01 ஜூன் 2020

பாலைவன வெட்டுக்கிளிகள் - 1 / « எதுவும் மிச்சமில்லை »

« எதுவும் மிச்சமில்லை »


கடந்த மார்ச் மாதம் கென்யாவில்  தினை. பீன்ஸ். பருத்தி. அறுவடைக்கு தயாராக இருந்தன,

வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள்” திடீரென எங்கிருந்தோ கிளம்பி பயிர்களை ஆக்கிரமித்தன.

கென்யா அரசு விரைந்து விமானத்தின் மூலம் பூச்சுக்கொல்லி மருந்துகளை தெளித்தன.
ஆனாலும் எல்லாம் too  late ..! 

« எதுவும் மிச்சமில்லை »

அனைத்தையும் தின்று தீர்த்து  சமகாலத்தில் மேலும் 9  ஆபிரிக்க நாடுகளை ஆக்ரமித்து கொண்டன. 

பூச்சி கொல்லிகள் முதல் தலைமுறை வெட்டுக்கிளிகளை கொல்கின்றன. அடுத்த தலைமுறை வெட்டுக்கிளி திரளாக ( லார்வாக்கள்)  வளர்கின்றன. சில வெட்டுக்கிளிகள் முடடையிட்டதும் இறக்கின்றன. முடடைகள் குஞ்சாகி பறக்குமுன் அழிக்கப்பட வேண்டும்
இது மிகவும் ஆபத்தானது. பூச்சிகள் திரும்பி வந்து கொண்டே இருக்கும்.

வெட்டுக்கிளிகளை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் 20 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தப்படும் என்று ஐ.நா. கென்யா அரசை எச்சரித்திருந்தது. 

வெட்டுக்கிமிகளுக்கு என்ன கட்டுப்பாடு 
அவைகள் ஜாலியாக கிழக்காசிய, மத்தியகிழக்கு நாடுகளை நோக்கி படை எடுத்து விட்டன

பாலைவன வெட்டுக்கிளி இந்தியா இலங்கை நோக்கிய படையெடுப்பு .......!

அழிக்கப்பட்டே ஆக வேண்டும் 

இலங்கை சோளன் தட்டுப்பாடு என திரிபோஷா தயாரிப்பு தடைக்கு பின் இருக்கும் உணவு பற்றாக்குறை .பறந்து வரும் வெட்டுக்கிளிகளை அழிக்க விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கையை எமக்கு தருகின்றது. 

எத்தியோப்பியா, எகிப்து நாடுகள் வெட்டுக்கிகள் ஆக்கிரமிப்பை விமானங்களிலிருந்து பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதன் மூலமே அழிக்கின்றன.

பூச்சி கொல்லி மருந்துகளை விமானத்திலிருந்து தெளிக்கும் முன் ஏற்பாடுகள் , மக்களுக்கான விழிப்புணர்வுகளை சமூக ஆர்வலர்கள், அரச அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து ஏற்படுத்துங்கள் 

பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்க நிலங்களில் 48  மணி நேரம் மனிதர் நடமாட்டம் கூடாது. செத்து விழும் பூச்சிகள் மழைநீரோடு நதிகளில் சேராமல்  கூட்டி எரித்து  ...? 

#foodsecurity 
#DesertLocust

தொடர்வோம்


Link: 

2 கருத்துகள்:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!