07 பிப்ரவரி 2017

சிறுவர் பாடல்கள்.. புலி வருது

ஆடு மேய்க்கும் ஆனந்தன்
ஆட்களை ஏய்ப்பதில் வல்லவனாம்.
பொய்கள் பலவும் தினம் சொல்லி
போக்குக்காட்டி சிரிப்பானாம்.
புலி வருது, புலி வருது என்றே
தினமும் கத்துவானாம்
கேட்டு பயந்த மக்களெல்லாம்
பதறி ஓடி ஒளிவதனை.
கையைக்கொட்டி ஆனந்தன்
தினமும் பார்த்து சிரிப்பானாம்.
திடுக்கிடும் பொய்யதை கூறியதானால்
திட்டித்தீர்த்தனர் பொது மக்கள்

06 பிப்ரவரி 2017

எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?

ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் ஆகாது.
இந்தம்மாவை குறித்து வேலைக்காரி வீடியோக்காரி,என திட்டி திட்டியே இந்தம்மா மீதான பரிதாபத்தினை அதிகரிக்க செய்து விடுவார்கள் போல் எங்கெஙுகும் காணும் விமர்சனங்கள் தனிமனித சாடலாக இருப்பதை காணும் போது வேலைக்காரி என்றால் அத்தனை மட்டமா என எதிர்க்கேள்வி எனக்குள் வருகின்றது.

04 பிப்ரவரி 2017

இலங்கையில் சுதந்திர தினம்????

சுதந்திரமாம் சுதந்திரம் சொக்க வைக்கும் சுதந்திரம் 
சொந்த மண்ணில் அடிமையாய் விந்தையான சுதந்திரம் 
சுப்பன் சொன்ன சுதந்திரம் சுகமாய் கிடைத்த சுதந்திரம் 
கப்பல் ஏறி கடலிலே மறைந்து போன சுதந்திரம்