05 ஏப்ரல் 2020

Covid 19 வீட்டுக்கு வீடு தோட்டம்! 2

வீட்டுக்கு வீடு தோட்டம்!

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை எத்தனை பேர் அறிந்து கொண்டார்கள்? 

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கிருமித் தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையினைத் தொடர்ந்து - நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

"செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" எனப்படும் இந்த திட்டம் - விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக - கீழே உள்ள இணையத் தளம்  http://saubagya.lk/
மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த இணையத் தளத்தின் ஊடாக - வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு - வீட்டுத் தோட்டம் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த திட்டத்தின் மூலம் - பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கிவிட அரசாங்கம் விரும்புகிறது.

Srilanka அரசு 

1 கருத்து:

  1. நல்லதொரு திடடத்தினை முன்னெடுகிறது இலங்கை அரசு.பயன்தருமா ,பொறுத்து இருந்து பார்க்கவேண்டும் ,
    தமிழில் எழுதும் போது இலங்கை என்றே எழுதுங்கள் ,இது எனது வேண்டுகோள். அதுதான் சரி.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!