02 ஏப்ரல் 2020

Covid 19 வீசிங் இருக்கும் வயதானவர்கள் எப்படியான தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்...?

வீசிங் இருக்கும் வயதானவர்கள் எப்படியான தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்...?

வீசிங் என்று இல்லை பொதுவாக வயதானவர்கள் இந்த  தொற்று நோய் பரவும் காலத்தில் வெளியே வர வேண்டாம். கோயில்கள் உட்பட எங்கும் செல்லாமல் இருந்தாலும் வெளியில் சென்று வருவோரால் நோய் தொற்றலாம் என்பதால் தான் இக்காலத்தில் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், உடல் வலு குறைந்தோரை விட்டு விலகி நிற்க சொல்கின்றார்கள்.

Corona வைரஸ்  நோய்க்கு இது வரை எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தன்னம்பிக்கை தான் மருந்து . பயம், பதட்டம்  முதல் எதிரி ..! 

சுவாசம் சார்ந்த நோய் இருப்போர் எல்லோரையும் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை.

என் தங்கை மாமியாருக்கு வயது 75.
ஆஸ்துமா, நீரழிவு நோய் இருக்கு. இது வரை நலமாக இருக்கின்றார். வீட்டிலுள்ளோருக்கு சமைக்கின்றார்,உதவுகின்றார் 

அதே போல் எனக்கும் தங்கைக்கும் வீசிங் இருக்கின்றது. சுவாசம் சார்ந்த பிரச்சனை குடும்பத்தில்  அனைவருக்கும் உண்டு .( பரம்பரை )

தங்கை ( Swiss) மார்ச் முதல் வாரமே கொரோனா வைரஸ் positive Test conformed . வீட்டில்
தனித்திருந்த 15 நாளில் கடைசி ஐந்து நாள் ஹாஸ்பிடல்ல போய் Check அப் செய்து  வீட்டுக்கு வந்து இப்போ இரு வாரம் முடிந்து விட்ட்து. வீட்டுக்கு வந்தும் முதல் வாரம் தொடர் இருமல் சுவாசம் தடை என சிரமப்படடாள். அவள் தனக்கு பாலில் மஞ்சள் போட்டு காய்ச்சி மிளகு தூள் போட்டு குடித்தால் சுவாசம்  நல்லா இருக்கு என்றாள்.

அவளுக்கு தொற்று நோய் காலத்தில் எந்த மருந்தும் பரிந்துரைக்கவில்லை 

என் உறவில் ஆஞ்சியோ செய்தவர, கிட்னி பிரச்சனை, நீரழிவு நோய்  இருப்பவர்கள் பலருக்கு ( 40 - 55  வயதுகள் ) கொரோனா வைரஸ் positive  உறுதிப்பட்டு மருத்துவமனைக்கு அட்மிட் செய்யாமல் வீட்டிலிருந்தே  குணமாகி இருக்கின்றது.

எந்த புற நோயுமில்லாத ஆரோக்கியமாக இருந்த உறவினருக்கு Covid 19 கடுமையாக பாதிக்கப்பட்டு பத்து நாள்களுக்கு மேல் மருத்துவ மனையில் 3  லீற்றருக்கும் மேல் ஒட்ஸிசன் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் கொரோனா வைரஸ் குறித்து எந்த உறுதியான முடிவும் இது வரை எடுக்கப்படவில்லை.

என் சொந்த அனுபவம் வேறு,எனக்கு அலர்ஜி இருக்கு,ஏதேனும் ஒவ்வாமை என்றாள் மூச்சு தடைப்படும், எப்போதேனும் மூச்சு தடைப்படும் போது / அரிதாக இங்கோலர் எடுப்பேன். 

கடந்த டிசம்பர் கடைசியில்  ஆரம்பித்த இருமல் பெப்ரவரி வர ஓயல.பெப்ரவரி நடுவில் கடுமையான வறட்டு இருமலுடன் நெஞ்சு குழாய்க்குள் எதோ அடைபட்டு கிடக்கும் அவஸ்தையுமாக தொண்டைக்குள் கைவிட்டு பிச்சி எறியனும் என தோன்றியது, தொடர் இருமலால் நெஞ்சி,வயிறெல்லாம் நோ,உடல் அசதி, மூக்கடைப்பு கிட்ட  தட்ட ஃப்ளு அறிகுறி 
எப்படி மீண்டேன்? 
▪️
என் அனுபவம் பகிரும் காரணம் உங்கள் பயம், பதட்டம், தவிர்க்கவே 
தலைக்குள் வளர்ந்து வரும் கட்டி எப்போது என்றாலும் என் இயக்கத்தை நிறுத்தலாம் 

வாழும் வரை முட்டி மோதுவோம் எனும் உணர்தல் என்னை எழுத சொல்கின்றது 
தொடர்ந்து படியுங்கள் 

சுற்றுலாப்பயணிகளுக்கான சுவிஸ் மார்க் பொருள்கள் விற்கும் கடையில் மகள் பகுதி நேர வேலை செய்கின்றாள் 

டிசம்பர் - மார்ச்சில் சீனா- கொரியன் பயணிகள் எங்கள் பக்கம் அதிகம்வருவார்கள்.எப்படியோ அவளுக்கு அடிக்கடி தொண்டை வரடசி,இருமல் என வர ஆரம்பித்தது.

எனக்கு உடலில் போதுமான அயன் இல்லை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு என்பதால்  அவளுக்கு வரும்  இருமல்தடிமன் எனக்கும் வரும்.அவள் ஓரிரு நாளில் மூலிகை தேனீர் குடித்தாலே குணமாகி விடும்( எனக்கு பல நேரம் இழுத்தடிக்கும் உடனே மருத்துவரை நாடுவது இல்லை.) 

பிப்ரவரி வரை  மருத்துவரிடம் போகவில்லை 

இத்தாலில பரவ ஆரம்பித்து சடடென மூன்றாம் நாள் லாக் டௌன் என கேள்விப்பட்டதும் ( நாங்கள் இரு பக்க இத்தாலி எல்லையிலிருந்து 300/200 km) தூரத்தில் வசிக்கின்றோம்

பெப்ரவரி 20 குடும்ப மருத்துவரிடம் போனால் (அப்போது Swiss ல் covid 19 வைரஸ் அலர்ட்இல்ல)  அவர் இரத்தம் சோதித்து லங்ஸ் தொற்று ஆகி இருக்கு என அண்டியபிட்டிக் மாத்திரையும் இருமல் சிறப், இங்கோலரும் தந்தார், அவர் தந்த அண்டியபிட்டிக் மாத்திரை ( ஒரு வாரம் ) பாவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, மூச்சு எடுக்க சிரமமாக இருந்ததால் இங்கோலர் தினமும் பயன்படுத்தினேன் (சில நாள்கள்) 

மார்ச் ஆரம்பம் சுவிஸ் ல் வைரஸ் அலர்ட் செய்த போது எனக்கு இருமல், தடிமன், காய்ச்சல் ( ஃப்ளு அறிகுறி )இருந்தது.

மார்ச் 5 ம் திகதி மீண்டும் டாக்டர் க்கு போன் செய்து  கேடடால் நேரில் வர வேண்டாம் 
பார்மசியில் மருந்து வாங்கி கொள்ளுங்கோ என்றார்கள். 

பார்மசி போனால் அவர்கள் இருமல் சிறப், பாராசிட்டமால் மாத்திரையோடு தொண்டை வரடசிக்கு சுகர் பிரீ லெமன் மிட்டாய் ஒன்றை அடிக்கடி மெல்லும் படி தந்தார்கள் மார்ச் 10  வரை எதுவும் சரியாகவில்லை.

இங்கேயும் பரவல் அதிகமாகி அவசர கால உத்தரவு அது இது என பேச தொடக்கி விடடார்கள் 

இத்தாலி முழுதாக முடங்கி சுவிஸிலும் பரவி மரணங்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது 

எனக்குள் இருக்கும் இருமல்,தொண்டை வரடசியை எப்படியும் கட்டுப்படுத்தியே ஆகணும் என  வீட்டில் உணவே மருந்து என ஆரம்பித்தேன்.

இது என் அனுபவம்..! 
அனைவருக்கும் ஒத்து கொள்ளும் என உறுதி தர முடியாது. அவரவர் உடல் நிலை,ஒவ்வாமை கருத்தில் கொள்ளுங்கள் 
( எனக்கு தைராட்ஸ், அசிடிட்டி பிரச்சனை இருப்பதால் லெமன், ஆரஞ்சு, வினாகிரி இன்னும் பல உணவுப்பொருள் ஒத்துக்காது ) 

காலை மாலை ஒரு கரண்டி தேன், காலை முதல் இரவு வரை ஐந்து வேளை சுக்கு, மல்லி, கோப்பிகொடடை சேர்ந்த யாழ் கோப்பி அருந்தினேன்.மாதுளம் பழ முத்துக்கள் மென்று தின்னும் போது தொண்டைக்குள் இதமாய் உணர்ந்தேன் 
Passion fruit , பப்பாசிப்பழம் இவைகளுடன் ஒரு வாரம் வெறும் ரசம் சோறு ( இறைச்சி, மீன் இல்லை). மல்லியுடன் நிரம்ப மிளகு சேர்த்து உடனே மிக்சியில் அடித்து
வெங்காயம், தக்காளி சேர்ந்து உள்ளியும் 20 பல் தட்டி போட்டு ரசம் வைத்து சூடு சோறில் ரசத்தில் இருக்கும் உள்ளியை  5,6 மென்று தின்றேன் இஞ்சி அரைத்து உணவில் சேர்த்தேன். 

நிரம்ப வெந்நீர் /மூலிகை தேனீர்  (photo) இருமல் வரும் போதெல்லாம்  குடித்தேன் (பொதுவாக நீர் அருந்துதல்ஆரோக்கியமானது, கிட்னி நோயாளர்கள் தவிர்த்து அனைவரும் நீர் அருந்தும் போது வைரஸ் மூலம் உருவாகும்  நோய்களின் பாதிப்பு உடலில் தங்காமல் சிறுநீரோடு வெளியேறி விடும் ) அதனால் ஃப்ளு அறிகுறிகள் வந்தால் பிள்ளைகளுக்கு மூலிகை தேனீர் போட்டு பிளாஷ்க் கில்ஊற்றி  வைத்து குடிக்க வைப்பேன்.அதுவே நானும் பின்பற்றுவேன் ( மருத்துவரிடம்  உடனே செல்வது இல்லை ) 

எங்கள் உணவில் கீரை, காய்கள், மஞ்சள், மிளகு தினமும்  சேர்ந்து கொண்டேன் 

ஆச்சரியம்......! 

ஐந்து நாளில் எல்லாம் சுகமே! எனக்கா மாதக்கணக்கில் இருமல் இருந்தது என என்னை நான் கேட்கின்றேன்?

வீடடை விட்டு வெளியில் சென்று மூன்று வாரம்,வீட்டினுள் தான்இருக்கின்றோம்கேள்விப்படும் செய்திகள் நல்லதாக இல்லை 
மகள் சொல்கின்றாள் அம்மா இனி ஹோட்டல் செய்ய வேண்டாம்.நாம் இப்போ சேர்ந்து உண்கின்றோம், பேசுகின்றோம் சந்தோசமாக இருக்கின்றது நாம் இனி இப்படி இருப்போம்  என்கின்றாள்.

இரண்டு நாளுக்கு ஒரு தடவை சோறும் கிடைக்கும் காய், கீரை கறி, மகளுக்கு தயிர், பப்படம். ஒரு நாள் கோதுமை அல்லது ரவை உணவு. தினமும் இரு வேளை பழங்கள் என சுருக்கி கொண்டோம் 

காலையில் சீனி, பால் சேர்க்காத தேனீர், ஒரு துண்டு பிரட் இரவில் இருப்பதை சமாளிக்கின்றோம். உணவுப்பொருளை விரயம் செய்யாமல் அதே நேரம்உணவுத்தட்டுப்பாடு வந்தால் எமது உடல் அதற்கு தயாராக வேண்டும்  பசியை உணர வேண்டும் எனும் முன்னேற்பாடும் என்னுள் உண்டு 

எங்களுக்கு தேவையானது மட்டும் வாங்கி கொள்கின்றோம். Hotel  பிரிட்ஜ் ல் மீன் இறைச்சி அடுக்கி கிடந்தாலும் தினம் கேட்கும்செய்திகளால் எதையும் ருசித்து உண்ணும் மனமில்லை.

அனைத்தும் கடந்து எங்கள் பாடுகளை உணர்ந்து நாங்கள் படுவதை நீங்களும் அனுபவிக்க வேண்டாம், இதே நிலை இந்தியா, இலங்கையில் வந்தால் இழப்புக்கள் எமது கற்பனைகளை கடந்து சென்றிருக்கும் எனும் அச்சத்தில் உங்களை எச்சரிக்கின்றோம்.

ஆனால் நீங்களோ......? 

இங்கே கவனிக்க வேண்டியது 

ஃப்ளு ஆரம்பத்தில் அது கொரோனா Virus என பயத்தில் பதறி மருத்துவர், மருத்துவமனை  செல்ல வேண்டாம், ஃப்ளு அறிகுறி இருந்தால் வீட்டில் அமைதியாக  நிதானமாக அதை எதிர் கொள்ளுங்கள்.பயம் தான் இந்த நோயை கடுமையாக்குகின்றது.

சுவாச பிரச்சனை இருப்போர் தினமும் சின்ன வெங்காயம் ஐந்து  பச்சை யாக மென்று தின்னுங்கள்  /  Swiss covid 19 சிறப்பு மருத்துவ பிரிவு  சுவாசம் இளைக்கும் போது முதல் முயற்சியாக இதைசெய்கின்றார்கள் 

வீசிங் இருப்போர் தலை மாட்டில் உள்ளியை சட்டியில் சூடு செய்து துணியில் கட்டி வையுங்கள்.( சுற்று புற காற்றை சுத்தமாக்கி உங்கள் சுவாசத்தை சீராக்கும் என எனது பிள்ளைகளின் குழந்தை நல மருத்துவர் சொல்வர் /  மூக்கடைத்து  காது வலிக்கும் போது இது நல்ல பயன் தரும் என்பது என் சொந்த அனுபவம் ) இதனால் யாருக்கும் பாதிப்பில்லை 

போதுமான வெந்நீர், நிரம்ப விடடமின் சி உணவுகள், உங்களுக்கு நம்பிக்கை தரும், உங்கள் உடல் ஏற்று கொள்ளும் எதுவாக
இருந்தாலும் சித்த மருந்தோ, யுனானியோ, அலோபதியோ எதுஉங்களுக்கு பயத்தை போக்கிதன்னம்பிக்கை தருமென நினைக்கின்றிர்களோ அவைகளை,
ஆராய்ந்து, அறிந்து தெளிந்த பின் அளவோடு உண்ணுங்கள் 

ஃப்ளு அறிகுறி அல்லது வெளியூரிலிருந்து வந்தவர்களை கொரோனா டெஸ்ட்செய்யுங்கோஎன தொல்லை செய்யாதீங்கோ 

வீட்டுக்குள் அமைதியாக இருந்தால் உங்கள் நிதானமும், உணவுமே கொரோனவை  வெல்லும்

உங்கள் நம்பிக்கையே Covid 19 விரட்டும் தும்பிக்கை.அதற்கு நீங்கள் அனைவரும்  கொஞ்ச நாள் வீட்டுக்குள் இருங்கள்.


இருக்கும் வயதானவர்கள் எப்படியான தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!