08 ஏப்ரல் 2020

இது எச்சரிப்பின் காலமல்லோ? -1

கிறிஸ்தவர்கள் எனும் பெயரில் துர்உபதேசம் உருவாக்கி கற்பனையான,கட்டுக்கதைகளுக்கு செவி கொடுத்து 

5000 டாலருக்கு ஒரு வெண்டிலேட்டர் சொந்தமாக வாங்கி கொள்ளலாம்  என்பதை கூட அறிந்து கொள்ளாமல்  நன்றி சொல்கின்றேன் என்று  கடவுள், காற்று, இலவசம் எனும் பெயரில்  இல்லாததை இருந்ததென இந்த உலகத்தில் உங்களுக்கு மட்டுமே காற்றும் சொந்தம் என அடித்து விடாதீர்கள் 

உங்கள் ஓவர் கொம்பிடன்ஸ்.இறை நம்பிக்கையை  அவமானப்படுத்துகின்றது 

தேவ நாமம் தூசிக்கப்பட  காரணமாக இருக்கின்றிர்கள் 

எந்த ஆவியானவரால் பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டதோ அவருடைய ஆலோசனை தள்ளிவிட்டு கட்டுக்கதைகளுக்கு செவிக்கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகி போனவர்களுக்கும் 

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.*
ரோமர் 1 :18

என்பதை உணர்ந்து திருந்துங்கள் 

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உங்களை குறித்து நன்றாய்ச் சொல்லியிருக்கிறான், 


மனிதன் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனைக்கும் வார்த்தைக்கும்  தேவனிடம் நியாயத்தீர்ப்பு உண்டு 

எதை கூட் டவும் குறைக்கவும் அவனுக்கு அனுமதி இல்லை 

இக்கட்டிலும் இடுக்கணிலும் தவிப்போரை ஏளனம் செய்யவும் சாபமிடவும் அவனுக்கு அதிகாரம் இல்ல 

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 

வெளி 18, 19  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும்எ
டுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Nisha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!