30 ஜூன் 2020

தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..

இலங்கை,  தமிழ்  அரசியல்வாதிகளின் தேர்தல்   பிரச்சாரத்தில்...! 

இலங்கையில் தமிழர்கள் சார்பில் அரசியல் களத்தில் நிற்போர் என்ன கற்றிருக்கின்றார்கள்? எவ்வளவு சொத்திருக்கின்றது? எதை சுரண்டி இருக்கின்றார்கள் எனும் தனி மனிதர் தூற்றலும் போற்றலும், ஆளுக்கொரு தலைவனை முன் நிறுத்தி ஆபாச அர்ச்சனைகளும் அதிகமாகி கொண்டிருக்கின்றதே அன்றி...! 

▪️பிளவு பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து,தமிழ் இளைய தலைமுறையை சீர்படுத்துவோம்.

▪️வீழ்ச்சியடையும் கல்வியை உயர்த்த வேண்டும்.
    •  கல்வி சாலைகளை செப்பனிட வேண்டும்,        
    • பாழடைந்து கிடக்கும் பள்ளி மைதானங்கள்
    • விஞ்ஞான ஆய்வு கூடங்கள், நூலகங்களை அமைத்து சிறுவர் கல்வியை மேம்படுத்துவோம். 
   • ஆசிரியர் பற்றாக்குறைகள், மிரடடல் உருட்டல் இல்லாமல்  சுயமாக இயங்கும் பயிற்சிகள் ( உள்ளூர் பள்ளிகள் அபிவிருத்தி செய்ய விடாமல் தடையாக இருக்கும் புல்லுருவிகளை அகறறவோம்) 

▪️ இழந்திருக்கும் தமிழர் நிலங்களை மீட்டு, பாதுகாத்து தருகின்றோம்.

▪️தமிழர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திகள்
       • பிரதான விதிகளுக்கு தார் பூசி நான்கு தலைமுறை கடந்து விடடது . மழைக்காலத்துக்கு முன்  உள்ளூர் தெருக்களுக்கு கிரவல் கொட்டி சீர் செய்தது எல்லாமே நாற்பது வருடங்கள் முந்தைய கனவாகி போனது.
   • வளம் நிறைந்த பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்திகளை கொண்டே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாக்கி தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புகளை
ஏற்படுத்தும் திட்ட்ங்கள்.

▪️ தமிழர் இன்று இழந்திருக்கும்
சுய உரிமை,  கூனி குறுகி முதுகெலும்பு உடைந்து தன்னம்பிக்கையை தொலைத்து வாழும் எம்மக்களை மீண்டும்  உயிர்ப்பிக்கும் முன்னேற்ற திட்டங்கள், கவுன்சிலிங்குகள்

இன்னும் இன்னும் எத்தனையோ தேவை இருக்க ...! 

ஒருத்தரை ஒருத்தர் முதுகில் குத்தி, விமர்சித்து  மல்லாக்க படுத்து கொண்டே தங்கள் மேல் தாங்களே எச்சில்  துப்பி  கொள்( ல்)கின்றார்கள். அதை தவறென சுட்டி உணர்த்தாமல் கற்றோரும், பெற்றோரும் வேடிக்கை பார்க்கின்றார்கள். 

என்றும் தமிழனுக்கு எதிரி. விரோதி அந்நியர் இல்லை...! தமிழனே தான்🖤

கண்களை திறந்து அக்கம் பக்கம் பாருங்கள். உங்களை போல் தன் இனத்தினை காட்டி, கூட்டிகொடுக்கும் இழி செயலை வேறெந்த இனத்தவனாவது செய்கின்றானா? 

உரிமை.. உரிமை என சும்மா பேசி பாவ்லா காட்டி உள்ளத்தையும் இழக்காமல் தமிழன் உருப்படுவதுக்கு வழி என்ன என்று தேடுங்கள்..🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!