 : Kanton Zurich , USA 
17.04.2020 :  GCC-Staaten
18.04.2020 : India . Kantone Bern und Wallis
19.04 . 2020 : China 

இது நம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது: நம் வாழ்க்கை முன்பைப் போல இல்லை. ஆனால் ஒன்றாக நாம் வைரஸைப் பிடித்து மீறுகிறோம். நாங்கள், இந்த உலக மக்கள். அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழியை பலப்படுத்துவோம்.
Nisha 🙏

Zermatt Tourismus
Bahnhofplatz 5
3920 Zermatt
Telefon: +41 27 966 81 00
info@zermatt.ch


Beleuchtung 18. April 2020: Indien


15 ஏப்ரல் 2020

Covid 19 சீனாவின் தகவலும் உறுதியற்றவை

சீனாவின் வெளியுறவு உளவுத்துறை அதிகாரிகளும் நாட்டின் அரசாங்கமும் கொரோனா வைரஸின் பரவலைக் குறைத்துவிட்டது என்றும், அங்கு தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும்தி  நியூயார்க் டைம்ஸ் ஏப்ரல் 2020 ஆரம்பத்தில் அறிக்கை செய்தது:

சீனா கொரோனா வைரஸ் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை அமெரிக்கா தொகுத்து வருவதால்  சீனா தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், அதன் எண்ணிக்கையை நம்ப முடியாது என்றும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சிஐஏ உளவுத்துறை அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அமெரிக்க அரசாங்க புலனாய்வு அமைப்புகள் சீன அரசாங்கமே வைரஸின் அளவை அறியவில்லை என்றும் உலகின் பிற பகுதிகளைப் போலவே  சீனாவின் தகவலும் உறுதியற்றவை என்றும் முடிவு செய்துள்ளன

வைரஸ் தோன்றிய வுஹான் நகரத்திலும், சீனாவின் பிற இடங்களிலும் உள்ள மிட்லெவல் அதிகாரத்துவத்தினர் நோய்த்தொற்று வீதங்கள், சோதனை மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் குறித்தும் பொய்  கூறி வருகின்றனர், 

அதிகாரத்துவ தவறான அறிக்கை எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு நாள்பட்ட பிரச்சினையாகும், ஆனால் சீனாவில் இது மோசமாகிவிட்டது, ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைமை திரு ஷியின் கீழ் சமீபத்திய ஆண்டுகளில் அதிக சர்வாதிகார அதிகாரத்தை எடுத்துள்ளது

லிங்க் இணைப்பு : 
எல்லாம் உண்மையா என்று எனக்கு தெரியாது 

ஆனால் உண்மையாக இருக்க கூடாது என்பதுடன், நடப்பு நிலை அவதானிக்கும் போது உலகத்தால் சாத்தியப்படாத ஒன்று சீனாவால் எப்படி சாத்தியமானது எனும் கேள்வி உதிக்கின்றது

சிந்திப்போம் 


▪️

நிருபர்: சீனா அதிபரோடு உரையாடினார்கள் தானே? எப்படி இருந்தது? 

Drumb : நல்லா இருந்தது 
நமக்கு உதவுவதா சொல்லி மருந்து data  எல்லாம் அனுப்புறேன் என்றார் 

நிருபர்: அவர்கள் அனுப்பும் data பத்தி? 

Drumb  : முழுதா நம்ப முடியாது 
நிரம்ப மறைத்து இருப்பார்கள் 

இதுவும் அந்த இந்திய பிரதமரின் ( மிரடடல்😳?? )  எதிர்வினை என்ன எனும் கேள்விகள்வந்த பிரஸ் மீட் தான்

😳😳

எனக்கும் சீனாவுக்கும் போன ஜென்மத்தில் வாய்க்கால், வரம்பு சண்டை பாக்கி இருப்பதால் சீனா குறித்த ஒரு பக்கம் சார்ந்தே பார்க்கும் ஒற்றை கண் பார்வையில் கிடைத்த சேதி இவைகள் 

இது தான் முடிவென எடுத்து கொண்டு அதற்க்கான ஆதாரங்களை உருவாக்கினேன் என சொன்னாலும் 

உண்மை என நினைப்பதை கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மையை வெளிக்கொண்டு வருகின்றது  corona  வைரஸ்.

என்ன தான் நடக்க போகின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம்

14 ஏப்ரல் 2020

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

14.04.2020

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

குரலும் குறளும் கொரோனா வைரஸ்ஸும்
உணர்த்தும் உண்மை

„ வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.“

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.„ உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்“

✅ தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.„ அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.“

✅ மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.„ வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்“

✅ செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.„ அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.“

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

Nisha

மனிதர்கள் உண்மை, நன்மை, என நம்பும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி உண்மையான உண்மைகளை உணர்த்துகின்றது கொரோனா வைரஸ்

Covid 19 நீட்டிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

🌏 உலகளவில் 1,850,807  பேரில் இந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக 114,251 பேர் இறந்துள்ளனர்.

🇫🇷 France:
பிரான்சில் மார்ச் 17 நடைமுறைக்கு வந்த ஊரடங்கு உத்தரவு மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 574 இறப்புகள் ( இது வரை கிட்டத்தட்ட 15,000 கொரோனா வைரஸ் இறப்புகள் ) பதிவாகியுள்ளதாக சுகாதார ஆணையம் டிஜிஎஸ் திங்கள்கிழமை மாலை தெரிவித்துள்ளது. 

கொரோனா நெருக்கடி ஐரோப்பாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தொற்றுநோய்கள் மெதுவாக குறையும் என்று பிரான்ஸ் நம்புகிறது - ஆனால் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியுள்ளன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் 24 சதவீத நோயாளிகள் 60 வயதுக்கு குறைவானவர்கள். 

கொரோனா வைரஸால் பிரான்ஸ் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்படுகிறது

"இந்த தகவல்கள் நாட்டில் தொற்றுநோய் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 27,186 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் குணமடைந்த பல்லாயிரக்கணக்கானோர் அடங்குவர்.

கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுடன் அதன் எல்லைகளை மூடி வைக்க பிரான்ஸ் 🇫🇷 முடிவெடுத்து உள்ளதாக  பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை மாலை தொலைக்காட்சி உரையாடலில் அறிவித்தார்.

Europa Union:
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் ஐஸ்லாந்து தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மார்ச் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கு மட்டுப்படுத்த ஒப்புக் கொண்டிருந்தன.

🇩🇪 Germany:
ஜெர்மனியில் குறைந்தது 127,000 நோய்த்தொற்றுகள் திங்கள் மாலைக்குள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சார்ஸ்-கோவி -2 என்ற கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்டோர் நாடு தழுவிய அளவில் இறந்துள்ளனர்.

சுமார் 64,300 பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.அதாவது இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் குணமடைந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் 

🇮🇱 Israel :
ஒரு வார கால யூத பஸ்கா பண்டிகை முடிவில் இஸ்ரேல் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது।  14.04.2020 ।செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, அவசரதேவைகளை  தவிர குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்று வலதுசாரி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை மாலை தெரிவித்தார்.

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England
இங்கிலாந்து அரசு  மார்ச் 23 முதல் நடைமுறைக்கு வந்த  மூன்று வாரங்களுக்கு செல்லுபடியாகும் ஊரடங்கு உத்தரவு  மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.

🇮🇹 Italy:
இத்தாலியில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகமாகிவிட்டது. 24 மணி நேரத்திற்குள் 566 புதிய மரணங்கள் ஏற்பட்டதாக சிவில் பாதுகாப்பு திங்களன்று தெரிவித்துள்ளது. 

நுரையீரல் நோயால் உலகின் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இத்தாலி ஒன்றாகும். கோவிட் -19 நோயினால் 20,465 பேர் பிப்ரவரி தொடக்கம் ஏப்ரல் 13  வரை  இறந்துள்ளனர் 

நோய் உறுதிப்படடவர்களின் எண்ணிக்கை சுமார் 159,516. பதிவு செய்யப்படாதவைகளின் 
எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

Nisha

Covid 19 கொரோனா வைரஸ் "பன்றிக் காய்ச்சல்" என்று அழைக்கப்படும் H1N1 வைரஸை விட பத்து மடங்கு அதிக கொடியது.


13.04.2020
23.00

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, கொரோனா வைரஸ் "பன்றிக் காய்ச்சல்" என்று அழைக்கப்படும் H1N1 வைரஸை விட பத்து மடங்கு அதிக கொடியது.

2009 இல்  "பன்றிக் காய்ச்சல்" என்று அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்ஸா H1N1 முதன்முதலில் மெக்சிகோவில் தோன்றியது। 

கோவிட் -19  புதிய கொரோனா வைரஸைப் போலவே, H1N1 உலக சுகாதார அமைப்பால் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது, 

"பன்றிக் காய்ச்சல்" உலகளாவிய அச்சுறுத்தலாக இருந்தது।

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் H1N1 நோயால் 18,500 பேர் இறந்தனர்। புகழ்பெற்ற வர்த்தக இதழ் "The Lancet" 151,700 முதல் 575,400 வரை இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டுள்ளது.

கோவிட் -19  கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட நுரையீரல் நோய் பாதிப்பில் திங்களன்று வரை உலகளவில் கிட்டத்தட்ட 115,000 பேர் இறந்துள்ளனர் 

புதிய வைரஸ் "விரைவாக பரவுகிறது மற்றும் ஆபத்தானது: 2009 இல் காய்ச்சல் வைரஸை விட பத்து மடங்கு அதிகம்" என்பது இப்போது தெளிவாகியுள்ளது. 

ஒரு "பாதுகாப்பான மற்றும் திறமையான தடுப்பூசி" உருவாக்கப்பட்டால் மட்டுமே  Covid 19 வைரஸை முழுமையாக நிறுத்த முடியும். அத்தகைய வைரஸ் தடுப்பு பாதுகாப்பு  இல்லாத வரை"உலகமயமாக்கல் சகாப்தத்தில்" வைரஸ் சில நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தொடர்ந்து அறிமுகமாகி  பின்னர் மீண்டும் பரவுகிறது.

 எனவே கொரோனா வைரஸுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் "மெதுவாக" மட்டுமே தளர்த்தப்பட வேண்டும்.

WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் திங்கள்கிழமை மாலை தெரிவித்தார்.

Nisha 

Covid - 19 யுனிசெஃப் இந்த பூமியின் உலகளாவிய பேரழிவை குறித்து எச்சரிக்கிறதுயுனிசெஃப்  இந்த பூமியின் உலகளாவிய பேரழிவை  குறித்து எச்சரிக்கிறது

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான போராட்டம் 

பல வளரும் நாடுகளிலும் வளராத நாடுகளிலும்  நெருக்கடியான பகுதிகளிலும் உள்ள ஏழ்மையான குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.

"இந்த தொற்றுநோய் உலகின்  மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஒரு இருத்தலியல் ஆபத்து" என்று 
ஜெர்மனியின் யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் Christian Schneider கூறினார்..

 "சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மட்டுமே உலகளாவிய சுகாதார நெருக்கடி குழந்தைகளுக்கு உலகளாவிய பேரழிவாக மாறுவதைத் தடுக்க முடியும்।"

நியூயார்க்கில், யுனிசெஃப் தலைவர் Henrietta Fore forderte உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான குழந்தைகளை சிறைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார் 

 "பலர் ஊட்டச்சத்து,.ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவைகளுக்க்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நெரிசலான இடங்களில் வாழ்கின்றார்கள் 

கோவிட் -19 போன்ற நோய்கள் பரவுவதை பெரிதும் ஊக்குவிக்கும் நிலைமைகள்" பல இடங்களில் காணப்படுகின்றது என்றும்  அறிக்கையில் தெரிவித்தார்

குறிப்பாக  கிரீஸ் மற்றும் சிரியாவில் உள்ள நெரிசலான அகதிகள் முகாம்களுக்கு இந்த வைரஸ் பரவுவது கவலைக்குரியது எனவும் "அங்குள்ள பல குழந்தைகள் ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற முந்தைய நோய்களால்
பாதிக்கப்பட்டுள்ளனர், 

அவர்களால் மேலும் புதிய ஆபத்துக்களை எதிர்கொள்வது  கடினமானது.

Sahelzone மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் இதே நிலை தான் என்றும் ஜேர்மன் நிர்வாகி Schneider கூறினார்

ஏறக்குறைய 40 சதவீத ஆபிரிக்கர்கள் வீட்டில் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவே வழி இல்லை

Nisha

08 ஏப்ரல் 2020

இது எச்சரிப்பின் காலமல்லோ-2 கிறிஸ்தவர் என்கின்றார்கள் , கிறிஸ்து அவர்களுக்குள் இல்லை...!

இது எச்சரிப்பின் காலமல்லோ? 

நாங்கள் கிறிஸ்தவர் என்கின்றார்கள் /  அவர்களுக்குள் கிறிஸ்து இல்லை...!

சமாதானம் தருவேன் வா என்கின்றார்கள் /  அவர்களுக்குள் சமாதானம் இல்லை 

வியாதிஸ்தர்களை குணப்படுத்துகின்றோம் என்கின்றார்கள்,அவர்கள் சொஸ்தமாக இல்லை 

தேவன் அன்பானவர் என்கின்றார்கள் / அவர்களுக்குள் அன்பில்லை 

விடுதலை தருவோம் என்கின்றார்கள் / அவர்களுக்குள் சமாதானம் இல்லை 

அவர்களிடம்  இல்லாத ஒன்றை எப்படி மற்றவர்களுக்கு தர முடியும்? 

மாயக்காரரே.... உங்களுக்கு ஐயோ’

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள!

„ நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”​—⁠மத்தேயு 7:1-5.

சுவிசேஷ காலம் முடிந்தது ..! 

தங்களை மகா பரிசுத்தவான்களென எண்ணி கொண்டிருக்கும் அனைத்துக்கும், அனைவருக்கும் இது எச்சரிப்பின் காலம் 

எதை,எப்போது, எவர் மூலம்  என்பதை இறைவன் என்பவர் தவிர  எவரும் அறிய மாடடார்கள் 
நீங்கள் அறியாத,எதிர்பாராத இடத்திலிருந்து தேவ கோபாக்கினி வெளிப்படும்.மறை பொருளாக இருக்கும் பல உவமைகள் வெளியரங்கமாகும்..

எல்லோரும் இறைவனால் படைக்கப்படடவர்கள். இறைவன் அனைவரையும் நன்கு அறிந்திருக்கிறார்.

ஒரு தாய் தான் பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பது போல் இறைவன் என்பவரும் எவரும் அழிந்து போகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,அனைவரும் என் பிள்ளைகள் என நேசிக்கின்றார் 

தன் பிள்ளைகள் பிழை செய்தாலும் அவர் மன்னிக்கின்றார். அவர் எவரையும் வெறுத்து ஒதுக்குவது இல்லை ( அப்படி எவரேனும் சொன்னால் அவர்களை ஒதுக்குங்கள்) 

அவர் இறைவன்......! 
அவர் கர்த்தர்.,,,,,! 
அவர் கர்த்தர.,,,,! 

கர்த்தர் என்றால்: 
( படைப்பாளர், பாதுகாப்பவர் இறைவன், சர்வவல்லவர், ஆண்டவன், ஈசன், கடவுள், சர்வ
வல்லமையுள்ள,எல்லாம் வல்ல, தடுக்க முடியாத,முழுமையான, கட்டுக்கடங்காத, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி ஆளுகிற,  தெய்வீகம் நிறைந்தவர் , யெகோவா, தெய்வம்,திரித்துவ மானவர், அழிவு இல்லாதவர், அனைத்தும் அறிந்தவர். )

கர்த்தர் எனும் வார்த்தை பைபிள் தமிழ் மொழி பெயர்ப்பில் வருவதால் அது கிறிஸ்தவருக்கு மட்டும் சொந்தமில்லை 

உங்களுக்கு மட்டும் பாரடீஸ், பரலோகம் ( இந்த பூமி )  நிரந்தரமில்லை 

பரம்பொருள் எனப்படும் ஒன்றை  தனித்துவ படுத்தும் உரிமை எவருக்கும் இல்லை.

               „எச்சரிக்கையாயிருங்கள்“

👇👇

எசேக்கியேல் 13
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகியஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;

தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கானநியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். 

இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! 

„ அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்“

இது எச்சரிப்பின் காலமல்லோ? -1

கிறிஸ்தவர்கள் எனும் பெயரில் துர்உபதேசம் உருவாக்கி கற்பனையான,கட்டுக்கதைகளுக்கு செவி கொடுத்து 

5000 டாலருக்கு ஒரு வெண்டிலேட்டர் சொந்தமாக வாங்கி கொள்ளலாம்  என்பதை கூட அறிந்து கொள்ளாமல்  நன்றி சொல்கின்றேன் என்று  கடவுள், காற்று, இலவசம் எனும் பெயரில்  இல்லாததை இருந்ததென இந்த உலகத்தில் உங்களுக்கு மட்டுமே காற்றும் சொந்தம் என அடித்து விடாதீர்கள் 

உங்கள் ஓவர் கொம்பிடன்ஸ்.இறை நம்பிக்கையை  அவமானப்படுத்துகின்றது 

தேவ நாமம் தூசிக்கப்பட  காரணமாக இருக்கின்றிர்கள் 

எந்த ஆவியானவரால் பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டதோ அவருடைய ஆலோசனை தள்ளிவிட்டு கட்டுக்கதைகளுக்கு செவிக்கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகி போனவர்களுக்கும் 

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.*
ரோமர் 1 :18

என்பதை உணர்ந்து திருந்துங்கள் 

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உங்களை குறித்து நன்றாய்ச் சொல்லியிருக்கிறான், 


மனிதன் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனைக்கும் வார்த்தைக்கும்  தேவனிடம் நியாயத்தீர்ப்பு உண்டு 

எதை கூட் டவும் குறைக்கவும் அவனுக்கு அனுமதி இல்லை 

இக்கட்டிலும் இடுக்கணிலும் தவிப்போரை ஏளனம் செய்யவும் சாபமிடவும் அவனுக்கு அதிகாரம் இல்ல 

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 

வெளி 18, 19  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும்எ
டுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Nisha

COVID 19 NOTFALL IN SWITZERLAND

🆘 CORENA VIRUS 🆘சுவிஸ் 26 மாநிலங்களுக்குமுரிய கொரோனா வைரஸ் - அவசர கால தொடர்பு இலக்கங்கள் 
( A  to z வரிசையில் தொகுத்து உள்ளேன்) 

நோய்தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில்  குடும்ப மருத்துவரும் கொரோனா அறிகுறிகள் மற்றும் சோதனைக்கு  நோய் அறிகுறி இருப்போரை உள்ளெடுக்கின்றார் 

தயவு செய்து உங்கள் உடல் நோய் அறிகுறிகளை தெளிவாக, புரியும் படி சொல்லுங்கள்

குடும்ப மருத்துவர் தொடர்பில் வரவில்லை எனில் உங்கள் பகுதிக்கு கொடுத்திருக்கும் சிறப்பு பிரிவுக்கு அழையுங்கள் 

உங்களால் முடியவில்லை எனும்  நிலையில் சமாளிக்க உங்கள் தொலைபேசிகளில் Notfall Apps downlord  செய்யலாம். அல்லது உங்கள் பகுதி அவசர உதவி மற்றும் உதவி அழைக்க கூடிய மொழிப்புரிதல் கொண்ட நண்பரின் தொடர்பிலக்கம் Notfall அழைப்பாக பதிவு செய்து கொள்ளுங்கள் 

எனக்கு வராது
இதை பற்றி அறிய விருப்பம் இல்லை எனும் அசடடை உணர்வு வேண்டாம்🙏

#Swiss கூட்டாட்சி அரசு 
அவசர கால தடையை ஏப்ரல் 26 வரை நீட்டித்து உள்ளது 

#Coronavirus  #Swisd_Kanton_notfalldienst

AARGAU 
Kantonsspital Baden, Notfallpraxis Tel.: +41 900  40 15 01
Telefonzentrale KSB Tel.:0564 86 21 11
Kantonsspital Aarau Tel.:0628 38 41 41

APPENZELL AR / APPENZELL RH.-EXT. 
Spital Herisau Tel.: 0713 53 21 11
Spital Heiden Tel.:  0718 98 61 11

APPENZELL AI / APPENZELL RH.-INT.
Med. Zentrum Tel.: 0717 80 08 50

BASEL-LANDSCHAFT 
Spital Bruderholz Tel.: 0614 36 36 36
Spital Liestal Tel.: 0619 25 25 25
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.baselland.ch

BASEL-STADT 
Universitätsspital Basel Tel.: 0612 65 25 25
Website Gesundheitsdepartement Coronavirus:  https://www.gesundheit.bs.ch

BERN 
Inselspital Bern Tel.: 0316 32 24 02
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.gef.be.ch

FREIBURG 
Kantonsspital Freiburg / Hôpital cantonal de Fribourg Tel.: 0316 32 24 02
(demander l’infectiologue de garde / Pikettarzt Infektiologie verlangen)
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.fr.ch

GENF : GENIVA
Hôpitaux Universitaires de Genève, Tel.: 0223 72 81 20
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.ge.ch

GLARUS 
Kantonsspital Glarus Tel.:  0556 46 33 33

GRAUBÜNDEN
Kantonsspital Graubünden Chur Tel.: 0812 56 61 11

JURA 
Médecin de garde Tel.:  0041 800 30 00 33
(Ligne gratuite – N° unique pour tout le Jura)

LUZERN 
Luzerner Kantonsspital Tel.: 0412 05 11 11 oder: 0041 900 11 14 14 

NEUENBURG / NEUCHÂTEL 
Neuchatel : Services de garde Tel.: 0316 32 24 02
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.ne.ch

NIDWALDEN 
Kantonsspital Nidwalden Tel.:  0316 32 24 02
Notfallarztnummer: 0416 10 81 61

OBWALDEN 
Notfallstation des Kantonsspitals Tel.: 0416 66 41 20
Website Gesundheitsdepartement Coronavirus: https://www.ow.ch

ST. GALLEN 
Kantonsspital St. Gallen Tel.:  0714 94 11 11
Zentrale Notfallaufnahme Standort Rorschach Tel.:0718 58 31 11
Zentrale Notfallaufnahme Standort Flawil Tel.: 0713 94 71 11

SCHAFFHAUSEN 
Spitäler Schaffhausen Notfallzentrum Tel.: 0526 34 34 00 oder: 0526 34 34 34
Website Coronavirus (zusammen mit Kanton Zürich): https://gd.zh.ch

SCHWYZ 
Spital Schwyz Notfallstation Tel.:  0418 18 41 41
Website Coronavirus:  https://www.sz.ch

SOLOTHURN 
Kantonsspital Olten, Tel.: 0623 11 41 11
Kantonale Alarmzentrale, Notfall-Telefonnummer: https://so.ch

THURGAU 
Notfallpraxis Spital Frauenfeld Tel.: 0527 23 77 77
Notfallpraxis Spital Münsterlingen Tel: 0716 86 19 12
Website Aktuelles:  https://gesundheit.tg.ch

TICINO / TESSIN 
Ospedale Regionale Lugano Pronto soccorso Tel.: 0918 11 60 06
Ospedale Regionale Bellinzona Pronto soccorso Tel.: 0918 11 90 18
Ospedale Regionale Mendrisio Pronto soccorso Tel.: 0918 11 31 11
Website Coronavirus:  https://www4.ti.ch

URI 
Kantonsspital Uri Tel.: 0418 75 51 51

WALLIS 
Spitalzentrum Oberwallis Tel.: 0276 04 21 71 oder: 0276 04 33 33
Spital Sitten Tel.: 0276 03 40 00
Spital Martinach Tel.: 0276 03 90 00
Notfallnummer diensthabende Ärzte Tel.: 0041 900 14 240 33
Website Coronavirus:  https://www.vs.ch

WAADT 
CHUV Tel.: 0213 14 11 11
Tel.:0041 848 13 31 33 (Centrale téléphonique des médecins de garde du canton de Vaud)

ZUG 
Zuger Kantonsspital Tel.: Ü413 99 11 11
oder:  0041 900 00 80 08 (Ärztlicher Notfalldienst Kanton Zug)
Website Coronavirus:  https://www.zg.ch

ZÜRICH 
Universitätsspital Zürich Tel.:  0442 55 11 11
Kinder: Infektiologie Kinderspital Zürich, Dienstarzt Tel.: 0442 66 71 11
👇
Abklärungsspitäler sind auch:
Stadtspital Triemli (Erw. und Kinder) Tel.: 0444 16 71 11
Kantonsspital Winterthur (Erw. und Kinder) Tel.: 0522 66 21 21
Klinik Hirslanden (Zürich) Tel.: 0443 87 35 35
Spital Bülach Tel.: 0448 86 32 11
Spital Uster Notfallstation Tel.: 0441 11 11 11
Notfallpraxis Tel.: 0449 11 23 23
GZO Spital Wetzikon Tel.: 0449 34 11 11
Spital Limmattal Tel.: 0447 33 11 11
Notfall Tel.: 0447 33 25 32
Notfallpraxis Tel.: 0447 36 80 91
Website Coronavirus: https://gd.zh.ch

BAG 
BAG Webseite: 
https://www.bag.admin.ch

COVID19 காலத்தில் Swiss மக்களின் தேவைகளுக்கான முக்கிய தொடர்புகள்.

Kontakte der Bundesbehörden
Die wichtigsten Kontakte auf Bundesebene zum Thema Coronavirus.
Für Fragen zur Gesundheit:

உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு:
பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம்
Tel.: +41 58 463 00 00 - 7/7  24h/24hFür Fragen zur Arbeit:
தொழிலும் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு:
பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் SECO
Telefon: +41 58 462 00 66 – von Montag bis Freitag, von 7.00 Uhr bis 20.00 Uhr
E-mail: coronavirus@seco.admin.ch

மத்திய நிதித் துறை - EasyGov
EasyGov சேவை
EasyGov Service Desk: ‪+41 58 467 11 22‬ - von Montag bis Freitag, von 7.00 Uhr bis 20.00 UhrFür Fragen zu Reisen ins Ausland und zu Rückreisen in die Schweiz:
வெளிநாட்டு பயணம் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு திரும்புவது பற்றிய கேள்விகளுக்கு:
lமத்திய வெளியுறவுத் துறை (FDFA)
Telefon: +41 80 024 73 65 - 7/7 - 24h/24h
Email:  helpline@eda.admin.chFür Fragen zur Einreise in die Schweiz, zur Personenfreizügigkeit und zum Visa-Stopp:
சுவிட்சர்லாந்தில் நுழைவது, விசா நிறுத்தம்
மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு :
இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் SEMFür Fragen zur Schule:
பள்ளி பற்றிய கேள்விகளுக்கு:
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான மாநில செயலகம் (SERI)
SERI இணையதளத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான முகவரிகள் மற்றும் தொடர்புகளைக் காணலாம்Für Fragen zu den Einsätzen der Armee:
இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு:
மத்திய பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறை
சுவிஸ் இராணுவத்தின் இணையதளத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான முகவரிகள் மற்றும் தொடர்புகளை நீங்கள் காணலாம்
Swiss மக்களின் தேவைகளுக்கான முக்கிய தொடர்புகள்.

05 ஏப்ரல் 2020

Covid 19 வீட்டுக்கு வீடு தோட்டம்! 2

வீட்டுக்கு வீடு தோட்டம்!

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை எத்தனை பேர் அறிந்து கொண்டார்கள்? 

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கிருமித் தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையினைத் தொடர்ந்து - நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

"செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" எனப்படும் இந்த திட்டம் - விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக - கீழே உள்ள இணையத் தளம்  http://saubagya.lk/
மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த இணையத் தளத்தின் ஊடாக - வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு - வீட்டுத் தோட்டம் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த திட்டத்தின் மூலம் - பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கிவிட அரசாங்கம் விரும்புகிறது.

Srilanka அரசு 

Covid 10 வீட்டுக்கு வீடு தோட்டம்! 1

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்

தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி - 0779231738
2. கைதடி         - 0778205566
3. நல்லூர்      - 0773446026
4. வேலணை    - 0776628336
5. புங்குடுதீவு   - 0776578125
6. தொல்புரம்    - 0777647477
7. கீரிமலை       - 0775841254
8. உடுவில்        - 0774135082
9. புத்தூர்         - 0703503909
10. உரும்பிராய் - 0779489650
11. புலோலி      - 0774004554
12. அம்பன்    - 0778075510
13. காரைநகர் - 0779055960
14. சண்டிலிப்பாய் - 0773688410
15. கரவெட்டி - 0779078020
16. மாவட்ட அலுவலகம் - 0703503900

உதவி ஆணையாளர்
கமநல அபிவிருத்தித் திணைக்களம் 
யாழ்ப்பாணம்

Covid 19 அன்புக்குரிய முதியவர்களை பாதுகாப்போம்

கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் வயதான மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றது.

இருந்தும் கூட இளம் வயதினர்கள் இடையேயும் இந்த நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சம அளவிலேயே காணப்படுகிறன.

ஆனாலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது  இந்த நோயினால் ஏற்படக்கூடிய மரணத்தின் வீதம் வயதானவர்களை விட இளம் வயதினரிடையே குறைவாகக் காணப்படுகிறது.

மேலும் - இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு COVID-19 நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டால் - கடுமையான சிக்கல்  நிலைமை உருவாகும் அதிக நிகழ்தகவு உள்ளது.

எனவே- உங்கள் வயதான பெற்றோர்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு வயதான மளத்தவருக்கும் - அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எப்போதும் அறிவுறுத்தவும், மேலும் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இளமையான மற்றும் வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்கள் கூட - இந்த நோய்க்கிருமியின் காவிகளாகச் செயற்பட்டு நமது பலவீனமான பெற்றோருக்கு அல்லது அதிக ஆபத்தில் உள்ள வேறு எந்த நபருக்கும் நோயைக் கடத்திவிடக் கூடும். ஆகையால், பொது இடங்கள் அல்லது பெரிய  மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களுக்கு வயதானவர்கள் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

நினைவில் கொள்ளுங்கள் -- COVID-19  தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமது கைகளைச் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு செயற்பாடாகும்.Srilanka 

Covid 19 காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.

எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள்  தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:

முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர  இடைவெளியைப் பேண வேண்டும்;

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள்  ஒரே குளியலறையை /  கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);

உணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;

தும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய  தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;

பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில்  இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு  அப்புறப்படுத்துங்கள்;

மிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,

அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும்  தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.

சிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.


Srilanka