14 டிசம்பர் 2020

கருங்காலி


🌺 எப்போதும் தேவை உள்ளது. விலை கூடிய உயர்தர மரம்.அதை வாங்கக்கூடியவர்களால் இது நேசிக்கப்படுகிறது

🌺 மனிதர் பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே எமது வனங்களில் வளர்ந்து பயன் தந்த நமது மரங்களில் ஒன்று கருங்காலி. எமது வளங்களில் ஒன்றாக காலநிலையை  சீர்ப்படுத்தி, பருவ காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட பெரு மரங்கள் கருங்காலி, நீல வேம்பு, முதுரை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டு இலங்கையில் இயற்கை வனங்கள் வெறும் 20 % அளவில் சுருங்கி இருக்கின்றன. மீண்டும் காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவது மென்மேலும் இயற்கையை  சினம் கொள்ள வைக்கும்.

அதனால் எமது நோக்கம் மரங்களை அழிப்பதாக,  தற்காலிக பொருளாதார நோக்கம் கொண்டதாக இருக்காமல் அழிக்கப்பட்ட மரங்களை உருவாக்கி எமது பெருளாதாரத்தை நிலையானதாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு தரும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். 

அழிந்து வரும் பெரு விருட்சங்கள் மீண்டும் துளிர்க்க வேண்டும்.

🌺 கருங்காலி தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரத்தை  பச்சைத் தங்கம் என்பார்கள்.

🌺 கருங்காலிப் பயலே’ என்று எதற்கும் அசையாத உறுதி கொண்ட மனிதர்களையும் 

„“கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் “ என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.

🖤 கருங்காலி மரங்களை கருங்காலியாலான பிடியுடைய கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி துரோகத்தின் சின்னமானது. மரம் வெட்டும் கோடாலி மண்வெட்டிகளுக்கு கைப்பிடியாக கருங்காலி மர கம்புகள் பயன்படுத்ததும்  காரணத்தால் கூட இருந்து குழி பறிக்கும் நபரை “கருங்காலி“ என்றும் கூறுவர்.

🌳கருங்காலி மரம்

கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன. இம்மரம்  அரிதாகவே காணப்படுகிறது. தூய கருப்பு கருங்காலி 150 வயதுக்கு மேற்பட்ட மரங்களிலிருந்து மட்டுமே வருகிறது.

🚫 இலங்கையில், கருங்காலி ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் மற்றும் கருங்காலி அறுவடை மற்றும் விற்பனை சட்டவிரோதமானது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

🚫 இந்திய வனத்துறையால் காடுகள் மற்றும் மலைகளில் வெட்ட அரசால் தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் அழிந்து வரும் மர இனங்களில் ஒன்றாகும்.  

✅ மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. கருங்காலி அற்புதமான மருத்துவக் குணங்கள் கொண்ட அபூர்வமான மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முற்றிய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறும். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும். 

மரங்கள் மனிதனுக்கு ஆதாரமானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். நல்ல சக்திகளை(passitive Energy) நமக்கு பெற்று தந்து நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை(negative Energy) களையும் மாற்றும் ஆற்றல் கருங்காலி மரத்திற்க்கு உண்டு.

கருங்காலி ஒரு அடர்த்தியான கருப்பு / பழுப்பு கடின மரமாகும், கருங்காலியில் Diospyros பல இனங்கள் உண்டு.  இதில் பெர்சிமோன்களும் உள்ளன. 

Ebony Tree Trivia மற்ற வகை மர கருங்காலிகளைப் போலல்லாமல் நீரின் மேற்பரப்பில் மிதக்க முடியாது. அது மிகவும் அடர்த்தியானது, அது கீழே மூழ்கும்.. இது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மெருகூட்டும்போது கண்ணாடி போல் பளபளக்கும்அ.லங்கார மரமாக மதிப்புமிக்கதாக மாறுகின்றது. 

“கருங்காலி “என்ற சொல் பண்டைய எகிப்திய hbny இலிருந்து பண்டைய கிரேக்கம் throughβενος (enbenos) வழியாக, லத்தீன் மற்றும் மத்திய ஆங்கிலத்தில் வந்தது. பண்டைய எகிப்திய கல்லறைகளில் செதுக்கப்பட்ட துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட பயன்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. 

எகிப்தில், கருங்காலி பெரும்பாலும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது பின்னர், ரோமானியப் பேரரசும் கருங்காலி மரத்திற்கான தேவையில்  பெரும்பகுதி இந்திய Diospyros இனங்களால் பூர்த்தி செய்யப்பட்டது.  இந்தியாவில் இருந்து முக்கியமாக வர்த்தகம் செய்யப்படும் இரண்டு கருங்காலி இனங்கள் D. melanoxylon மற்றும் D. ebenum ஆகும். 

இருப்பினும், D. ebenum  "கோடுகள் அல்லது அடையாளங்கள் இல்லாமல் ஒரு கருப்பு மரத்தை மட்டுமே தருகிறது ..." 

இந்த மரம் முதன்முதலில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமுக்கு கொண்டு வரப்பட்டது. மற்றும் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பாவின் ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவில் கருங்காலி அறுவடை செய்யப்பட்டுள்ளது, பிரிட்டிஷ் வருகையின் போது கருங்காலி மரங்கள் பெரிய அளவில் வெட்டப்பட்டது, மிகவும் அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துவதன் பெருகி வளர  விடப்படவில்லை. துணைக் கண்டத்தில் இனங்கள் அதிகம் வளர விடப்படவில்லை, 

இலங்கையில் (அப்போதைய இலங்கை) ஆங்கிலேயர்களுக்கு மிகவும் தேவைப்படும்  ஏராளமான மரங்கள் இருந்தன. இந்த மரத்தின் முக்கிய ஆதாரமாக சில பங்குகள் பெரிதும்  அழிந்து விட்டாலும் இன்றும் உள்ளன. 

உயிரினங்களின் உயர் மதிப்பு மற்றும் விஞ்ஞான நிர்வாகத்துடன் உறுதியளிக்கும் திறன் இருந்தபோதிலும் அது விஞ்ஞான உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. இலங்கை இந்தியாவின்  இம்மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை செய்து உள்ளது. 

🌳
கருங்காலி மரம் பொதுவான பெயர்கள்:

Gaboon கருங்காலி, ஆப்பிரிக்க கருங்காலி, நைஜீரிய கருங்காலி, Cameroon கருங்காலி

கருங்காலி மரங்களின் வகைகள்: வெவ்வேறு கருங்காலி மர வகைகள்:

• அமெரிக்க கருங்காலி மரம், டியோஸ்பைரஸ் வர்ஜீனியா

• கருப்பு கருங்காலி மரம்

• இலங்கை எபோனி மரம், தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது

• காபோன் கருங்காலி மரம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது

• மக்காசர் கருங்காலி மரம்இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது 

• மலேசிய பிளாக்வுட் மரம்

• Mun கருங்காலி மரம்

• Persimmon கருங்காலி மரம் 

• Diospyrus வர்ஜீனியா

வெள்ளை கருங்காலி மரம்

✳️ கருங்காலி இனங்களில் தென்னிந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Diospyros ebenum (சிலோன் கருங்காலி) வானிலை மற்றும் காலநிலை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது. 

இன்று கிடைக்காத மிகச் சிறந்த தரம்: மிகவும் கடினமானது, துளைகள் இல்லாமல், மெருகூட்ட எளிதானது.16 - 19 ஆம் நூற்றாண்டுகளில் தளபாடங்கள் கட்டுமானத்தின் சிலோன் கருங்காலி வகையானதாக இருந்தது.

✳️ Kamerun-கருங்காலி (Diospyros crassiflora) மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.இது உலக சந்தையில் மிகவும் பரவலான கருங்காலி ஆகும், இது பெரும்பாலும் ஆழமான கருப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் பெரும்பாலும் சாம்பல் நரம்புகளுடன். சுமார் 10%  மட்டுமே ஒரே மாதிரியான கறுப்பைக் காட்டுகின்றன.

✳️ மடகாஸ்கர் கருங்காலி (Diospyros perrieri) மிகவும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது.இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட Diospyros celebica (சுலவேசி கருங்காலி) மற்றும் அதன் ஆடம்பரமான, பல வண்ண மர தயாரிப்புக்கள்  மதிப்புள்ளது. மொரிஷியஸ் கருங்காலி, Diospyros tessellaria. 

17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் பெரும்பாலும் (16 ஆம் நூற்றாண்டின் முடிவில் ) ஆடம்பர வர்த்தகத்திற்கான சிறந்த பெட்டிகளும் பாரிஸில் தயாரிக்கப் பட்டன. மரத்தின் அடர்த்தியான கடினத்தன்மை சுத்திகரிக்கப்பட்ட மோல்டிங்கிற்கு மிகக் குறைந்த நிவாரணத்தில் (அடிப்படை-நிவாரணம்) வழக்கமாக உருவகப் பாடங்களில் அல்லது செம்மொழி அல்லது கிறிஸ்தவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு செதுக்குவதன் மூலம் மிகச்சிறிய விரிவான சித்திர பேனல்களை ஒரு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்தது. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் மிகச்சிறந்த தச்சர்களுக்கு “எபனிஸ்ட்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது 

கருங்காலி - பிரபஞ்ச ஆற்றல் வாங்கி தரும் ஒரு வங்கி. நீடித்த அறுவடையின் விளைவாக, ஆப்பிரிக்கா  உள்நாட்டு கருங்காலி மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்ட்டு பல இனங்கள் இப்போது மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் ஒன்றாக இருப்பினும் இலங்கை,மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் இம்மரம் வளர்கிறது. 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (அதிக குளிர் மற்றும் குளிர் பிரதேசங்கள் தவிர) கலப்பு இலையுதிர் காடுகளிலும், வனாந்திர மலை அடிவாரங்களிலும் பரவலாக காணப்படும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும்.

🌳

பொதுப்பண்பு :  கருங்காலி மரம் சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.

ஒருங்கமைந்த இலைகளை கொண்டது. 30 – 50 சோடி இலைகள் ஒன்றினைந்து கொத்தாக காணப்படும்.நெற்றானது 10 15 செ.மீ நீளமுடையது மற்றும் 2 – 3 செ.மீ அகன்றது. பூக்கள் வெண்மையானது. உடல், தண்டு, கிளை, இலை எங்கும் முட்கள் கொண்ட மரம் அது. முட்கள் பார்க்கவே அழகாக இருந்தன. கருங்காலியின் முட்கள் அதன் தற்காப்பு. இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், முற்றியபின் செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும். 

🌳

பொருளாதார முக்கியத்துவம்

முக்கிய பயன்கள் :

கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. கருங்காலி மரம் வலிமையானதாகவும், தேக்கை விட விலை உயர்ந்ததாகவும் பல்வேறுபட்ட பயன்களைத் தர வல்லவை. 

இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர்.

அதாவது வைரம் பாய்ந்த கட்டை.  மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.அது கருப்பு நிறத்தில் இருக்கும்.ஆனால் அதற்க்கு மேல் உள்ள பகுதி இயல்பான நிறத்தில் இருக்கும். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும் கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

மரம் :
கருங்காலியில் கட்டில், அலமாரி மட்டுமல்லாமல் உலக்கை செய்வதும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இதன் பட்டை, பிசின், வேர் ஆகியன மருத்துவப் பயன்களைத் தருகின்றன.

இதன் மரம் கடினமானது மற்றும் எளிதில் அறுபடும் தன்மையற்றது. எனவே இம்மரம் வேளாண் உபகரணங்கள், வீட்டு தூண்கள், எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இம்மரம் படகு மற்றும் சக்கரம் தயாரிக்க பயன்படுகிறது.

இயற்கை சாயம் செய்யப் பயன்படுகிறது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் பழ நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது என்றால் அது தான் நமது சிறப்பு.

அடர் கருங்காலி சாயம் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு வண்ணமூட்ட பயன்படுகிறது . அச்சு மை தயாரிக்கவும் பயன்படுகிறது.

பசுந்தாழ் தீவனம் :

இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கோந்து :

இம்மரத்தின் தரமான கோந்தை தரவல்லது. கருங்காலி மரத்தின் பிசின்  பற்களுக்கு வலிவூட்டும், ஈறுகளில் ரத்த கசிவை தடுக்கும்,பற்களுக்கு உறுதிதன்மை கொடுக்கும்,

மரப்பாச்சி பொம்மை:

பிளாஸ்டிக் பயன்பாடு வருவதற்க்கு முன்பு குழந்தைகளுக்கு விளையாட கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மை தருவார்கள்,அது இருக்கும். 

கொலு பொம்மைகள்:

கொலுவில் வைக்கப்படும் பெரும்பாலான பொம்மைகள் வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தில் தான் செய்யப்படும். தற்போது மர பொம்மைகள் செய்து கருநிற சாயத்தில் ஊற வைத்த பொம்மைகள் கிடைக்கிறது. கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொம்மை எனில் நீரில் மூழ்கும். 

மரக்கட்டை:

மிக கடினமாகவும், அறுப்பதற்கும் கடினமாக இருக்கும். இவை வேளாண் உபகரணங்கள், கருவிகள், கைப்பிடி தயாரிக்கப்படுகிறது. கருங்காலி மரத்தை எளிதில் கரையான் அரிக்காது,உடைபடாது, அதிர்ச்சி தாங்கியாகவும் இருக்கும். கோடாலி,

கொந்தாளம்,மண்வெட்டி,களைவெட்டி போன்ற இரும்பு ஆய்தங்களுக்கு கைபிடி ஆக கருங்காலி மரம் தான் பயன்பட்டது. 

ஒட்டுப்பலகை தயாரிக்க :

கோந்து எடுக்க வெட்டப்பட்ட இதன் மரத்துண்டுகளை கொண்டு ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகிறது.

எரிபொருள் :

இம்மரம் 5200 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது. மேலும் இம்மரம் தரமான கரி தயாரிக்க பயன்படுகிறது.

விறகு கட்டை:

கலோரி அளவு – 5200கி


🌳

மருத்துவப் பயன் 

🔹இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. 

நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும். கொழுப்பை குறைக்கும்

🔹 கருங்காலி வேர் : வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

🔹 கருங்காலி மரப்பட்டை :

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.

🔹கருங்காலி மரத்தின் பிசின் கரப்பான் நோயினை போக்கவல்லது.

🔹பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.

🔹கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

🔹இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

🌳

நம்பிக்கைகளும் முக்கியத்துவமும் 

கருங்காலி மரத்தை நம்மக்கள் பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம் இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், (கெட்ட)எதிர் மறை சத்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது எனும் நம்பிக்கை உண்டு. 

உலக்கை:

முற்காலங்களில்  பூப்பெய்தும் பெண்கள்அமர்ந்து இருக்கும் இடத்திற்க்கு (பச்சை மட்டையில் கட்டிய குடில்) முன்பு கருங்காலி உலக்கையை போட்டு பாதுகாப்புக்கு வைப்பார்கள். கெட்ட சக்தி (எதிர்மறை சக்தி) தடுக்கவும்  இரத்த வாடையால் வரும் விலங்குகளை வரவிடாமல் தடுக்க,வந்தால் விரட்ட உலக்கையை வைப்பார்கள்.

தண்டம்:

சித்தர்கள்,ரிசிகள்,ஞானிகள் ' Y ' வடிவ வைத்து இருக்கும் கட்டையை தண்டம் என்று அழைப்பார்கள். இதனை கொண்டு தலையில் வைத்தோ அல்லது உடல் பாகங்கள் மீது வைத்தோ நல்ல வாக்கு (வார்த்தைகள்) கூறி ஆசி தருவார்கள்,இந்த தண்டம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகதான் இருக்கும்.

மாலை :  -கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய (சேவு) பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து யோகம்,தியானம், வழிபாடு செய்பவர்கள்,மந்திர ஜபம் செய்பவர்கள் அணிந்து கொள்வார்கள். 

அனைத்து கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்.

தாயத்துகள்:

நரிகுறவர் இன மக்கள் தரும் தாயத்துகள் அனைத்திளும் கருங்காலி கட்டை உறுதியாக இருக்கும்.

குறி சொல்லும் கோல்:சங்க காலத்தில் குறி சொல்லும் குறவஞ்சி பெண்கள் கருங்காலி மரத்தினால் ஆன கோல் (குச்சி) ஒன்றை கையில் வைத்து இருப்பார்கள்,குறி கேட்க வருபவர்கள் கையில் இந்த கோலை வைத்து அழுத்தி (தொட்டு) குறி சொல்வார்கள்.

ஆன்மிக நம்பிக்கை   

ஒவ்வொரு தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும், ராசிகாரர்களுக்கும், நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த தனி விருட்சங்கள் உண்டு.ஆனால் அனைத்து தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும் உகந்த விருட்சங்களில் (மரம்) குறிப்பிடதகுந்த மரம் கருங்காலி.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டைகளில் சிறு துண்டு எடுத்து பால் மற்றும் நீரில் கழுவி பிறகு அதற்க்கு உரிய பூஜை முறைகள் தெரிந்தால் செய்து பின் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்,கையில் சட்டை பையில் வைக்கலாம்.

🌳

ஏற்றுமதி முக்கியத்துவம் / சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்  

மிக பெரிய  தாவரவியல் பூங்காவின் கருங்காலி மற்றும் ரோஸ்வுட் நிபுணர் மடகாஸ்கர்  கருங்காலி   மர வர்த்தகத்தை "ஆப்பிரிக்காவின் இரத்த வைரங்களுக்கு  சமமானது"  என்கின்றார்.

நவீன பயன்பாடுகள்

சிலுவைகள், மற்றும் கறுப்பு பியானோ, ஆர்கன் (இசை) மற்றும் ஹார்ப்சிகார்ட் விசைகள், வயலின், வயோலா, மாண்டோலின், கிட்டார், டபுள் பாஸ் மற்றும் செலோ கைரேகைகள், டெயில்பீஸ்கள், ஆப்புகள், chinrests, மற்றும் வில் தவளைகள் இந்த கருப்பு மரத்திலிருந்து பல பிளெக்ட்ரம்கள் அல்லது கிட்டார் தேர்வுகள் தயாரிக்கப்படுகின்றன.

வரலாற்று ரீதியாக ஒரு பியானோவில் உள்ள கருப்பு விசைகள் கருங்காலி மற்றும் வெள்ளை விசைகள் தந்தங்களால் செய்யப்பட்டவை.

பாரம்பரியமாக, சதுரங்க செட்களில் உள்ள கருப்பு துண்டுகள் கருங்காலியில் இருந்து தயாரிக்கப்பட்டன. பாக்ஸ்வுட் அல்லது தந்தங்கள் வெள்ளை துண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

நவீன ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ்-பாணி சரிகை தயாரிக்கும் பாபின்கள், சிறியதாக இருப்பதால், அவை பெரும்பாலும் கருங்காலியால் ஆனவை மற்றும் பித்தளை அல்லது வெள்ளி கம்பி மூலம் பிணைக்கப்படும்போது அலங்காரமாக இருக்கும். 

அதன் வலிமை காரணமாக, பல கைத்துப்பாக்கி பிடிப்புகள் மற்றும் துப்பாக்கி முன்-முனை கருங்காலியால் செய்யப்பட்டவை. 

🚫 2012 ஆம் ஆண்டில் கிப்சன் கிட்டார் நிறுவனம் 1900 ஆம் ஆண்டின் லேசி சட்டத்தை மீறியதற்காக அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையால் சோதனை செய்யப்பட்டது, இது அச்சுறுத்தப்பட்ட வன விலங்குகள், மரங்களை  இறக்குமதி செய்வதைத் தடைசெய்கிறது. 

🌳

வேளாண் மேலாண்மை 

        விதை ,நாற்று, மண் காலநிலை  

மண் : வண்டல் மண் கலந்த மணல், மணற்பாங்கான மண், கரிசல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் : 900 – 1200 மீ உயரம் வரை வளரும்.

மண் pH : 6 மற்றும் 7

மழையளவு : 500 – 2000மி.மீ 

வெப்பநிலை : 37 – 43 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரும்.

நிலப்பரப்பு : சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகியவற்றில் நன்கு வளரும்.

மரப்பண்பு :

அதிக ஒளியை விரும்பும் மரமாகும். நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது. பனியை தாங்கி வளரக் கூடியது. மிதமான தீயை தாங்கி வளரக் கூடியது.

வளரியல்பு : இலையுதிர் மரம்

🌳

விதைகள் நாற்று

நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இயற்கை முறையில் பெருக்கமடையக் கூடிய வீதம் சற்று குறைவாகவே இருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

தகுந்த சூழ்நிலைகளிருப்பின் விதைகள் மூலம் பெருக்கமடையும் தன்மையுடையது. இது ஒரு எளிதான சிறந்த முறையாகும்.

இம்மரம் இளம் வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளமான விதையை தரக்கூடியது. 

விதைகள் மரத்திலிருக்கும் பொழுது பூச்சிகளின் பாதிப்பு இருப்பதில்லை. எனவே விதைகள் மரத்திலிருக்கும் பொழுதே சேகரித்துக்கொள்ள வேண்டும்.

நெற்றானது நவம்பர் முதல் பிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ச்சியடைகிறது.

முதிர்ந்த நெற்று சேகரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்து எடுக்க வேண்டும். ஒரு கிலோ  எடையில் 4590 நெற்றுகளிருக்கும்.

நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கப்படுகிறது. 6-8 மாதங்கள் வரை விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் சேமிக்கலாம். ஒரு கிலோ எடையில் 40000 விதைகளிருக்கும்.

1 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 5 – 17 சதவிகிதமிருக்கும். 2 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 9 சதவிகிதமிருக்கும்.

ஒவ்வொரு தனி மரமும் 0.5 – 2 கிலோ விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.

விதைப்பதற்கு முன் சல்பியூரிக் அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

கொதித்து ஆறிய நீரில் 6 மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதகால இடைவெளியில் விதைப்பு செய்வது சிறந்ததாகும்.

நாற்றாங்கால் படுக்கை:

விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படவேண்டும். விதைகளானது 20 செ.மீ இடைவெளியில் விதைக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு வரிசைகளுக்கிடை

யேயான இடைவெளி 2 செ.மீ என இருக்க வேண்டும். 0.5 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.

விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்திக்கு நீர் இறைக்க வேண்டும்.

விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 3 வார முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது. விதை முளைப்புத்திறன் 70 – 80 சதவிகிதமாகும். 

மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த பிறகு 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.

பாலித்தீன் பை மரக்கன்று:

22 x 9 செ.மீ அல்லது 23 x 13 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை நிறப்ப வேண்டும். நைட்ரோஜீனஸ் உரம் பைக்கு 2 கிராம் வீதம் மே – ஜுன்கால இடைவெளியில் 4 முறை இட வேண்டும்.

50 – 60 செ.மீ உயரம் வளர்ந்த அல்லது 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுலை மாத காலத்தில் நாற்றுகள் நடப்படுகிறது.

நடுகை 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

பாலித்தீன் பை கன்று:

மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.நாற்றுகள் நடப்படுவதற்கு முன் குழிகளுக்கு நீர் இறைக்க வேண்டும்.

கர்னைகள் நடவு: 12-15 மாத வயதுடைய மரத்தில் இருந்து நாற்று குச்சி பெறப்படுகிறது.10 மி.மீ சுற்றளவு கொண்ட குச்சிகள் இம்முறை நடவு செய்யப்படுகிறது.பருவ மழை நின்றவுடன் இம்முறையில் நாற்றகள் உற்பத்தி செய்ய வேண்டும்

பசுந்தீவன நடவு: இம்முறை நடவிற்கு 5 x 5மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.4 - 5 வருடங்கள் வரை கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.

களையெடுத்தல் :

முதல் வருடம் - மூன்று முறை

இரண்டாம் வருடம் - இரண்டும முறை

நடப்பட்ட பண்ணையில் ஆகஸ்டு – செப்டம்பர் மாதகால இடைவெளியில் களையெடுத்தல் வேண்டும்.

பக்க கிளைகளை நீக்குதல்:

5 வருடமான மரத்திற்கு பக்க கிளைகளை நீக்க வேண்டும். அதன் பின் 10, 15, 20 மற்றும் 25ம் வருடங்களில் பக்க கிளைகளை நீக்க வேண்டும்

🌳

இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

கருங்காலி மர கன்றுகள் வனத்துறை நர்சரிகளில் உறுதியாக கிடைக்கும் மேலும் மற்ற நர்சரிகளில் கிடைக்கும் அல்லது சொல்லி வைத்தால் வாங்கி தருவார்கள்.

இந்த கன்றுகளை வாங்கி வீடு,தோட்டம்,பொது இடம்,கோவில் இவற்றில் வைத்து பராமாரிக்கலாம்.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டை மற்றும் அதன் பொருள்கள்

மரம் அறுவை ஆலை அல்லது மர சேமிப்பு ஆலைகளில் கிடைக்கும்,அவர்களிடம்  கருகாலி(நாட்டு மரம்) வேண்டும் என்று கேளுங்கள்,இல்லை என்றால் வரும் போது தகவல் தர சொல்லுங்கள்,சதுராஅடி அல்லது எடை கணக்கில் தருவார்கள்

கருங்காலியினால் செய்யப்படும் பயன்பாட்டு  பொருட்கள் படத்தில் பாருங்கள்.

https://www.facebook.com/100000786292216/posts/3484256921610483/?d=n

13 டிசம்பர் 2020

அவித்த பீட்ரூட்..

பீட்ருட் 

பிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார். 

இது அவித்த பீட்ரூட்.. 
மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு  காற்று  புகாமல்  பாக்கெட் செய்து  100 °C  யில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 

தோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல்   நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி. 

பொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது. 

அப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம். 

ஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இதை குறித்து முன்னரே தற்சார்பு  குழுவில் எழுதி இருந்தேன். விவசாய  உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது   விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம். 

சுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும்  குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில்  அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து  பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள். இங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக  இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட்  ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.

https://www.facebook.com/100000786292216/posts/3483198908382951/?d=n

Sustainable Development Goal - 2 நிலையான அபிவிருத்தி இலக்கு

Awareness, pre-warning

விழிப்புணர்வு,முன் எச்சரிக்கை 

மூன்று சம்பவம் 

ஒன்று : 2015  எங்கள் பக்கம் நூறு வருடங்களுக்கு பின் கடும் வெள்ளம். ஆறுகள் நிரம்பி, வீடுகளின் நிலவறைக்குள் எல்லாம் தண்ணீர். பாலங்கள்  நிறைந்து பலமிழந்து வாகனங்கள் தடை  செய்யப்படடன. பல கோடி மில்லியன் Fr அழிவு. 

அம்மா நம்ம வீட்டுக்குள் சுனாமி வருது எங்கள் வீட்டு பால்கனி கதவுகளை இழுத்து முடுங்கோ என்று அன்றைய  மழைக்கு என் மகன்  வர்ணனை  செய்தான். 2004 டிசம்பர் சுனாமி அத்தனை ஆழமாக அவனுள் பதிவாகி இருந்தது. 

மலையிலிருந்து தொடர்ந்து மழை எப்போதும் அணை உடையும். பாலம் உடையும் என ஊடகங்கள், பத்திரிக்கை வானொலிகள் எச்சரித்து  கொண்டிருந்தன. 

நாங்கள் வேலை செய்யும் நண்பர்கள்  20 பேர்  ஒரு தோழி வீட்டில் விருந்து. பாதி விருந்தில் அணை உடைந்தது என பக்கத்து  வீட்டிலிருந்து சொல்ல .. அப்படியே போட்டது போட்டபடி ... ஓட்டம். 

எனக்கு பிள்ளைகளை விட்டு விட்டு  வந்த பதட்டம் ( 4 & 7 வயதுகள் ) பாலங்கள் கடந்து மேட்டில் என் வீடு. எப்படி வீட்டுக்கு போவது என்று அழுது கொண்டிருந்த என்னை  இழுத்து கொண்டு  ரோட்டுக்கு வந்து சிக்னலுக்கு நின்ற காரின் சொந்தக்காரரிடம் கேட்காமல் ஏறி  உட்கார்ந்து விட்டாள் தோழி. பாதி வழி கார்.. மீது நடை என்று வீட்டுக்கு போனேன்.

அன்று அணை உடையவில்லை. அது உடையவே இல்லை.  நீர்  நிறைந்து விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்ட்து. ஆனால் அதிக நீர் அழுத்தம் பாலங்களை பலமற்றதாக்கி இருந்தது. மழை தொடர்ந்தால் எதுவும் நடக்கலாம் எனும் நிலை இருந்தது. கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும்  கனரக வாகனங்கள் தடை செய்தார்கள். 

அடுத்து வந்த  மாதங்கள் முழுதும் பகுதி பகுதியாக வடிகான்கள், பாலங்கள், பாதைகள் விரிவு படுத்தப்பட்டு வெள்ளம் தேங்காதபடி நீர் ஓடும் வழிகளை செம்மை படுத்தினார்கள். ஆறு மாதங்களுக்கும் மேல் பாதைகளை அடைத்து  வாகனத்தில் ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டிய பாலம் தடை  செய்து  மூன்று கிலோ மீற்றர்கள்  சுத்தி வந்தோம். 

இது மக்களுக்கானது..! 

இரண்டு : பிரான்ஸ் நீஸ் தீவிர வாத தாக்குதல் தொடர்ந்து சுவிஸில் சில இடங்களில் முக்கியமாக  பிரதான புகையிரத நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவு, குண்டு வெடிப்பு ..  நள்ளிரவில் வாகனங்கள் கடும் சோதனை 

மூன்று: ஆறுமணிக்கு மேல்  தனியே வெளியில் திரியும் சிறுவர்களை கடத்தி செல்கின்றார்கள் என்று  பள்ளிகளில் பரப்பப்பட்டு  யார் அந்த மர்ம மனிதர் என  பதட்டப்படுத்தி ஒரு தற்காப்பு பயிற்சி.முதல் ஒரு வாரம் பயத்தில் ஆறு மணிக்கு முன் வீட்டுக்குள் வந்த பிள்ளைகள் அடுத்த வாரம் நான்கைந்து பேர் வெளியில் செல்ல யாரோ  முகமூடிஸோடு  அவர்களில் ஒருவரை பிடிக்க வர இவர்கள் பயப்படாமல் அவனை துரத்த ...

மிகைப்படுத்தல் ..  தான்..! 

அந்தந்த நேரம் மக்களுக்கு  விழிப்புணர்வு,தற்பாதுகாப்பு, முன்னேற்பாட்டுக்கு  நல்லது செய்யும் என்றால் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்  „“ 

 சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சரியானதை தவறு என்பது போல் தவறொன்றை சரியென நம்ப  வைக்கும். எமது சமூகத்தின் மனநிலை அப்படி..! சில சம்பவங்களுக்கு  மிகைப்படுத்தல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு உருவாக்குகின்றது. 

நடக்காதவைகளை நடந்தது, நடக்கவில்லை எனும்   நிறுவுவதை விட நிரூபிக்க எடுக்கும் நேரத்தை  இப்படி ஒரு சம்பவம் எமக்கும் நடக்கலாம்.. எச்சரிக்கை உணர்வு...தனி நபர்  சிந்தனைக்குள் சிறந்த  விழிப்புணர்வை உருவாக்கும். 

ஒரு கொலை, தற்கொலை நடந்தால் அது எப்படி நடந்திருக்கும் எனும் கற்பனைகளும், விபரங்களும் மிகைப்படுத்தப்படுவது  ஆபத்தான பின் விளைவுகளை உருவாக்கும் என்பதால்  சுவிஸ்  போன்ற வளர்ந்த நாடுகளில் இவ்வாறான செய்திகளை பகிர்வதற்கு  ஊடகங்களும்  கட்டுப்பாட்டுடன் செயல் படும். பல சம்பவங்கள் பக்கத்து வீட்டுக்கும் தெரியாமல் இருக்கும். காவல் துறை,குற்றப்புலனாய்வு நிர்வாகம்  உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும்  அடக்கி ஆளுகை.செய்வார்கள். காரணம் மனிதர்களில் உளவியல் சார்ந்தது. 

எங்கள் சமூகத்தில்  நடப்பது என்ன? 

மிகைப்படுத்த  வேண்டியவைகளை  அரசியல் அதிகார விருப்பு வெறுப்பு டன்  அணுகுவதும், அடக்கி ஒடுக்க வேண்டியதை சமூகத்துக்கு தீமைகளை பகிர்ந்து பரபரப்பு உருவாக்கி தவறுகளுக்கு துணை செய்கின்றோம்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் இயற்கை கால நிலை மாறுகின்றது. ஆனாலும் சில பகுதிகளில் வெள்ளம் புயல் அதிக அழிவு தருகின்றது. சில பகுதிகளில் தகுந்த முன்னேற்பாடு உயிர் பொருள் இழப்புகளை தடுக்கின்றது. 

எங்கள் பகுதியில் சில நேரம்  பெரிய  அலாரம் அடிக்கும். இராணுவ முகாம், தீயணைப்பு என்று மக்கள் எவ்வாறு ஆயத்தமாக இருக்கின்றார்கள் என்றும் சில சோதனைகள் ...  குடி நீர் நிறுத்துவார்கள், (  திருத்த வேலை முன் அறிவித்து செய்தாலும் )  மின்சாரம் நிறுத்தி  

எதுவும் நடக்காது  எனும் நம்பிக்கை தருவதை விட இப்படியும்  நடக்கலாம் எனும் உணர்த்தல் பல நன்மைகளை உருவாக்குகின்றது.

மக்கள் சமூக விழிப்புணர்வுக்கு பிழைப்படுத்தலும் , மக்கள் சமூக நலன்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மக்கள் சமூக செயல்பாடுகளில் நெகட்டிவ் விமர்சனங்களை அல்ட்சியப்படுத்தவும் பக்குவப்பட்ட சமூகம் நோக்கி முன் செல்லுகின்றது.

💥💥

வெள்ளம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் சமூக ஆயத்தத்தின் தாக்கம் 

தொழில்நுட்ப முன்கணிப்பு மற்றும் எச்சரிக்கை திறன்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில். மேலும், சமூக தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிகள் பேரழிவால் தூண்டப்படும் இழப்புகளை கிட்டத்தட்ட ஒரு பாதியில் குறைக்க உதவும்.

சமூக தயார்நிலை, குறிப்பாக, ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, வெள்ள அனுபவத்தின் பின்னடைவு memory நினைவகம் தொடர்பானது. அதிகாரிகள் மீதான நம்பிக்கை, அல்லது சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் போன்ற மனித நடத்தை பண்புகளால் வலுவாக பாதிக்கப்படுகிறது

கூடுதலாக, திறமையான இடர் குறைப்பு சேவைகள் இருக்கும்போது சமூக விலகல், பொறுப்புகள், செயல்திறன் குறைப்பு நடவடிக்கைகளின் செலவுகள், அல்லது ஊடகங்கள்,அபாயகரமான தன்மை மற்றும் தனிப்பட்ட மறுப்பு ஆகியவை வெள்ள தணிப்பு நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வு அறிக்கை யில்   

 சுவிஸ் சூரிச் யுனிவசிட்டி குறிப்பிடுகின்றது.

முதல் நிலையான அபிவிருத்தி இலக்கு - வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல். 

First Sustainable Development Goal - End Poverty. 

பேசுவோம்..!

Nishanthi

12.12.2020

https://www.facebook.com/100000786292216/posts/3482293218473520/?d=n 

12 டிசம்பர் 2020

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள் 


உணவு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும்.உலகிலும் விவசாயப் பொருட்களுக்கான தேவை எப்போதுமே உயர்ந்த பக்கத்திலேயே இருக்கும், எனவே, ஒரு தொழில்முனைவோராக, நீங்கள் இந்த கோரிக்கையை மையமாகக் கொண்டு ஒரு வேளாண் வணிகத்தை அமைக்கலாம், உங்களுக்காக மகத்தான பொருளாதாரத்தை  பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு இளம் ஆர்வமுள்ள தொழில்முனைவோரும் விவசாயம் சார்ந்த வணிகத்தில்  ஆர்வம் காட்ட பல காரணங்கள் உள்ளன. விவசாயத்தில் முடிவற்ற வாய்ப்புகள் உள்ளன,

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வணிகத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது? 

உங்கள் சொந்த லாபகரமான வேளாண் ஏற்றுமதி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது?

விவசாயத்திற்கான அரசாங்க கடன்கள் மற்றும் மானியங்களை எவ்வாறு பெறுவது?

உங்கள் வேளாண் வணிகத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க  வேண்டும்? 

விவசாயத்தில் தொடங்குவதற்கான சிறந்த வழி அதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்து கற்றுக்கொள்வதாகும்.

சந்தைப்படுத்தல் & தொழில்நுட்ப அறிவு 

நான் எப்போதும் குறிப்பிடுவதைப் போலவே, எந்தவொரு வேளாண் அடிப்படையிலான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் தயாரிப்பின் தேவை குறித்து சரியான சந்தைப்படுத்தும் வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிந்து  கொள்ள வேண்டும். 

சரியான விவசாய வணிகத் திட்டத்திற்குச் செல்வதற்கு முன் அதை நீங்கள் திட்டமிட்ட வேண்டும். 

ஒருவர் அவர்களின் ஆர்வம் /முயற்சி  மற்றும் மூலதனம்...! 

வணிகத்தில் எவ்வளவு முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார் என்பதன் அடிப்படையில் ஒரு வணிக யோசனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வணிக யோசனை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே நீங்கள் ஒரு விவசாய வணிக திட்டத்தை உருவாக்க வேண்டும்.

1) விவசாய பண்ணை : விவசாயத்திற்கு ஏற்ற வெற்று நிலம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு விவசாய பண்ணை  தொடங்கலாம். உள்ளூர் தேவைகளுக்கான பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்யலாம். நல்ல தரத்தை பராமரிப்பது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

2) மரம் பண்ணை : ஒரு மர பண்ணை மரங்களை வளர்த்து அவற்றை விற்று பணம் சம்பாதிக்கிறது. மரங்களை வளர்ப்பதற்கு கணிசமான நேரம் தேவைப்படுவதால் இந்த வணிகத்தில் பணம் சம்பாதிப்பதற்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது. சிறந்த சிறு பண்ணை வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு சில பராமரிப்பு செலவு தேவைப்படலாம். இவ்வாறான முயற்சிகள்  மூலம் வன வளத்தை உருவாக்கும் திட்டமும் நிறைவாகும்.  ( என்ன மரங்கள் நடலாம் ..? அடுத்த பதிவில்) 

3) கரிம உர உற்பத்தி :  மண்புழு உரம் அல்லது கரிம உர உற்பத்தி வீட்டு வணிகமாக மாறியுள்ளது. இதற்கு அதிக முதலீடு தேவையில்லை மற்றும் உற்பத்தி செயல்முறையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது மிகவும் எளிதானது.

4) உர விநியோகத்தின் வணிகம் : சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றது. இந்த வணிகத்தில், நீங்கள் பெரிய நகரங்களிலிருந்து உரங்களை வாங்கி கிராமப்புறங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும். இது சிறிய நகரங்களில் தொடங்குவதற்கான மிகச் சிறந்த சிறு விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

5) உலர் பூ வியாபாரம்  : உலர் பூக்களின் வணிகம் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது. உங்களிடம் காலியான நிலம் இருந்தால், நீங்கள் பூக்களை வளர்க்கலாம், அவற்றை உலர வைக்கலாம் மற்றும் கைவினைக் கடைகள் அல்லது பொழுதுபோக்கிகு கடைகள் மூலம் விற்கலாம்.

6) காளான் வளர்ப்பு: வளரும் காளான்களின் வணிகம் குறுகிய காலத்தில் பெரிய லாபத்தைப் பெற முடியும். இது குறைந்த முதலீட்டில் தொடங்கப் படலாம்.அதற்கு குறைந்த இடமும் தேவைப்படுகிறது. ஹோட்டல், உணவகங்கள் மற்றும் வீடுகளில் காளான்களுக்கு அதிக தேவை உள்ளது.

7) கோழி வளர்ப்பு: கடந்த சில தசாப்தங்களில் கோழி வளர்ப்பு வணிகம் ஒரு தொழில்நுட்ப-வணிகத் தொழிலாக மாறியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். நீங்கள் சிறிய வருமான பண்ணை யோசனைகளைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

8 ) ஹைட்ரோபோனிக் கடை : ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒரு புதிய தோட்ட தொழில்நுட்பமாகும், இது வளரும் தாவரங்களுக்கு மண்ணைப் பயன்படுத்தாது,  உற்பத்தி செய்து கொள்வது. ஹைட்ரோபோனிக்  விற்பனை நிலையம் ஹைட்ரோபோனிக் கருவிகளைக்கையாண்டு  வணிக மற்றும் வீட்டு உபயோகத்திற்காக விற்பனை செய்யப்படும் தாவரங்களையும் உருவாக்குகிறது.

9) ஆர்கானிக் கிரீன்ஹவுஸ்கரிம கிரீன்ஹவுஸ் வணிகம் வளர நல்ல  வாய்ப்பை கொண்டுள்ளது, ஏனெனில் கரிமமாக வளர்க்கப்படும். பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக, இந்த முயற்சி குடும்பத்தால் நடத்தப்படும் சிறிய பண்ணைகளில் செய்யப்பட்டது, ஆனால் இப்போது மக்கள் கரிம கிரீன்ஹவுஸ் தயாரிப்பதற்காக நிலத்தை வாங்குகிறார்கள்.

10) தேனீ வளர்ப்பு : ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், தேனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வழியில் தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த வணிக வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த வணிகம் தேனீக்களை அன்றாட கண்காணிப்புடன் நெருக்கமான கண்காணிப்புடன் செயலாகின்றது. 

11) மீன் வளர்ப்பு - மீன் வளர்ப்பு வணிகம் மிகவும் இலாபகரமான வணிகமாகும், ஒரு பெரிய தொகையை பெற முடியும். நவீன நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம், உற்பத்தியையும் தரத்தையும் பெரிதும் மேம்படுத்த முடியும். தொடங்குவதற்கு மிதமான அதிக முதலீடு தேவைப்படும் மிகவும் இலாபகரமான வேளாண் வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும்.

12) நத்தை வளர்ப்பு - நத்தை வளர்ப்பு வணிகமானது மனித நுகர்வுக்காக நில நத்தைகளை வளர்க்கும் செயல்முறையாகும். நத்தைகளில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, குறைந்த கொழுப்பு மற்றும் மனித உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை மனதில் வைத்து, அவர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வணிக வாய்ப்பு நவீன தொழில்நுட்பத்தின் ஒழுக்கம் மற்றும் குறிப்பிட்ட அறிவைக் கோருகிறது.

13) பழம் மற்றும் காய்கறி ஏற்றுமதி - பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கலாம், அதில் நீங்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேகரித்து சர்வதேச அளவில் விற்க வேண்டும். இந்த வணிகத்திற்கு, நீங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகள் மற்றும் உள்ளூர் சந்தைகளை அறிந்து கொள்ள வேண்டும். தொடங்குவதற்கான சிறந்த விவசாய ஏற்றுமதி வணிக யோசனைகளில் இதுவும் ஒன்றாகும்.

14) ஒரு பூக்கடை - மலர்களை விற்பது மிகவும் இலாபகரமான சில்லறை வணிகமாகும். மலர் ஏற்பாடு மற்றும் பூங்கொத்துகள் எப்போதும் பரிசளிப்பு, திருமணங்கள் போன்றவற்றில் அதிக தேவை உள்ளது. சில புதுமை மற்றும் படைப்பாற்றலுடன். இந்த வணிகத்தில் நீங்கள் அதிசயங்களைச் செய்யலாம்.

15) விளக்குமாறு உற்பத்தி - பல நூற்றாண்டுகளாக, விளக்குமாறு தரையைத் துடைப்பதற்கும், பணியிடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை அகற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. விளக்குமாறு உற்பத்தியின் செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் குறைந்த மூலதன முதலீட்டில் திட்டத்தை தொடங்கலாம். நல்ல தரம் மற்றும் போட்டி விலையை பராமரிப்பது குறுகிய காலத்தில் நல்ல லாபத்தை தரும்.

16) பழச்சாறு உற்பத்தி - பழச்சாறுகளின் உற்பத்தி செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலைத் தொடங்கும்போது சுகாதாரம், சுவை மற்றும் பழத்தின் தரம் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

17) நிலக்கடலை பதப்படுத்துதல் - இந்த வணிகத்திற்காக நல்ல தரமான மூலப்பொருளை (நிலக்கடலை) வாங்க முடிந்தால், அதை மிதமான மூலதனத்துடன் தொடங்கலாம். பதப்படுத்தப்பட்ட நிலக்கடலை உலகம் முழுவதும் நல்ல சந்தை திறனைக் கொண்டுள்ளது.

18) காடை வளர்ப்பு - காடை வளர்ப்பு என்பது லாபகரமான முட்டை மற்றும் இறைச்சிக்கு காடைகளை வளர்ப்பது. உலக அளவில், தினசரி குடும்ப ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதால் காடை வளர்ப்பு வணிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

19) தேயிலை தோட்டம் - தேயிலை இலைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த வணிகத்திற்கு பெரும் ஆற்றல் உள்ளது. தேயிலை ஆலைகளுக்கு பொதுவாக அமில மண் மற்றும் அதிக மழை தேவைப்படுகிறது, இருப்பினும் அவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்திற்கு எங்கும் வளர்க்கப்படலாம். எனவே, தேயிலை வளர்ப்பதற்கு உங்கள் நிலைமை பொருத்தமானதாக இருந்தால், நீங்கள் இந்த தொழிலில் செல்ல வேண்டும். அதிக மூலதனம் தேவைப்படும் நல்ல விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

20) மளிகை ஷாப்பிங் போர்டல் - தொழில்நுட்பம் மற்றும் ஈ-காமர்ஸின் வருகையால், மக்கள் அன்றாட மளிகை பொருட்களை வாங்குவதற்கு மணிநேரம் செலவிடுவது மிகவும் வீணானது. மளிகைப் பொருள்களை தங்கள் வீட்டு வாசலில் வழங்குமாறு ஆர்டர் செய்வதை அவர்கள் விரும்புகிறார்கள், எனவே மளிகைப் பொருட்களை வழங்கும் மின்-ஷாப்பிங் போர்ட்டலில் ஒருவர் தொடங்கலாம்.

21) மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது - வணிக மட்டத்தில் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது மிகவும் இலாபகரமான விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகும். நீங்கள் மூலிகைகள் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தால், போதுமான நிலம் இருந்தால், நீங்கள் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதைத் தொடங்கலாம். மருத்துவ மூலிகை வியாபாரத்தில் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சில உரிமங்களை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

22) கற்றாழை ஏற்பாடு - கற்றாழை ஒரு உட்புற அல்லது வெளிப்புறமாக அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கற்றாழை தாவரங்கள் ஒரே கொள்கலனில் மகிழ்ச்சியுடன் வாழலாம். எனவே, படைப்பாற்றலின் தொடுதலுடன், நீங்கள் அழகான கற்றாழை ஏற்பாடுகளை செய்யலாம். இது மிகவும் இலாபகரமான மற்றும் சுய பலனளிக்கும் வணிகமாகும்.

23) ஜட்ரோபா வேளாண்மை - ஜட்ரோபா பயோடீசல் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. Cm விவசாய வணிக யோசனைகளை உருவாக்கும் மிகவும் பிரபலமான பணம் இதுவாகும், ஏனெனில் இது பற்றி மிகச் சிலரே அறிவார்கள். சில ஆராய்ச்சி செய்து, சில அறிவைப் பெறுவதன் மூலம், இந்த வணிகத்தை நீங்கள் எளிதாகத் தொடங்கலாம்.

24) சோள வேளாண்மை - சோளம் அல்லது மக்காச்சோளம் மாறுபட்ட காலநிலை நிலைமைகளின் கீழ் பயிரிடக்கூடிய பல்துறை பயிர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மக்காச்சோளம் தானியங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது குடும்பத்தில் மிக உயர்ந்த மரபணு ஆற்றலைக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தையும் நல்ல தரமான விதைகளையும் செயல்படுத்துவதன் மூலம் ஒருவர் பம்பர் பயிரைப் பெறலாம்.

25) உருளைக்கிழங்கு தூள் - சிற்றுண்டி உணவுத் தொழிலில் உருளைக்கிழங்கு தூள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பிசைந்த உருளைக்கிழங்கு தேவைப்படும் எந்த செய்முறையிலும் இதைப் பயன்படுத்தலாம். காய்கறி கிரேவி மற்றும் சூப்களை சாப்பிட தயாராக இது ஒரு தடிப்பாக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

26) ஆடு வளர்ப்பு - உலகளவில் பயன்படுத்தப்படும் இறைச்சி உற்பத்தி செய்யும் முக்கிய விலங்குகளில் ஆடு ஒன்றாகும். இந்த காரணத்திற்காக, ஆடு வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக ஒரு பொருளாதார தொழிலாக வளர்ந்து வருகிறது.

27) மண் பரிசோதனை - மண் பரிசோதனை என்பது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கண்காணிக்கப் பயன்படும் ஒரு நுட்பமாகும், அதே போல் வெவ்வேறு பயிர்களுக்கு துல்லியமான உர பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். அரசாங்க சான்றிதழுடன் மண் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவுவது சிறந்த சிறு பண்ணை வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

28) வேளாண் பிளாக்கிங் - வேளாண்மையைப் பற்றி நல்ல அறிவை எழுத்தில் வைத்திருந்தால், நீங்கள் வேளாண் வலைப்பதிவிற்கு முயற்சி செய்யலாம். விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான வலைப்பதிவுகள் இதில் உள்ளன. கிராமப்புறங்களில் இணையத்தின் வருகையுடன், விவசாயிகள் தங்கள் விவசாய திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களின் விவசாய பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு நியாயமான ஆலோசனை தேவை. பூஜ்ஜியத்திலிருந்து குறைந்த முதலீட்டில் தொடங்க இது விவசாய தொடர்பான சிறந்த வணிக யோசனைகளில் ஒன்றாகும்.

29) தீவன வளர்ப்பு வணிகம் - தீவனம் என்ற சொல் வீட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக வழங்கப்படும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அவை தாங்களாகவே மேயும் உணவு அல்ல. பார்லி, ஓட்ஸ், அல்பால்ஃபா போன்ற இந்த நோக்கத்திற்காக குறிப்பாக வளர்க்கப்படும் தாவரங்கள் உள்ளன. பசுக்கள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு உணவளிக்க தீவனம் பயன்படுத்தப்படுகிறது, எப்போதும் அதிக தேவை உள்ளது.

30) ரோஜா வளர்ப்பு - ரோஜா அதிக வணிக மதிப்பு கொண்ட ஒரு மலர். இது பூ ஏற்பாடுகளிலும் பூங்கொத்துகளிலும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தோட்டக்கலைகளில் ஆர்வமாக இருந்தால், அதை லாபகரமான வணிகமாக மாற்றலாம். இது சிறிய நிலத்தில் தொடங்கப்படலாம்.

31) முயல் வளர்ப்பு - வணிக அளவில் முயல்களை வளர்ப்பது தொடங்கப்பட்டுள்ளது. அங்கோரா முயல்கள் முக்கியமாக கம்பளிக்கு வளர்க்கப்படுகின்றன.ஒரு கிலோ உடல் எடை அடிப்படையில் கம்பளி உற்பத்தி செய்யும் சிறந்த முயல்கள் தரத்திற்கு நன்கு அறியப்பட்டவை.

32) வேளாண் ஆலோசனை - நீங்கள் ஒரு குறிப்பிட்ட விவசாயத் துறையில் நிபுணராக இருந்தால், நீங்கள் விவசாய ஆலோசனை வணிகத்தை ஏற்கலாம். விவசாயிகளுக்கு பல கட்டங்களில் நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படுவதால் இந்த வணிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

33) பால் பண்ணை - பால் பதனிடும் தொழில் :பாலிலிருந்து, பால்பவுடர், தயிர் வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. 

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை ஒருபோதும் குறையாது. வணிக பால் பண்ணை என்பது மிகவும் இலாபகரமான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக யோசனைகளில் ஒன்றாகும். பால் தவிர, இது பெரிய அளவில் எருவை உற்பத்தி செய்கிறது. இந்த தொழிலைச் செய்யும்போது எப்போதும் சுகாதாரம் மற்றும் தரம் இருக்க வேண்டும்.

34) மசாலா பதப்படுத்துதல் - கரிம மசாலாப் பொருட்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அதிக தேவை உள்ளது. செயலாக்கம் மற்றும் பேக்கேஜிங் முறைகள் மிகவும் சிக்கலானவை அல்ல, மிதமான மூலதனத்துடன் தொடங்கலாம்.

35) காய்கறி விவசாயம் - சிறிய பண்ணை வருமான யோசனை ,உங்களிடம் போதுமான நிலமும் மனித ஆற்றலும் இருந்தால், நீங்கள் காய்கறி விவசாயம் தொடங்கலாம். தரமான விதைகள் மற்றும் உரங்களுடன் தயாரிக்கப்படும் காய்கறிகள்  வருமானத்தை உறுதி செய்கிறது.

36) சோயா பீன்ஸ் விவசாய உறுதி செய்கிறது. - சோயா பால், சோயா மாவு, சோயா சாஸ், சோயா பீன் எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்ய சோயா பீன் தேவைப்படுகிறது. உங்களிடம் சிறிய காலியான நிலம் இருந்தால், அதை லாபகரமான தொழிலாக மாற்ற சோயா பீன் விவசாயத்தைத் தொடங்கலாம்.

37) இயற்கை நிபுணர் - இயற்கை கட்டிடக்கலை பற்றி நல்ல அறிவைக் கொண்டவர் இயற்கை நிபுணர். இது தள பகுப்பாய்வு, நில திட்டமிடல், நடவு வடிவமைப்பு, புயல் நீர் மேலாண்மை, கட்டுமான விவரக்குறிப்பு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் தற்போதைய அனைத்து கட்டிடக் குறியீடுகளையும் அனைத்து சட்டரீதியான இணக்கத்தையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.

38) திலபியா வேளாண்மை - திலபியா என்பது ஒரு வகையான மீன், அதன் தேவை குறிப்பாக அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அதிக லாபம் ஈட்டும் இந்த வணிகத்தை நீங்கள் தொடங்கலாம்.

39) தோட்டக்கலை பயிர் வேளாண்மை - தோட்டக்கலை வல்லுநர்கள் பழங்கள், தாவரங்கள் மற்றும் காய்கறிகள், பசுமை இல்லங்களில் பூக்கள், மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவைக் கொண்ட நர்சரிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த வியாபாரத்தில் பயிர்கள் மற்றும் முறைகளின் தேர்வு மிகவும் முக்கியமானது.

40) சான்றளிக்கப்பட்ட விதை வியாபாரி - விதை சான்றிதழ் என்பது தரமான சோதனை ஆகும், இதன் மூலம் விதைகள் பரிசோதிக்கப்பட்டு முறையான செயல்முறையுடன் சரிபார்க்கப்படுகின்றன. எளிமையான சொற்களில், ஒரு பெட்டி அல்லது விதை பாக்கெட் ஒரு சான்றிதழ் திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதாக கணினி சான்றளிக்கிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே விற்கும் தொழிலை நீங்கள் தொடங்கலாம். இந்த வணிகத்தை நிறுவ சில முறைகள் உள்ளன. அதற்கு உங்களுக்கு எந்த நிலமும் தேவையில்லை. ஒப்பந்த வேளாண்மை மூலம் இதைத் தொடங்கலாம்.

41) கிரீன்ஹவுஸ் மலர் ஏற்றுமதி - ஏற்றுமதி சார்ந்த பூக்களை மட்டுமே உற்பத்தி செய்வதற்காக பலர் கிரீன்ஹவுஸை நிறுவுகிறார்கள். இது மிகவும் இலாபகரமான வணிக யோசனைகளில் ஒன்றாகும், இதற்கு கணிசமான மூலதன முதலீடு மற்றும் செயல்முறை குறித்த நல்ல அறிவு தேவைப்படுகிறது.

42) உருளைக்கிழங்கு சிப் உற்பத்தி - இது உருளைக்கிழங்கு சில்லுகள் மற்றும் பிரஞ்சு-பொரியல் தயாரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய அளவிலான தொழில் ஆகும். உலக சந்தையில் ஒரு உருளைக்கிழங்கு சில்லுகள் மற்றும் பிரஞ்சு-பொரியல்களுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது. குறைந்த முதல் நடுத்தர மூலதனத்துடன் தொடங்குவதற்கு இது மிகவும் இலாபகரமான தொழில் .

43) மீன் நண்டு, இறால் பதனிடும் தொழில் 

44) பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும்   தொழில் 

45) விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள்,  வேளாண் கருவிகளை தேவைப்படும் போது வாடகைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

46 ) விவசாய இயந்திரங்கள் / கருவிகளைப் பழுது பார்ப்பதற்கான தொழில் 

47) கணினிw வழி வேளாண் தொழில்நுட்ப தகவல்களைப் பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தல்

48 ) 


49 )

50 ) 

50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள் 


முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)  


 கல்வி, பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல.. உள்ளே வேரோடி இருக்கும் நம்பிக்கைகளும், உணர்வுகளும் சார்ந்தது..! 

சரியான கல்வி   திட்டங்களைச் செயல் படுத்தி மேற்பார்வை இட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்று அடையும் 

கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடு பட உதவ வேண்டும்

அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது எனும் தனி மனிதர் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பழைய கால கல்வி முறை மாற வேண்டும்.,

🌳 செய்யும் ஒவ்வொன்றும் அப்போதுள்ள சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

🌳 ஒரு தலையீடு மற்ற தலையீட்டுக்குப் பொருந்தி வர வேண்டும். ( அரசியல் / அதிகாரிகள்/   ஆசிரியர்கள் / சமூகம்/ பெற்றோர் ) 

🌳 தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றும் திறமை வேண்டும்.

மாணவன் கல்வி கற்பதற்கும் , சமூக மேம்பாட்டுக்கும் 

🌳 சுற்றுப்புறச் சூழ்நிலை 

🌳 மன   உணர்வுகள்

🌳 சமுதாய சக்திகள்

🌳 உடல் தொடர்பான பிரச்சினைகள்

🌳 உளவியல் சார்ந்த சிக்கல்கள்அனைத்தசியும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளணும்.

உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. காலத்துக்கு ஏற்றபடி  மாறனும் என்றால் தொழில் நுட்ப சாதனங்களை ( போன், லேப்டாப், ஜூம் மீட்டிங், இன்டர்நெட் என்று தவறாக புரிந்து கொண்டு செயல் படுகின்றார்கள்.

வளர்ந்த நாடுகளில் ஸ்மார்ட் வகுப்பறை  இருந்தாலும்  ஆறாம் வகுப்பு (  13 ) வரை கம்ப்யூட்டர், இன்டர்நெட்  வாரத்தில் ஒரு சப்ஜெக்ட் தான்.   

இங்கே வழக்கமான பாடத் திட்டங்களில் இருந்து விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கான அறிவு புகட்டப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, 

தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது? 

மர நடுகை அவசியம்...? 

காடுகளின் அவசியம்? 

பொது சொத்துக்கள்..? 

அரசாங்கம் என்பது யார் ? 

அன்றாட  வாழ்வியல்என்று அந்த சூழலை  வகுப்பறைக்கு உருவாக்குவார்கள். இங்கே  படிகளும் பிள்ளைகள் நீரை விரயம் செய்ய மாட்டார்கள். கல்வி அவர்களுக்கு கற்பிக்காமல் வாழ்ந்து காட்டுகின்றது. 

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)  

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மேம்பாட்டு  முன்னெடுப்புகள் அதுசார்ந்த மக்களுக்கான ஆதரவோடு உள்ளார்ந்த புரிந்துணர்வு, நம்பிக்கையோடு தொடரப்பட வேண்டும்.   நீண்டகாலம் அடக்குமுறைக்குள் வாழ்ந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப முடியாமலும், யாரோ ஒருவர் மேல் அதிக  பக்தியும் உருவாக்கி விடுகின்றன. அவர்களுக்கான சமூக மேம்பாடு அத்தனை இலகு அல்ல ..!   அவர்கள்  மொழியில்  அவர்களோடு வாழ்ந்து புரிந்து  உணர்ந்து நம்பிக்கை தந்து  சரி என்று நம்பப்படும் பல தவறுகளை  உணர்த்த வேண்டும்.  

“.... ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டு மாயின் முதலில் அவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு பிணைத்துள்ள புனைவுகளாலும் மாயங்களாலும் ஆன தொப்புள் கொடிகளை அறுத்தெறிய வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் பிணைப்பும் வேறுவகையானவைகளால் கட்டமைக்கப்படவேண்டும். இதை யாராலும் பிரிக்க முடியாத பந்தத்தைக் கட்டமைக்க புரட்சிகர செயல்பாடு என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு கலாசார நடவடிக்கையாக இருக்க வேண்டும்....என்கிறார் —பாவ்லோ பிரையர்,

சமூக மேம்பாட்டுக்கான  Ph.d...! தமிழர்களில் இவ்வாறன பயின்றோர் உண்டார்? எவ்வாறு  பயிற்சி பெறுகின்றார்கள்? கல்வி..?  சமூக மேம்பாடு குறித்த  அர்ப்பணிப்பு சில வருட கல்வியால் கிடைக்குமா? 

பேசுவோம்..!

11 டிசம்பர் 2020

ஊடுபயிராக வெங்காயம் மஞ்சள்எள்ளு,உழுந்து,பயறு,பழ மரங்கள்

Project Proposal 


Project name :   

தென்னையுடன் இணைந்த ஆடு,மீன் வளர்ப்பு 

ஊடுபயிராக வெங்காயம் மஞ்சள்எள்ளு,உழுந்து,பயறு,பழ மரங்கள் 

முன்மொழியப்பட்ட பணி: 

• தென்னை பயிர்செய்கையுடன் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை உருவாக்குதல் / ஊடு பயிர்ச்செய்கை.

• தற்சார்பு தேவைகளை நிறைவு செய்து   பொருளாதார மேம்பாடு  மற்றும் புதிய   வேலைவாய்ப்புகள். 

திட்ட செலவு : 20 00000Rs (2 Million Rs)

நிதி ஆதாரம்:  10 00000Rs ( 1 Million Rs)

பரப்பளவு - 6 

முதலீடு –   2 மில்லியன்

ஆரம்பகட்ட முதலீடு-ஒருமில்லியன்

செயல்படுத்தும் நிறுவனம் : 

 பெயர் :

விலாசம் :

பிறந்த தேதி :

அடையாள அட்டை ; 

வாகன சாரதி அனுமதி பத்திரம்: 

தொலைபேசி:

Mail I’d: 

ஆண்/ பெண்/ வேறு :

                    Introduction / அறிமுகம்

தென்னை (Cocos nucifera)  வெப்பமண்டல பனை குடும்பத்தைச் சேர்ந்தது.  பூக்கும் ( angiosperms)  ஒருவித்திலைத் தாவரங்களில்  (இலத்தீன்:Arecaceae) அரக்கேசி என்ற பனைக்குடும்பம் பெரிய குடும்பமாகும். தென்னை 3000 ஆண்டு வரலாறுகளை கொண்டிருக்கின்றது. 

இலங்கை, இந்தியா இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை உலகின் முக்கிய உற்பத்தி நாடுகளாகும். தேங்காய் சாகுபடி 93 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுக்கு 59 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது.

சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 8937 தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேங்காயின் பாரம்பரிய பகுதிகள் தேங்காய் சாகுபடிக்கு பாரம்பரியமற்ற பகுதிகளாக உருவெடுத்துள்ளன.

உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு FAO இன் அறிக்கைகளின் படி, 2018 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 61.9 மில்லியன் டன் தேங்காய்கள் அறுவடைசெய்யப்பட்டன. மொத்தம் 12.4 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்ட இடமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பத்து பெரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் மொத்தம் 89.5% அறுவடையை உற்பத்தி செய்திருக்கின்றார்கள்.  1918 ம் ஆண்டு     தென்னைஉற்பத்தியில் இலங்கை நான்காவது இடத்தில இருந்தது.  

இலங்கையில் ஆண்டுக்கு 2,700 மில்லியனாக உள்ள தேங்காய் உற்பத்தியை 2016-ம் ஆண்டுகளில் 3,650 மில்லியனாக அதிகரிக்கும் இலக்கில் கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

ஆனால் ஏற்கனவே இருந்தததை விட 300 மில்லியன் அளவுக்கு தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருக்கின்றார்.


பொருளாதார முக்கியத்துவம்

வாய்ப்புகளும்,சந்தைப்படுத்தலும் 

விவசாய பொருளாதாரத்தில் தென்னை (Cocosnucifer) குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தென்னை & பனை வெப்பமண்டல கடற்கரைகளில் வசிப்பவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவு மற்றும் மூலப்பொருட்களை வழங்கியுள்ளது: 

தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. இலங்கை, இந்தியா, பர்மா, இந்தோனேசியா மற்றும் பசிபிக் தீவுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் தேங்காய் முக்கிய உணவாகும். 

தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது. தேங்காய் 20 முதல் 30 செ.மீ   சுற்றளவில் 900 முதல் 2500 கிராம் வரை எடை கொண்டது. 

இளநீர்  வளர்ந்து வரும் நாடுகளில்  குடிநீருக்கு ஒரு முக்கியமான மாற்றாகும்,. நீரூற்றுகள் இல்லாத தீவுகளில், திரவத் தேவையை ஈடுகட்ட ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு மூன்று முதல் ஆறு தேங்காய்கள் தேவைப்படுகின்றன.

தேங்காய் எங்கள் தினசரி சமையலில் முக்கிய தேவையாகும். மற்றும் தேங்காய்,

தேங்காய்ப்பால் தேங்காய்ப் பால்மா,தேங்காய்ப்பூ,உலர் தேங்காய்ப்பூ, கருப்பட்டி,கள்ளு,இனிப்புப் பண்டங்கள் என பலவகைகளில் பதப்படுத்தப்பட்டு உள் நாட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 

தென்னை / தேங்காயின் பயன்கள்/ சந்தைப்படுத்தல்

ஒரு தேங்காயினுள் கிடைக்கும் சத்துக்கள்  

• Energie ஆற்றல் 358 கலோரி 

• நீர் 45 கிராம்   

• கொழுப்பு 36 கிராம்

• புரதம் 4 கிராம் 

• சர்க்கரை 4.8 கிராம் 9 கிராம்

• நார்ப்பொருள் 9 g

• பொட்டாசியம் 380 mg

• கல்சியம் 20 mg

• மெக்னீசியம் 39 mg

• வைட்டமின் சி. 2 mg

தென்னை மரம் குடிசைகளுக்கான கட்டுமானப் பொருளாகவும், அதன் இலைகள் கூரையாகவும், வீட்டுச் சுவர்களை நெசவு செய்வதற்கான இழைகள், கூடைகள் , பாய்கள், கயிறுகள்,விளக்குமாறு

விசிறி மற்றும் உலர்ந்த பாகங்கள் எரிபொருளாக பயன்படுகின்றன. 

உதாரணமாக,35 பனை மரங்களைக் கொண்ட 0.2 ஹெக்டேர் தோட்டமானது   ஐந்து குடும்பங்களைக் கொண்ட குடும்பத்திற்கு 2500 முதல் 3600 கிலோ எரிபொருள் (தினசரி தேவை 7-10 கிலோ) பூர்த்தி செய்ய போதுமான உலர்ந்த இலைகள், தென்னம்பாளைகள், மொச்சுகளை வழங்குகிறது. 

பொச்சுமட்டை என அழைக்கப்படும் பொச்சு தேங்காய் மட்டைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தும்பு, கயிற்று தொழிலில் முக்கிய உற்பத்தி பொருளாகும்.

தேங்காய் நார் கழிவு காய்கறி தோட்டங்களுக்க

பயன்படுகிறது. தேங்காய் சிரட்டையில் குடி நீர்கிளாஸ்கள்,

கிண்ணங்கள், குடங்கள், கப், கரண்டி, குவளைகளை தயாரிக்கலாம். சிலைகள் , பொம்மைகள் மற்றும் பைகள் போன்ற கைவினைப்பொருட்களும் செய்யும் கைத்தொழில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். 

தேங்காய் எண்ணெய்

கொப்பரை எனும்  (" காய்ந்த தேங்காய்" )  

தேங்காய்களில்  இருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. கொப்ரா நொறுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு எண்ணெய் ஆலைகளில்  அரைக்கப்படுகின்றது. 6000 தென்னங்காயிலிருந்து ஒரு டன் கொப்பரைத் தேங்காய் பெறப்படுகிறது.

தேங்காய் எண்ணெய், தேங்காய் கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது வெள்ளை நிறத்தில் இருந்து வெள்ளை-மஞ்சள் காய்கறி எண்ணெயாகும், இது அறை வெப்பநிலையில் திடமானது மற்றும் கொப்ராவிலிருந்து பெறப்படுகிறது. இது நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களின் மிக உயர்ந்த விகிதத்தால்

வகைப்படுத்தப்படுகிறது மற்றும் Caprylic, Lauric மற்றும் Myristic அமிலங்கள் நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய்  சமையலுக்கும் பேக்கிங், பொரியல், இனிப்பு, கார சிற்றுண்டிகள், மருந்து மற்றும் சோப்புகள், ஹேர் ஆயில்,அழகுசாதனப்  நோக்கங்களுக்காகவும், Oleochemistry கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. லாரிக் அமிலத்தின் அதிக உள்ளடக்கம் இருப்பதால், தேங்காய் எண்ணெய் Surfactant களுக்கான முக்கியமான மூலப்பொருளாகும். தேங்காய் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருட்களின் Biofuel (குறிப்பாக பயோடீசல்) உற்பத்தியும் சாத்தியமாகும்.

உலகளவில் நுகரப்படும் தாவர எண்ணெயில் எட்டு சதவீதம் தேங்காய் எண்ணெய். முக்கிய தயாரிப்பாளர்கள் நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, கொப்ராவை ஒரு மூலப்பொருளாக இறக்குமதி செய்கிறார்கள். அமெரிக்கா தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்கிறது.


தேங்காய் பயிர்செய்கைக்கான நோக்கம் மற்றும் அதன் தேசிய முக்கியத்துவம்

இலங்கையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெரும் பற்றாக்குறைக்குக் காரணம்.  தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்குத் தேங்காயின் தேவை அதிகரித்திருப்பதே.

இலங்கையில் உள் நாட்டு தேவைக்கே 70 கோடி தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்று  தேங்காய், பனை மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்துறையின் அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ 18.9.2020 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார் . 

இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கையில் தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றின் உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக வருமானத்தினை ஈட்டிய போதிலும் தற்போது இயற்கை அழிவுகளின் காரணமாக தென்னை பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மக்களின் நாளந்த பாவனையில் அதிகரித்து காணப்படும் தெங்கு உற்பத்திகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு நமது நாடு இன்று உள்ளது.

தென்னை மரங்கள் மக்கள் தேவைக்கு வெட்டி அழிக்கப்பட்டு வருவதும், வீடு போன்ற தேவைகளுக்காக அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு காணிகள் குடியேற்ற காணிகளாக மாறி வருகின்றமையாலும் பல மாவட்டங்களிலும் தென்னை பயிர்செய்கை அழிந்து போகும் நிலை காணப்படுகின்றது. 

இலங்கையில் கடந்த ஆண்டில் நிலவிய வறட்சி காரணமாகவும் தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாலுமே தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதன் யின் மூலம் நாட்டின்  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் மாகாணமாக மாற்றியமைக்க வேண்டும்.  

ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை  பெற்றுத்தரும் தெங்கு பயிர்ச்செய்கையை எமது பிரதேசத்தில் உற்பத்தி செய்து தெங்கு உற்பத்தியில் அதிக இலபத்தினை பெறக்கூடிய முதன்மை மாவட்டமாக எமது மாவட்டம் மாற்றமடைய வேண்டும். 

நாட்டினுள் தேங்காய் எண்ணெய்க்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. கேள்விக்கு ஏற்ற வகையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் தொடர்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.

தென்னை மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். தென்னை செய்கையினை ஆரம்பித்து அதனை விஸ்தரிக்க வேண்டும். மரங்களை வெட்டுவது தொடர்பான சட்டத்தில் தென்னை மரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


          வேளாண் மேலாண்மை 

        விதை ,நாற்று, மண் காலநிலை  

நல்ல நீர்பாய்ச்சல் வசதியுள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் தென்னை நடவு செய்யலாம். மார்கழி, தை, ஆனி, ஆடி மாதங்கள்,தென்மேற்கு அல்லது வடகிழக்குப் பருவ மழை ஆரம்பமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தென்னங்கன்றுகளை நட வேண்டும். கோடை காலத்தில் நடவு செய்யக்கூடாது.

தென்னை ஒரு வெப்பமண்டல தாவரமாகும்.

தென்னை மரத்திற்கு எப்போதும் அதிக அளவு சூரிய ஓளி தேவை. நிழலான பகுதிகளிலும்,மேக மூட்டமான பகுதிகளிலும் தென்னை நன்றாக வளருவதில்லை.மேகமுட்டமானது நீர் மற்றும் ஊட்டச்சத்துக் கடத்துதலைக் தடைசெய்கின்றது.

அதிகபட்ச அறுவடைக்கான  சராசரியாக ஆண்டு வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும். கூடுதலாக, குளிரான மாதத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி

செல்சியஸுக்கு  குறைவாக இருக்கக்கூடாது. வருடத்திற்கு 1000 முதல் 3000 மி.மீ வரை மழைவீழ்ச்சி மதிப்புள்ள பகுதிகளில் தேங்காய் & பனை நன்கு வளர்கிறது. இருப்பினும், சுமார் 1200 முதல் 2300 மி.மீ. மழைப்பொழிவின் சமமான விநியோகம் சரியான வளர்ச்சி மற்றும் அதிக அறுவடைக்கு சாதகமானது. 

சராசரி ஈரப்பத அளவு 80-95%  (60 %

குறையாமல் இருத்தல் அவசியம்). அதிக ஈரப்பதம், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை அதிகரிப்பதோடு மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து எடுப்பதையும் குறைக்கிறது.

மண் மேலாண்மை

வடிகால் வசதியுடைய மணல் கலந்த வண்டல் மண், மணற்பாங்கான பகுதிகள், கரிசல்மண் பகுதிகள் ஆகியவை தென்னை நடவு செய்ய ஏற்ற நிலம். மண்ணின் அமில காரநிலை 5.5 முதல் 7.0 வரை இருப்பது சிறந்தது. கன்றுகள் 4.5 முதல் 8.5 வரை தாங்கும் திறனுடையவை.தேங்காய் சாகுபடிக்கு குறைந்தபட்சம் 1.2 மீ ஆழம் மற்றும் நல்ல நீர் வைத்திருக்கும் திறன் கொண்ட மண் விரும்பப்படுகிறது. மணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது.

கடினமான பாறை கொண்ட ஆழமற்ற மண், நீர் தேக்க நிலைக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகள் மற்றும் களிமண் மண் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

நிலம் மேலாண்மை

நிலத்தை நன்கு உழுது சமப்படுத்தி நடவு செய்யும் ரகத்திற்கேற்றவாறு இடைவெளி விட்டு தென்னங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

•லேட்டரைட் மண்ணில் 1.2 மீ x 1.2 மீ x 1.2 மீ அளவுள்ள பெரிய குழிகளை தோண்டி, நடவு செய்வதற்கு முன் தளர்வான மண், தூள் மாட்டு சாணம் மற்றும் சாம்பல் 60 செ.மீ ஆழம் வரை நிரப்ப வேண்டும்.

•களிமண் மண்ணில் 1 மீ x 1 மீ x 1 மீ அளவுள்ள குழிகள் மேல் மண்ணால் நிரப்பப்பட்டு 50 செ.மீ உயரம் வரை பரிந்துரைக்கப்படுகிறது. குழிகளை நிரப்பும்போது தேங்காய் உமியின் இரண்டு அடுக்குகளை குழியின் அடிப்பகுதியில் குழிவான முறையில் அமைக்க வேண்டும் 

தேங்காய் உமியின் இரண்டு அடுக்குகளை குழியின் அடிப்பகுதியில் ஈரப்பதம் பாதுகாப்பதற்காக குழிவான மேற்பரப்பு மேல்நோக்கி எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் ஏற்பாடு செய்தபின், பி.எச்.சி 10% டி.பியை நீரில் தெளிக்க வேண்டும்.

7.5 மீ x 7.5 மீ இடைவெளியுடன் நடவு செய்வதற்கான பொதுவான சதுர அமைப்பில் ஒரு ஏக்கருக்கு 64 நாற்றுகள் நட முடியும்.இருப்பினும் நாட்டின் பல்வேறு தென்னை வளரும் பகுதிகளில் 7.5 முதல் 10 மீ இடைவெளி நடைமுறையில் உள்ளது.

நாற்றங்கால் மேலாண்மை

தென்னையின் கன்றுகளில் வீரியத்தன்மை, தாய்தென்னையின் விரைவில் பூக்கும் தன்மை, அறுவடை மற்றும் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது. தென்னை கலப்பு மகரந்த சேர்க்கையின் காரணமாக தாய்த் 

தென்னையை போல் இருப்பதில்லை. ஆகையால் வெவ்வேறு நிலைகளில் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளை பெற முடியும்.

வீடு, மாட்டுத் தொழுவம், மாட்டு எருக்குழிகள் அருகில் உள்ள மரங்களில் நாற்றுகள் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதாகும் குறைந்தபட்சம் ஆறு இலைகள் மற்றும் காலர் 10 செ.மீ சுற்றளவு கொண்ட வீரியமுள்ள நாற்றுகள் பிரதான வயலில் நடவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாற்றுகளில் இலைகளை முன்கூட்டியே பிரிப்பது நல்ல நாற்றுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலாக இருக்கலாம். இருப்பினும் 18 - 24 மாத வயதுடைய நாற்றுகள் நீர் வெளியேற்றப்பட்ட இடங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய மழையின் துவக்கத்துடன் மே மாதத்தில் நாற்றுகளை நடவு செய்வது சிறந்தது.

நாற்றங்காலில் இருந்த கன்றுகளை பெயர்த்தெடுக்கும்போது வேர்கள் அறுபடாமலும் வடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.கன்றுகளை நாற்றங்காலில் இருந்து பெயர்த்தெடுத்தவுடன் வாடுமுன் கன்றுகளை நட்டுவிட வேண்டும்.

தென்னை ரகங்கள் தெரிவு செய்தல்:

தென்னையில் குட்டை ரகம், நெட்டை ரகம், ஒட்டு ரகம் மற்றும் செவ்விளநீர் இரகங்கள் இருக்கிறது. 

குட்டை ரகம் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நான்கு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 25 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். 

தென்னை நெட்டை ரகம் சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. 5ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 60 -75 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.  

தென்னையில் ஒட்டு வகை சுமார் 10 - 14 மீ;ட்டர் உயரம் வளரக் கூடியது. 4 ஆண்டுகளில் பலனுக்கு வந்து 40 ஆண்டுகள் வரை காய்க்கக் கூடியது.

உரம் மேலாண்மை

விளை பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும் உரங்கள். நல்ல விதையின்றி விளைச்சல் இல்லை. உரமின்றி உற்பத்தி இல்லை 

தேங்காய் தோட்டத்தின் பராமரிப்பு

நல்ல தாவர வளர்ச்சி,ஆரம்ப பூக்கும் மற்றும் தாங்கி மற்றும் அதிக மகசூலை உறுதி செய்ய நடவு செய்த முதல் ஆண்டிலிருந்து வழக்கமான உரமிடுதல் அவசியம். மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் ஆண்டுக்கு ஒரு தென்னைக்கு  30 கிலோ என்ற விகிதத்தில் கரிம உரம் பயன் படுத்தப்படலாம்.

வேதியியல் உரங்களின் முதல் பயன்பாடு 

நடவு செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு செய்யப்பட வேண்டும். பண்ணை உரம், பொன்மீல், மீன் உணவு, வேப்பம் கேக், நிலக்கடலை கேக், இஞ்சி கேக் போன்ற பல்வேறு வகையான கரிம உரங்களை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தலாம். 

பசுமை உரம் பயிர்களான சன்ஹெம்ப், கிளைரிசிடியா, தைஞ்சா போன்றவை இணைக்கவும். இடை பயிர்களாக வளர்க்கப்படலாம். லேட்டரிடிக் மற்றும் அமில மண்ணில் பாஸ்பரஸின் மூலமாக ராக் பாஸ்பேட் பரிந்துரைக்கப்படுகிறது. 

மே-ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மழைக்கால நாற்றுகளுக்கு உரங்கள் இரண்டு பிளவு அளவுகளிலும், அதிக மழைக்காலத்தைத் தவிர்ப்பதற்காக நீர்ப்பாசன நாற்றுகளுக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சம பிளவுகளிலும் பயன்படுத்தலாம். அமில தன்மை கொண்ட மணல் மண்ணில், இந்த உரங்களுக்கு கூடுதலாக 1 கிலோ டோலமைட் ஏப்ரல்-மே மாதங்களில் படுகைகளில்   மற்றும் முட்கரண்டி மூலம் மண்ணில் கலந்து விட வேண்டும். 

நீர்ப்பாசனம்

கோடை நீர்ப்பாசனத்திற்கு தேங்காய் நன்றாக விளைகின்றது. அதாவது கோடை நீர்ப்பாசனம்  வாரத்திற்கு ஒரு   தடவை 40 லிட்டர் தேங்காய்களின் விளைச்சலை 50% அதிகரிக்கும். 

பேசின் பாசனத்தின் கீழ்நான்கு நாட்களுக்கு ஒரு தென்னைக்கு 200 லிட்டர் நீர் விட வேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசன முறையை பின்பற்ற வேண்டும். தென்னைக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நீரின் அளவு திறந்த பான் ஆவியாதலில் 66 சதவீதம் ஆகும்.

தென்னை சார்ந்த ஊடு பயிர் முறைகள்

தென்னை தோட்டத்தில் மண் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதை அதிகரிக்க, 8-10 ஆண்டுகள் வரை அன்னாசிப்பழம், வாழைப்பழம், நிலக்கடலை, மிளகாய், வத்தாளை, மரவள்ளிக்கிழங்கு போன்ற பல்வேறு பயிர்களைக் கொண்டு இடைப் பயிர் செய்ய முடியும்.  

நாற்றுகள் 10-22 வயதில், நிழலை பொறுத்துக்கொள்ளக்கூடிய பயிர் பயிரிடப்படலாம். பழைய தோட்டங்களில், கோகோ, மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் போன்ற வற்றாத பழங்களை பயிர்களுடன் கலப்பு பயிர்களாக வளர்க்கலாம். தென்னை தோட்டத்தில் பருப்பு தீவனப் பயிர்களுடன் கலப்பின நேப்பியர் அல்லது கினியா புல் போன்ற தீவன புற்களை வளர்ப்பதன் மூலம் கலப்பு விவசாயம் லாபகரமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது பால் தரும் கால் நடைகளை வளர்ப்பதற்கு உதவும்.

வளர் இயல்பு மேலாண்மை, சிக்கல்கள் 

தென்னையில்  மலரும் தென்னம் பூ தேங்காயாக உருவாவதற்கு 44 மாதங்களாகும். நான்கு வருடங்கள் அதற்குத் தேவையாக உள்ளது. குறைந்த  மழைவீழ்ச்சி  காரணமாக குரும்பைகள் உருவாகும் போது தென்னைக்கு பாரிய நீர்ப்பற்றாக்குறை  ஏற்படுமானால். அந்தக் குரும்பைகள்  குறைந்தளவிலான அறுவடையே  தரும். ஆதலால் நீர் விநியோகம் தொடர்பில்   தனிக்கவனமெடுக்க வேண்டும்.   

அறுவடை

தேங்காய்கள் ஒரு வருடத்தில் மாறுபட்ட இடைவெளியில் அறுவடை செய்யப்படுகின்றன. மரங்களின் விளைச்சலைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகளில் அறுவடை வேறுபடுகிறது. நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் அதிக மகசூல் தரும் தோட்டங்களில், கொத்துக்கள் தவறாமல் உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது.

ஸ்பேட் திறந்த 12 மாதங்களில் தேங்காய்கள் முதிர்ச்சியடைகின்றன.இது தென்னை உற்பத்தியில் மூலமாக இருக்கும் முற்றிய  தேங்காய் ஆகும். பதினொரு மாத வயதுடைய தேங்காய்கள் நல்ல தரமான ஃபைபரைக் கொடுக்கும் மற்றும் கொயர் ஃபைபர் உற்பத்திக்கு பச்சை உமி தேவைப்படும் பகுதிகளில் அறுவடை செய்யலாம். தென்னை சுமார் 60 ஆண்டுகள் காய்க்கும்.

தென்னை  பயிர்ச்செய்கை யின் குறிக்கோள்கள்:

•தரமான தாய்த் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல்

•தென்னை உற்பத்தியை அதிகரித்தல்

•ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு

•தென்னை சார்ந்த தொழில்களை வளப்படுத்துவது


 ஒருங்கிணைந்த பண்ணை

கால் நடைகள் வளர்ப்பு மற்றும் ஊடுபயிர்செய்கைகள 

வேளாண் துறைக்குள் நுழையும் ஒருவர்   உள் நாட்டு வெளிநாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பு  அதிகமிருக்கும் தென்னை, பனை, இறப்பர், கித்துள் மற்றும் கமுகு  போன்ற  பயிர்களை  நட்டு அது வளர்ந்து காய்த்து பலன் தர எடுத்து கொள்ளும் கால இடைவெளிகளில் அன்றாட உணவு மற்றும்  இதர தேவைகளுக்கான செலவுகளை எப்படி நிறைவு செய்ய முடியும்?    

ஒருங்கிணைந்த பண்ணையம்

கால் நடைகள் வளர்த்தல் மற்றும் ஊடுபயிர்செய்கைகள மூலம் வருடம் முழுதும் தற்சார்பு பொருளாதாரத்தில் வெற்றி பெறலாம். 

பண்ணையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும் வகையில், தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்  

“விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

உலகில் மாறி வரும காலநிலைகளை    வருடம் தோறும் பயன் தர  கூடியதுமான  வேளாண் சார் கூட்டுப்பண்ணை  முயற்சிகள் மூலம்  கால் நடைகள் வளர்ப்பு மற்றும் ஊடுபயிர்கள் உற்பத்தியிலும் குறைந்த இடத்தில் பல விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து அதில் அதிக வருமானம் பெற வழி வகை செய்யும் முறையாகும்.

ஊடுபயிர் செய்கை முறையானது 

அப்பயிர்களுக்குத் தேவையான  கால நிலைகள், நீர்ப்பாசன வசதி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து செய்யப்படுகிறது. தென்னை மரங்களின் மேல்கட்டு அமைப்பின் பருமன், தென்னை மரங்களின் வயது மற்றும் தென்னை மரங்களுக்கிடையேயுள்ள இடைவெளி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வியாபாரத் தேவைக்கேற்ப ஊடுபயிர்களை தேர்வு செய்ய வேண்டும். 7.6 மீட்டர் இடைவெளியில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ள தோப்புகளே ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றதாகும்.

ஒருங்கிணைந்தபண்ணையம் என்பது குறுகிய காலப்பயிர்,மத்தியக்காலப்பயிர், மற்றும் நீண்டகால வருமானம் தரும் பயிர்களைக்கொண்டிருக்கும். அதோடு அந்தப்பயிர்களை ஊடுபயிராகக்கொண்டு  ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் போன்ற வருமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளவற்றையும் செய்யலாம்.இந்த நிலத்தில் மூலம் கிடைக்கும் கழிவுகளை ஒருங்கிணைத்து ஒன்றுக்கொன்று பயன்படுத்துவது சிறந்த உர மேலாண்மையாகும்.

உதாரணமாக ஒரு ஏக்கருக்கு  64 தென்னை நாற்றுகளை நடவு செய்து அதன் அறுவடைக்காலம் வரையான  பொருளாதார தேவைகளை சமாளிக்க  தென்னையின் ஊடே கால்நடைகளுக்குத் தேவையான பயிர்களை பயிர் செய்து கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடலாம். கால்நடைகளில் இருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு மேலும் சக்தியை கொடுக்கும்.

தென்னையின் ஊடே தீவனப்பயிர்களை வளர்த்து அதைக்கொண்டு ஆடு, மாடு , கோழி வளர்த்தால்  அதன் பால், முட்டை, இறைச்சி என தொடர்ந்த வருமானம் தரும். அதுமட்டுமல்லாமல் கால்நடைகளின் குட்டிகள் மூலம் வருமானம் கிடைக்கும்.

     ஒருங்கிணைந்த பண்ணை- “

தென்னை ஆடு, கோழி,  மீன் மற்றும் குறுகியகால  ஊடுபயிர்கள 

 எமது „ ————— “ திட்டத்தின் தேவைப்படும் நிலப்பரப்பு   ஆறு  ஏக்கர் நிலத்தில் நான்கு ஏக்கரில் தென்னை பயிர்செய்கையும் ( ஏக்கருக்கு 64  நாற்றுகள் வீதம் மொத்தம் 250 நாற்றுக்கள் நடவேண்டும். இதற்கான  நாற்றுகளை நல்ல தேங்காய்களை ஒன்று 60 ரூபாய்க்கு  வாங்கி  முளைக்கும் படி போட்டு உற்பத்தி செய்து கொள்வேன்.  

விவசாய தினைக்களத்தினால் தேர்வுசெய்யப்பட்ட தென்னை நாற்றுகளை நான்கு ஏக்கர் பரப்பளவில்  விவசாய தினைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளிகளில் சீராக நடுகை செய்தல். தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்ட பின்னர் ஊடு பயிர்களாக காலநிலைக்கு ஏற்ற சிறு தானியங்கள் பயிரிட வேண்டும். .

தென்னந்தோப்பில்  பரண் அமைத்து ஆடு, கோழிகளை வளர்த்து அதன் கழிவுகளை அதன் கீழே மீன் குளத்தில் விழும்படி செய்யும்போது அதன் கழிவுகள் மீன்களுக்கு உணவாக கொடுக்க முடியும். .மீன் வளர்கும் தண்ணீர் தென்னைக்கு உரமாகும். 

தென்னை நடவு செய்து அறுவடைக்கு வரும் முதல் ஐந்து தொடக்கம் ஏழு வருடங்களுக்கும் எமது  தேவைகளை.பூர்த்தி செய்து கொள்ள ஊடுபயிராக வெங்காயம், மஞ்சள், எள்ளு, உழுந்து பயறு.எள்ளு  போன்ற குறுகிய கால பயிர்களை  விதைத்து உற்பத்தி செய்து கொள்வேன். 

• தை தொடக்கம் சித்திரை மாதம் வரைக்கும் எள்ளு பயிரிடல்  

• சித்திரை தொடக்கம் ஆடி மாதம் வரை உழுந்து பயறு போன்ற தானியங்களை பயிரிடல் 

• ஐப்பசி தொடக்கம் தை மாதம் வரை சின்ன வெங்காயம் பயிரிடல்.

• மேலும் கால் நடைகளுக்காகவும் மண் வளத்தை மேம்படுத்தவும் கிளிசரியா  (சீமைக்கிழுவை) நடுகை செய்தல்.

• அத்துடன் காணியின் நான்கு பக்க எல்லைகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் பனை மரங்களும் சவுக்கு மரங்களும் நடுகை செய்ய வேண்டும். .

• இட வசதிக்கேற்ப பயந்தரு மரங்களான மா மரம். மாதுளை, எலுமிச்சை போன்ற மரங்களை நடுகை  செய்ய வேண்டும். 

மேலும் ஒரு வருடம் தாவரங்கள் நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைகிழங்கு, இஞ்சி ஈராண்டுத் தாவரங்கள்

பூவன் மற்றும் மொந்தன் வாழை இரகங்கள்

பல்லாண்டுத் தாவரங்கள் கொக்கோ, மிளகும். சிறு பகுதி ஒதுக்கி  நடவு செய்யும் திட்டமும் இருக்கின்றது. 

நிலத்தின் மண் வளத்துக்கு ஏற்றபடி ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு, தனித்தனியாக உரமளிப்பதன் மூலம் அதிக அறுவடையை பெற முடியும். 


ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள்

பண்ணை உற்பத்தி வருவாய் கூடும். பண்ணைக் கழிவுகளைச் சிறந்த முறையில் மறு சுழற்சி செய்வதால், உற்பத்தித் திறனும் மண்வளமும் கூடும். உற்பத்திச் செலவு குறையும். முட்டை, பால், மீன், காய்கறி உற்பத்தியால் நிலையான தொடர் வருமானம் கிடைக்கும். தீவனப் பயிர் அறுவடை யால் கால்நடைகளுக்குச் சத்தான தீவனம் கிடைக்கும். சிறு குறு விவசாயக் குடும்பங்களுக்குத் தொடர் வேலைவாய்ப்புக் கிடைக்கும்''  .


நீர் மேலாண்மை 

நீர் வளங்களை  பாதுகாத்தல்  

ஒரு நாட்டின் வளம் பெருக, ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியமானவை.. மழைநீர் குடி நீராகவும், பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவும்.

நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் என்றால் சாதாரண மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீர் என்று வார்த்தையிலிருந்தே புரிகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது என்பது பாலபாடம். பாறைகள் பல அடுக்குகளாக இருக்கும். மேல் மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து கீழே சென்று அதற்கடுத்த மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும் சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர் பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர், நிலமட்டத்தின் சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும்/ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு “நிலத்தடி நீரோட்டம்” என்று பெயர்.

நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், தீர்வுகள் 

சிக்கல்கள்

விவசாயம் நலிவுறும். 

குடிநீருக்கும் சமையலுக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டும்.  

கிணற்றுப்பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். விவசாயம் நலிவுற்றால் அன்றாட உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளினால் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து உணவு தேவையை பூர்த்தி செய்யும் படி நாட்டில் பொருளாதாரம் ஸ்திரமாக இல்லை.  

360 கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை, வெறும் 300 ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்துவிட்டார்கள். மழை நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டிருக்கிறது.

தீர்வுகள் 

குடிநீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே, பயனற்று இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உயிர்ப் பித்துப் பெருமளவு தண்ணீரைப் பெறமுடியும். இதுபோல் வறண் டிருக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம். சாக்கடை கழிவு நீரை அப்படியே நிலத்தில் 20 அடிக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டால் போதும். மண் அடுக்குகளே அதைச் சுத்திகரித்துவிடும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பு

இலங்கையில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை உள்ளது.இதனால் கிடைக்கும் மழையை நிலத்தடியில் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.

புதிய முறை

கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள், பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள்  வந்திருக்கின்றன. விவசாயத்துக்கு 

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் பயன் படுத்தலாம்.

நிலம் கட்டாந்தரையாக இருந்தால் விழும் மழைநீர் முழுவதும் பள்ளத்தை நோக்கி வழிந்து ஓடி வீணாகி விடுகின்றது. இப்படி ஓடும் நீர் எல்லாம் சேர்ந்துதான் ஆறுகளை வெள்ளக்காடாய் மாற்றுகிறது. ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகமான நீர் ஓடும்போது அதைக்கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் அணை கட்ட முடிவதில்லை.

நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை. ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.

நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல்

சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.

இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் (Contour bunds) அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச்செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.

வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல்.

இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதே, நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம், இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால், மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.

தடுப்பணைகள் கட்டுதல்

எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும்.

மழைநீர் சேகரித்தல்

மழைநீர் சேகரித்தல் பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன. அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த நீரைச்சேகரித்து குடிப்பதற்காக பதனப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத் தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு.

நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்  அறிந்து கொண்டு ஒவ்வொரு தனி மனிதரும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.  

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்தும் அறிந்து அதை கடைபிடிக்க வேண்டும். 

நீர்வள மேலாண்மை தொடர்பான சிக்கல்கள், சவால்கள், முக்கிய முன்முயற்சிகள் உதாரணமாக 

மழைக்காலத்தில் வெள்ளம்  தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்குவதையே வெள்ளம் என்கிறோம்.

நீர் சேமிக்க உதவும் பூசா ஹைட்ரோஜெல் புதிய பயிர்ச்செய்கை முறைகள் அறிந்து அதற்கு ஏற்ற ஏற்பாடுகளை திட்டமிட வேண்டும். 

     “நீரின்றி அமையாது உலகு”

வேளாண்மையும் சுற்றுச்சூழலும் அதன். சவால்களும் சிக்கல்களும் 

வேளாண் துறையில் நீண்ட காலம் நிலைத்து வெற்றி பெற தேவையானவை .  

நிலம் , நீர் ,காற்று, நெருப்பு மனிதரால் கட்டுப்படுத்த முடியாத இயற்கையின் சக்திகள். இயற்கையோடு இணைந்து இயற்கை வளங்களை பாதுகாத்து அதனுடாக மனிதர்களின் தற்சார்பு வாழ்க்கை வெற்றி கொள்ளப்பட வேண்டும். 

நில எழிலூட்டுதல் 

மரங்களை,பயிர்களை நடவு செய்யும் முன்  

தோட்டக்கலை துறையின் செயல்பாடுகளில் ஒரு அங்கமான நில எழிலூட்டுதல் மற்றும் சுத்தமாக பராமரிப்பதும் முக்கியமானது.   

தட்ப-வெப்ப காலநிலைகளுக்கு ஏற்ற பயிர்களை  நடவு செய்து  அதிக உற்பத்தியை  பெறுதல் 

பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள், அரசின் விவசாய துறை அதிகாரிகளினுடான ஆலோசனைகளை பெற்று அல்லது அவர்களுக்கு அறிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

பருவ நிலை மாற்றத்தின் தாக்கமும் நீடித்த வேளாண்மை குறித்தும் கவனமெடுக்க வேண்டும்.   

சோலைக்காடுகள் பாலைவனமாக மாறுவதை பற்றிய அறிவு 

கந்தகம் 

கரையான்கள் 

மண்ணின் நுண்ணுயிர்கள் 

பயனளிக்கும் பூஞ்சாளங்கள் 

வேர்ப்பூஞ்சைகள் 

வேளாண்மையில் சுற்றுப்புறச்சூழல் அறிவியலின் முக்கியத்துவம் 

வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பயன்கள் 

பல்வேறு வகையான மரங்கள் மற்றும் அதன் பயன்களும் விவசாயத்தில் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள்.

வேளாண் சார்ந்த கூட்டுப்பண்ணை  தீவனங்கள் மற்றும் உரங்களுக்கான  மேலாண்மை 

வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்  அதன் அடிப்படை ஆதாரங்களான  நாற்றுகள், விதைகள்  தேர்ந்து எடுப்பதிலும், ஒவ்வொரு பருவக்காலத்திலும். பயன் படுத்த வேண்டிய உரங்கள், பாதுகாப்பு முறை, நோய்கள் அதை எதிர்கொள்ளும் மருத்துவம், கால் கடைகளுக்கு  தேவையான தீவனங்கள் குறித்தும்  அவைகளை சுயமாக உருவாக்கி ஒன்றொரு ஒன்று தொடர்பு கொண்ட அடிப்படை ஆதாரங்களை அறிந்து இருக்க வேண்டும். 

பூச்சி மற்றும் நோய் தாக்கம்

தென்னை மரங்களில் எரிப்பூச்சிகள், கருந்தலைப் புழுக்கள், செம்பான் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் தாக்குதல்   ( தனி இணைப்பு உண்டு) 

தென்னந்தோப்புகளைச் சரிவரப் பராமரிக்காமல்,உர நிர்வாகம், பூச்சி நோய் நிர்வாகம் மேற்கொள்ளாமல், சரியான முறையில் வடிகால் வசதி செய்யாமல், உழவு சார்ந்த நடை முறைகளைக் கடைப் டிக்காமல்  இருந்தால்  வாடல் நோய் எனும்  பென்சில் பாயிண்ட் நோய் தாக்குதல் வரும் . இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சி குன்றியும், ஓலைகளின் அளவு சிறுத்தும், மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்தும் விடுகின்றன. விளைச்சல் 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு, மரத்தின் உச்சிப் பகுதி குறைந்துவிடுகிறது. இதனால், காய்க்கும் திறன் வெகுவாகக் குறைந்து இறுதியில் மரங்கள் காய்ந்தேவிடுகின்றன.

தடுக்கும் முறைகள்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து, மடக்கி உழவு செய்ய வேண்டும்.

ஒரு மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5 கிலோ மண்புழு உரம் இட வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ பொட்டாஷ் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.

ஹெக்சா கோணோசோல் ஒரு மில்லி அல்லது ஆரியோபஞ்சின் 2 கிராம் மற்றும் மயில்துத்தம் ஒரு கிராம் – இதில் ஏதாவது ஒன்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும்.

தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

"பைட்டோப்தோரா பால்மிவோரா' என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. 

•இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை பாதிக்கப்படும்.

•அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலையில் பூசணம் வேகமாக வளர்ச்சி அடையும்.

•நோய் பாதித்த தென்னையின் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறிவிடும். குருத்தின் அடிப்பாகம் பலம் இழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீசும். பாதிக்கப்பட்ட இளம் குருத்தை இழுத்தால் கையோடு எளிதில் வந்துவிடும்.

•அறிகுறி கண்டவுடன் பாதிக்கப்பட்ட குருத்து பகுதிகளை வெட்டி எடுத்து எரித்துவிட வேண்டும்.

•பின் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்டோ பசையை தடவினால் பூசணம் அழியத்துவங்கும்.

•மேலும் இலைகளில் ஒரு சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். 

•காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 3 கிராம் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.

•தொழு உரம் 50 கிலோவுடன் வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 200 கிராம் கலந்து மரத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை இட்டால் நோய் கட்டுப்படும்

தென்னை மரம்

தென்னை சாகுபடியில், மரங்களை தாக்கும் நோய்கள் பரவலாக காணப்படும் சருகு நோய் எனப்படும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த,நோய் தாக்கப்பட்ட மரங்களுக்கு, காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது டைட்டலான் 2 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 1 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும்..

பொட்டாஷ் உரத்தை 3.5 கிலோ என்ற அளவிலும் அல்லது வேப்பம்புண்ணாக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ என்ற அளவில் இரண்டு முறை பிரித்தளிக்க வேண்டும். அதனுடன் தொழு உரம் 5 கிலோவும் இட வேண்டும்.தஞ்சாவூர் வாடல் நோய்க்கு, பெவிஸ்வின் 2 கிராம் மருந்தை, 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாத இடைவெளியில், வேர் மூலம் அளிக்க வேண்டும். வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, தொழு உரம் 50 கிலோ, சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் 200 கி ஆகியவற்றை கலந்து 6 மாதங்களுக்கு, ஒரு முறை அளிக்க வேண்டும். கோழி எரு மற்றும் மீன் உரங்களை நன்கு மக்க வைத்து மரங்களுக்கு அளிக்க வேண்டும். நுண்ணூட்ட சத்துகள் குறைபாட்டிற்கு, பரிந்துரை அடிப்படையில், உரமிடல் வேண்டும்.

நாட்டுக்கோழி @ கோழிக்குஞ்சு தீவனம் 

•அசோலா பாசி வளர்ப்பு ( தனி இணைப்பு உண்டு) 

•எண்ணெய் நீக்கப்பட்ட சால்விதைத்தூள்

சால் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில் பயன்படுத்த வேண்டும்.

•மரவள்ளித்தூள்

இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.

•உலர்த்திய கோழிக்கழிவுகள்

கலப்படமற்ற கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் 10-12 சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம் செய்யப்பட்டால் தீவனக் கலவையில் 10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

•கரும்புச்சக்கை

தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது.

•சிறுதானியங்கள்

சாமை, பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். ராகி, கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஆடு, மாடுகள் வளர்ப்பில் தீவனப்பயிராக 

•பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

• கோ 9 தட்டப்பயறுஅதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து. 

•  மக்காச்சோளம் தீவனம்

• தீவனப்பயிர்களின் தன்மையும் பதப்படுத்தலும்

• பசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்

• பால் உற்பத்தியைப் பெருக்கும் பசுந்தீவனச் சோளம் வேலி மசால் தீவன பயிர்  

• வறட்சியிலும் வரம் தரும்  ஹைட்ரோபோனிக்’ தீவனம் 

•மண் புழு உரம் 

•இயற்கையான  மண்  பாதுகாப்பு முறைகள் 

உரங்கள் இரண்டு வகைப்படும். அவை, உயிர்பொருள் உரம் மற்றும் உயிர்பொருள் சார்பில்லாத உரம். வேதியியல் பொருள் கலந்த உரங்களை அதிகம் பயன்படுத்தியதால் கலப்படமற்ற மாட்டுப்பாலிலும், உன்னதமான தாய்ப்பாலிலும் வேதியியல் பொருள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் உயிர் உரங்களின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.


 வேளாண் சார்ந்த துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும், தேவைகளும், 

உலகில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு இருப்பதுடன், விளைநிலங்களின் சராசரி அளவானது ஒரு எக்டருக்கும் கீழ் குறைந்து கொண்டு வருகிறது. இத்தகைய கால கட்டத்தில், விவசாயமானது அதிக வருமானம் தரவல்ல தொழிலாக இல்லாமலிருக்கின்ற காரணத்தினால், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உற்பத்தித் திறனில் எந்தவித மாற்றமும் இன்றி இருப்பது மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களினால் விவசாயத்தை ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. 

இன்றைய விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள்:

பருவ நிலைகளில் மாற்றம், காலம் தவறி பெய்யும் மழை, குறைவான மழை அளவு, பெய்யும் மழையை சேமிக்க போதுமான வசதியை ஏற்படுத்தாமலிருப்பது, விளையும் பொருட்களுக்கான நியாயமான விலை கிடைக்காதது, விவசாய விளை பொருட்களின் விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களினால் நிலையான வருமானத்தைத் பெற முடியாமல் இருக்கின்றது. 

விவசாயத்தில் உள்ள இடர்பாடு, நிச்சயமற்ற தன்மை,விவசாயம் நல்ல வருமானம் தரும் தொழிலாக இல்லாமலிருப்பது, விவசாயக் கூலிகள் தட்டுப்பாடு  தொழில் வளர்ச்சியில் ,குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது,போன்ற காரணங்கள் வேளாண் இளைஞர்களை விவசாயத்தை தொடரவிடாமல் தடுக்கும் காரணிகளாகும். 

முயற்சிகள் தீர்வுகள்:

அனைத்து விவசாய விளை பொருட்களுக்கான சந்தைவழி முறைகளை ஏற்படுத்துதல், விளைபொருட்களைப் பதப்படுத்தி, பாதுகாப்பதுடன் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களாக மாற்றுவதற்கான வசதிகள்  பிரதேசங்கள் தோறும் விவசாய அபிவிடுத்தி அமைப்புகளினுடாகவும்  பிற வேளாண் சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல் மூலமாகவும்  ஏற்பாடு  செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு அரசின் ஊக்குவிப்புகள்: தேவைகள்

விவசாயத்தில் ஆர்வமிருந்தாலும் குடியிருப்பிலிருந்து தொலைவாக செல்ல தயக்கத்தில் இருப்பவர்களுக்கு  அடுக்குமாடி  குடியிருப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல், ஓய்வு நேர பொழுது போக்கு வசதிகள், சிற்றுண்டி சாலை அமைவுகள் அவசியமாகின்றன.    

அக்குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் முதலியவற்றை விவசாயிகள்ப் கூட்டுறவுப்ப ண்ணையிலிருந்தே    போதுமான அளவில் உற்பத்தி செய்து நேரடியாகவே அவர்களது பகுதிகளில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யலாம். 

நிலையான வருமானம்: 

அனைத்துப் பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத்திட்டம், பயிர்க் காப்பீட்டு அலுவலகங்களை அனைத்து மாவட்டங்களிலும் திறப்பது

இயற்கை பேரழிவின் போது போதிய ஆலோசனை வழிநடத்தல் முயற்சிகள், அணுகுமுறைகள்  தேவை.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தேவைகள்

விவசாயிகளுக்கு வேளாண் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் ஆலோசனை பயிற்சி  தேவைப்படும் திட்டங்கள் 

எருக்குழி: எருக்குழி மற்றும் மாட்டுக் கொட்டகையை அமைப்பது ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

மண்புழு உரத் தொட்டிகள்: பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து மண்புழு உரமாக மாற்றுவதற்குத் தேவையான தொட்டிகளை  அமைத்தல்.

கள் மற்றும் தீவனப்புல் சேமிப்புகள்.

* காடுகளை விவசாய நிலங்களாக பண்படுத்தும் அனைவருக்கும் பொதுவான தேவைகள் 

பண்ணைக் குட்டைகள்: 

பண்ணைக் குட்டைக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் முக்கியப் பங்குண்டு. இதில் சேமிக்கப்படும் மழைநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீருக்கும், மீன் வளர்ப்புக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இத்தகைய பண்ணைக் குட்டைகளை அமைக்க பண்ணைக் குட்டையை வெட்டுவதற்கான தொழில் நுட்பம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமும் மீன்களை வளர்ப்பதற்கான தொழில் நுட்ப ஆலோசனை மீன்வளத்துறை ஆலோசனை பயிற்சி மூலமும் செயல்படுத்த வேண்டும்.

தற்சார்பு நோக்கிய ஒருங்கிணைந்த பண்ணை முயற்சிகளில் தொழிவடையாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல எங்கள் பிரதேச அதிகாரிகளும்   கோரிக்கைகளை அக்கறையோடு கேட்டு ஆராய்ந்து விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடமை உணர்வும் அரசின் சட்டங்கள் அழுத்தமானதாகவும் மாற வேண்டும்.


வேளாண்மை சார்ந்த தொழில்களும்

திட்டங்களும்

உலகின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, பலவகை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ஒரு சராசரி   மனிதன் வீட்டு செலவில் சுமார் ஐம்பது சதவீதம் உணவுப்பொருட்களுக்கு செலவிடுகிறான். 

உலகளவில் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன.இதனால் தானியங்கள், பருப்பு வகைகள், உப்பு சர்க்கரை, நறுமணப்பொருட்கள் இவைகளில் செலவிடும் தொகை குறைந்து பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன், பழங்கள், பானங்கள் முதலியவற்றில் செலவிடும் தொகை அதிகரித்துவிட்டது.

உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான மதிப்பு மக்களிடையே உயர்ந்து கொண்டு வருகிறது. விற்பனையில் உணவு பதனிடும் தொழில் 150 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல இத் தொழிலில் நுழைந்துள்ளன. எதிர்காலத்தில் 

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் இலங்கை  தயாரிப்பு  என்ற முத்திரையோடு அனுப்பி வைக்க முடியும்.

வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நம் வயிற்றுக்கு உணவாக செல்வதில்லை. எல்லா இடத்திலும் எல்லா பொருளும் விளைவதில்லை. உணவை பதப்படுத்துவது இந்த குறைக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

வேளாண்மை பொருட்களை மூலதனமாக வைத்து இயங்கும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் எனப்படும். இவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், வேளாண் இடுபொருட்கள் (விதைகள், உரங்கள்) தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும்.

1. உணவு பதனிடும் தொழில்

உணவு பதனிடுவது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. நம் வீட்டு பாட்டியின் கைப்பக்குவம், இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில். இன்றைய கணினி யுகத்தில் அவசரகதியில் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் உடனடி உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அவசர நேரத்தில் கைகொடுக்கின்றன. உணவு பதனிடும் தொழில்களானவை பழங்கள் மற்றும் காய்கள் பதனிடும் தொழில், மீன் பதனிடும் தொழில், பால் பதனிடும் தொழில் எனப் பல்வகைப்படும்.

2.பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும்   தொழில் 

பழங்களில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, இலந்தைப்பழம், மாதுளை, சீதாப்பழம் முதலியவற்றிற்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகளில் வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய் முதலியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

3.பாலிலிருந்து, பால்பவுடர், வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. எமது கிராமங்களில் தொன்று தொட்டு இந்தத் தொழில் குடிசைத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது. இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பால் மற்றும் பால் பொருள் இறக்குமதியை தவிர்த்து  உள் நாட்டு தேவைகளை நிறைவேற்றும்  தற்சார்பு  தேவைகள் தன்னிறைவு பெற வேண்டும்.    

4.வேளாண் விதைத் தொழில்

விளை பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும் உரம் தயாரித்தல். 

5.விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள்,  வேளாண் கருவிகளை அரசு/ அரசு சாரா நிறுவனங்கள் வழியாக தேவைப்படும் போது வாடகைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

6.விவசாய இயந்திரங்கள் / கருவிகளைப் பழுது பார்ப்பதற்கான  மையங்கள்

வேளாண் துறையில் இலக்குகளும் எதிர்பார்ப்புகளும்

ஏற்றுமதி வாய்ப்புகள்:  

“*******“   ஒருங்கிணைந்த பண்ணையினுடாக    பரிசோதனை முறைக்காய் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முயற்சி..! 

இலங்கையின் விவசாய நடைமுறைகள் செயற்றிட்டமானது வெற்றிகரமான நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாக 

ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பழப்பயிர் மற்றும் மரக்கறிகளின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன் உற்பத்திப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுககளில் எமது நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையாக காடுகளிலும் எம் வீடுகளிலும் கிடைக்கக்கூடி காய் கனிகள் இலைவகைகள் என்பவற்றுக்கு அதிகமான கேள்வி உள்ளது. அவற்றை ஏற்றுமதிக்கான தரத்தோடு சுகாதாரமான முறையில் ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை புலம்பெயர் தேசத்தில் உள்ள  ஏற்றுமதியாளர்  ஒருவர் வழங்கியுள்ளார். 

தொடர்பு இலக்கம் :

அதற்கான நிதிபங்களிப்பினையும் அவர் வழங்குவதோடு குறித்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய இடங்களிலும் பாரிய அளவிலான ஒரு விவசாய பண்ணை அமைப்பதற்கான நிதியினை வளங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். 

முக்கியமாக முருங்கை இலை அகத்தி இலை போன்ற இலை வகைகளும்            வட்டுக்கத்தரி, சுண்டங்கத்தரி கௌவ்வங்காய், தும்பங்காய் போன்ற காடுகளில் வளரக்கூடிய மரக்கறி வகைகள் என்பவற்றை இலகுவான  இயற்கையான முறையில் தென்னை மரங்களின் இடையே பயிரிடுதல் அல்லது அதற்கான தனியே தேவைக்கேற்ற அளவில் பயிரிடுதல் அது வெற்றியளிக்கும் பட்சத்தில் பாரிய அளவில் வேறு ஒரு இடத்தில் அல்லது திட்டத்தினூடாக அவற்றை பயிரிடுதல் எனது இலக்குகளாக இருக்கின்றது. 

முருங்கை மற்றும் அகத்தி இலைகள் மற்றும் வட்டுக்கத்தரிக்காய் போன்ற மருத்துவ குண்ம் உள்ள இலைவகைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் வர்தக நிலையங்களுக்கான ஏற்றுமதிக்காக அவர்களின் நிதி பங்களிப்போடு  ஏற்றுமதி செய்யும்  பரிட்சர்ந்த முயற்சியில் 

1 ஏக்கரில்  வட்டுக்கத்தரி.கறிவேப்பிலை அகத்தி முருங்கை நடுகை செய்து  பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். எமது உற்பத்திகளை  ஏற்றுமதி செய்வதன் மூலம். நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரித்து அந்நிய செலாவணியை  பெருக்க வேண்டும்

இதனுடாக தற்பொழுது  ஒரு  பெண் தலைமைத்துவம் குடும்பத்துக்கு   

தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கின்றேன். 

தென்னைக்கான தொடர் பராமரிப்பு செலவு ஊடு பயிர்கள் ஆடு , மீன் வளர்ப்பின் மூலம் கிடைக்கும்  இலாபத்தின் மூலம் செயல் படுத்துவேன்.   

எதிர்கால திட்டம்:

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திகளின் தரம் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தி நாட்டின் வளங்களை கொண்டு  அபிவிருத்தியடைய வேண்டும்

இதன் இலாபங்களினுடாக 10×8 மீற்றர்  பெரிய தொட்டி ஒன்றை அமைத்து பகலில்  சோலார் மூலம் நீர்  இறைக்கவும், தொட்டிக்கு மேல் கூடு அமைத்து கோழி அல்லது வாத்து வளர்க்க வேண்டும். 

சோலர் மற்றும் காற்றாடி அமைக்க வேண்டும் .

இந்த திட்டங்களினுடாக வெற்றி  பெற்று கிடைக்கும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து  பல தொழில்களினுடாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்க  வேண்டும்.

கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும்  கணவனை இழந்த இழந்த அம்மா மகள் நான் நிரந்தர வருமானம் தரக்கூடியதாக  கோழி அல்லது ஆடு அவ்ர்களுக்கு தனியாக  சொந்த  தொழில் வாய்ப்பும் செய்து கொடுப்பேன்

வருமானத்தில் 25% கல்வி  கொடுப்பேன் 


 மேலாண்மை பயிற்சிகள்   

தற்சார்பு  விவசாய ஒருங்கிணைந்த பண்ணையினுடாக  ஒரு சிறந்த தொழில் முனைவோனாக வெற்றி பெற  தேவையான பயிற்சிகளும் முயற்சிகளும்   

வேளாண் சார்ந்த  தொழில்களுக்கு  தீவனப்பயிர்களை உற்பத்தி செய்ய தேவையான யோசனைகள் அறிவுரைகளையம், மண் மற்றும் நாற்றுகள், விதைகள் குறித்தும், அவை சார்ந்த மரபு நோய்களிலிருந்தும், காலத்து காலம்

உருவாகும் புதிய நோய்களிருந்தும் பயிர்களையும், கால் நடைகளையும் பாதுகாக்கும் வழி முறைகளை குறித்தும் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சிக்கும் தேவையான உரங்கள் குறித்தும் அறிந்து   விவசாயத்தில் ஆர்வமுள்ளோருக்கு சொல்லி கொடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். 

நீடித்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, விவசாயம் சார்ந்த நிறுவனங்கள், விரிவாக்க நடைமுறைகள் ஆகியவற்றின் சிறந்த நடைமுறைகளை வழக்கு ஆய்வுகள் வடிவிலும், நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அனுபவங்கள் மூலம் நேரடி பயிற்சிகள் வேண்டும் 

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு தொடர்பான அரசு திட்டங்கள், விவசாய கடன், கடன் நிறுவனங்கள் மற்றும் அதன் சம்பந்தந்தப்பட்ட திட்டங்கள் குறித்த தெளிவு பெற வேண்டும். 

தேவையான வேளாண்  உபகரணங்கள், 

இயந்திரங்கள், மூலதனபொருட்கள்  

வேளாண் இடுபொருட்கள்

விதைகள்,கரிம மற்றும் கனிம உரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய உள்ளீடுகளை தயாரித்தல் மற்றும் கையாளுதல்.

பயிர்ச்செய்கை   தொழில்நுட்பங்கள்

பல்வேறு பயிர்களின் நடைமுறைகள் 

சமீபத்திய தொழில்நுட்பங்கள் 

மற்றும் சந்தைப்படுத்தல் 

அறுவடைக்குப்பின் நுட்பங்கள்

அறுவடை பயிர்கள், செயலாக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு தரம் ஆகியவற்றை கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது / பயிற்சிகள்.

கால்நடை பராமரிப்பு

ஆடு, மாடு, எருமை, முயல் மற்றும் பன்றி ஆகயவற்றின் வர்த்தகரீதியான உற்பத்தி

கோழி பராமரிப்பு பல்வேறு பறவைகளின் வணிக உற்பத்தி மற்றும் அறிவியல் மேலாண்மை. 

மீன் வளர்ப்பு

உள்நாட்டு மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு, முத்து கலாச்சாரம், அலங்கார மீன் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள் உட்பட மீன் உற்பத்தியின் பல்வேறு அம்சங்கள்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்ற பல்வேறு வேளாண் சார்ந்த வேளாண் சார்ந்த தொழில்கள் அறிந்து கொள்ளும்  ஆர்வம் . 

இணையதளங்கள் :

Home  Coconut Technilogy Park  &  Coconut Technology Park  

தென்னை  தொழில்நுட்ப பூங்கா. மற்றும் விற்பனை நிலையம்

Research Institute at Bandirippuwa Estate, Lunuwial பண்டிரிப்புவா தோட்டத்திலுள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகத்தில் நிறுவப்பட்ட தென்னை தொழில்நுட்ப பூங்கா (சி.டி.பி) இப்போது தென்னை பற்றிய கல்வி மையமாக   திறக்கப்பட்டுள்ளது.

தென்னை பயிர்ச்செய்கை மற்றும் தோட்டங்களை நிர்வகித்தல் தொடர்பான தொழில்நுட்பங்களின் நன்மைகளை கள அளவில் காட்ட தென்னை தொழில்நுட்ப பூங்காவில் Field demonstrations நிறுவப்பட்டுள்ளன. இந்த மையம் ஒரு இடைநிலை கல்வி மற்றும் தகவல் மையமாக செயல்படுகிறது .

Coconut Research Institute

Bandirippuwa Estate,

Lunuwila,

Sri Lanka.

General : 94 (0)31-2255300, 94 (0)31-2262000, 94 (0)31-2262001

Fax  : 94 (0)31-2257391

Hotline for technology information : 

94 (0)31-2257688

Web: www.cri.gov.lk

பண்ணை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனை சேவை


Vision

விவசாய விரிவாக்கம், கல்வி மற்றும் பயிற்சியின் ஊடாக விவசாயத்  துறையில் அதி மேன்மை அடைதல்.

Mission

விவசாய உற்பத்திகளை தயாரித்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல்.

அறுவடைக்கு முன்னான, பின்னான இழப்புக்களை குறைத்துக் கொள்ளல்.

ஒன்றிணைந்த விவசாயம் மற்றும் உற்பத்தி முறைகள்.

பூக்கள் மற்றும் அலங்கார தாவர உற்பத்தியினை ஊக்குவித்தல்.

விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களின் உற்பத்தியினை ஊக்குவித்தல்.

Web : www.doa.gov.lk

விரிவாக்கல் பயிற்சி நிலையமானது விவசாயச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் உணவுப் பயிர் உற்பத்தியின் உயர் உற்பத்தி திறனினை பேணுவதற்கும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது. இந்நிலையத்தின் செயற்பாடுகள் விவசாய விரிவாக்கம், பயிற்றுவித்தல், விவசாயத்துறை சார் கல்வி மற்றும் பரீட்சைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.

விவசாயத் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் மூலம்தொ ழில்முயற்சியாளர்களுக்கு விதை அத்தாட்சிப்படுத்தல், பயிர் தடுப்புக்காப்பு, ஆய்வுகூட பரிசோதனைகள், விரிவாக்கல் சேவை போன்ற சேவைகளும் தொழில்நுட்ப தகவல்களும் வழங்கப்படுகின்றது.

தென்னை அபிவிருத்தி கடன் உதவிகள் 

Coconut Cultivation Board.

காண்டாக்ட் Address: 

9/428, Denzil Kobbekaduwa Mawatha,

Battaramulla

Sri Lanka

E-mail:  ccb@sltnet.lk

Telephone:  +94 (11) 2861331/32

Fax:  +94 (11) 5549507/5635623

*

கைத்தொழில் அமைச்சு  

Web: www.agrimin.gov.lk

தென்னை சார்ந்த தொழில் நுட்பங்கள் 

Web: www.cri.gov.lk


வேளாண் துறையில் இலக்குகளும் எதிர்பார்ப்புகளும்.

1. உங்களுக்கு தேவையான  பொருட்களின் பட்டியல் : 

 

1.

2.

3.

4.

5. 

2. தற்போதைய திட்டமிடலுக்கு  தேவையான நிலங்களின் அளவு : 

உங்கள் திட்டத்துக்கான நிலம்   எங்கே இருக்க வேண்டும்?    

3.மின்சாரத்தின் தேவை: 

4.சூரிய ஒளியில் மின்சாரம் :

5.நீர்ப்பாசனம்: 

6. உபகரணங்கள் : 

இலக்கு :

ஒருவர் தன வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும்  தற்சார்பு பொருளாதார   வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது. அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற நிலம்,நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள் வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.

 திட்டங்களும்  நம்பிக்கையும் புரிந்துணர்வும்

1. உங்கள் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன? நீங்கள் என்ன செய்ய முன்மொழிகிறீர்கள்? 

2.அதை  தேர்ந்து எடுத்த காரணம் என்ன?    

அதன் தேவை அல்லது அவசியம் என்ன ? 

3.அதன் முக்கியத்துவம் என்ன ? 

4. உங்களை குறித்த நம்பிக்கை என்ன?   

5. நீங்கள் செய்யும் ( திட்டமிடும் ) அனைத்து பணிகளையும் விவரிக்க  வேண்டும். 

6. நீங்கள் விவசாயத் தொழிலில்

இருக்கிறீர்களா?

              1. அல்லது அதில் இறங்க திட்டமிட்டுள்ளீர்களா

             2.நீங்கள் எங்கே  வசிக்கின்றீர்கள்? 

             3.எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறீர்கள்?

            4.நீங்கள் எப்போது விவசாயத்தைத் தொடங்கினீர்கள்?

              5. நீங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

 1. குறுகிய கால (நடப்பு ஆண்டு):

   ஆரம்ப வருமானத்துக்கு என்ன திட்டம்  வைத்து உள்ளீர்கள்?

 2.  நடுத்தர கால (அடுத்த 1 - 2 ஆண்டுகள்):

 3.   நீண்டகால திட்டங்கள் என்ன?

இலங்கையில் பிறந்து வளர்ந்து இன்று வரையான எங்கள் வாழ்க்கை எங்கள் முயற்சிகள் தான் அடிப்படை  நம்பிக்கையாகவும் என்னை நீங்கள் நம்பும் படியான ஆதாரமாகவும் எடுத்து காட்டுகின்றேன். 

நீங்கள் எனக்கு தரும் வாய்ப்பை பயன்படுத்தி நானே நேரடியாக நிலத்தில் இறங்கி உழைக்கும் அளவுக்கு ஆற்றலுலுடன் நிலம் விவசாயம் குறித்த அனுபவ அறிவும் எனக்குள் உண்டு.

இந்த செயல் திட்டங்களினுடாக  வளர்ந்து வரும் சந்தைத் திறனுக்கு ஏற்றபடி  தொழிலுக்குத் தேவையான ஆட்கள் பணிகளுக்கு உள் வாங்கப்படுவார்கள்  என்று உறுதி தருகின்றேன்.

வேளாண் சார்ந்த தொழில்களில் வாய்ப்புகள் குறித்த நம்பிக்கைகளுக்கு பின்வரும்  காரணங்களை  குறிப்பிட முடியும். 

எமது நாட்டை  அபிவிருத்தி செய்ய தனி நபர் தற்சார்பு  பொருளாதாரம் குறித்த அரசின்  ஊக்குவிப்புடன்

• திடமான விவசாயம்

•நிறைய வேளாண் விளை பொருட்களை       விளைவிப்பதற்கான சூழ்நிலை

• வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்கள்

• நிலப்பகுதிக்கு கட்டுப்பாடில்லை

•  போதுமான மனிதவளம் 

• தேவைக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யக் கூடிய பொருட்கள்

• வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும்  

அரசின் மானியங்கள்  

• திடமான உள்நாட்டு சந்தை

• விளை பொருட்களை பதப்படுத்துவதற்கு உள்ள திறமை

• புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களின் உதவி

திட்ட முன்மொழிவின் சுருக்கம்

குறித்த அரச காணியினை சீரமைத்து ஒரு இலாபகரமான தென்னை பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை பண்ணை என்பவற்றை உருவாக்கி சிறந்த ஒரு வருமானத்தை பெற்றுக்கொள்வதோடு கிராம ரீதியான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுதல் என்பவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு முதலீடாகும். 

மேலும் எம்மிடம் இருக்கின்ற வளங்களை மூலதனமாகக்கொண்டு சிறந்த ஒரு திட்டமிடல் கடின உழைப்பு என்பவற்றோடு இயன்ற அளவு வெளிநாடுகளுக்கான மரக்கறி மற்றும் இலை வகைகள் என்பவற்றை பயிரிட்டு  தேசிய வருமானத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியினை  முன்னெடுக்க வேண்டும்  என்றும் முயற்சி செய்கின்றேன். 

ஒருவர் தன வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும்  தற்சார்பு பொருளாதார   வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது. அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற நிலம்,நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள் வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.

என் திட்டத்தில  முக்கிய நோக்கம் 

தற்சார்பு பொருளாதாரத்தின்  உயர்த்துவதன் மூலம்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். 

இனி வரும் காலங்களில்  உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை  பெற்று நாடு சார்ந்த  அபிவிருத்திக்கு உதவுதல்.

விவசாயத்தைச் சூழலுடன் இணைந்ததாக முன்னேற்றம் செய்யக்கூடிய வகையிலான மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு,. பழைமையான முறைகளைப் புதுமையுடன் இணைந்து எமது வளங்களை பயன்படுத்தி எமது பிரதேசத்தை அபிவிடுத்தி செய்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை  பலப்படுத்தி வளர்ச்சிபெற்ற நாடாக முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் நன்றி 

கையொப்பம் :

திகதி  இடம் : 

இணைப்பு : 

கல்வி  மற்றும் பயிற்சி சான்றுகள்: 

உறுதிப்படுத்தும்  ஆதாரங்கள்: