05 ஏப்ரல் 2020

Covid 19 அன்புக்குரிய முதியவர்களை பாதுகாப்போம்

கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் வயதான மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றது.

இருந்தும் கூட இளம் வயதினர்கள் இடையேயும் இந்த நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சம அளவிலேயே காணப்படுகிறன.

ஆனாலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது  இந்த நோயினால் ஏற்படக்கூடிய மரணத்தின் வீதம் வயதானவர்களை விட இளம் வயதினரிடையே குறைவாகக் காணப்படுகிறது.

மேலும் - இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு COVID-19 நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டால் - கடுமையான சிக்கல்  நிலைமை உருவாகும் அதிக நிகழ்தகவு உள்ளது.

எனவே- உங்கள் வயதான பெற்றோர்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு வயதான மளத்தவருக்கும் - அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எப்போதும் அறிவுறுத்தவும், மேலும் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இளமையான மற்றும் வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்கள் கூட - இந்த நோய்க்கிருமியின் காவிகளாகச் செயற்பட்டு நமது பலவீனமான பெற்றோருக்கு அல்லது அதிக ஆபத்தில் உள்ள வேறு எந்த நபருக்கும் நோயைக் கடத்திவிடக் கூடும். ஆகையால், பொது இடங்கள் அல்லது பெரிய  மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களுக்கு வயதானவர்கள் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

நினைவில் கொள்ளுங்கள் -- COVID-19  தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமது கைகளைச் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு செயற்பாடாகும்.Srilanka 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!