1994 ல் என்னுடன் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் panni புரிந்த நெருங்கிய தோழி திடீரென காணாமல் போனாள். எங்கே என்றேன்.நம்ம ஊர் அங்கோடை போல் இங்கே இருக்கும் Hospital லின் பெயர் சொல்லி அங்கே அட்மிட் என்றார்கள்
மூன்று மாதம் பின் வந்த போது உடல் பருத்து சோகமாக வந்தாள். என்னவென கேட்ட்டேன் Depression என்றாள். அப்டின்னால் என்ன வருத்தம் என்று கேட்டேன். 21 வயதில் அப்போது இந்த நோய் குறித்து புரியவில்லை😭. அடுத்த மாதம் தற்கொலை செய்து கொண்டாள். . நான் அறிந்த முதல் Depression இழப்பு.
2000 ஆண்டில் என் கண் மருத்துவர் முதல் நாள் ஐந்தரைக்கு எனக்கு கண் check up செய்தார். சோகமாக இருந்தார். விடிந்து பேப்பர் பார்த்தால் விடிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. காரணம் Depression🖤
அதன் பின் பலர் பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் யாரையும் விட்டு வைக்கல்லை. ஏதோஒரு வகையில் மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருந்தது. இருக்கின்றது. தற்கொலைக்கு பின் காதல் தோல்வி, வேலையிட முதலாளி மாறியதால் புது முதலாளி கொடுத்த அழுத்தம், குடும்ப பிரச்சனை என பைத்திய காரருக்கு ஹாஸ்பிடல் ல் அட்மிட் திடீர் திடீரென செத்து போனார் என செய்தி வரும். இப்படி யாரோ எங்கோஎன அன்றாட செய்திகள் போல் கடந்து வந்து கொண்டிருந்தேன்.
2011 ல் நானும் இரண்டு வருடம் போராடித்தான் மீண்டேன். நான் ஈவண்ட்ஸ் பார்ட்டி நிறுவனம் தொடங்க முன் ( 1997- 2012 ) 14 வருடம் ஹோட்டல் மானேஜிமென்ட் வேலை செய்த போது ஒரு கட்டத்தில் வேலை செய்த எல்லோருக்கும் கை வலி, தலை, முதுகு வலி என்று டீம் இல் அனைவருக்கும் ஏதோ ஒரு வலி. ஸ்கேன் க்கெல்லாம் அகப்படாத வலி. பிசியோ தெரபி செய்தாலும் பயனில்லை. எல்லோருக்கும் வலி என்றானதும் தீர்வு தேடி ஹோட்டல் சார்பில் மனோதத்துவம் சார்ந்த கோர்ஸ் ஒன்று மூன்று மாதம் நடத்தினார்கள்.
அதனோடு நான் ஹொஸ்பிடலிலும் இரண்டு மாத கோர்ஸ் ஒன்றும் செய்திருந்தேன்.
இரண்டிலும் எங்கள் பகுதி பிரபல மனோதத்துவ சிறப்பு மருத்துவர் பாடம் நடத்தினார். மன அழுத்தத்துக்கும் உடலில் ஏற்படும் வலிகள், வெளிப்படையான மாற்றங்கள், வெளிப்படுத்த படாத உணர்வுகள் அழுத்தமாகி வெடித்து சிதறும் நிலை என பலவகை கற்றல்கள் கிடைத்தன.
உடல் உள வலிகள் ஏன் எதனால் உருவாகின்றன? எப்படி மீண்டு வரலாம் என்று அருமையான விளக்கம் தந்தார். மன அழுத்தம் என்றதும் எம்மவர்கள் பைத்தியம், லூசு என்று கிண்டல் கேலி செய்வது போல் இது ஒதுக்கப்படும் பிரச்சனை இல்லை.
Depression ஒரு வகை நோய்.. பிரஷர், டயபட்டீஸ் நோய்களைப்போல ஒரு நோய். உடல் உறுப்புக்களுக்கு உருவாகும் நோய்கள் போல் உளவியல் சார்ந்து எதிர்கொள்ளும் நோய்.Depression எனும் ஆழ்மன அழுத்தம் உருவாக எமது சமூகமும், சுழலும், நமது மனதும் அடிப்படை காரணங்களாக இருக்கின்றது.
இது தான் எனும் நோய்க்காரணம் கண்டு பிடிக்கப்படாத பல வலிகள்,வேதனைகளுக்கு காரணம் நம்ம மனசு.
ஆம் ... ! நம்ம மனசு இங்கே நமக்கு வலிக்குது என்றால் வலிக்கும், வலிக்கல்லை நான் ஸ்டெடி என்றால் நிமிர்ந்து நிற்கும்.
முடியும் என்றால் முடியும்..!
முடியாது என்றால் முடியாது ..!
அவ்வளவு தான்..!🌻
வாழ்க்கை ரெம்ப சிம்ப்பிள். ❣️உங்களுக்குள் ஆயிரம் உடல் குறைபாடு இருக்கலாம். ஆனால் அது குறை என்று நீங்கள் நினைத்தால் தான் குறை. அதை விட நிறைவை தரும் பலது எமக்குள் ஒளிந்திருக்கே என தேட ஆரம்பித்தோம்என்றால் வாழ்க்கையில் தினம் தேடல்கள் புதிதாகி கொண்டே இருக்கும்.
எப்பவும் உயரத்தில் ஒரே இடத்தில இருக்க முடியாது. ஏறணும் அல்லது இறங்கணும்
குப்புற விழவும்வேண்டும்
அப்ப தான் திரும்பவும் மேலேறும் போது முன்னிருந்த உயரத்தை விட பத்தடி இன்னும் உயரமா ஏறுவோம்.
ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் எதோ ஒரு தோல்வி வலி இருக்கும்...! எல்லா தற்கொலைக்கு பின்னும் Depression இருக்குமா?
பதிவில் விபரமாக பார்க்கலாம்...!
Depression :
குறித்து ஆளாளுக்கு எழுதுறதை பார்க்கும் போது பலர் இந்த பிரச்சனை என்னமோ நாலு பேர் ஆலோசனையில் சரியாகிரும் என மேலோட்டமா, லேசா புரிந்து கொண்ட மாதிரி இருக்கின்றது
"இது பெரிய பிரச்சனையில்ல, தியானம் பண்ணு, , புத்தகம் வாசி, பாட்டுக் கேளு, எப்பவும் அழுது வடியாமல் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கோ, நல்லாச் சாப்பிட்டுட்டு நித்திரை கொள்ளுங்கோ, ஏதும் கஷ்டமா இருந்தா யாரிடமாவது மனம் விட்டுப் பேசி இருக்கலாம். எனக்கு சொல்லி இருக்கலாம், எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசுங்கோ இப்படி பலப்பல..!
Depression பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஆழ்மன அந்தரங்க பிரச்சனை ஒரு நாளில் பேசி முடிவுக்கு வரும் விடயமா ? அடுத்தவர் ஆலோசனை வார்த்தைகளை கேட்கும் சுய உணர்வில் இருப்பாரா?
மனதில் இருப்பதை வெளிப்படுத்தி பேசும்படி ரகசியம் காக்கும் நம்பிக்கையை இந்த சமூகமும், இங்கே எழுதும் கவுன்சிலர்களும் தருகின்றார்களா? என்பதும் இங்கே கேள்விக்குரியது.
ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் Depression, ஆலோசனை, அன்பு, கவுன்சிலிங் என எழுதி கடக்கின்றோம்
Depression :
உலக மக்களில் சுமார் 15% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சிகிச்சை தேவைப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆண்கள் மற்றும் இளைஞர்களை விட இரு மடங்கு அதிகமாக Depression நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மனச்சோர்வு பெரும்பாலும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட வயதுகளில் ஏற்படுகிறது.
❤️ Depression னில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நாம் யாருக்காகவும் இல்லை , நமக்காக வாழனும். என்னால் எல்லாம் முடியும் என நம்பனும். ரோபோ போல் தொடர்ந்து வரும் வாழ்க்கையை மாற்றி பயணிக்கணும். நமக்கு பிடித்ததை செய்யணும் எனும் உள்ளார்ந்த உணர்தலுடனான உள்ளுணர்வை தட்டி எழுப்பி , அடக்கி வைக்கப்பட்டிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அழுந்தி கிடக்கும் மன உணர்வை அவர்களுக்கு பிடித்தமானபடி( இசை, வாசிப்பு, தோட்டம், உலாத்தல், எழுத்து, பயணம், நண்பர்களுடன் உரையாடல் ) என மாற்றி பயணிக்க வழி காட்டுதல்கள் தேவை
❤️ பாதிக்கப்படும் நபர் தன்னை தான் உணர்ந்து மீண்டு வரணும் எனும் முயற்சியும் அதற்கு பக்கபலமாக உறவுகளின் புரிதலும் நீ எப்படி இருக்கின்றாய் எனும் உளமுணர்ந்த விசாரிப்பு அன்புக்காக ஏங்கும் ஒருவரின் உள்ளதை மென்மையாக வருடி வாழ வேண்டும் எனும் ஆசையை உருவாக்கும் வரை தொடர்ந்து முயற்சி தேவை.
Nisha l
20.06.2020
அடுத்த பதிவையும் படியுங்கோ
Facebook :
பதிலளிநீக்குமனஅழுத்தம் - நன்றாக வேலை செய்துகொண்டிருப்பவரிடம் ,வேலைக்கு லீவு போட்டவரின் வேலையையும் சேர்த்து செய்ய சொல்வதும் அதற்கான கால அவகாசம் கொடுக்கப்படாமலும் குறித்த நேரத்திற்குள் முடித்துகொடுக்க சொல்வதும்,அப்படி லீவு போட்டவர் பேறுகால விடுமுறையில் ஓராண்டுகாலம் பணிக்கு வரவில்லை என்றாலும் மாற்று பணியாளரை நியமிக்காமல் ஏற்கனவே தன்னனுடைய தோளில் இருக்கும் பணிசுமையோடு இந்த கூடுதல் சுமையையும் சுமக்கும்போதும் மேலும் மேலும் வேறு சில பணிகளையும் கூடுதலாக்கும்போதும், செய்யும் வேலைக்கு ஒரு அங்கீகாரம், பாராட்டு கிடைக்காதபோதும் மன அழுத்தம் மன சோர்வு ,anxiety,stress - Depression எல்லாம் ஏற்படும். உங்களின் பதிவு நன்று.
கோ.
.