07 ஜூலை 2025

மனிதப்புதைகுழி / செம்மணியில் கிடைக்கும் உடல் எச்சங்கள் கைகளால் நேரடியாக தொடுவது பாதிப்பை உருவாக்காதா?

 செம்மணி  “Mass Grave”

மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட சடலங்களை கண்டறிதல் என்பது
உணர்ச்சி ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் கடினமான செயல். அதிலும், இது உண்மை அடையாளங்களையும், நீதியும் வெளிக்கொணரும் நடவடிக்கை என்பதால்பாதுகாப்பு முறைகள் இரு பக்கமும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
பழமையான உடல்கள் இருந்தாலும், அவை சேர்ந்த மண்நிலைகள், சிதைந்த உயிரணுக்கள் போன்றவை பாக்டீரியா, பூஞ்சை (fungi) போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம்.இவை தொடும்போது தோல் நோய், தொற்று, அல்லது வெளிப்படாத உடல் எதிர்வினைகள் ஏற்படலாம்.
புதைபொருள் அல்லது எலும்பு எச்சங்களை கையால் (bare hands) நேரடியாக தொடுவது பாதுகாப்பானதல்ல. அரசு சட்ட மருத்துவ மற்றும் வரலாற்று அகழ்வுகளில் sterile tools, கையுறை (gloves), முகமூடி (mask) போன்றவை கட்டாயம்.
கையால் தொடும்போது DNA சோதனை, மரணக் காரணம், வயது கணிப்பு ஆகியவற்றில் பிழைகள் ஏற்படலாம். Forensic integrity (சான்றுகளின் நம்பகத்தன்மை) பாதிக்கப்படும்.
“இது நடந்ததே இல்லையென்று” முடிக்க முயற்சிப்பவர்கள் இருந்தாலும்,மண்ணுக்குள் கிடக்கும் எலும்பு, அது புதைக்கப்பட்ட நேரம், செயல் முறைகள் அனைத்தும் மனிதஉரிமை மீறல் மற்றும் செயல்களை வெளிக்கொணரக் கூடியவை.
ஒரு எலும்புக் குழி –அதை புதைத்தவர்களை விடவும் வலிமையான சாட்சி!
“நியாயத்தை மீட்டெடுக்க, அதற்கேற்ற தொழில்முறை நடத்தை தேவையில்லை என நினைக்க முடியுமா?”
செம்மணி போன்ற உணர்வுப்பூர்வமான, முக்கியமான அகழ்வுகள்
அரசியல் உணர்வோடு மட்டுமல்ல, துல்லியமான நவீன அறிவியல் நடைமுறைகளோடும் செல்ல வேண்டியவை.


இங்கு கைகளால் எலும்புகளை தொடுவது தவிர்க்கப்பட வேண்டும்.அது மனித உடம்புக்கும், மறைக்கப்பட்ட வரலாற்றுக்கும்,நீதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கே யாரையும் குற்றம் சுமத்தவில்லை,எந்த வேலையையும் விமர்சிக்கவில்லை. அவரவர் பணி, பளு, சூழ்நிலைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.செம்மணியில் பணியாற்றும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமும், மனநலமும் மிகமுக்கியம்.
தோண்டப்படும் எச்சங்கள் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கான சான்றுகள் மட்டுமல்ல அவை நாம் எதிர்காலத்தில் எப்படி முன்னேறுகிறோம் என்பதற்கான தருணங்களும் கடந்த காலத்தில் நீதியை நாடுகிற போதும் இன்றைய நாள் உங்களுடைய நலன்களும் கவனிக்கப்பட வேண்டும்.
படத்தில் காணப்படும் – செம்மணியில் இன்று கிடைத்ததாகக் கூறப்படும் எலும்புகள் உண்மை வெளிக்கட்டப்படட்டும்.ஆனால் அது உங்களது உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதிக்காமல் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!