09 நவம்பர் 2020

கமலா ஹாரிஸ் அக்காச்சி🤪


ஏனே ஆச்சி ..! உண்ட  சிநேகிதப்புள்ள  சியாமளா னு  ஒருத்தி இருந்தா னு  சொல்வேல..  படிக்கிறதுக்கு அமெரிக்கா போய்  ஒரு ஜமைக்காகாரனை love பண்ணி  கலியாணம் கட்டி ரெண்டு பொம்புளப்புள்ளை இருக்குன்னு சொல்லுவியே ..! 

ஓமடி புள்ள.. அவளுக்கு என்னாச்சு..? 

அவட மூத்த பொண்ணு அமெரிக்காவுல அஸிஸ்ட்ரென்ட் ஜனாதிபதி ஆகியிருக்கு ஆச்சி. 

என்னடி புள்ள சொல்ற.. அமெரிக்காவுல இல்லாத  பெட்டைகளோ..?    சும்மாவே அவனுக தன்னை விட்டால் ஆளில்லை எண்டு திமிர் புடிச்சவனுக..   உந்த வெள்ளையன் இறாலை போட்டு சுறா  புடிப்பான்.. அவன் கண்ணு பட்ட ஊரும்...காலு பட்ட இடமும்  நாசமாக்கி விடுவானுகளேடி ஆத்தா ... ! 

நேக்கு நெஞ்சு திக் திக் எண்ணுதுடி.. 

ஒரு பக்கம் இந்த சீனா காரன் படுத்தும்பாடு இந்த பக்கம் இவனுக என்ன நினைச்சி இருக்கானோ..? அவனுக எப்படி இவாளை உள்ளே விட்டார்கள்? 


Me : நேக்கு என்ன தெரியும்? 

இரு அப்பாக்கு போன்  செய்றன்..

ஹல்லோ .. அப்பா .. கமலா ஹாரிஸ் ...? 

அந்த பக்கம் அப்பா :  கமலாட   அம்மா உனக்கு பெரியம்மா புள்ள .. மடடக்களப்பு ல புறந்தவோ...🤪 உண்ட  அம்மம்மாவின் அம்மாவின் தாத்தாவுக்கும், பாட்டியின் தங்கையின்  மாப்பிள்ளையின் தங்கைக்கும்  ம்.........🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

அப்டியேப்பா சரி சரி 

ஆதாமும் ஏவாளும் என் பூட்டன் பூட்டி என்றால் இந்த லோகமே நேக்கு சொந்தம் போல...💃💃 லாலாலா..! 

ஆச்சி  கேட்டியோனை கதையை.. கமலா நேக்கு அக்காச்சி முறை வருமாம். 

அடிப்போடி  போக்கத்தவளே... உனக்கும் வேலை இல்லை... உண்ட கொப்பனுக்கும் அறிவு இல்லை . நேக்கு அலுவல் இருக்கு .. நான் போறன் என்று  இருக்குற நாலு  நரை முடியை ஸ்டைலா சிலுப்பி போட்டு கிளம்பிருச்சு  ஆச்சி..

நேக்கு கொசுவர்த்தி சுத்துது ..💦💦

எண்ட அப்பா இப்படித்தான் எண்ட வீட்டை  வரும் எல்லோரையும்ம்..

🌍 🌍 🌍 🌍 🌍

வாங்கோ வாங்கோ ..! 

எப்படி இருக்கீங்க ..? 

ஊர்ல நீங்க எவ்விடம்..?


அந்த ஊரிலோ..  அங்கே யார் வீடு..? 

வந்தவர்: ......வடக்கு, கிழக்கு பக்க ஊர் சொன்னால்..! 

ஓஒ அந்த பக்கம் தான்  என் மனுசியின்  மாமாவின் மனுசியின் அப்பாவின்  தாத்தாவின் தங்கைச்சியின் மகனுக்கு கலியாணம் செய்தோம் . நீங்க எங்களுக்கு சொந்தம் தான் கண்டியலே 😂


வந்தவர்: . தெற்கு, மத்திய  பிரதேசம் என்றால்..? 

என்  தங்கச்சிட புருஷனின் தாத்தாவின் தாத்தா.. என்று தொடக்கி எங்கோ ஒரு  மூலை யில் எவரோ கல்யாணம் செய்தது என்று கண்டு புடிச்சி எல்லாரையும் சொந்தக்காரர் ஆக்குற வித்தை  என்  அப்பாக்கு பழக்கம். 

வந்தவங்க  உட்கார நான்  டீ போட்டு வரதுக்குள்ள  எண்ட அப்பா

இவங்க உனக்கு மாமா முறை வேணும். மாமா னு  கூப்புடு... என்றளவுக்கு வந்திருப்பார்.

இந்த மனுசனுக்கு வேற வேலையில்லா.. ஊர்ல இருக்கவுக எல்லாம் சொந்தம் பந்தம் எண்டு வேர் தேடி கொண்டு இருக்கார் ... மனசுக்குள்  திட்டி கொண்டே 

Me வெட்கப்பட்டு கொண்டு .... 

ஓமப்பா ...நம்ம எல்லாத்துக்கும் ஆதாமும், ஏவாளும் தானே பூட்டன் பூட்டி .. இந்த உலகத்தில் இருக்கவுக  எல்லோரும் நமக்கு சொந்தம் தான் என்று சொல்லி புது புது சொந்தம் உருவாகும்... 

அது வரை அடுத்த வீட்டு அண்ணன் என்று அழைத்தவர்   எனக்கு திடீர் மாமா ஆக்குவார். அவர்  மனுசியை மட்டும் அத்தை ஆக்காமல் அக்கா வோட நிறுத்திப்பேன். ஆண்ட்டி, அத்தை எண்டால் அவைக்கு கோபம் வரும். வயது போச்சுதே என்று திட்டினம் அல்லோ😻😻

ஊரில் எடடாம் கிளாஸ் (  நம்புங்கோ பள்ளிக்குள்  போனேன் )  படிக்கக்குள்ள  எண்ட அப்பாவின்  கைங்கரியத்தில் நேக்கு நாகேஷ் மாமா, ஆனந்த் பாபு மச்சான் என்று கெத்து காட்டுவேன்  

எப்புடி எகிறியள்...?  ஆனந்த் பாபுவின் அம்மாவின் அக்கா மகளும், எண்ட அப்பாவின் ஒன்னு விடட அண்ணனின் அண்ணன் மகனும் கட்டிக்கிட்டாங்களாம். அப்படி  நேக்கு அவங்கள்லாம் சொந்தம் இல்லையோ.🤣

இதான் பரவால்ல.. இலங்கை, இந்திய சனமெல்லாம் எனக்கு சொந்தம் என்று மனசுக்குள் ஊற வைச்சார் .. என்றால் இங்கே சுவிஸ் வந்தும் இங்கேயே பழக்கப்படி பெயர் சொல்லி கூப்பிட கூடாது ஆண்ட்டி சொல்.. ungle  சொல் ...அண்ணன்

சொல். என்று என்னை  படுத்திய  பாட்டில் யாரோ ஒரு புது அண்ணா அப்பாவை இருத்தி வைச்சு அண்ணே சுவிஸில் நம்மூர் போல  உறவு  சொல்லி அழைக்க மாட்டினம். நீங்க புள்ளய படுத்தாதீங்கோ என்று என்னை காப்பாத்தி விடடார்.. 

உண்மையா சொல்றன்.. 

எண்ட அப்பா இருக்காருல்ல... அவரு தான் இப்படி புது சொந்தம்  தேடுவார்னு  நினைசிசேன். அப்பா மட்டும் அல்ல நம்மாளுங்க எல்லோரும் இதுல கெட்டி என்று இன்னிக்கு புரிந்தது. 

அதாவது இந்த கமலா ஹாரிஸ் இருக்காங்கல்ல.. அமெரிக்கால அவ எங்க ஊரு. எண்ட பெரிய உண்மையை அவாவே வெளில சொல்லாத ரகசியத்தை கண்டு பிடிச்சிருக்காப்ல ..!

 நேக்கு கமலா பெரியம்மா பொண்ணு .. 

அக்கா ஆகணும் கண்டியளோ..? 

ஒரு பொண்ணு முதல் ஆளுமை மிக்க பதவி என்று பெருமை இருந்துச்சு.. இப்ப  ஊரு, உறவுன்னு  தெரிந்த பொண்ணு பெரிய பதவிக்கு வந்திருக்கு. 

பெரிய பேனர் கட்டி.. விருந்து வைச்சு கொண்டாடலாம்னு இருக்கேன்..

டொனேஷன் கொடுங்கோப்பா..! 

ஐந்து பத்து போடுங்க போதும்🤪 

😂😂

அந்தப்பக்கம் எண்டே அம்மே சத்தம்  போடுது .. அடியே  நாசமத்து போன சொந்தம்.. தவிக்க வாய்க்கு தண்ணி தராத சொந்தம்😳 கொண்டாட போரியலோ கொண்டாட்டம்

உனக்கும் உண்ட அப்பனுக்கும் வேலை இல்லை.. 

அந்த  கிழவியோட சும்மா  ஊர்வம்பு கதைக்காமல்  பெரியவள்  அக்காசிட்ட போய் பத்து ரூபா காசு கடன் வாங்கித்து வா... அரிசி வாங்க காசில்லை... சோத்துக்கு வழியில்லை ... இதில 

பெரியவள் அக்காச்சி யாரு என்று அடுத்த பதிவுகளில் சொல்றன்..  

நீங்க ஐந்து பத்து அந்த பேனருக்கு....✍️✍️.

கமலா ஹாரிஸ் அக்காச்சி🤪 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!