12 டிசம்பர் 2020

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)  


 கல்வி, பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல.. உள்ளே வேரோடி இருக்கும் நம்பிக்கைகளும், உணர்வுகளும் சார்ந்தது..! 

சரியான கல்வி   திட்டங்களைச் செயல் படுத்தி மேற்பார்வை இட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்று அடையும் 

கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடு பட உதவ வேண்டும்

அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது எனும் தனி மனிதர் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பழைய கால கல்வி முறை மாற வேண்டும்.,

🌳 செய்யும் ஒவ்வொன்றும் அப்போதுள்ள சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

🌳 ஒரு தலையீடு மற்ற தலையீட்டுக்குப் பொருந்தி வர வேண்டும். ( அரசியல் / அதிகாரிகள்/   ஆசிரியர்கள் / சமூகம்/ பெற்றோர் ) 

🌳 தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றும் திறமை வேண்டும்.

மாணவன் கல்வி கற்பதற்கும் , சமூக மேம்பாட்டுக்கும் 

🌳 சுற்றுப்புறச் சூழ்நிலை 

🌳 மன   உணர்வுகள்

🌳 சமுதாய சக்திகள்

🌳 உடல் தொடர்பான பிரச்சினைகள்

🌳 உளவியல் சார்ந்த சிக்கல்கள்அனைத்தசியும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளணும்.

உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. காலத்துக்கு ஏற்றபடி  மாறனும் என்றால் தொழில் நுட்ப சாதனங்களை ( போன், லேப்டாப், ஜூம் மீட்டிங், இன்டர்நெட் என்று தவறாக புரிந்து கொண்டு செயல் படுகின்றார்கள்.

வளர்ந்த நாடுகளில் ஸ்மார்ட் வகுப்பறை  இருந்தாலும்  ஆறாம் வகுப்பு (  13 ) வரை கம்ப்யூட்டர், இன்டர்நெட்  வாரத்தில் ஒரு சப்ஜெக்ட் தான்.   

இங்கே வழக்கமான பாடத் திட்டங்களில் இருந்து விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கான அறிவு புகட்டப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, 

தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது? 

மர நடுகை அவசியம்...? 

காடுகளின் அவசியம்? 

பொது சொத்துக்கள்..? 

அரசாங்கம் என்பது யார் ? 

அன்றாட  வாழ்வியல்என்று அந்த சூழலை  வகுப்பறைக்கு உருவாக்குவார்கள். இங்கே  படிகளும் பிள்ளைகள் நீரை விரயம் செய்ய மாட்டார்கள். கல்வி அவர்களுக்கு கற்பிக்காமல் வாழ்ந்து காட்டுகின்றது. 

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals)  

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மேம்பாட்டு  முன்னெடுப்புகள் அதுசார்ந்த மக்களுக்கான ஆதரவோடு உள்ளார்ந்த புரிந்துணர்வு, நம்பிக்கையோடு தொடரப்பட வேண்டும்.   நீண்டகாலம் அடக்குமுறைக்குள் வாழ்ந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப முடியாமலும், யாரோ ஒருவர் மேல் அதிக  பக்தியும் உருவாக்கி விடுகின்றன. அவர்களுக்கான சமூக மேம்பாடு அத்தனை இலகு அல்ல ..!   அவர்கள்  மொழியில்  அவர்களோடு வாழ்ந்து புரிந்து  உணர்ந்து நம்பிக்கை தந்து  சரி என்று நம்பப்படும் பல தவறுகளை  உணர்த்த வேண்டும்.  

“.... ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டு மாயின் முதலில் அவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு பிணைத்துள்ள புனைவுகளாலும் மாயங்களாலும் ஆன தொப்புள் கொடிகளை அறுத்தெறிய வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் பிணைப்பும் வேறுவகையானவைகளால் கட்டமைக்கப்படவேண்டும். இதை யாராலும் பிரிக்க முடியாத பந்தத்தைக் கட்டமைக்க புரட்சிகர செயல்பாடு என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு கலாசார நடவடிக்கையாக இருக்க வேண்டும்....என்கிறார் —பாவ்லோ பிரையர்,

சமூக மேம்பாட்டுக்கான  Ph.d...! தமிழர்களில் இவ்வாறன பயின்றோர் உண்டார்? எவ்வாறு  பயிற்சி பெறுகின்றார்கள்? கல்வி..?  சமூக மேம்பாடு குறித்த  அர்ப்பணிப்பு சில வருட கல்வியால் கிடைக்குமா? 

பேசுவோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!