09 டிசம்பர் 2020

தமிழர் சமூக மேம்பாடு -1




 ஒவ்வொரு பதிவும் புதிதாக பதிவிடும் போது நீங்கள் மட்டும் அல்ல நானும் எங்கள் சமூகத்தின் தேவைகள் என்ன ? தனி மனிதர் & சமூக மேம்பாடு குறித்த அக்கறை என்ன?  

என்பது குறித்து அவதானிக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் மூலம் உங்கள் அடிப்படை நிலை அறிந்து கொள்கின்றேன். 

அதன் அடிப்படையில்.....! 

சகல விதங்களிலும் வீழ்ச்சியடைந்திருக்கும் மக்களை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் ஒட்டுமொத்த  சமூகம் சார்ந்த பல் வேறு  கோணங்களில் அறிவார்ந்த சிந்தனைகளோடு செயல்படுத்த படுகின்றதா என்றால் .... ? 

இல்லை என்று 100 % மறுத்து  விடுவேன் . 

பெரும்பாலும் ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் தனித்துவத்தை வெளிப்படுத்தி பெயர் பெற விளம்பரம் செய்ய  எடுக்கும் முயற்சிகள் தற்காலிக தீர்வு  எனும் குறுகிய நோக்கத்தினுள்  இருக்கின்றது. நீண்டகாலம் முன்னோக்கிய திட்டங்கள் இதுவரை இல்லை. 

2009 க்கு பின் கல்வி மீட்சி , தற்சார்பு பொருளாதாரம்  சார்ந்த முனைப்புக்கள்   கடந்த பத்து  வருடங்களுக்கும் மேல் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அடிப்படை   புரிதல் தெளிவு மாற்றப்படாததால் எழுத படிக்க தெரிந்த சுய சிந்தனை தெளிவுகள் இல்லாத  துறைசார்  ரோபோக்கள்  உருவாக்கி  கொண்டிருக்கின்றோம் தவிர வளர்ந்து வரும் தொழில் நுட்பம், மாறி வரும்  உலகளாவிய சிந்தனை, அறிவு மாற்றங்களுக்கு நிகரான மாற்றங்கள் எங்களுக்குள் இல்லை. தொல்லியல், தொன்மைகள் என்று நான்கு தலைமுறை கசப்புகளை கடத்தி கொண்டிருக்கின்றோம் தவிர தற்கால எதிர்கால சூழலை புரிந்து மாற்றி கொள்ளும் முன்னெடுப்புகள் இல்லை. 

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் ஆர்வலர்கள் உட்பட 

புலம்பெயர்ந்து  மூன்று தசாப்தங்கள் கடந்தும்,வெளிநாடுகளில் அரசியல், சமூகம் சார்ந்த கட்டமைப்பு குறித்த அறிந்திருந்தும், அவைகளை எங்கள் சமூகத்துக்குள் நகர்த்தும்  தெளிவான திட்டங்கள்இல்லை என்பதனால் இலங்கைக்குள் கொண்டு சேர்க்கப்படும் பல தன்னார்வல முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகி கொண்டுள்ளது. 

முக்கியமாக அரசியல் வாதிகளுக்கும், அரசு துறை அதிகாரிகளையும் குறித்து   தெளிவான புரிதல் இல்லாமல் 

சமூகத்தின் தேவைகள், உரிமைகள் குறித்த ஏமாற்றங்களை அரசு பணியாளர்கள் காரணம் என்று  குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றீர்கள். அரசு பணியாளர்கள் மக்களுக்கன கடமைகளை  செய்வதற்கு தடையாக இருக்கும் அரசியல் வாதிகளின் தவறுகளை உணர்த்த தவறுகின் றீர்கள் 

மக்கள் சார்பாக மக்களால்  தேர்மத்தெடுக்கப்படட  அரசியல் வாதிகளின் அக்கறையில்லாத, மேம்போக்கான செயல் பாடுகளை கண்டிக்காமல், கேள்வி கேட்காமல் அரசு துறை பணியாளர்களை குற்றம் சுமத்தி அவர்கள் பணிகளுக்கு இடையூறும், செயல்பாடுகளை தடை செய்தும் விடுகின்றீர்கள்.

🛑 எந்த பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சனைக்குள் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணரவும், உணர்த்தவும் தவறி அனைத்தையும் அரசியலுக்குள் புகுத்தி புரிந்துணர்வுக்கு

முயற்சி செய்யாமல் அவர்களும் உங்களுக்குள் ஒருவர் எனும்  உணர்வை  உருவாக்க தவறுகின்றிர்கள். அதனால் பிரச்சனைகளுக்கு வெளியில் நின்று யாரோ ஒருவருக்கு தானே..? நமக்கு என்ன என்ற  

அணுகுமுறை இன்றைய பல சிக்கல்களுக்கான காரணமாக இருக்கின்றது.  

நன்றாக சிந்தித்து பாருங்கள்...! 

உங்கள் பகுதி. பள்ளி ஆசிரியர்கள், அரசு துறை பணியாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? அரசியல் வாதிகளுக்கு கொடுக்கும் அங்கீகாரம் என்ன?  தற்கால சுய லாபம், தனி நபர் விருப்பு வெறுப்பு, ஆதாயம் என பல காரணங்களுக்காக மக்கள் உரிமைகளை காலடியில் போட்டு மிதிக்கின்றீர்கள்.

⭕️ ஒரு நாட்டில் அரசாங்கம் என்பது என்ன? யார்? 

⭕️ அரசியல் வாதிகள் யார்?

⭕️ அரசியல் வாதிகள் யாருக்கானவர்கள்? 

⭕️அரசு பணியாளர்கள் யார் ? 

எல்லோரும் அந்த நாட்டின் குடிமக்கள்..!  

அரசியல் வாதிகள் மக்கள் பணியாளர்கள்,அரசு அதிகாரிகள் அரசு பணியில் மக்கள் சேவையாளர்கள். என்று புரிந்து கொள்ளும் அடிப்படை சிந்தனை தெளிவை உருவாக்கும் போது சமூகம் மேம்பாடு ஒரு அடி முன்னோக்கி செல்லும். 

 பல பிரச்சனைகளுக்கு அத்துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள்  எனோ தானோ என்று அசட்டையாக நடந்து கொள்வதும் அவர்களும் இந்த சமூகத்தின் மக்களில் ஒருவர் எனும் புரிதலும், இன்றைய அவர்கள் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அவர்களுக்கும்  பாதிப்பை தரும் என்றும் உணர்வு பூர்வமாக உணர்த்த பட வேண்டும். அடி, தடி வன்முறை கலாச்சாரம் வளர்த்து, ஆதரித்து அதன் மூலம் எந்த சமூகமும் மேம்பட முடியாது.அவரவர் கடமை மீறல்கள்,தவறுகளை உணர்த்தி ஒன்றிணைந்து செயல் பட  எல்லோரும் முயற்சி செய்யுங்கள். 

வாசித்து எனக்கென்ன என்று கடந்து செல்லாமல் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அதன் மூலம் சமூகத்தை சிந்திக்க தூண்டுதல் தர முடியும்..! நானும் தொடர்ந்து என் கருத்தை பகிர முடியும்.🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!