30 ஜனவரி 2017

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
********************************************************************************* 
இலங்கையில் ஈழ விடுதலைப்போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்ட பகுதிகளில் நூலகம் அமைத்திடும் அரிய பணிக்கு உதவுங்கள்.

பல இலடசம் நூல்கள் அடங்கிய எம் யாழ் நூலகம் தீக்கு இரையானாலும் அச்சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  எங்கள் இளம் சிட்டுக்களின் எதிர்காலம் சிறக்க இழந்து விட்ட எமதுரிமையை மீட்டெடுக்க கல்வியில் சிறந்தோராய் தங்களை உயர்த்திட அறிவுப்பசிக்கு தீனி போடலாம் வாருங்கள். 

உங்களிடம் இருக்கும் நூலகளை அனுப்பி உதவுங்கள். 

அறிவு அமுது நூல் நிலையம்.
**********************************************************

சகல விதமான நூல்களையும் கொண்ட நூலகம் ஒன்றை அமைக்க பாரிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறோம். .
இதற்கு நல்ல தரமான நூல்கள் அவசியமாகவுள்ளது.
இதற்கு தேவையான நூல்களை நன்கொடையாகத் தந்து உதவக்கூடிய உறவுகள் உதவுங்கள். .

இலங்கை -இந்தியா -மலேசியா -சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் பேசும் உறவுகளிடம் இவ்வுதவியினை நாம் எதிர்பார்க்கிறோம்.
ஆதரவிற்கு நன்றி. !!

  நிஷாவை தொடர்பு கொள்ளுங்கள்


18 கருத்துகள்:

 1. நல்ல செயல் வாழ்க தமிழ்

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு முயற்சி. அனுப்பி வைக்கவேண்டிய முகவரியும் குறிப்பிடலாமே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிலுக்கு நன்றி சார்.

   முகவரி பதிவுடன் இணைத்து விட்டேன்.

   புத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.

   நீக்கு
 3. நல்லதோர் முயற்சி.. நிச்சயம் என்னாலான பங்களிப்பை செய்வேன்.. தகவலுக்கு நன்றிமா நிஷா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா

   புத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.

   நீக்கு
 4. போற்றுதலுக்கு உரிய முயற்சி

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான முயற்சி ..வாழ்த்துக்கள்பா

  பதிலளிநீக்கு
 6. நல்ல செயல் அக்கா....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. முயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. மிக மிக அருமையான போற்றுதலுக்குரிய முயற்சி. தமிழ் புத்தகங்கள் மட்டும்தானா? இல்லை ஆங்கிலப் புத்தகங்களும் எடுத்துக் கொள்ளப்படுமா? நிஷா? மிக்க நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்கிலப்புத்தகங்களும் அனுப்பலாம் மேம், ஆனால் பயன் தருவதாக இருக்க வேண்டும், ஆங்கிலப்புலமை வளர்க்க நீங்கள் அனுப்பும் புத்தகம் உதவுமானால் அதுவும் நற்செயல் தானே?

   புத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.

   நீக்கு
 9. பெயரில்லா11:38:00 AM

  SENGTHIR BOOK SHOP
  Iyanaarkudiyiruppu
  Mulliyawalai west
  Mulliyawalai
  Mullaitivu
  Sri Lanka
  Viber :+94 77 66 59 915

  முகவரி மாற்றம்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா11:39:00 AM

  SENGTHIR BOOK SHOP
  Iyanaarkudiyiruppu
  Mulliyawalai west
  Mulliyawalai
  Mullaitivu
  Sri Lanka
  Viber :+94 77 66 59 915

  முகவரி மாற்றம் கவனியுங்கள்.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!