11 ஜூலை 2017

சிதறும் குடும்ப வாழ்க்கைகள்

மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் சரியான ஆலோசனைகளின்றி சிதறும் குடும்ப வாழ்க்கைகள்”.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ பலரின் அகம்பாவங்கள், அதிகாரங்களுக்குள் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகுவது உண்மை.
ஊருக்குள் பெரியோராய், நல்லவர்களாக வேஷம் தரிப்போரென தங்களை வெளிக்காட்டிக்கொள்வோரின் உள்ளத்து உடைசல்களை அறியாது அறிவுரை, ஆலோசனை எனும் பெயரின் விட்டில்களாய் விழும் கணவன், மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவதாய் நுழைவோர். ஆண், பெண் எனும் நிலையில் ஒருபக்கச்சார்பாக முடிவெடுக்காது இருவரின் உள, உடல் நிலையினையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.


ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும் என்றாலும்,ஒருபக்கச்சார்பான அவசர ஆலோசனைகள் , உதவிகள் பல நேரம் உயிர், உடல், உள இழப்புக்களையும் பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும் என்பதை உணராதோராய் இருக்கின்றோமா?
யாருக்கோ தானே? யாரோதானே என இன்றைய நிலையில் எவனுக்கோ நடப்பதை வேடிக்கை பார்க்கும் நம் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவோமா?
ஒரு உயிரை தேடி கடந்த ஐந்து நாட்களாக அலையும் இந்த நொடியில் அவன் செய்த தவறுகள் மறைந்து போனதே!
யாரை நொந்து என்னாகும்?
தொலைத்து விட்டோமே என கனத்து போன மனதுடன் பிரச்சனையில் அடி நுனி புரியாது தொலைத்த பின் தேடிக்கதறும் நொடியில் பிரச்சனையின் ஆரம்பத்தில் எம்மை நாடி இருந்திருக்கலாமே எனும் மன ஆதங்கமும் வலியுமாக.........................கடவுள் பயமற்று போனோமா?
எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்.
மரணமில்லாத வீடு உண்டா?
பிரச்சனைகளில்லாத குடும்பங்கள் உண்டா?

அடுத்தவர் குடும்ப பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து ஆலோசனை எனும் பெயரில் அக்கிரமங்களை நடத்துமுன் அதற்கு நாங்கள் தகுதியானோரா என நம்மை நாம் ஆராய்ந்து கொள்வோம்.

18 கருத்துகள்:

 1. சிந்திக்கத்தூண்டும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கவலையும் ஆதங்கமும்
  மிக மிக நியாயமானதே
  புரிய வேண்டியவர்களுக்குப்
  புரிய வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்திடலுக்கு நன்றி ஐயா

   நீக்கு
 3. என்ன ஆச்சு? பொதுவான கட்டுரையா? யாரை ஐந்து நாட்களாகத் தேடுகிறார்கள்?

  பொதுவாக இங்கு அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வது அதுவும் பெரும்பாலான சமயம் கேட்காமலேயே ஆஜராவது அதிகம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே எங்களுக்கு அறிமுகமான தம்பி, திருமணம் முடித்து ஒரு வருடம், குழந்தை பிறந்து இரண்டு மாதம், குடும்பப்பிரச்சனை, மனைவியை அடித்ததனால் அந்தப்பெண் அவர்களுக்கு அறிமுகமான ஒருவரிடம் உதவி கேட்க செல்ல அவர் உடனே பொலிஸுக்கு அறிவிக்க... பொளிஸ் பெண்ணையும் பிள்ளையையும் தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு இவனை விசாரனைக்கு அழைத்ததாக சொல்லிச்சென்றானாம் தன் தாயிடம். ஏற்கனவே பிள்ளை கர்ப்பத்தில் இருக்கும் போதே கணவன் மனைவிக்குள் பிரச்சனையாகி அவளின் இரத்த உறவுகளோ ஆலோசனையில் பொலிஸில் போய் முறையிட்டிருக்கின்றார்கள். இம்முறையும் அவ்வாறே ஆக. பொலிஸுக்கு சென்று விட்டு திரும்பி உயிரோடு வரமாட்டேன் என சொல்லிச்சென்றானாம் தன் தாயிடம், இன்றோடு ஏழு நாட்கள் , வீடு திரும்ப வில்லை, பர்ஸ், வங்கி அட்டை, கார்ச்சாவி,சுவிஸ் விசா, பாஸ்போட் என எல்லாமே வீட்டுக்குள் வைத்து விட்டே சென்றிருக்கின்றான். பிரச்சனைக்கு முன்னரே டிப்பரெசிவ் மன அழுத்தத்துக்காக கவுன்சிலிங்க போயிருக்கின்றானாம். எல்லாமே அவனைக்காணோம் மொழியும் புரியாமல் உதவியும் இல்லாமல் தவிக்கின்றேன் உதவுங்கள் என தாயார் எங்களுடக்கு போன் செய்த பின் விசாரித்து அறிந்தவைகள். அதனால் வந்த ஆதங்கமே இப்பதிவு. கணவன் மனைவி சண்டை என போனால் உடனே பொலிஸுக்கு செல்வது இப்போதெல்லாம் பாஷனாகி விட்டது அல்லவா? காவல் துறைய நாட முன் அந்த பையனை அழைத்து ஏன் இப்படி நடக்கின்றாய் என விசாரித்திருக்கலாம் என்பதே என ஆதங்கம். உறவுகள் சேர்த்து மன அழுத்தத்தினை உருவாக்கி அவனை காணாமல் போக வைத்து விட்டார்களே .

   நீக்கு
  2. நிஷா: மனைவியை அடிப்பதெல்லாம் இப்போ கொலைக்குற்றத்துக்கு சமம். நான் சீரியஸாக சொல்கிறேன். முக்கியமாக மேலை நாடுகளில் இது டொமஸ்டிக் வயலண்ஸ். நம் கலாச்சாரத்தில் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. முதலில் மனைவியோ, காதலியோ அல்லது மகளோ எவ்வளவு க்ளோஸ் ரெலடிவாக இருந்தாலும் அவர்களை அடிப்பது பெரும்பிரச்சினையை உண்டாக்கும். கொலை செய்வதுக்கு சமம் என்பதை நம் நாட்டு ஆண்கள் உணர்ந்து நடக்கவில்லை என்றால் பெரும் பிரச்ச்சினைதான். சட்டம் உள்நுழைந்தால், அடித்த அவன் வாழ்வு அவ்வளவுதான்.

   நீக்கு
  3. உண்மை தான் வருண் சார். ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இன்னும் கொஞ்சம் பக்குவமாக கையாள வேண்டும் எனவே நினைக்கின்றேன். அடித்து காயம் வந்திருந்தால் பொலிஸ் அவனை வெலியில் விட்டிருக்காமல் குறைந்தது மூன்று நாளேனும் தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும். இங்கே விசாரித்து விட்டு விட்டு விட்டதாக சொன்னார்கள் எனும் போதே பிரச்சனை அத்தனை ஆழமானதாக இல்லை என நான் புரிந்து கொண்டு விட்டேன். அதையே இப்போது அந்த ப்பெண்ணும் எங்களுடன் தொடர்பு கொண்டு பேசும் போது சொல்கின்றேன். தலையில் அடித்து வலித்ததனால் பயந்து போய் ஆலோசனைக்கென போனேன். இப்ப என்ன செய்யப்போகின்றேன் என கதறி அழுகின்றாள். எனக்குள் அந்தப்பையன் உயிரோடிக்கும் வாய்ப்பு இல்லை எனவே தோன்றுகின்றது. இன்னொரு பக்கம் நாங்கள் யோசிக்க வேண்டும் வருண் சார். மேலை நாட்டில் ஆண் பெண் என இருவரும் வருமானம் ஈட்டுவதில் சரிபங்காற்றுவார்கள். நம்மவர்கள் கல்யாணம் செய்து ஒரு பிள்ளை பிறந்தால் பிள்ளையை பராமரிக்கவென வேலையை விட்டு வீட்டில் நின்று விடுவார்கள். தொடர்ந்தும் பணி செய்வோரும் உண்டெனுனும் இன்னும் முழுப்பரவலாக வில்லை தானே? இந்த பெண் இங்கே வந்து முழுமையான கணவன் பாதுகாப்பில் தான் இருந்தார். இம்மாதிரி பிரச்சனை நேர்ம பொலிஸை நாடுவதை விட நலல் மனம் நலம் சார்ந்து கவுன்சிலிங்க தரும் ஆலோசகரை , டாக்டரை நாடுவது நல்லதல்லவா?

   நீக்கு
 4. யாருக்கு என்ன ஆச்சு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டங்களில் படித்து பாருங்களேன்பா இன்றுடன் 12 நாட்களுக்கும் மேல் , காணாமல் போனான், உயிரோடிருக்கும் வாய்ப்பில்லை என நம்பும் படி பல தேடல்கள் சொல்கின்றது சின்னப்பிரச்சனை. தவறான ஆளிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்ட குடும்பம்,

   நீக்கு
 5. மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
  முதுகைப் பாருங்கள் -
  முதுகினில் இருக்கு - ஆயிரம் அழுக்கு
  அதனைக் கழுவுங்கள்...!

  சுட்டும் விரலால் எதிரியை காட்டி
  குற்றம் கூறுகையில் -
  மற்றும் மூன்று விரல்கள்
  உங்கள் மார்பினை காட்டுதடா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான், தங்கள் கௌரவம், சுயம், அதிகாரம் என செருக்கில் பல இளையோர் வாழ்க்கையில்விளையாடி விடுகின்றார்கள். ஆலோசனை சொல்ல முன் தங்கள் குடும்பத்தின் நடப்பதை சிந்தித்தால் வீட்டுக்கு வீடு வாசற்படி என புரிந்து கொள்வார்கள்.

   நீக்கு
 6. அருமை பிறரைச் சொல்லும் முன் தன்னை உணர்தல் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை, வீட்டுக்கு வீடு வாசற்படிதானே?

   நீக்கு
 7. கணவன் மனைவிக்குள் கடவுளைக்கூட உள் நுழைய விடக்கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச்சொன்னீர்கள் ராஜி. இது தான் உண்மை, ஆனால் பலருக்கு இது புரிவதில்லை

   நீக்கு
 8. என்ன ஆச்சு என்று கேட்க வந்தோம் ஆனால் அதற்கு முன் கருத்து வந்ததைக் கண்டதால் கேட்கவில்லை. அதையும் வாசிக்கிறோம்... உண்மைதான்...இலவசமான அட்வைஸ்கள் அதீதமான மூக்கு நுழைத்தல் இங்கு சர்வ சகஜமாக நடக்கும் ஒன்று....

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 9. சகோ/ நிஷா வாசித்தோம்! கணவன் மனைவிப் பிரச்சனைக்குள் இப்படி மூக்கை நுழைத்தால் அவர்களது வாழ்வுதான் வீணாகும். அநியாயமாக அவர்கள் ஒரு வேளை புரிந்து கொண்டு நன்றாகக் கூட ஆயிருக்கலாம். அதற்கு முன் இப்படித்தான் பல குடும்பங்களில் நடக்கிறது. அவர்கள் இர்வரையும் பேச வைத்திருக்க வேண்டும். அது சரியாகவில்லை என்றால் குடும்ப ஆலோசகர், மனநல ஆலோசகர்களிடம் செல்ல அறிவுரையோ அல்லது அழைத்தோ சென்றிருக்க வேண்டும். அதல்லாமல் இப்படி குடும்பத்தாரே பஞ்சாயத்து செய்வது சரியல்ல. அதல்லாமல் இப்படி ஒரு குடும்பத்தையே பிரித்து...என்ன ஒரு வேதனை இல்லையா...

  கீதா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!