13 அக்டோபர் 2020

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை

 எத்தனை ஆசை நிறைவேறும் ..? 

சின்ன பெரிய ஆசை நிறைவேறுமா மக்களே..,🪂? 

உங்களுக்கு இருக்கும்

ஆசைகளை சொல்லுங்கோ...❣️

🔹

பென்னம் பெரிய ஆசை 

பறந்து செல்ல ஆசை 

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை 

பூவுலகம் எங்கும் மிதந்து வர ஆசை 


காணும் மனிதர்  எல்லாம் கட்டி அழ ஆசை 

தொட்டணைத்து கன்னம் முத்தமிட ஆசை 

ஆத்தங்கரை நாவல் பறித்து திங்க ஆசை 

குளத்தருகே கோயில் கும்பிடவும் ஆசை 


பள்ளிக்கு சென்று பாடம் படிக்க ஆசை 

பட்டாம் பூச்சி போல பட்டம் விட ஆசை 

பல்லுக் கூச மாங்காய் கடித்து திங்க ஆசை 

பாட்டி வீட்டில் தேங்காய் திருடி வர ஆசை 


கிட்டி புள் தடியை தெறிக்க விட ஆசை 

கிட்டி வரும் மேகம் தொட்டு வர ஆசை 

ஊஞ்சல் கட்டி ஆடி உள்ளம் கொய்ய ஆசை 

கொய்யா மரம் ஏறி கோதி தின்ன ஆசை 


குறுக்குகட்டி கிணத்தில் குளித்து மகிழ  ஆசை 

கிணத்து  நீரை அள்ளி அள்ளிப்பருக ஆசை

விழிமாங்காய் சேர்த்த மீன்சொதிக்கு ஆசை

வழியில்  தொட்டால் சிணுங்கி  தொட்டு வர ஆசை 


துட்டுக்காக ஒட்டு தடுத்து விட ஆசை 

வட்டி வாங்குவோரை வெட்டித்தள்ள ஆசை 

குட்டித் திட்டுவோரை குதறிவிட ஆசை 

குனிந்து வாழ்வோரை நிமிர்த்திவிட ஆசை 


காணும் கனவு உடனே பலித்து விட ஆசை 

பல்லி சொல்லும்சேதி புரிந்து கொள்ள ஆசை 

Face புக்கில்10000 லைக்கு வாங்க ஆசை 

லைக்கெல்லாம் வித்து சைக்கிள் வாங்க ஆசை😎


கொரோனவை இன்றே வென்று விட ஆசை 

கொல்லும் மனிதர் கொள்கை கொன்று வாழ ஆசை 

பென்னம் பெரிய ஆசை, பெட்டி நிரம்ப ஆசை 

என்னென்னமோ ஆசை, எண்ணமெல்லாம் தோசை🤣😜  விளிமாங்காய்

நாவல்


#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

பூமி எங்கும் பறந்து திரிந்து வர ஆசை

1 கருத்து:

  1. விதம் விதமான ஆசை! எனக்கும் உலகெங்கும் சுற்ற ஆசை - அது முடியாவிடினும் இந்தியாவுக்குள்ளே எல்லா இடமும் சுற்றி வர ஆசை!

    உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!