30 ஜூன் 2020

சுவிட்சர்லாந்து corona virus

ஜூன் 21 மாலை சுவிஸ்ஸில்   சூரிச்  மாநிலத்திலிருக்கும்  இரவு விடுதியில்  இடம் பெற்ற சூப்பர்ஸ்ப்ரெடர்  நிகழ்வை நடத்திய நபருக்கு கொரோனா Virus positive  உறுதிப்படுத்திய பின் அந்த நிகழ்வும் கலந்து கொண்ட 300  பேர் தனிமைப்படுத்த பட்டிருக்கின்றார்கள்.சிலருக்கு ( இது வரை ஐந்து நபர்களுக்கு ) சோதனை செய்யப்பட்டு  வைரஸ் பொசிட்டிவ். உறுதிப்படுத்தபட்டிருக்கின்றது. 

சுவிட்சர்லாந்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து யூன் மாதத்தில் படிப்படியாக Lock down  தளர்த்தி எல்லைகளை மீண்டும் திறந்த பின்  கடந்த வாரத்தில், உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

திங்கள்-  18 
செவ்வாய் - 22
புதன் - 44 
வியாழன் -52 
வெள்ளி 58 
சனி -69
ஞாயிறு - 62

29.6.2020 - Schweiz & Liechtenstein இரண்டு மாநிலத்தில் மட்டும் 35 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.  

ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் தூர இடைவெளியை தொடர  முடியாவிட்டால் மக்கள் முகமூடி அணிய வேண்டும்.பொதுப்போக்குவரத்தில்  corono virus தொடர்பு தடமறிதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும்  பொது போக்குவரத்தில் முகமூடிகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது.

தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..

இலங்கை,  தமிழ்  அரசியல்வாதிகளின் தேர்தல்   பிரச்சாரத்தில்...! 

இலங்கையில் தமிழர்கள் சார்பில் அரசியல் களத்தில் நிற்போர் என்ன கற்றிருக்கின்றார்கள்? எவ்வளவு சொத்திருக்கின்றது? எதை சுரண்டி இருக்கின்றார்கள் எனும் தனி மனிதர் தூற்றலும் போற்றலும், ஆளுக்கொரு தலைவனை முன் நிறுத்தி ஆபாச அர்ச்சனைகளும் அதிகமாகி கொண்டிருக்கின்றதே அன்றி...! 

▪️பிளவு பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து,தமிழ் இளைய தலைமுறையை சீர்படுத்துவோம்.

▪️வீழ்ச்சியடையும் கல்வியை உயர்த்த வேண்டும்.
    •  கல்வி சாலைகளை செப்பனிட வேண்டும்,        
    • பாழடைந்து கிடக்கும் பள்ளி மைதானங்கள்
    • விஞ்ஞான ஆய்வு கூடங்கள், நூலகங்களை அமைத்து சிறுவர் கல்வியை மேம்படுத்துவோம். 
   • ஆசிரியர் பற்றாக்குறைகள், மிரடடல் உருட்டல் இல்லாமல்  சுயமாக இயங்கும் பயிற்சிகள் ( உள்ளூர் பள்ளிகள் அபிவிருத்தி செய்ய விடாமல் தடையாக இருக்கும் புல்லுருவிகளை அகறறவோம்) 

▪️ இழந்திருக்கும் தமிழர் நிலங்களை மீட்டு, பாதுகாத்து தருகின்றோம்.

▪️தமிழர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள்
       • பிரதான விதிகளுக்கு தார் பூசி நான்கு தலைமுறை கடந்து விடடது . மழைக்காலத்துக்கு முன்  உள்ளூர் தெருக்களுக்கு கிரவல் கொட்டி சீர் செய்தது எல்லாமே நாற்பது வருடங்கள் முந்தைய கனவாகி போனது.
   • வளம் நிறைந்த பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்திகளை கொண்டே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கி தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புகளை
ஏற்படுத்தும் திட்ட்ங்கள்.

▪️ தமிழர் இன்று இழந்திருக்கும்
சுய உரிமை,  கூனி குறுகி முதுகெலும்பு உடைந்து தன்னம்பிக்கையை தொலைத்து வாழும் எம்மக்களை மீண்டும்  உயிர்ப்பிக்கும் முன்னேற்ற திட்டங்கள், கவுன்சிலிங்குகள்

இன்னும் இன்னும் எத்தனையோ தேவை இருக்க ...! 

ஒருத்தரை ஒருத்தர் முதுகில் குத்தி, விமர்சித்து  மல்லாக்க படுத்து கொண்டே தங்கள் மேல் தாங்களே எச்சில்  துப்பி  கொள்( ல்)கின்றார்கள். அதை தவறென சுட்டி உணர்த்தாமல் கற்றோரும், பெற்றோரும் வேடிக்கை பார்க்கின்றார்கள். 

என்றும் தமிழனுக்கு எதிரி. விரோதி அந்நியர் இல்லை...! தமிழனே தான்🖤

கண்களை திறந்து அக்கம் பக்கம் பாருங்கள். உங்களை போல் தன் இனத்தினை காட்டி, கூட்டிகொடுக்கும் இழி செயலை வேறெந்த இனத்தவனாவது செய்கின்றானா? 

உரிமை.. உரிமை என சும்மா பேசி பாவ்லா காட்டி உள்ளத்தையும் இழக்காமல் தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..🙏


22 ஜூன் 2020

Covid 19 / 12 நாட்கள் ஊரடங்கில் என்ன சாதிக்க முடியும் ?

மூன்று மாத ஊரடங்கில் சாதிக்க முடியாத ஒன்றை , 12 நாட்கள் ஊரடங்கில் எப்படி சாதிக்க முடியும் ? பரிசோதனைகள் அதிகம் செய்து பாதித்தவர்களை தனிமைபடுத்துவதே அதிக பலனை கொடுக்கும் ! என்றும்  Face  book  நண்பர்Rajasimmon AB Positive பதிவு இட்டிருந்தார். இதே கேள்வி பலருக்கும் இருக்கின்றது 

அவருக்கும்இ ன்னும் பலருக்கும் இந்த பதிவு 

முதல் கேள்விக்கு  : முடியும்...! 
புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுக்க முடிந்தால் அதுவே நோய் தொற்றை கட்டுப்படுத்தும்.

இரண்டாவது கேள்விக்கு எல்லோருக்கும் சோதனை எனும்ஆரம்ப அடிப்படையே தவறான ஆரம்பம்.  கொரோனா வைரஸ் எல்லோருக்கும் சோதனை அவசியம் இல்லை.  சாத்தியமும் இல்லை. ஆரம்ப அறிகுறி இருக்கும் எல்லோருக்கும்
கூட சோதனை அவசியம் இல்லை. 

என்ன செய்யலாம்? 

எல்லாமே lockdown ஆரம்ப முதல் என் பதிவுகளில் எழுதியது.  மீண்டும் எழுதுகின்றேன். 

🔹 12 & 15 நாள் மிகவும் கடுமையான lockdown  யாரும் வெளியே வராமல் முழு தமிழ் நாடும் அடஜிஸ்ட் சென்னை மட்டுமே என்றாலும் மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டினுள் வருமானால் புதிய நோய்  தொற்றுகள் உருவாகாது தடைபடும்.
▪️ இத்தாலி இறுதி மாதங்களில் இதை தான் செய்தது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதிப்புக்குள்ளான இடங்கள் கடுமையாக்கப்படடன. 

🔹 ஆரோக்கியமான உடலினுள் ஏற்கனவே உருவான தொற்றுகளும்  இந்த காலத்தில் புது தொற்றை உருவாக்காமல் அதன் வீரியத்தை  இழந்து கொள்ளும்.  7  நாள்களின் பின்  ஒருவருக்கு அறிகுறி தொடர்ந்தால் சோதனை செய்யலாம்.

🔹 நீரழிவு. இதயம். கிட்னி , உறுப்பு மாற்று, சுவாச நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோருக்கு  ஆரம்ப அறிகுறிகளில் தொலைபேசி or இணையத்தின் ஊடாக மருத்துவர் ஆலோசனை அவசியம் எனில் அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவ கண்காணிப்பு போதுமானது. 

🔹 எவரையும் நேரில் மருத்துவமனை வர வேண்டாம். வீட்டில் இருங்கள் எனும் அறிவிப்பு மருத்துவ துறையினரின் பணிசுமையை குறைக்கும். மருத்துவ பாதுகாப்பு துறை சேவையாளர்கள் பாதுகாப்பை  குறித்தும் அரசு அக்கறை கொள்ள வேண்டும். 

🔹மருத்துவமனையில் குவியும் நோயாளர்களால் மருத்துவ பணியாளர்கள் பாதிக்க படுகின்றார்கள். மேலும் நோய் பரவுகின்றது.அங்கும், இங்கும் மக்கள் அல்லாடுவதால்  காவல் துறை பணியாளர்கள் பலியாகின்றார்கள்.

🔹 முக்கியமாக அரசு நிர்வாகத்துறை தலைமைச்செயலகம். மருத்துவ துறை, காவல் பாதுகாப்பு  துறை பணியாளர்கள் பாதிக்க படுவது  நல்லது அல்ல 

🔹 அறிகுறி இருப்போர் தங்களை  மற்ற குடும்ப உறவுகளிடமிருந்து தனிமை படுத்தி கொண்டால் போதும். வீட்டில் இருக்கும் முதியோரை தனியே எப்போதும் வைத்திருங்கள்.எல்லோரும் வெந்நீர் குடிப்பது விடடமின் சி & d ஆரோக்கியமான  உணவுகள் எடுத்து கொள்ளலாம் 

கொரோனா  வைரஸ் உலகளவில் குறைந்த வீதமானோருக்கு தான் கடும் பாதிப்பையும் 6  விதம் மரணத்தையும் ( பிற நோய் காரணிகளும்  )  ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா வைரஸ் பொசிட்டிவ் என்றால் எல்லோரும்செத்து போவதும் இல்லை. எல்லோருக்கும் வென்றிலேற்றார் வைக்கும் படி கடுமையாவதும் இல்லை பலருக்கு சளி, காய்ச்சல் போல் கடந்து விடும். மருத்துவ இயந்திரத்தின் தேவை எல்லோருக்கும் அவசியம் இல்லை.

🔴 தொற்றாளர்களை தனிமை படுத்துகின்றோம் எனும் பெயரில் தனி முகாம், வீடுகளில் அடையாளமிடுதல், தெருக்களை அடைதல் எனும் சில்லி தன முயற்சிகளால் மக்கள் பதட்டம் அடைகின்றாரகள். வீடுகள் இல்லாத மக்களை முகாம்களுக்கு அனுப்பலாம் 

🔴 இந்த பீதியும் பதட்டமும் ஆபத்தானது. எல்லோரும் வீட்டினுள் இருந்தால் எப்படி உணவு அத்தியாவசிய பொருள் கிடைக்கும்? 

💚 வீடு வீடாக போய். ஒவ்வொருவராக சோதனை செய்ய செலவாகும் மனித & பொருள் ஆற்றலை தொழில் வாய்ப்பு இல்லாத மக்களுக்கு இந்த நாடகளுள் உணவு மற்றும் பால் பொருள்கள் வினியோகிக்கலாம். அம்மா உணவகம் , சமுதாய கூடங்களினுடான ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கலாம் 

💚 அரசாங்க ஊழியர்கள் பணியாளர்கள் சம்பளத்தில் 10 தொடக்கம் 20  விதம் இவ்வாறான மக்களுக்கு மனமுவந்து உதவலாம் 

💚 செத்த பின் நஷ்ட ஈடு 50  இலட்ச்சம் என அறிவிப்பது விட அந்த பணத்தில் வாழவும் ppt  பாதுகாப்பு உடைகள்உபகாரணங்களுக்கும்  செலவு செய்யலாம் 

💚 வீட்டு சொந்த காரர்கள் வாடகை பணம்  குறித்து அரசாங்கம் வங்கி லோன் மின்சாரம் போன்றவை குறித்து  தெளிவாக முடிவெடுக்கும் படி  கோரிக்கை வைக்கலாம். 

இன்னும் எவ்வளவோ செய்யலாம் . மனித உயிருக்கு முன்  அத்தனையம் தூசி எனும்  உணர்வு அனைத்தையும் செய்ய வைக்கும்.

Note 
*****
சித்த மருத்துவம் அனுமதிக்கப்பட்டு விடடாலும் நோய் பரவும் வேகத்தில் மருந்துகள் தயாராக வேண்டும்  நோய் பரவல் தடுக்கப்பட வேண்டும். இவை  இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமாக வேண்டும். நோய் பரவிக்கொண்டே இருந்தால் அதே வேகத்தில் குணமாக்குதல் என்பதன் சாத்தியம் குறித்தும் சிந்திக்க வேண்டும் .

இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன்  அறிந்து கொள்ள https://alpsnisha.blogspot.com/2020/06/blog-post_22.html?m=1


இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் :

COVID -19 

இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் : 

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை சுமார் 130 கோடி 
இந்தியாவில் சுமார் 19 லட்சம் மருத்துவமனை படுக்கைகள், 
95 ஆயிரம் ஐ.சி.யூ படுக்கைகள்
48,000 வென்டிலேட்டர்கள் 
உள்ளன என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏழு மாநிலங்களில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள், - 
- உத்தரபிரதேசம் (14.8%),
- கர்நாடகா (13.8%)
- மகாராஷ்டிரா (12.2%) 
- தமிழ்நாடு (8.1%) 
- மேற்கு வங்கம் (5.9%) 
- தெலுங்கானா (5.2%)
-  கேரளா (5.2%).

COVID 19 நோயாளிகளின்  தொற்று பரவும் வேகத்துக்கு  விரைவாக விரிவாக்கம் தேவை. 

தமிழகத்தில் : 

கோவிட் -19 நோயாளிகளைச் சமாளிக்க தமிழகத்தில் சுமார் 3,000 வென்டிலேட்டர்கள் உள்ளன என்று மாநில சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் 04.04.2020 தெரிவித்திருந்தார் .

Tamil Nadu 
Hospitals /  மருத்துவமனைகள் = 2439 
பொது : 1217
தனியார்: 1222


Ventilators  = 3884
பொது: 1938
தனியார் : 1936

 ICU Beds = 7769
பொது : 3877
தனியார் : 3892

 Hospital Beds / படுக்கைகள் = 155375
பொது :77532 
தனியார் 77843 
20 ஜூன் 2020

Depression : பகுதி 2

Depression : பகுதி 2 

மன அழுத்தம் (depression)  என்றால்  என்ன? 

வாழ்க்கையில் தோல்விகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், காதல் தோல்வி , கடன் பிரச்சனை, தேர்வில் தோல்வி, அம்மா அப்பா அடித்தார், திட்டினார், எதிர்பார்த்தது நடக்க இல்லை எனும் காரணங்களால் உருவாகும் திடீர் கவலைகள் அதனால் சட்னு முடிவெடுத்து தற்கொலை செய்வது , பாலத்தில் குதிப்பது எல்லாம் Depression 
என புரிந்து கொண்டு இருக்கின்றார்கள் 

இந்த மாதிரி கவலைகள் வேறு...!  Depression வேறு..! கவலைகள் தற்காலிகமானது.  இவ்வாறான கவலைகளுக்கு மனதில் வைத்திருக்காமல் அந்த நிமிடம் யார் கூடவாவது பிரச்சனையை பகிர்ந்து கொண்டால்  ( பலருக்கு )மனம் அமைதியாகி விடும். சிலருக்கு அவர்கள் வளர்ந்த சூழல் தோல்விகளை அனுபவ பாடமாக கற்று கொடுக்கவில்லை என்றால் தற்கொலை உணர்வு தோன்றும். 

▪️ ஒருவருக்கு Depression நோய் பல காரணங்களால் உருவாகும். 
 

💚 நெகட்டிவ் திங்கிங் மட்டுமே ஆக்ரமித்து இனி நான் ஒண்ணுமே இல்லை, நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லை, ஒதுக்கப்பட்டேன் எனும் வெறுமை உணர்வு, இந்த உலகத்தில் எனக்குன்னு யாருமே இல்லை, யாருக்கும் நாம் தேவையில்லை தனித்து போனேன், எனக்கு மட்டும் தான் பிரச்சனை, வலி,வேதனை என்றுணர்ந்து அதை ஆழ்மனம் நம்ப ஆரம்பிக்கும். 

 💚 ஓய்வு இல்லாத அதிக வேலை, ஸ்ட்ரெஸ், ஒரே மாதிரியான வாழ்க்கைமுறை, மனம் விட்டு   பேச யாருமில்லாத நிலையில் , திறமைகளை வெளிக்காட்டிடமுடியாத விரக்தி மனநிலை..! 

💚 வயதானவர்களுக்கு யாருமில்லை எனும் தனிமை உணர்வு, நோய்களின் பக்க விளைவாகவும்  மன அழுத்தம் உருவாகும். 

💚 நாள் பட்ட நோய்கள் வலி நிவாரணிகளாகும் மருந்துகளும் மன அழுத்தத்தை உருவாக்கும்.

💚 பொதுவா பெண்களுக்கு மாதாந்திர பிரச்சனை நேரம், கர்ப்பகாலத்தில், பிரசவமான பின், குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் தாய் மார்கள், 
மெனோபாஸ் காலத்தில், என ஒவ்வொரு காலத்திலும் மனஅழுத்தம் உருவாகும். ஏதன் காரணத்தினால் உருவாகுமோ அதன் கவனம் மாறும் போது காணாமலும் போகும். சிலருக்குள் மறைந்து இருந்து ஆபத்தாக வெளிப்படும்.  

💚 தொடர்ந்து கர்ப்ப தடை மாத்திரைகள் பயன்படுத்துவோருக்குள் உருவாகும் ஹார்மோன்கள் மாற்றம் மற்றும் மனச்சோர்வு நாளடைவில் Depression  ஆக மாறும் வாய்ப்பும் உண்டு. 

💚 சிலருக்கு பரம்பரை, முன்னோர் சார்ந்தும்  தொடரும்..! 

▪️கேன்சர் வந்தால்  ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு கட்டம் போல் Depression க்கும் கட்டங்கள் உண்டு. இவர்களின் உணர்வு நிலை ஒரு கேன்சர் நோயாளியின் உடல் செல்களை ஊடுருவும் புற்றை போல் ஆபத்தானது. ஒருத்தருக்கு Depression பாதிப்பு இருக்கலாம் என்பதை இரண்டாம் கட்டத்தில் சில அறிகுறிகளை கொண்டு குடும்ப உறவுகள் புரிந்து கொள்ள முடியும். 

🔹 எதிலும் ஈடுபாடு ஆர்வமில்லாத ஏனோ தானோ  செயல் பாடுகள், தன்னில் தானே அக்கறை இல்லாத மேம்போக்கு தனம், தன்னிரக்கத்தில் உடலில் இல்லாத வலிகள் உருவாகும். 

🔹 எதுக்கெடுத்தாலும் பயம், தயக்கம், அதிக தூக்கம், தூக்கம் இன்மை,சட்னு கோபப்படுதல், எரிந்து விழுதல், நிதானம் இழத்தல், உணர்ச்சி வசப்படுதல், அழுதல், தன்னை பத்தி மற்றவர்கள் பேசுவதாக கற்பனை செய்தல் என பலவிதங்களில் வெளிப்படும் 

🔹 கொலை, தற்கொலை உணர்வுகள் இதனைச் செய் … அந்த பாலத்தில் குதி..,கத்தியால் குத்து.. இப்படி செய்…. எனும் உள்ளுணர்வு தூண்டப்படும். சிலர் தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்திடவும் செய்வார்கள்.( இப்படியான சிக்கலான சிலரை நான் வீட்டில் பாதுகாத்துள்ளேன்) 

🔹 இவ்வாறான உணர்வுகள் தோன்றும் போது தன்னை தானே தனிமைப்படுத்தி தான் செத்து போனால் எல்லாம் சரியா கிரும், அது தான் சரியான முடிவு என ஆழ்மனம் சொல்லும் போது அவர்களின் இந்த மாற்றம் உணராத குடும்ப உறவுகள், நண்பர்கள் இவர்களின் இந்தமாற்றத்தைக் குறைகூறத் தொடங்குவார்கள். அது.பாதிக்கப்படடவரின் மன அழுத்தத்தை இன்னும்  
அதிகரிக்கும்.  அதனால் குடும்ப உறவுகள், நண்பர்களுடன் பேசுவதும் குறையும்.  

🔹 இதுவெல்லாம் ஒரே நாளில் மாறாது. உள்ளுக்குள் மறைந்து. ஒவ்வொரு பிரச்சனையின் போதும் படிப்படியாக வெளிப்படும். ஆனால் குறை அவர்களிடம் இல்லை எனும் உண்மை உணராத  குடும்ப உறவுகளும் சமூகமும் அவர்களுக்குள் உருவாகும் உளவியல்  போராட்டத்தை அசட்டை செய்து உயிரிழப்புக்கு தூண்டுகோலாய் மாறி விடுகின்றார்கள் 

🔹 மூன்றாம் கட்டத்தில் Depression  நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை உறவுகள், நண்பர்கள் வெளிப்படையாக  உணர்ந்து கொள்ள முடியும். சிலர் கேலி கிண்டல், கௌரவம் என தங்களை ஒதுக்கி கொண்டாலும் அவர்களின் வழக்கத்துக்கு மாறான  செயல் பாடுகளில் இருக்கும் வித்தியாசம்  Depression நோய் குறித்த புரிதல்  கொண்டவர்களால்  உணர்ந்து கொள்ள முடியும். 

🌻  35  வயதுக்கு பின் பல பெண்களுக்கு வரும் இன்னதென உணராத வலிகளுக்கு பின் Depression  ஆரம்ப அறிகுறி இருக்கும். உடல் பாகங்களில் வலிகள் எதனால் என்று மருத்துவர் கண்டு பிடிக்கல்ல.. ஸ்கேன் , எக்ஸ்ரே, Cd ஸ்கேன். MR  எல்லாமே நார்மல்  என்றாலும் உடலில் தொடரும்.ஊமை வலிகள், சோர்வு, சோகம், அழுகை, பச்சாதாபம் என ஒதுங்கி இருத்தல், எதிலும் பற்றும், ஆர்வமும் இல்லாத அறிகுறிகள் வெளிப்படும் என்றால் கவுன்சிலிங போவது நல்லது..! 

வீட்டில் இருக்கும் பல பெண்களுக்கு இது கடுமையான பின் விளைவை தரும். அது வரை தன்னை சுற்றி சுழன்ற வீடெனும் உலகம் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் விருப்பில் வாழ அம்மா நீ சும்மா இரு.. உனக்கொன்றும் தெரியல்ல எனும் வார்த்தைகளில் இனி நான் இங்கே தேவையில்லை எனும் இயலாமை உணர்வில் உடல் வலிகள் உருவாகும். 

எப்பப்பாரு அங்கே வலி.. இங்கே வலி என்று தூங்கிட்டிருக்க என திடடாமல்  என்ன எதுன்னு  நிதானமா கவனிக்கணும். ஆதரவு கொடுக்கணும். சரியான கவனிப்பு புரிதல் இல்லாத போது தான்  நடுத்தர வயதில் பலர் வாழ்க்கை அன்பு ஆதரவு என தடுமாறுகின்றார்கள். குடும்ப வாழ்க்கை சிதறுகின்றன. அன்பும் ஆதரவும் கிடைக்குமிடம் தேடி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றார்கள். சிலர் உயிரை மாய்த்து கொள்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் ( ஆணானாலும், பெண் ஆனாலும்)  இளைத்தவன் மேல் குற்றம் சொல்லும் சமூக கட்டுப்பாடும்,புரிதலும் தன் தவறை உணராது பாதிக்கப்படடவரையே குற்றவாளி ஆக்கி தப்பித்து கொள்கின்றது 

என்ன காரணத்தினால் அல்லது எதனால் குறிப்பிடட நபருக்கு Depression வந்திருக்கின்றது என அந்த நபரின் ஆழ்மனதிலிருந்து வெளி கொண்டு வந்து அதற்கு காரணமானவர்கள், காரணமான பிரச்சனைகளை இனம் கண்டு அவைகளை விலக்கி அதுவெல்லாம் ஒன்றுமில்லை, உன்னால் முடியும் எனும் நம்பிக்கையை உருவாக்கி நாங்கல்லாம் உன் கூட இருக்கோம், நீ தனியே இல்லை என உணர்த்தி மீட்டு எடுக்கும் முயற்சிக்கு மருத்துவர்,  கவுன்சிலிங் தருபவர்,குடும்ப  உறுப்பினர் , நண்பர்கள், வேலை செய்யுமிடம் என ஒரு மெகா டீம் work தேவைப்படும் . 

▪️ Posatpartum depression : 
நான்காம் நிலை ... . தற்கொலை உணர்வு தூண்டப்படுவதால் மிகவும் ஆபத்தானது.  
தன்னை அழிக்க சொல்லும்  ( தற்கொலை ) ஆழ்மன உணர்வோடு போராடி மீண்டு வருவது என்பது கிட்ட தடட எமனுடனான போராட்டம் போன்ற  மிகவும் பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.
தற்கொலைகளில் பாதி மன அழுத்த நோயாளிகளால் செய்யப்படுகிறது என்பதால் அவர்கள் உயிர் பாதுகாப்புக்காக  மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சையளிக்க வேண்டியும் இருக்கும்.

Depression மனோதத்துவ மருத்துவர் உடல் ரிதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வெளிக்காயங்கள் உளவியல் ரீதியான ஆழ் நிலை ஆற்றுகை படுத்தல்கள மருந்து மாத்திரைகள் பரிந்துரைப்பார்.  .. !

கவுன்சிலிங் செய்பவர் பாதிக்கப்படுபவரின்  பிரச்சனையின் பின்புலம் ஆராய்ந்து உணரும் திறனுடையவராக  தோழமை உணர்வை உருவாக்கி மனதில் அழுத்தும் தரும் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவார்.  கவுன்சிலிங் எவ்வளவு காலம் எடுக்கும் என்றெல்லாம் வரையறை இருக்காது. அவங்க   ஆழ்மனதோடு பேசி தற்கொலை எண்ணம் வராத வரை அனைத்தையும் எதிர்கொள்ளும்  நிதானத்தோடு மீண்டும்  மீண்டும் சந்திப்பு தேவைப்படும். 

 தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமல் அவர்கள் செயல் பாடுகள் தொடரும் போது எம்மவர்கள் பைத்தியம், லூசு என்று கிண்டல் செய்கின்றார்கள். 
அவ்வாறில்லாமல் அவர்கள் உணர்வுகளை புரிந்து தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுக்கும் போது 80% விதமானோர்  பல மாத சிகிச்சை & கவுன்சிலிங்குக்கு பிறகு மீண்டும் அன்றாட வாழ்க்கையை தொடரும் படி குணமடைகின்றார்கள். 

🌻 நான்காவது  கடுமையான கட்டம் வரை பாதிக்கப்பட்டவர்களில் ஒன்றரை முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அதே Depression  நிலை உருவாகலாம் என்பதால்  தொடர்ந்தும் ஆதரவும் அன்பும் தேவைப்படும் நபராக இருப்பார். குடும்ப உறவுகள் இவர்களை கண்ணாடி பாத்திரம் போல் கையாள வேண்டும் . அன்புக்குரியவர்  எனும் உணர்வை கொடுத்து உயிர்ப்பித்து கொண்டே இருக்க வேண்டும். குணமாகி விட்டார் தானே என்று அசட்டையாக விட்டால் மீண்டும் முன்னரை விட மோசமான மன அழுத்தத்துக்குள் செல்லும் ஆபத்தும் உண்டு. 

Depression  ஆழ்மன அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் தேவை.மாத்திரை பரிந்துரைத்தால் ஒரு தடவை அதன் பக்க விளைவுகளை வாசித்து பின் பாவியுங்கள்.மனோதத்துவ மருத்துவர் உடல் எதிர்கொள்ளும் நோய்க்கும் நல்ல தூக்கத்துக்கும் மருந்து தருவார் 

ஆனால்.... சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்தே மன அழுத்தத்தை அதிகமாக்கும். அவங்க Depression லிருந்து வெளி வரணும், நல்லா தூங்கணும், உள்ளமும், உடலும் ரிலாக்ஸ் ஆகணும் என தரும் மாத்திரை பின் விளைவுகளை வாசித்து பாருங்கோ..தலைவலி, உடல் பருமன், எப்போதும் தூங்கி வழிவது என தன்னில் அக்கறை இல்லாத ஒரு வித சலிப்பு உணர்வாய் பற்றற்ற வாழ்க்கையில் சோர்வு எல்லாம் சேர்ந்து தற்கொலைக்கு கொண்டு சேர்க்கும்.

Depression மனநோய் என அவமானமாகப்  நினைக்காமல் மற்ற நோய்களைப் போல் ஒரு நோய்தான் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொருவருக்கும் வரும்வரை தற்கொலைகளை நாம் குறைக்க முடியாது. உங்கள் குடும்பத்தில் மேலே சொன்ன அறிகுறிகள் யாருக்காவது தென்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப் போங்கள். இந்த சமூகம் சொல்பவற்றைவிட உங்கள் உறவினரின் வாழ்க்கை முக்கியமென நம்புங்கள்.


Nisha 
20.06.2020 


முதல் பகுதியும் படியுங்கோ


Depression : பகுதி 1

Depression : பகுதி 1


1994 ல் என்னுடன் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் panni புரிந்த நெருங்கிய தோழி திடீரென காணாமல் போனாள். எங்கே என்றேன்.நம்ம ஊர் அங்கோடை போல் இங்கே இருக்கும் Hospital லின் பெயர் சொல்லி அங்கே அட்மிட் என்றார்கள் 

மூன்று மாதம் பின் வந்த போது உடல் பருத்து சோகமாக வந்தாள். என்னவென கேட்ட்டேன் Depression என்றாள். அப்டின்னால் என்ன வருத்தம் என்று கேட்டேன். 21 வயதில் அப்போது இந்த நோய் குறித்து புரியவில்லை😭.  அடுத்த மாதம் தற்கொலை  செய்து கொண்டாள். . நான் அறிந்த முதல்  Depression இழப்பு.

2000  ஆண்டில் என் கண் மருத்துவர் முதல் நாள் ஐந்தரைக்கு எனக்கு கண் check  up  செய்தார். சோகமாக இருந்தார். விடிந்து பேப்பர் பார்த்தால்  விடிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. காரணம் Depression🖤

அதன் பின் பலர் பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் யாரையும் விட்டு வைக்கல்லை. ஏதோஒரு வகையில் மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருந்தது. இருக்கின்றது. தற்கொலைக்கு பின் காதல் தோல்வி, வேலையிட முதலாளி மாறியதால் புது முதலாளி கொடுத்த அழுத்தம், குடும்ப பிரச்சனை என பைத்திய காரருக்கு ஹாஸ்பிடல் ல் அட்மிட்  திடீர் திடீரென செத்து போனார் என செய்தி வரும். இப்படி யாரோ எங்கோஎன அன்றாட செய்திகள் போல் கடந்து வந்து கொண்டிருந்தேன். 

2011 ல் நானும் இரண்டு வருடம் போராடித்தான் மீண்டேன். நான் ஈவண்ட்ஸ் பார்ட்டி நிறுவனம் தொடங்க முன்  ( 1997-  2012 )  14  வருடம்  ஹோட்டல் மானேஜிமென்ட் வேலை செய்த போது ஒரு கட்டத்தில் வேலை செய்த எல்லோருக்கும் கை வலி, தலை, முதுகு வலி என்று டீம்  இல் அனைவருக்கும் ஏதோ ஒரு வலி. ஸ்கேன் க்கெல்லாம் அகப்படாத வலி. பிசியோ தெரபி செய்தாலும் பயனில்லை. எல்லோருக்கும் வலி என்றானதும் தீர்வு தேடி ஹோட்டல் சார்பில் மனோதத்துவம் சார்ந்த கோர்ஸ் ஒன்று மூன்று மாதம் நடத்தினார்கள்.

அதனோடு நான் ஹொஸ்பிடலிலும் இரண்டு மாத கோர்ஸ் ஒன்றும் செய்திருந்தேன்.
இரண்டிலும் எங்கள் பகுதி பிரபல மனோதத்துவ சிறப்பு  மருத்துவர் பாடம் நடத்தினார். மன அழுத்தத்துக்கும் உடலில் ஏற்படும் வலிகள், வெளிப்படையான மாற்றங்கள், வெளிப்படுத்த படாத உணர்வுகள் அழுத்தமாகி வெடித்து சிதறும் நிலை என பலவகை கற்றல்கள் கிடைத்தன. 

உடல் உள வலிகள் ஏன் எதனால் உருவாகின்றன? எப்படி மீண்டு வரலாம் என்று அருமையான விளக்கம் தந்தார். மன அழுத்தம் என்றதும் எம்மவர்கள் பைத்தியம், லூசு என்று கிண்டல் கேலி செய்வது போல் இது ஒதுக்கப்படும் பிரச்சனை இல்லை. 

Depression  ஒரு வகை நோய்..  பிரஷர், டயபட்டீஸ் நோய்களைப்போல ஒரு நோய். உடல் உறுப்புக்களுக்கு உருவாகும் நோய்கள் போல் உளவியல் சார்ந்து எதிர்கொள்ளும் நோய்.Depression  எனும் ஆழ்மன அழுத்தம் உருவாக எமது சமூகமும், சுழலும், நமது மனதும் அடிப்படை காரணங்களாக இருக்கின்றது. 

இது தான் எனும் நோய்க்காரணம் கண்டு பிடிக்கப்படாத பல வலிகள்,வேதனைகளுக்கு காரணம் நம்ம மனசு. 

ஆம் ... ! நம்ம மனசு இங்கே நமக்கு வலிக்குது என்றால் வலிக்கும், வலிக்கல்லை நான் ஸ்டெடி என்றால் நிமிர்ந்து  நிற்கும். 

முடியும் என்றால் முடியும்..! 
முடியாது என்றால் முடியாது ..! 
அவ்வளவு தான்..!🌻

வாழ்க்கை ரெம்ப சிம்ப்பிள். ❣️உங்களுக்குள் ஆயிரம் உடல் குறைபாடு இருக்கலாம். ஆனால் அது குறை என்று நீங்கள் நினைத்தால் தான் குறை. அதை விட நிறைவை தரும் பலது எமக்குள் ஒளிந்திருக்கே என தேட ஆரம்பித்தோம்என்றால் வாழ்க்கையில் தினம் தேடல்கள் புதிதாகி கொண்டே இருக்கும். 

எப்பவும் உயரத்தில் ஒரே இடத்தில இருக்க முடியாது. ஏறணும் அல்லது இறங்கணும்

குப்புற விழவும்வேண்டும் 
அப்ப தான் திரும்பவும் மேலேறும் போது முன்னிருந்த உயரத்தை விட பத்தடி இன்னும் உயரமா ஏறுவோம். 

ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் எதோ ஒரு தோல்வி வலி இருக்கும்...! எல்லா தற்கொலைக்கு பின்னும் Depression  இருக்குமா?

பதிவில் விபரமாக பார்க்கலாம்...! 

Depression : 
குறித்து ஆளாளுக்கு எழுதுறதை பார்க்கும் போது பலர் இந்த பிரச்சனை என்னமோ நாலு பேர் ஆலோசனையில் சரியாகிரும் என மேலோட்டமா, லேசா புரிந்து கொண்ட மாதிரி இருக்கின்றது 

"இது பெரிய பிரச்சனையில்ல, தியானம் பண்ணு, , புத்தகம் வாசி, பாட்டுக் கேளு, எப்பவும் அழுது வடியாமல் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கோ, நல்லாச் சாப்பிட்டுட்டு நித்திரை கொள்ளுங்கோ, ஏதும் கஷ்டமா இருந்தா யாரிடமாவது மனம் விட்டுப் பேசி இருக்கலாம். எனக்கு சொல்லி இருக்கலாம், எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசுங்கோ இப்படி பலப்பல..!

Depression பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஆழ்மன அந்தரங்க பிரச்சனை ஒரு நாளில் பேசி முடிவுக்கு வரும் விடயமா ? அடுத்தவர் ஆலோசனை வார்த்தைகளை கேட்கும் சுய உணர்வில் இருப்பாரா? 

மனதில் இருப்பதை வெளிப்படுத்தி பேசும்படி  ரகசியம் காக்கும் நம்பிக்கையை இந்த சமூகமும், இங்கே எழுதும் கவுன்சிலர்களும் தருகின்றார்களா? என்பதும் இங்கே கேள்விக்குரியது. 

ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் Depression,  ஆலோசனை, அன்பு, கவுன்சிலிங் என எழுதி கடக்கின்றோம் 

Depression  :
உலக மக்களில் சுமார் 15% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சிகிச்சை தேவைப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆண்கள் மற்றும் இளைஞர்களை விட இரு மடங்கு அதிகமாக Depression நோயால் பாதிக்கப்படுகின்றனர். 

மனச்சோர்வு பெரும்பாலும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட வயதுகளில் ஏற்படுகிறது.

❤️ Depression னில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நாம் யாருக்காகவும் இல்லை , நமக்காக வாழனும். என்னால் எல்லாம் முடியும் என நம்பனும்.  ரோபோ போல்  தொடர்ந்து வரும் வாழ்க்கையை மாற்றி பயணிக்கணும். நமக்கு பிடித்ததை செய்யணும் எனும்  உள்ளார்ந்த உணர்தலுடனான உள்ளுணர்வை தட்டி எழுப்பி , அடக்கி வைக்கப்பட்டிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து,  அழுந்தி கிடக்கும் மன உணர்வை அவர்களுக்கு பிடித்தமானபடி( இசை, வாசிப்பு, தோட்டம், உலாத்தல், எழுத்து, பயணம், நண்பர்களுடன் உரையாடல் ) என மாற்றி பயணிக்க வழி காட்டுதல்கள் தேவை

❤️ பாதிக்கப்படும் நபர் தன்னை தான் உணர்ந்து  மீண்டு வரணும் எனும்  முயற்சியும் அதற்கு பக்கபலமாக உறவுகளின் புரிதலும்  நீ எப்படி இருக்கின்றாய் எனும் உளமுணர்ந்த விசாரிப்பு அன்புக்காக ஏங்கும் ஒருவரின் உள்ளதை மென்மையாக வருடி  வாழ வேண்டும் எனும் ஆசையை உருவாக்கும் வரை தொடர்ந்து முயற்சி தேவை. 

Nisha l
20.06.2020 

அடுத்த பதிவையும் படியுங்கோ


Facebook : 

19 ஜூன் 2020

COVID - 19 சுகாதாரத் தொழில்களில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி சொல்வோம் .,!

ஸ்விட்சர்லாந்து  சொல்கின்றது:
" Thank  you "," நன்றி "," danke"
" merci ",grazie"," grazia" 
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

DIE SCHWEIZ SAGT
Es ist Zeit, "danke", "merci", "grazie", "grazia" zu sagen. 

20.03.2020 -  12.30 Uhr -  60 Sekunden lang. 

நாளை வெள்ளிக்கிழமை, மதியம் 12:30 மணிக்கு ஒரு நிமிடம் / 60 வினாடிகள் 

எங்கள் விட்டு பால்கனிகளில் நின்றோ யன்னல் கதவினை திறந்தோ 

👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எமது கரங்களை தட்டி நன்றி சொல்வோம் 

 24 மணிநேரமும் சுகாதாரத் தொழில்களில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

" Thank  you " ," நன்றி " , " danke", "merci", "grazie", "grazia" zu sagen. 

ஒற்றுமை என்றால் என்ன என்பதைக் காண்பிப்போம்। 

பெரியவர்கள், சிறியவர்கள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரிடமிருந்தும் கைதட்டல் 
தொடர்ந்து ஒரு நிமிடங்களுக்கு 
( வேலைத்தளங்களில் வேலை நிறுத்தி) அனைவரும்  பங்கேற்போம் 

நாங்கள் மோசமாக பாதிக்க பட்ட்தாக  உணரும்போது இரவும் பகலும் எங்களுக்காக இருப்பவர்களுக்கு, நமக்குத் தேவைப்படும்போது, ​​நாம் வேதனையில் இருக்கும்போது, ​​நாம் பயப்படும்போது, ​​அவநம்பிக்கையுடன்,  உதவியைத் தேடும்போது, ​

தாம் பாதிக்கப்படுவோம் என அறிந்தும் தன  உயிரை துச்சமாக்கி  அர்ப்பணிப்புடன் பணி செய்யும் அற்புதமானவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மனைகளில்  தாதியர், மருத்துவர்கள், உதவியாளர்கள் முதியோர் இல்ல பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

( இதே நேரம் எமது பாதுகாப்பு பணியில்  இராணுவம், காவல் துறை, உணவுப்பொருள் விற்கும் கடை பணியாளர்கள், தெருக்களை துப்பரவு செய்யும் பணியாளர்கள், பொதுப்போக்கு வரத்து பணியாளர்களுக்கும்  எமது கரங்களை தட்டி நன்றி சொல்வோம் ) 

சுவிஸ்  நன்றி சொல்கின்றது ❤️
சுவிஸ் மக்கள் நன்றி சொல்கின்றோம்❤️
இந்த பூமி வாழ் மக்கள் அனைவரும் ❤️
" Thank  you " ," நன்றி " , " danke", "merci", "grazie", "grazia" 

அனைவரும் இணைந்து கொள்ளலாம் 
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

உலகின் பல நாடுகளிலும் சம நேரத்தில் கைதட்டி நன்றி பாராட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

- Nisha 

Dieser Applaus von Ihnen allen, Gross und Klein, Alt und Jung, soll jenen Menschen gelten, die Tag und Nacht für uns da sind, wenn wir sie brauchen, wenn wir Schmerzen haben, wenn wir Angst haben, verzweifelt sind, Hilfe suchen, verletzlich sind: 

Den Krankenpflegerinnen und -pflegern, den Ärztinnen und Ärzten, den Assistentinnen und Assistenten 
All jenen wunderbaren Menschen, die in unseren Spitälern, in den Arztpraxen, in den Apotheken und Pflegeheimen immer für uns da sind, wenn es uns schlecht geht। Wenn wir am Verwundbarsten sind।

#dieschweizsagtDANKE #MERCI #GRAZIE #GRAZIA #THANKYOU #நன்றி
மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH)   Anaesthesiology இன்ஸ்டிடியூட்டில் பல மூத்த மருத்துவர்கள் மற்றும்  பி.ஜி மருத்துவர்கள் பட்டதாரிகள் கோவிட் -19 
Positive உறுதிப்படுத்த பட்டுள்ளனர்./ 11.06.2020 

ஏப்ரல் மாதத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதயவியல் துறையின் பல பி.ஜி மருத்துவர்கள் மற்றும் பணியாளர் , செவிலியர்கள் கொரோனா virus positive உறுதிப்படுத்த பட்டிருந்தனர். 

தற்போது  Anaesthesiology இன்ஸ்டிடியூட்டின் இரண்டு தலை மை மருத்துவர்கள் & மொத்தம் 14 பி.ஜி. மருத்துவர்கள், முன்னர் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட  பாதிக்கப்பட்டுள்ளனர்.


ராஜிவ் காந்தி மருத்துவமனைகில் மட்டும் மருத்துவ துறை சார்ந்தோர்  100 பேருக்கும் மேல் covid  19  தொற்று உறுதி பட்டிருக்கின்றது என்கின்றார்கள் / 12.06.2020  ) 

• 

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துறைத் தலைவர்கள் உட்பட 15 மருத்துவர்களுக்கும் தொற்று உறுதி பட்டிருக்கின்றது 

• 

சென்னை மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர் விடுதியில் மருத்துவ மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 42 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது./ 12.06.2020 


Europa  Covid 19  lockdown  ஆரம்ப நிலையிலேயே மார்ச் 16  தொடக்கம் கொரோனா Virus அறிகுறிகள் இருந்தால்  வீட்டில் தனியே இருக்கும் படியும் குடும்ப மருத்துவரிடம் தொலைபேசியில் ஆலோசனை பெறும் படியும். மருத்துவருடனான நேரடி  சந்திப்புகளை தடை செய்தது . மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது..மருத்துவமனைக்கு போன் செய்து முன் அறிவிப்புடன் அவர்கள் சொல்லும் இடத்துக்கு செல்ல சொன்னார்கள். 

அதுவும் கடுமையாக விமரிசிக்க பட்டது. covid  19  நோய் பரவலை பொறுத்த வரை அப்போதும் இப்போதும் அது சரியான திட்ட மிடல் என்றே கூறினேன் 

இந்த நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம். 

Swiss சின்ன நாடு . நிலப்பரப்பு குறுகி சனத்தொகை அடர்த்தி மிகு தேசம் என்பதால் ஆரம்பமே கட்டுப்பாடுகளை விதித்தது .இருந்தும் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை அடைந்த நாடுகளில் முன்னணியில் இருந்தது. காரணம்  சமூக இடைவெளி பேணும் படி குடியிருப்புகள் தூரமாக இல்லை.இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தம் மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பில்லாமல் பாதுகாத்து கொண்டது. 

கோவிட் -19 காரணமாக முழு உலகமும் கடினமான சூழலை எதிர்கொள்கிறது. பல நாடுகள் தற்காலிக பராமரிப்பு மையங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன, அங்கு நோயாளி - மருத்துவ குழு   இடையிலான தூரம் குறையக்கூடும். இதன் காரணமாக மருத்துவ குழு பாதிக்கப்படலாம். 

மருத்துவக் குழுவைப் பாதுகாப்பதற்காக ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது. காற்றோட்டமான பாதுகாப்பு அறையை உருவாக்குவதுதான் யோசனை. 

மேலும் விபரங்களுடன் வழி காடடல்களும் இந்த லிங்கில்


#Save_Medical_Staff in the War with Covid -19

மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

தமிழ் நாட்டில் நோய் மேலும் பரவாமல் அனைவரும் பாதுகாக்க பட ...!

இனிமேல் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த எந்த செய்தியும் அறிவதில்லை, எழுதுவது இல்லை, அவரவருக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் வரணும்? எனும் முடிவோடு  ஐந்து நாள் எதையும் பார்ககாமல் ஒதுங்கி இருந்தேன்.

இன்று ஒன்றுக்கு நான்கு பேர்
அக்கா..! நிலைமை மோசமாகுது, கிராமங்களிலும் கொரோனா வைரஸ் positive உறுதிபடுத்துகின்றார்கள். எங்கள் ஊருக்குள்ளும் வந்து விட்டது. எங்கள் தெருவில் ஒரு குடும்பத்துக்கு பாசிட்டிவ். அக்கா பக்கத்துக்கு வீட்டில் கொரோனா பொசிட்டிவ் உறுதி படுத்தி எங்க தெருவே  இப்போ Block செய்திருக்காங்க. நாங்கள் என்ன செய்வது என புரியல்ல பயமாக இருக்குது ஏதேனும் நம்பிக்கை,வழி காட்டல் தரும் படி  எழுதுங்கோ எனும் வேண்டுகோள்..! எழுதுகின்றேன் ✍️✍️

அவர்களுக்கு சில பதிவும் லிங்கும் அனுப்பி விட்டேன். இங்கே அது தேவையில்லை .

ஆனால்...! 
தமிழ் நாட்டில்...?

கடந்த மூன்று நான்கு மாதத்தில் என் தமிழ் நாட்டு நண்பர்கள் பலர் பதிவுகள் அவர்களின் கொரோனா வைரஸ் குறித்த அறிவியல், அறிவார்ந்த புரிதல்கள் குறித்து தெளிவாக புரிந்தும் கொண்டேன்.

அது ....! 
மருத்துவர்கள் சொல்வது தான் வேத வாக்கு, Facebook  பதிவில் 100 லைக் விழுந்தால்  ஆதாரமில்லாதவைகளை உண்மை என  நம்புவார்கள். பரப்புவார்கள். நாலு பேருக்கு இலவச உதவி செய்கின்றேன் என்று  சொல்லி கொண்டால் போதும்.செய்திகளுக்கு  ஆதாரம், ஆய்வு குறித்தெல்லாம் தேவையில்லை.

ஈழத்தமிழர் என்றால் அழுவாச்சி காவியம் பாட தான் லாயக்கு எனும் எண்ணம் தமிழ் நாட்டில் பலருக்கும் உண்டு. இலங்கை மக்கள்  தமிழ் நாடடவர் எழுதும் பதிவுகளை உள் உணர்ந்து வாசிப்பது போல்  தமிழ் நாட்டு தமிழர் ஈழத்து மக்கள் பதிவுகளை  உணர்வதில்லை தொப்புள் கொடி உறவென ஈழத்தவர் காட்டும் கரிசனம், உரிமை உணர்வு மட்டுமல்ல அவர்களுக்கும் அறிவும் ஆற்றலும்உ
ண்டென தமிழ் நாடடவர் புரிந்து கொள்வதும் இல்லை. அழுது புலம்பி, யுத்தம், சோகம், அழிவு கஷ்டம் என்று எழுத தான் லாயக்கு என நினைப்பும் பலருக்குள் இருக்கு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள Covid -19  காலங்கள் உதவி இருக்குது. ( Arul Kumar SP ஐயா மன்னிக்கவும் இது உங்களுக்கு அல்ல  )  

உலகின் முக்கிய மொழிகள்  பேச வாசிக்க தெரிந்த  அறிவியல், விஞ்ஞான, மருத்துவ தகவல்களை தேடி அறியும் ஆர்வம் கொண்டவர்கள் தரும் ஆதார அனுபவ தகவல்களை கொஞ்சமேனும் நம்பனும். ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி என முக்கிய மொழிகளில் Covid - 19  குறித்து அந்தந்த நாடுகளின் சுகாதார துறை வெளியிடட அறிக்கைகள், விஞ்சான அறிவியல் விளக்கஙகள், மரபணு மாற்றங்கள் குறித்தெல்லாம் தமிழுக்கு மாற்றி பகிர்ந்தோம். அதில் என்ன இருக்கு என வாசித்தாவது உண்மை நிலை புரிந்து கொள்ள முயற்சி.....ஜஸ்ட் ஒரு செய்தியை அறியும்ஆர்வம் கூட பலருக்குள் இல்லை. 

கொரோனா வைரஸ் செய்தி ஒன்றுமே நாங்கள் வாசிப்பது இல்லை. எங்களுக்கு பயமாக இருக்கின்றது, கதை அட்டை பகிருங்கோ,  கதை சொல்லுங்கோ புகைப்படம் போடுங்கோ என சிந்தனையை திசை திரும்புவதாக உலகத்தின் உண்மை நிலைமறைத்து  தமக்கென போலியான உலகத்தை உருவாக்கி கொண்டோர் அநேகர்..! எந்த நேரத்தில் எதை செய்யணும் என அறிவு இல்லாதவர்கள் வாழ்க்கை குறித்து எத்தனை நீதிக்கதை படித்தாலும் அத்தனையும் வீண் தான் 

மருத்துவர்கள் தான் கொரோனாவைரஸ் குறித்த தெளிவான விழிப்புணர்வு பதிவு தருவார்கள்  என்பது இல்லை. உண்மையில் மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை, பதட்டத்தில் அவர்களுக்கும் covid -19  குறித்த தற்பாதுகாப்பு தெளிவு குறித்து தேடி அறியும் மன நிலை, நேரம் இருக்குமோ என்னமோ? 

வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் எனும் நம்பிக்கை போல் டாக்டர் சொன்னால் மட்டும் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புவதும், கானல் நீரை உண்மை என எழுதி, கற்பனை உலகை உருவாக்கி,  கொரோனவா  அது ஒண்ணுமில்லை, எங்க பாரம்பரியம் உணவு முறை காப்பாற்றும் எனும் நம்பிக்கை கொடுத்த அசட்டை தனம், எங்கள் நாட்டின் அழுக்கு தூசி.துரும்பு  போதுமான நோய் எதிர்ப்பை உருவாக்கி இருக்கும்.. soooo ... நோ panic ... நோ பயம் என சும்மா தோணுவதை எல்லாம் ஆதாரமே இல்லாமல் எழுதும்  பதிவெல்லாம்  100 , 1000 லைக் விழுந்தால் முக்கியமானது.  உண்மை சொல்வது என்று நம்பி....🙆‍♀️!

எத்தனை பேர் பதிவை படித்து உண்மை உணர்ந்து லைக் போடுகின்றார்கள் என்பதை சிலரின் பதிவு போட்ட நொடியில் விழும் லைக் உணர்த்தும். கண்ணதாசன் நிரூபித்தது போல் இங்கே படைப்பின் கருத்தை விட படைத்தவனுக்கு  ஜால்ரா செய்யவே பெரும் ஆட்டு மந்தை கூட்டம்  உண்டு.

அம்மை நோய் தொற்று உருவான போது கடவுளின் கோபம் என அக்கால மக்களை நம்ப வைத்து வேப்பிலை கட்டி வீட்டுக்குள் அமர வைத்து காப்பாற்றிய மூத்தோர் வாழ்ந்த சமூகத்தில் இத்தனை அறிவியல் வளர்ந்த பின்னும் மக்களுக்கு தற்கால பரவும்  நோய் கொடுத்த தெளிவை உருவாக்க முடியவில்லை என்றால் உங்கள் வளர்ச்சியும், பெருமையும் எத்தகையது என இனி என்றாலும்
ஆராய்ந்து கொள்ளுங்கள்

இணையத்தில் அதிலும் Facebookil  எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு தர முடியாது எனும்சப்பை காரணம் வேண்டாம். இதே இணையத்தில் நீங்கள் எழுதுவதை நம்பி நிவாரணம் எனும் பெயரில்  பல இலட்சம்  நிதி சேர்க்க முடியும் போது  ஒவ்வொரு சோத்து பார்சலோடும் அந்த உணவு கொடுக்கும் நிலை ஏன் உருவானது எனும் விழிப்புணர்வும்  சேர்த்து உருவாக்கி இருக்க முடியும்.

அதுக்கு தான் அரசு lockdown அறிவித்தது. 

ஆனால் நடந்தது என்ன? 

• உலக உணவு துறை ஒரு பக்கம் பசி பஞ்சம். 
• உலக சுகாதார நிறுவனம் கொள்ளை நோய்
• ஒருபக்கம் வெட்டுக்கிளி மில்லியன் டன்கணக்கில் உணவு விளைச்சலை  நாசமாக்குது 
•சூரியனில் என்னமோ கோளாறு, அதனால் இனி வரும் காலம் காலநிலை மாறும், அதனால் விவசாயம் செழிக்காது, உற்பத்தி குறையும் என நாசாவும் உலக சூழலியல் துறையும் கத்துது.

எவன் என்ன சொன்னால் எனக்கு என்ன? எனக்கு மூணு வேளை சோறு முக்கியம். இது தான் முக்கியம்..! 

அவனவன் பிழைப்பே அந்தரத்தில் நிற்கும் போது எதிர்காலமே இல்லாமல் வாழ்வா சாவா எனும் ஆபத்து சூழ்வதை உணர்ந்து  எழுதியோரையும்  panic, பதட்டம், பயம் என சொல்லி மிரட்டி அடக்கி...! எல்லோரும்அறிவாளிகளாகி வருமுன் காக்கும் எந்த வித முன் எச்சரிக்கையும் இல்லாமல் உண்மையை, உள்ளதை சொல்லி புரிய தெளிய வைக்காமல், போகும் போக்கில் அடித்து விட்ட்தான் நிலை இன்று ஏழை அப்பாவிகள் மேல் விடிந்திருக்கு🤷‍♀️. 

COVID - 19  நோய் பாதுகாப்பு, பரவல் தடுப்பு எனும் முக்கிய விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்பது சட்டம் போடுவது, திட்டங்களை  அறிவிப்பதுடன் ஆரம்பித்தாலும் அதன் வெற்றி என்பது  மக்கள் தரும் ஒத்துழைப்பில் புரிதலில்  தொங்கி நிற்கின்றது. 

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் மட்டும் குறியாக இருந்து மக்கள் உயிர்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் கொரோனா வைரஸ் நோய் பரவி 1000  பேரை சாக விட்டு  lockdown  அறிவித்தது.. அதுக்கு நேர்மாறாக இந்தியா, இலங்கை நாடுகள் ஆரம்பத்திலேயே lock down போட்டு உலக நாடுகளின் பாராட்டை பெற்றது. ஆனால் அரசின் இந்த முயற்சி ஏன் என்று புரிந்து கொள்ளும் தெளிவற்ற சமூகப்போராளிகளை  பின் பற்றும் அறியாமை கொண்ட மக்கள் lockdown  காலம் என்பது இனி வர போகும் நெருக்கடி மிகுந்த காலத்துக்கான முன்னோடி என்றும்
புரிந்து கொள்ளாமல் , திட்டமிட காலம் இல்லாத நெருக்கடி நிலையில் நாட்டின். வசதி வாய்ப்பு, மக்கள் தொகை, மருத்துவ வசதிக்கு மக்களை பாதுகாக்க lockdown  அறிவிப்பு தவிர வேறு வழி இல்லை என்றும் தன்னை சூழ போகும் அவசர ஆபத்து குறித்த  முன் நோக்கம் இல்லாமல்,மக்கள் மத்தியில் lockdown குறித்த எதிர்ப்பை உருவாக்கினார்கள். 

நோய் குறித்த விழிப்புணர்வு கிராமத்து மக்களுக்கு செல்லவும் இல்லை. கற்றோர் அதிகம் வாழும் சென்னை போன்ற பெரு நகரங்களில்  மக்களுக்குள் போதுமான விழிப்புணர்வு உண்டென நம்பிக்கையும் சிதறுகின்றது . 

சென்னை இல் என்ன நடக்குது? 

சென்னையிலிருந்து கொத்துக்கொத்தாக மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நகர்வதால் Panic அதிகமாகி பயமும் பதட்டமுமே நிறைந்து  15 day’s Quarantäne and Mask கொரோனா Virus பாதுகாப்பு கவசம்  எனும் நம்பிக்கையோடு. பெரும்பாலோனோர் வைரஸ் நோய் காவுவதை குறித்த தெளிவு இல்லாமலே இடம் பெயர்வின் மூலம் நோய் காவிக்கொண்டே தம்மை சமூக பொறுப்பாளர்களாக நியாயப்படுத்தி கொள்கின்றார்கள். இவர்கள் அறிந்து தான் தம் செயலை நியாயப்படுத்துகின்றார்களா? 

ஐரோப்பாவில் நோய் தொற்று பரவுகின்றது என்பதை அதன் விளைவுகளை இழப்புக்களை ஆரம்ப முதல் சமூக அறிவியல், அரசியல், பொருளாதார நிலைகளோடும், ஒவ்வொரு நாட்டின் வளங்கள், வசதிகளோடும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து  நுறு ஆண்டுகளில் இதே போல் கொள்ளை நோய் கொடுத்த இழப்புக்களையும் தேடி அறிந்து, நாங்கள் அறிந்ததை  எங்கள் மக்களுக்கு  அறிவித்து பாதுகாக்கணும், அவர்களை எச்சரிக்கணும்.அவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கணும் என எத்தனை வேண்டல்கள்...! 

செருப்பால் அடிக்கவில்லை என்பதை தவிர அத்தனையும எங்களை நோக்கி ஏவப்படடன. ஓவர் பரப்புரை, நெகடிவ் வதந்தி, பெரிய பெரிய கட்டுரை ..Panic  என எத்தனை கிண்டல் அதுக்கு வேற விளக்கம் என தொடர்ந்த மன உளைச்சலுடன் இலங்கையில் விழிப்புணர்வை உருவாக்கியதில் நாங்கள் குழுவாக வெற்றி கண்டோம் எனும் உண்மை இந்த இடத்தில இதை வாசிக்கும் தமிழ் நாட்டு நண்பர்களுக்கு புரியனும். எங்கள் பதிவுகள் 100, 1000  like  share ஆகவில்லை. ஆனால் அதை வாசித்த பத்து பேர் மகத்தான ஆளுமைகளாக அரசு, சுகாதார துறை, மருத்துவ துறை சார்ந்த முடிவுகள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுகளை தெளிவாக எடுக்கும் வலிமை கொண்டவர்களாக தங்களையும் மக்களையும் பாதுகாத்து கொண்டார்கள்.

தமிழ் நாட்டில்...? 

ரெண்டு வரியில் குரலுக்கு பத்து வரி விளக்கம் தேடுவோருக்கு நீண்ட பதிவு  கட்டுரை சொந்த சோகம் என்றால் உச்சு கொட்டி படிப்பார்கள். தங்கள் உயிர் வாழ்வாதாரம் குறித்து  ஆராய்ந்து அறிய மனதில்லை. பத்திரிகை, தொலைகாட்சி களின் தலைப்பு செய்திக்குள் மொத்ததையும் அடக்கி கொண்டார்கள். 

இன்று செய்திக்கு தலைப்பாகி நிற்கின்றார்கள்...😭!

தலைக்கு மேல் கத்தி தொங்குது என்று கத்தினோம். யாரும் கண்டுக்கல்ல. இனி கத்தி எங்கே தொங்கினாலும்  நாங்கள் கத்தி பயனும் இல்லை...🤷‍♀️!

COVID  - 19  குறித்து தெளிவை அடைந்தவர்கள் வீடடை விட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்து கொள்கின்றார்கள்.  அறியாமையும் தெளிவும் இல்லாத  90 % தமிழ்  நாட்டு தமிழர்களுக்கு இன்னமும் தங்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியின் ஆபத்து குறித்து  புரிய இல்லை.....🖤! 

🔹

நோய் மேலும் பரவாமல்  அனைவரும் பாதுகாக்க பட  கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் சுகாதாரத்துறையும், இராணுவமும், காவல் துறையும் இணைந்து கொள்ள வேண்டும் 

தமிழ் நாட்டு அரசு உடனடியாக இராணுவத்தை களமிறங்கி இடம்பெயரும் மக்களை தடுத்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் இன்றைய நிலையில் தீர்வாக இருக்கும் 

இதுவே வழி..! 


 COVID-19 pandemic in India
Map of confirmed cases per million residents
18.06.2020
 COVID-19 pandemic in India
Map of confirmed cases (as of 18 June 2020)


COVID-19 pandemic in India
Map of active cases (as of 18 June 2020)

COVID-19 pandemic in India
Map of deaths due to the pandemic (as of 18 June 2020)Nisha 
19.06.2020 

13 ஜூன் 2020

பறவைகளின்_சரணாலயம் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட வேண்டும்.-2

#வேடந்தாங்கல்_பறவைகள்_சரணாலயம்2
#save_vedanthangal_bird_sanctuary

வனத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஊடக அறிக்கையை வெளியிடட பின் சரணாலயத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கான போராட்டம் தூரமாகவே இருக்கின்றது என்கின்றார் Deepak Nambiar. India ,JUN 11, 2020 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் இயற்கை பாதுகாப்பு அரசியலாக்கப்படுவதும்,
அப்பகுதிக்கான பாதுகாப்பை குறித்து  மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் சரியானதா? 

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி  ஜூலை 1998 பறவைகள்சரணாலயமாக அறிவிக்கப்பட்டது .சரணாலய எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள பகுதி வனவிலங்கு சரணாலயத்தின்  பாதுகாக்கப்படட பகுதியாக இது வரை இருந்து வருகிறது. 

இந்தியா வனவிலங்கு பாதுகாப்பு சட்டடத்தின் படி  வேடந்தாங்கல் சரணாலயம் அமைத்திருக்கும் 5 கி.மீ எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது.  இப்பகுதி சரணாலயத்துக்கான முழு பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

வனவிலங்குகளை பாதுகாப்பது பற்றி அரசு எப்போதும்.  அக்கறை கொள்வதில்லை . கடந்த காலத்தில்  
• 1980 களின் முற்பகுதியில், கிண்டி தேசிய பூங்கா கசாப்பு செய்யப்பட்டு, நிலத்தின் பெரும்பகுதி தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

 • 1990 களின் பிற்பகுதியில், பள்ளிக்கரணை(பல்லிகாரனை)
சதுப்பு நிலம் ஐ.டி நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது, 

இப்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி கவனம் திருப்பி இருக்கின்றார்கள் 

இந்த பகுதியில் என்ன நடக்கின்றது? 

🔹 1. கடந்த ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது.  

🔹 2. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

பறவைகள் சரணாலய பரப்பளவை சுருக்குவதற்கான காரணங்களாக ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் தமிழக அரசு சொல்லியவை:

🔴 இதன்மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

🔴 அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது. இதனைத் தடுக்கவே சரணாலய பரப்பை குறைப்பதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்திருந்தது. 

🔴 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும். நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும்.

⚫️ ஜூன் 3, 2020.  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  Sun Pharma’s போன்ற  நிறுவனங்கள் வணிக மற்றும் தொழில்துறை டெவலப் செய்யவே இந்த முடிவை வனத்துறை அதிகாரிகளும் அரசும் எடுத்திருந்ததாக வெளியிட்டிருந்தது. 

🟢 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பதிலளித்த Sun Pharma’s  ஜூன் 8 அன்று "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள்  உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை" என்று ட்வீட் செய்ததோடு "நிறுவனம் ஆலைக்கு அருகில் அல்லது சரணாலயத்திற்குள் எந்த கூடுதல் நிலத்தையும் வாங்கவில்லை. வேதாந்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் பல்லுயிர் மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ”என்றும் அறிக்கை செய்கின்றது  ( படம் இணைப்பு)

தமிழக அரசின் இந்த முடிவு தொடர்பாக கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஏரியைச் சுற்றியுள்ள 
🔺 முதல் 1 கிலோமீட்டர் சுற்றளவை core zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை buffer zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை eco sensitive zone ஆகவும் வகைப்பாடு செய்யப்போவதால் மொத்தமுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியையும் பாதுகாக்க முடியும் எனவும் சரணாலய பகுதியை தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக்கவோ, வர்த்த்க நிறுவனம் அமைக்க அரசு உதவுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

⁉️ எமக்குள் எழும் சாதாரண கேள்விகள்? 
வனச்சரணாலயப் பகுதியை சாதாரணப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று தேசிய வனவிலங்குகள் நலவாரியத்திடம் விண்ணப்பித்து விட்டு, அதை தமிழக மக்களிடம் மறைப்பது ஏன்? 

⁉️ 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை குறைக்கும் எண்ணமில்லை என்று கூறியிருந்தாலும்  கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு மத்திய அரசிடம் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான அனுமதிகோரி சமர்ப்பித்த விண்ணப்பமானது தற்போது வரை திரும்பப்பெறவில்லை. ஏன்? 

⁉️  Sun Pharma’s மருந்து நிறுவனத்தின் ஆலை ஏற்கனவே வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிக்குள் தான் உள்ளது. ஆனாலும் அந்த ஆலை வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட 1998-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டது என்பதால் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்க முடியாது எனும் நிலையில் ........! 

⁉️ Sun Pharma’s மருந்து உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக மே 30ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் அளித்த விண்ணப்பத்தில் தனது விரிவாக்கமானது சரணாலயத்தின் எல்லையிலிருந்து 0.72 கிலோமீட்டர் தொலைவிலும், ஏரியின் எல்லையிலிருந்து 3.72 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாக தெரிவிதிருக்கின்றதெனில் இது 
எப்படி சாத்தியப்படும்? 

⁉️ இந்த பகுதியில் எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது. இந்த சூழலை மாற்றி Sun Pharma’s  நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிப்பதற்காகத் தான் சரணாலயப் பகுதியின் கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவை சாதாரணப் பகுதியாக மாற்ற வனத்துறை முயல்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையா?

அத்தனையும் இதை வாசிக்கும் உங்கள் சிந்தனைக்கே விடுகின்றேன். 

இவ்வாறான இன்னும் சில  அடுத்த பதிவில் ......✍️✍️

பதிவின் தேடலில்  நன்றி  🙏
News 18: 
DTNEXT : 

Science Thewire:

• 

மனிதர்களின் அத்துமீறல் பேராசைகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும் வனங்கள் பற்றி எரிவதும், வன வாழ் ஜீவராசிகள் அழிவதும் உலகளாவிய ரீதியில் கடும் பாதிப்பை தந்து கொண்டிருப்பதையும் இயற்கையை பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் தும்பை விட்டு வாலை பிடிப்பதும் எல்லாம் கைமீறி போன பின் அழுது புலம்புவதும் எங்கள் வழக்கமாகி கொண்டிருக்கின்றன 

காட்டின் மரங்களை அழித்து, அதன் அமைதியை சீர் குலைத்து தம் வாழ்விடங்களை விட்டு மக்கள்
குடியிருப்புகள் நோக்கி வரும் மிருகங்கள், அழிந்து வரும் பறவையினம், பூச்சிகள் குறித்து மில்லியன் கணக்கில் இயற்கைக்கு மாறான இனப்பெருக்கங்கள், வெட்டுக்கிளிகள் இடம்பெயர்ந்து அழியும் விவசாய நிலங்கள் நம் கண் முன் காட்சிக்ளாக விரிந்திருந்தும்சில நேரங்களில் எங்கள் சிந்திக்கும் திறன் மழுங்கி தான் போகின்றது.

எப்போதும் போல் இந்த இயற்கை பாதுகாப்பு செயல் பாட்டிலும் அரசியல் தலையீடும்  அறிக்கைகளுக்கும் பின்னணியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் குறித்து வரும் செய்திகளில்  காணப்படும் முரண்களை ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்ளாமல் வனத்துறை அதிகாரிகள் தரும் விளக்கத்தை அப்படியே நம்பி ஏற்று கொள்வதால் வேடந்தாங்கல் சரணாலயத்தில் பாதுகாப்பு தூரமாகி கொண்டே இருக்கின்றது 🖤

திட்ட மிடட அரசியல் தலையீடுகள்  மக்களிடமிருந்து இந்த வனப்பாதுகாப்பு குறித்த அக்கறையை சந்தேகத்துள்ளாக்கும் நோக்கத்தில் இருக்குமோ எனும் ஐயமும் எழுகின்றது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதன் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் தன்னை உயிர்ப்பிக்கும் போது தான் இவ்வுலகில் மனிதர் வாழ்க்கை சமப்படும். இயற்கை அழியும் போது மனிதர்கள் வாழ்வாதாரம் கடும் நெருக்கடியை சந்திக்கும். , 

"ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சி படையெடுப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்த நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் தேவை " 

#save_vedanthangal_bird_sanctuary

#பறவைகளின்_சரணாலயம் 
#வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட வேண்டும்.

பறவைகள் சரணாலயத்தை 40 சதவீதத்திற்கு மேல் சுருக்கிவிடும் மாநிலத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் ...! 


தேசிய வனவிலங்கு வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை திரும்பப் பெறுமாறு மேலுள்ள தளத்தில் வாக்கிடுவதன் மூலம் உங்கள் எதிர்ப்பை தெரிவித்து இயற்கையை பாதுகாக்கும்  உலகத்தாரின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை உறுதி படுத்துகின்றிர்கள்.

Nisha 
13.06.2020 
Save Nature Save Future

Face book :

12 ஜூன் 2020

Coronavirus Vaccine Tracker

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு  ( கோவிட்  19 )  எதிராக 135 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள். 

அந்த ஆய்வுகள் குறித்து   நியூ யார்க் டைம்ஸ் தொடர்ந்து  பதிந்து  வருகின்றார்கள்.

SARS-CoV-2 முதல் தடுப்பூசி பாதுகாப்பு சோதனைகள் ( மனிதர்களுக்கு ) மார்ச் மாதத்தில் தொடங்கியது.


புதுவகை தடுப்பூசி கண்டு பிடிக்க பலவருடம் ஆராய்ச்சிகள் தேவை என்றாலும் covid  19  க்கு ஒரு வருடத்துக்குள் தடுப்பூசி கண்டு பிடித்து விடுவோம் என்று ஆய்வாளர்கள் சவால் விட்டு தொடர்கின்றார்கள் 

இது வரை எந்த  முன் நகர்வும் இல்லை 

யாரும் அங்கே இங்கே மருந்து ஊசி கண்டு புடிச்சாச்சு என்று சொன்னால் அதை பகிர முன் 
இந்த லிங்க் ஒருக்கா எட்டி பாருங்கோ..! 
தப்பில்லை 🌻

Face book: 


தடம் மாறும் அரசின் பெயர் மாற்றம் ஏனோ?

தமிழக அரசியலின் பின்னணியில், தமிழ்நாட்டில், 1,018 இடங்களுக்கு தமிழில் பேசும் விதத்தில் ஆங்கிலத்தில் எழுதும்   பெயர் மாற்றும் செயல்முறை  தமிழ் மொழி வல்லுநர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஏப்ரல் 1 ம் தேதி மாநில அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு ஜூன் 10  இன்று முதல் அமுலுக்கு வந்திருக்கின்றது. 

அதன் படி இனிமேல்...! 
Tamil -   ‘Tamizh’ - 
• Madurai - Mathurai.
• Coimbatore- Koyampuththoor
( கோயம்புத்தூர்) 
 • Vellore  ( வேலூர்) -   Veeloor( வீலூர்) 

மற்றும் சென்னையின் சின்னமான புறநகர 
• Mylapore - Mayilaappoor( மயிலப்பூர்)

• Trichy - Thiruchirapalli 
என்று மாற்றப்படும். 


ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உலக நாடுகள் தடுமாறுகி ன்றன.எதிர் காலத்தில் கொரோனா Virus பரவலால் பெரும் உயிரிழப்பும் , கடும் உணவு பஞ்சமும் ஏற்படும் என ஐ நா வும் உலக உணவு நிறுவனமும் எச்சரிக்கின்றனன.வளர்ந்த நாடுகளும், ஏழை நாடுகளும் மக்களை தற்சார்பு வாழ்க்கைக்கு தயார் படுத்துகின்றன, 40 வருடங்கள் தொடர் யுத்தத்தால் சிதைந்து போன இலங்கை கூட சுதாகரித்து வீட்டு தோட்டம்  விவசாயம் என்று மக்களை ஊக்குவிக்கின்றன. 

ஆனால் தமிழ் நாட்டில் ... ? 

தமிழ் நாட்டில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டு வேலையில்லாமல் பலர் அன்றாட உணவு தேவைக்கே சிரமப்படுகின்றார்கள். Covid 19 தொற்று நோயாளர்கள்  எண்ணிக்கை  அசூர வேகத்தில் மேலேறுகின்றது. 

மாநிலத்தின் அனைத்து நிர்வாகத்தின் ஆற்றல்களும் கோவிட் -19  நோய் குறித்த எச்சரிக்கை பாதுகாப்பு, தடுப்புமுயற்சிகள், பாதிக்கப்படும் மக்களின் அத்தியாவசிய தேவைகள், உணவு திடடமிடல்கள், சேமிப்புகள்  ஆக்கபூர்வமான செயல்பாடுகள் போன்றவைகளை குறித்து அக்கறையோடு செயல் படவேண்டிய   இக்கட்டான  நேரத்தில் இந்த பெயர் மாற்றங்களால் அதிகாரிகள் அனைவரையும் பெயர்-பலகைகளை மாற்றுமாறு வலியுறுத்த படுவார்கள் என்றால் அரச அதிகாரிகளின்  கவனம் திசை திரும்பும்.

தேவையில்லாத பொருள், பணசெலவீனங்கள்,  வீணாகப்போகும் மனித ஆற்றல்  சக்தி  மற்றும் கால விரயங்கள் குறித்தும்  திருத்தம் தேவைப்படும் அனைத்து  இடங்கள், பெயர்பலகைகள் உதாரணமாக  #ஆதார் அட்டைகளையும் அதற்கான செலவுகளையும் கற்பனை செய்து பாருங்கள்! 

பொருளாதாரம் ஏற்கெனவே சீரற்று இருக்கும் இந்த தருணத்தில்  இந்த  செலவுகள் தேவை தானா? 

தமிழ் நாட்டு அரசின் இந்த செயலானது மக்கள் இருக்கும் அபாய நிலை உணர்ந்து விட கூடாது, சுயமாக சிந்தித்து விட கூடாது எனும் நோக்கத்தில்  கோவிட் -19 ஐ அரசு நிர்வாகம் கையாள இயலாமையிலிருந்து  கவனத்தை திசை திருப்பி உணர்ச்சிபூர்வமான பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்க முயற்சிப்பது தெளிவாக தெரிகின்றது "எப்படி எதை செய்தால் தன் மக்களை உணர்ச்சி குவியலில், போராட்ட மூவ்மெண்ட்ஸில் வைத்திருக்க  முடியும் எனும்  நாடித்துடிப்பு தெளிவாக தெரிந்தே தமிழ் நாட்டு அரசு செயல் திட்ட்ங்களை அறிவிக்கின்றது.

அதில் அடுத்த ட்ராமாவாக  கோவிட்  நோயாளர்கள் அதிகரிக்கும் போது தமிழக அரசு இடங்களின் பெயர்களை மாற்றும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. 

பெரும்பான்மை மக்களும்  கண்டிக்காமல் வழக்கம் போல் நகைசுவை பதிவுகளும் மீம்ஸ்களும் வெளியிட்டு இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் என்ன நோக்கத்தில்  அரசு அறிவித்ததோ அதில் வெற்றி பெற செய்து   கொண்டிருக்கின்றார்கள்🖤

இந்தியாவை பொறுத்தவரை ஜோதிடம், வாஸ்து என ஊர்கள் பெயர்களை அடிக்கடி மாற்றுவது புதிது இல்லை.ஆனால் எந்த நேரத்தில் எதை செய்யணும்,செய்யக்கூடாது எனும் வரையறை உண்டு. Lockdown காலத்திலும் தேர்வு வைப்போம் எனும் அறிவித்தல் போலவே இந்த அறிவிப்பும் மக்களுக்கு உள்ள யதார்த்த நிலை, சூழலை உணர்த்தாமல் அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க   மக்களை அவர்கள் சிந்தனையை திசை திருப்பி விட்டிருக்கின்றது.

அரசின் இவ்வாறான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடுக்கப்பட வேண்டியதுமாக இருக்கின்றது.