25 ஏப்ரல் 2020

கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 4

இச் சிறுபோகத்தில் நெல்லைப்பயிரிடுவதற்கு போதியளவான நீரில்லாவிடில் அங்கு மறு வயற் பயிர்களை செய்கை பண்ணுங்கள். 

இதற்காக இலங்கை அரசாங்கம் பெரும் உதவிகளை செய்கின்றது.  நீங்கள் கால் ஏக்கர் முதல் அரை ஏக்கர் வரை பயிர் செய்தால் உங்கள் விதைகளிற்கு ஏற்படும் முழுச் செலவையும் அரசாங்கம் வழங்கும்.  அதே போன்று அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை பயிரிட்டால் விதைக்கு ஏற்பட்ட செலவில் அரைவாசியை அரசாங்கம் மானியமாக திரும்பவும் வழங்கும். அது மாத்திரமல்ல சுமார் 14 பயிர்களிற்கு உத்தரவாத விலை தரப்பட்டுள்ளது. எனவே உங்கள் விளைபொருட்களைசந்தைப்படுத்த பிரச்சினைகள் ஏற்படாது. இது பற்றிய முழுமையான விபரங்களை விவசாய அமைச்சின் சுற்று நிருபம் வௌியிட்ட பின்னர் தருகின்றேன். விதைகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் பிரதேச விவசாயப் போதனாசிரியரை நாடவும். தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவரிடமே பெற முடியும். அருமையான  சந்தர்ப்பம் தவற விடாதீர்கள். மேட்டு நிலக் காணிக்கும் இச்சலுகைகள் உள்ளன.

🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀🌱🌵🌴 🍀🌱🌵🌴🍀

இப்படியான ஏற்ற நேரத்துக்கு தகுந்த ஆலோசனைகள் வழி காடடல்கள் தரும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்களிப்போடு  இனி வரும் காலத்தை எதிர்கொள்ள தயாராகுவோம் வாருங்கள் 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகள் இப்போதைக்கு முடியாது 
பன்றி காய்சசலை விட பத்து மடங்கு கொடியதாம்😭 நான் சொல்லல,Who  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்குது 

அப்படியே வெளிநாட்டு வேலை, பயணம் என இப்போதைக்கு திடடம் போட வேண்டாமாம் 
எல்லாமே முடங்கி போனதால் நோயோடு பட்டினி சாவும் வருமாம்.அல்லது வளர்ந்த பணக்கார நாடுகள் தாம் வாழ Africa நாட்டின் வளங்களை கொள்ளையடித்து இனி அங்கே சுரண்ட ஒண்ணுமில்லை. என்றானதால் ஆசிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்பும். வளம் கொழிக்கும் பூமிகளில் வளங்கள் வறளும் வரை வாரி செல்லும்.

கொஞ்சமேனும் புத்தியாயிருந்தால் பிழைத்துக்குவிங்க.காசு, பணம், நகை எல்லாம் பசிக்கு தின்ன ஏலாது கண்டியளோ? 

ஓடி ஓடி உழைத்தும் அழுற பிள்ளைக்கு ஒரு நாளைக்கு ஒரு வாய் சோறு கொடுக்க முடியல என்றால் எப்படி உணருவீர்கள்?

அதனால் தான் சொல்றம்.

நாங்க நீங்க சமூகமா சேர்ந்து எங்கள் தேவைக்கு பயிர் இடனும்.

அதிகம் கைக்காசு போடாமல் அரசாங்கம் தரும் உதவி சலுகை குறித்தும் உங்களுக்கு வரும் தடைகள் குறித்தும் அதிகாரிகள் வல்லுநர்கள் பார்வைக்கு கொண்டு போய்  சேர்க்க குரூப் இல் சேர்ந்து பயன் பெறுங்கோ.அனுபவசாலிகளும் ஆலோசனை தருவாங்க!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!