02 ஏப்ரல் 2020

Covid -19 விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலர்கள் தங்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

எச்சரிக்கை பதிவு இது!    


இலங்கையில் தொற்று பரவ ஆரம்பித்து விட்ட்து...! 
✅ நோய்  தொற்று பரவும் காலத்தில் சமூகத்தில் உதவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும்  தன்னார்வலர்கள் தங்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து ( முகமூடி, கையுறை, கிருமி நாசினி). ஆயத்தங்களோடும் செல்லுங்கள். ❌ எதையும் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் இருவர் கரங்களுக்கும் கிருமி நாசினி தடவி கொள்ளுங்கள்.பொருட்கள் கொண்ட பையை கையில் கொடுத்து. நெருங்கி நின்று புகைப்படம் எடுக்க வேண்டாம்.
( புகைப்படம் உதவுபவர்,பெறுபவர் 
இருவருக்கும் ஆபத்து என்பதை புரிய வைக்க பகிர்ந்தேன். உள்நோக்கம் கற்பித்து கொண்டு விவாதத்துக்கு வர வேண்டாம், இது மரணத்தின் வாசலிலிருந்து உங்களை காத்திட எடுக்கும் முயற்சி  
தம்பிமார்களே! உங்களுக்கு புண்ணியமா போகும் 🙏)✅ உணவு வழங்குவோர் ஓரிடத்தில் வைத்து விட்டு ஒவ்வொருவரையும் கிருமி நாசினி 
தடவிய கைகளால் பைகளை தூக்க சொல்லுங்கள்.✅ இப்பணி செய்வோர் உங்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது உங்கள்
உறவுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ✅ தொற்று வேகமாக பரவலாகும் போது உங்கள் பகுதி சுகாதாரத்துறை பணியாளர்களின் ஆலோசனையின் கீழ் மட்டும் செயல் படுங்கள்❌ சேவை உதவி எனும் ஆர்வக்கோளாறு  உங்களுக்கும் நீங்கள் சார்ந்த சமூகத்துக்கும் ஆபத்தானது இங்கே கூறப்படும இருக்கும் மருத்துவமனை 
ஆலோசனைகள் தன்னார்வலர்களுக்கும் பொருந்தும் பின்னுட்ட்ங்களில் இருக்கும் லிங்க் Comment உட்பட படியுங்கள் மருத்துவ பணியாளர்கள் எந்தவிதமான முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் ?
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!