24 செப்டம்பர் 2017

பூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல!.

17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும் சேவைக்குமாய் நாங்கள் எதிர்பாராத surprise gift பத்து பிராங்க நோட்டுக்களால் பூத்துக்குலுங்கும் அழகு மரத்தினை தயாரித்து    திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.  நீண்ட கால வாடிக்கையாளர்களான அவர்களின் அன்புப்பரிசு   எனக்குள் மிகப்பெரிய உற்சாகத்தினை தந்திருந்தது.  டிப்ஸ் என்பது எங்களுக்கு புதிதில்லை தான் எனினும்  எங்களுக்காகவே நேரம் எடுத்து பூ மரக்கன்றை வாங்கி  பத்து பிராங்க நோட்டுக்களையும் அழகாக மடித்து அலங்கரித்து அதை மரத்தின் குட்டிக்கிளைகள் உடையாதவாறு கட்டி எங்கள் வீடு தேடி வந்தமை தான் விஷேசமானது அல்லவா? பூத்திருக்கும் காசு மரத்த்ல் 16 நோட்டுக்கள் இருக்கின்றன. 

யாரும் பறித்து விடாதீர்கள். இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல

 

*********** 
தண்ணீருக்குத்தனி இயல்பு உண்டு என்றாலும் கூட அது சார்ந்து நிற்கும் தன்மைக்கு ஏற்ப தனை மாற்றிக்கொள்ளும் இயல்பும் கொண்டது. அது போலவே தான் மனிதர்களும் தனக்கென தனி இயல்பு இருந்தாலும் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்களாகவே ஆகுவதும் உண்டு.
சீர் அழிவதும், சீர் பெறுவதும் நம் சேர்க்கையை வைத்து என்பதைத்தான் நீ உன் நண்பனைச்சொல், நான் உன்னைப்பற்றி சொல்கின்றேன் என சொல்வார்கள். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் சேரும் நட்புக்களை கொண்டு அவரின் குணாதிசயங்களை புரிந்திட முடியும் என்பார்கள்.
புலம் பெயர்ந்து தாய் நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குள் புகுந்து புகுந்த நாட்டின் மொழியும் சூழலும் புரியாமல் தடுமாறும் எங்கள் இளையோருக்கும் இது நன்கு பொருந்தும். அவர்கள் சேரும் இடம் சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை வளமானதாயும் தீயர்களோடு சேரும் போது தீய வழியிலும் சென்று தங்கள் வாழ்க்கையை கெடுத்தும் குட்டிச்சுவரும் ஆக்கிக்கொள்வர்.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம். நல்லதை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நல்லவர்களை கண்டடைவதும் முக்கியம்.
சுய நலத்துக்காகவேனும் தீமை என்றறிந்தபின் தீயவைகளை விட்டு விலகி வாழ்வது உங்களுக்கும் உங்களை சார்த்தோருக்கும் என்றும் நன்மை தருவதே!
கடந்த பத்தாண்டு வியாபார அனுபவத்தில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான இளையோருக்கு ஆரம்ப நிலை வேலை கற்பித்து.. இங்கே இருக்கும் சூழலுக்கு ஏற்ப ஏதேனும் உணவு விடுதியில், ஹோட்டலில், என வேலைகளை எடுத்தும் கொடுத்திருக்கின்றோம். அவர்கள் உயர்வில் மகிழ்ந்திருக்கின்றோம். உயர வேண்டும் என ஆலோசனை நல்கி இருக்கின்றோம்.
எங்கேனும் எங்களை சந்திக்கும் போதும் அக்கா நல்லா இருக்கின்றேன் என சொல்லும் போது ஈன்றபொழுதிற்பெரிதுவர்க்கும் அன்னையாய் மனம் நிறைவு கொள்ளத்தான் செய்கின்றது. அப்படியும் எவரேனும் பாதை மாறி கஷ்டப்படுகின்றார்கள் என அறியும் போது மனம் வருந்துகின்றது.
சில பல நேரங்களில் வேலைச்சூழலுக்கு ஏற்ப மிகவும் கடினமாக கோப முகம் காட்டினாலும் அந்த க்கோபத்தின் பின்னிருக்கும் அன்பையும் அக்கறையையும் என் தம்பிகள் ஒவ்வொருவரும் புரிந்தே இருப்பர். முன் விட்டு பின் பேசும் இயல்பு என்னிடம் இல்லாததனால் பலரிடமிருந்தும் தூரமாய் இருந்தாலும் எமை நாடி வரும் இளையோர் நல்வழி காட்டப்பட வேண்டும் எனபது மட்டுமே இன்று வரை எமது குறிக்கோளாய் இருந்திருக்கின்றது. இனியும் இருக்கும்.

நிலையானதென
நினைப்பவைகள் 
தொலைவாகும் 
தொடுவானம் விலை போக
நினைவுகள் வலியாகும்
முகநூல் நட்பே முதலானதாய்
விஷவார்த்தைகள் வசமாகிடும் 
அகமனதோ தரிசாகிட

நுகம் பூட்டி நாம் தொலைந்தே போவோம். 
*****************

12 கருத்துகள்:

  1. வாழ்வில் இன்னும் சிகரம் தொட வாழ்த்துகள்.

    பூக்கள் பறிப்பதற்கல்ல! அப்படியே தூக்கி கொள்ளலாமா ?
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. நன்று செழித்து மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பூவை பறிக்கல. பார்த்தேன் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் நிஷா! உங்கள் சேவை இன்னும் விரியட்டும்! பாராட்டுகள்! மிக நல்ல சேவையும் செய்துவருகிறீர்க்ள்!!
    எங்கள் இருவரது வாழ்த்துகள் பாராட்டுகள்! மீண்டும்!!

    பதிலளிநீக்கு
  6. வெற்றிக்குப் பின்புலமாக இருக்கும் உங்கள் நற்பண்புகள் அனுபவ பகிர்வு வரிகளில் மிளிர்கிறது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பூவோடு நாறும் மணக்கும்.............

    பதிலளிநீக்கு
  8. கலையுணர்வு கொண்டவர் அந்த வாடிக்கையாளர் என்பது தெரிகிறது. பாராட்டுகள்.

    நீங்கள் வார்த்தெடுக்கும் உங்கள் தொழில் வாரிசுகள் உயர்வில் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைவது சந்தோஷம் தரும் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள். உங்களது நாணயம், கைராசிக்கு கிடைத்த பரிசு.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள்.உங்கள் நாணயம், கைராசி இவற்றிற்கு கிடைத்த பரிசு.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்ப்பா நிஷா .

    .அப்புறம் அந்த பூமரத்துலருந்து பூவை பறிக்கக்கூடாது ஓகே :) தண்ணி ஊத்தலாமாப்பா :)
    செடி வாடக்கூடாதில்லையா :)

    ஜோக்ஸ் apart ..வெகு சிலர் மட்டுமே நேரமெடுத்து தங்கள் நன்றியை தெரிவிப்பாங்க ..அந்த வகைல நீங்க லக்கி

    பதிலளிநீக்கு
  12. பூவை ரசித்தேன் !பறிக்க ஆசையில்லை)))

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!