23 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி। - 1




இனி வரும் காலத்தில் உணவு தட்டுப்பாட்டைசமாளிக்க தற்சார்பு வாழ்க்கை க்கு தயாராக்குங்கோ

வீட்டு தோட்டம் போடுங்கோ கீரை பாத்தி கட்டுங்கோ என்றதும்

பலர் உணர்ந்து தோட்டம் குறித்த அவசியம் புரிந்திருப்பது தெரியுது.

இன்று 20 மேற்பட்ட  நண்பர்கள் தோடடம் குறித்து பகிர்ந்ததை அவதானிக்க முடிந்தது .

பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி இலடசங்களாகும் போது இல்டசியம் வெல்லும்.  ஒரு எழுத்து ஓராயிரம் மாற்றம் உருவாக்கும்.

ஒருவரின் மாற்றம் அவர் சார்ந்த சமூகத்தை உயர்த்தும்.

நாங்களும் சுவிஸில் தோடடம் போட்டிருக்கோம்

ஆனால் எல்லோரும் ஒரே போல் வீடடுக்கொரு தோடடம் ஒரே மாதிரி  போட்டால் இதையே தொழிலாக செய்வோர் நிலை என்ன?

இதை குறித்தும் கொஞ்சம் சிந்திக்கணும்

நெருக்கடி நிலை இன்னும் முடியல்ல

விவசாயிகளும்  தோட்டம்  செய்வோரும் என்றும் எமக்கு முக்கியம்

அப்படியே
கோழி வளர்ப்பு
ஆடு, மாடு வளர்ப்பு
தையல்
இட்லி, தோசை, வடை, இடியப்பம் சம்பல்
மசாலா பொருட்க்கள் அரைத்து கொடுப்பது
ஊறுகாய், சட்னி வகை என அவரவர் வசதிக்கு ஏற்ற படி மிக குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்யும் படி உற்சாகம் கொடுங்கோ

2009 - 2020  இப்படி இன்னாருக்கு  வாங்கி கொடுத்தோம் எனும் பதிவே இலங்கை சனத்தொகையை தாண்டி கொண்டிருக்கு போல
அதை விடுவோம்

தற்சார்பு வாழ்க்கையில்
பண்டமாற்றுக்கும் முக்கிய பாகம் உண்டு

காசில்லை எண்டால் என்ன ?
நீ முடடை கொடு,
நான் கத்தரிக்காய் கொடுக்கின்றேன் என கூட மாத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமம் தோறும் அந்தந்த  மக்கள் தமது பொது பிரச்சனைகளை இப்படி சமூகவலை தளம் ஊடாக வெளிக்கொண்டு வருவீர்கள் எனும் அதுவும் அரசின் மேல் மடட கவனத்துக்கு போகும் வாய்ப்பு இருக்குது

வெற்று பொழுதை வெற்றி பொழுதாக்குவதும் நம்  கைகளில் தான்

வாழ்க்கை வாழ்வதுக்கே

Photos thanks geogle

தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -1
Nisha


1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!