19 ஏப்ரல் 2020

Swiss Matterhorn மலை உச்சியில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி 🇮🇳

சுவிட்சர்லாந்தின் சின்னமான மூவாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Matterhorn முக்கோண வடிவ மலை பாறை உலக மக்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின்  அவசியத்தை உணர்த்தும் நோக்கதில்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டின் தேசியக்கொடியோடு  ஒளிர்கின்றது.

இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு வரையிலும், அதிகாலை 2:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையிலும் மலை மின் விளக்குகளால் ஒளிரும் படியான  ஒழுங்குகள்.  செய்யப்பட்டிருக்கின்றன 

ஒளி என்பது நம்பிக்கை! 
இந்த அர்த்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் பரவும் இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடையாளத்தை கொடுக்க Zermatt கிராமத்து மக்கள் விரும்புகின்றார்கள்.

Zermatt Tourismus ஏற்பாட்டில் உலக நாடுகளின் தேசியக்கொடியோடு Swiss மாநிலங்களின் கொடிகளும் ஒளிர வைக்கப்படுகின்றன.

India 🇮🇳:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கொரோனா tநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு பெரிய நாட்டில்நோய் பரவலை தடுக்கும் சவால்கள்  மிகப்பெரியவை! 

நாம் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் பலத்தையும் கொடுக்க வேண்டும். எனும் நோக்கத்தோடு  18.04.2020 விடிகாலை  3.30 மணிக்கு தேசியக்கொடி மின் விளக்குகளால் ஒளிர்ந்தது.






24.03.2020 ஆரம்பித்து இது வரை மலை மேல் உதிக்கும் ஒளி உணர்த்தியவை 

24.03.2020 : ஒளி என்பது நம்பிக்கை!
25.03.2020 : ஒற்றுமை
26.03.2020 : stayhome, நேசிப்பு 
28.03.2020 : Italy 
31.03.2020 : அனைவருக்கும் 
01.04.2020 : Kanton Tessin
02.04.2020 : ஆதரவு
03.04.2020 : stayhome
05.04.2020 : Portugal
06.04.2020 : நம்பிக்கை
07.04.2020 : Kantone Genf und Waadt
08.04.2020 : இப்போது கனவு காணுங்கள் - பின்னர் பயணம் செய்யுங்கள்
09.04.2020 : France , Spain 
10.04.2020 : ஐக்கிய இராச்சியம்
11.04.2020 : Easter 
12.04.2020 : மெழுகுவர்த்தி
13.04.2020 : AllOfUs
14.04.2020 : Germany
15.04.2020 : Japan 
16.04.2020 : Kanton Zurich , USA 
17.04.2020 :  GCC-Staaten
18.04.2020 : India . Kantone Bern und Wallis
19.04 . 2020 : China 

இது நம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது: நம் வாழ்க்கை முன்பைப் போல இல்லை. ஆனால் ஒன்றாக நாம் வைரஸைப் பிடித்து மீறுகிறோம். நாங்கள், இந்த உலக மக்கள். அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழியை பலப்படுத்துவோம்.
Nisha 🙏

Zermatt Tourismus
Bahnhofplatz 5
3920 Zermatt
Telefon: +41 27 966 81 00
info@zermatt.ch


Beleuchtung 18. April 2020: Indien


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!