28 செப்டம்பர் 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு

புங்குடுதீவு வித்யா!
இனிய கனவுகளோடு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த இளம் மாணவியின் சிறகொடித்து உயிர் குடித்தவர்களுக்கான தீர்ப்பு இன்று!
டெல்லி நிர்ப்பயா வழக்கில் கூட பல காரணங்கள் சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும் தாமதம் செய்யப்படும் இந்த சூழலில் இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான கற்பழிப்பு வழக்கொன்றிற்கான தீர்ப்பு வரவேற்கப்படத்தக்கது, பாராட்டப்படத்தக்கதுமானது .
காலையில் பள்ளிக்கு சென்ற பெண்ணைக்கடத்தி கதறக்கதற சித்திரவதைப்படுத்தி கூட்டுவன்புணர்வு செய்து கொலையும் செய்தமை நிருபிக்கப்பட்ட பின்னும் நீதியின் தராசு தாழ்ந்தும் உயர்ந்தும் பணங்காசுக்கு விலை போக நிர்ப்பந்திக்கப்ப்ட்டும் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இன்றைய தினத்தின் இத்தீர்ப்பு இம்மாதிரி துஷ்டர்களுக்கு கடிவாளம் போடுமா?
நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய இத்தீர்ப்புக்கான செயல் திட்டம் எப்படி இருக்கும்?
வித்யா கொலையில் ஒன்பது பேர் மீது வழக்குத்தொடரப்பட்ட நிலையில்ஒன்பது பேரில் ஏழுபேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டும் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டவர் தகுந்த சாட்சியங்கள் இல்லாமையினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்???
ஏழாம் குற்றவாளியும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்?
காதலுக்கு தூது போனதாகவும், நேரடி சாட்சியங்களால் நிருபிக்கப்படவில்லை என இவ்விருவர் விடுதலைக்குமான காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. மீதி ஏழு பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது..
தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு செல்லுமானால் சிங்கள நீதிபதிகளால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. காலத்தின் கோலத்தால் விடுதலையும் செய்யப்படலாம்.
உடனடி தண்டனை என்பதை தவிர இம்மாதிரி சம்பவங்களுக்கான நீதி விசாரனை என்பது காலந்தாழ்த்துதலுக்கும், மறக்கடிக்கப்பட்டு ச்ம்பவங்கள் பத்தோடு பதினொன்றாகி விடுதலுக்கும் தான் இதுவரை பயன் பட்டிருக்கின்றது. வித்யாவுக்கான இத்தீர்ப்பு நடுக்காட்டில் திக்கு திசை தெரியாமல் தடுமாறும் எம்மின மக்களுக்கான ஒளியை நோக்கிய வழிகாட்டும் தீபமாய் உணரப்படலாம். எனினும் தமக்கான நீதி தாமதமானாலும் தரமிழக்காது கிடைக்கும் எனும் நம்பிக்கையை தரும் படி இத்தீர்ப்பு இருக்குமா?
வித்யாவுக்கு பின்னும் இலங்கையில் பல கற்பழிப்புக்கொலைகள் நடந்தப்பட்டிருக்கின்றன. அதற்கான தீர்வுகள் எப்படி நகர்கின்றன?

என் கேள்வி?
இலங்கையில் மரண தண்டனை சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளதா?
பதிலும் நானே!
தூக்குத்தண்டனை இல்லை. தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றென நினைக்கின்றேன். எங்கோ படித்த நினைவு. மரண தண்டனை வேறு வகையில் இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்த தீர்ப்பு நல்லதொரு விடியல் எனும் நம்பிக்கை தரலாம். ஆனா’லும் நேற்றைய தீலிபனின் நினைவு கூரல் எந்த ஆண்டும் போலல்லாது இவ்வாண்டு சற்று உணர்வு வேகமாய் அனுஷ்டிக்கப்ப்ட்டதன் திசை திருப்பலாகவும் இத்தீர்வு இருக்கலாம். இப்போதெல்லாம் எது நடந்தாலும் அதன் பின் நாம் அறியாத இன்னொன்று உள்ளதே?


தீர்ப்பு குறித்து விபரம் அறிய
http://www.athirady.com/tamil-news/howisthis/1065355.html

7 கருத்துகள்:

 1. தீர்ப்பு குற்றவாளிகளுக்குப் பாதகமா இல்லை சாதகமா? புரியவில்லை...தீர்ப்பு வந்துவிட்டதா இல்லையா?

  சரி நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் போய்ப் பார்க்கிறோம்...

  அவர்களுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள்தண்டனை கொடுக்கப்படவேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. புரிந்துவிட்டது சூப்பர் தீர்ப்பு! மரண தண்டனை அதுவும் ஏழு பேருக்கு!!! அருமையான தீர்ப்பு. இனியேனும் இப்படியான குற்றம் நடக்காமல் இருக்கும் பயம் வரும் என்று நம்புவோம். பயம் என்பதை விட இப்படியான குற்றம் கொடுமை தவறு, மனித நேயத்திற்கு எதிரானது, மாபெரும் குற்றம் என்பதை எல்லா இளைஞர்களும் உணர்தல் வேண்டும்...

  பதிலளிநீக்கு
 3. இது போன்ற செயல்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள், அதுவும் உடனடியாக தரப்பட்டால்தான் இதைச் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வரும். அல்லது கற்பழிப்புக்கு குற்றங்களுக்கு மட்டுமாவது பெண் நீதிபதிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அது மட்டுமே இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும்.

  தம மூன்றாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 4. இனியேனும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 5. வரவேற்கத்தக்கது இது வித்யாவின் குடும்பத்தினருக்கு சிறிய ஆறுதலைத்தரும் என்பது உண்மையே...

  மரணதண்டனை வேண்டும் இல்லையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் வாழ்க்கை போல்தான் இருக்கும்

  த.ம.4

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் !

  துடிப்புகள் இருந்தும் காலத்
  துயரினால் தோற்ற தைப்போல்
  விடிவுகள் தொலைவாய்ப் போயும்
  விடிந்துதான் தீரும் ஓர்நாள் !

  உண்மைதான் நிஷா தீர்ப்புகள் வரவேற்கத் தக்கது ஆனால் மரண தண்டனை நிறைவேற்றுதலே தீர்ப்பின் உண்மைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கும்

  தம +1

  பதிலளிநீக்கு
 7. மரண தண்டனை என்பதையெல்லாம் விடுத்து செய்த செயலுக்கு அரபு நாடுகளைப் போல் அப்பொழுதே தண்டனை கொடுக்க வேண்டும்....

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!