02 நவம்பர் 2020

COVID 19 அறியாமையினால் இழப்புகள் தான் அதிகமாகும்.

அரசாங்கங்கள் இணைய தளங்கள் அனைத்தையும். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தரும் பதிவுகளை விடுமாறு கேட்டு கொண்டுள்ளது. 

கொரோனா வைரஸ் குறித்து அறிந்து கொள்ள விரும்பாமல் அருவருப்பு, பயத்தில் ஒதுங்கி சமையல் சாப்பாடு,சினிமா என்று சிந்தனை திசை திருப்புவதால் வரும் அறியாமையினால் இழப்புகள் தான் அதிகமாகும்.

ஐரோப்பா வில் முதல் அலையின் போதும், இப்போதும் இந்த வைரஸ் குறித்த தகவல்களை தினமும் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளில் தேடி வாசித்து அதில் முக்கியமானதை ஆதாரத்தோடு பகிர்வது வேற்று மொழி அறியாத எங்கள் மக்களுக்கு நடப்பு நிலை தெரியணும் என்பதோடு இலங்கை, இந்தியாவில் இருக்கும் எங்கள் உறவுகள் தற்காத்து கொள்ள முன் எச்சரிக்கணும் எனும் நல்லெண்ணத்தில் தான். தினசரி நடப்பதை வேற வேலை இல்லாமல் இங்கே எழுதுவது இல்லை.

ஒரு தகவலை தேடி மொழி பெயர்த்து ஆதாரத்தோடு எழுத பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. எப்போதும் லைக் க்கு நான் எழுதுவது இல்லை என்றாலும் ஒரேயடியாக இம்மாதிரி செய்திகளை கண்டு கொள்ளாமல் கடப்பது ஒரு வித அயர்ச்சி தருது. 

முதல் அலை குறித்த விபரங்கள் முன் எச்சரிக்கையாக இருந்தது போல் தான் அதை விட கடுமையாக இரண்டாம் அலை வருகின்றது என்று எச்சரிக்கின்றோம். 

சுருக்கமாக எழுதுகின்றோம் என தலையும்இல்லாமல் வாலும் இல்லாமல் எழுதப்படும் அனைத்தையும் தவறாக  புரிந்து கொண்டு பெரிய பதிவு, பெரிய பந்தி  வாசிக்க மாட்டோம்  என்று விமரிசிப்போர் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.  

அவசரத்தில் நுனிப்புல் மேய்வதனால் யாருக்கும் பயனில்லை. ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத அடிதடி சினிமாவை 3  மணி நேரம் பொறுமையாக பார்க்கின்றிர்கள். ஒரு நாளுக்கு மூணு சினிமா, சீரியல் பார்க்க முடியுது. ஆனால் உங்களுக்கு அத்தியாவசிய தேவையான தகவல் அறிய 10  நிமிடம் செலவு செய்ய முடியல்ல. 

இப்படி அவசர கோலத்தில் வாழ்ந்த்  நிதானமாக சிந்திக்க முடியாத பலர் அதிக மனஅழுத்தத்தில்,, பயத்தில், சோர்ந்து போய் சுய சிந்தனை இல்லாதவர்களாக முடங்கி கிடக்கின்றார்கள். தேடி தேடி தகவல் அறிவோர் அடுத்து என்ன செய்யலாம் என சூழலுக்கு ஏற்ற திட்டங்கள் இடுவதும் மாற்றங்களை எதிர்வு கொள்ள தயாராக்குவதுமாக தன்னம்பிக்கையோடும்  இருக்கின்றார்கள். 

எல்லாமே சுருக்கி, குறுக்கி அவசர கோலத்தில் வாழ்ந்து பயனில்லை. எந்த விடயம் என்றாலும் சிறிது நேரம் எடுத்து அதில் இருக்கும் கருத்தை உள் வாங்கி கொள்ளுங்கள். அது எப்போதுமே நல்லது. 

Covid 19 குறித்து வரும் என் பதிவுகளை 

கடப்போர் உங்களுக்கு கருத்தில் ஆர்வம் இல்லை என்றாலும் ஒரு லைக் இடுவதன் மூலம் உங்களை சார்ந்தோருக்கு எச்சரிக்கை செய்து தற்காத்து கொள்ளும் வாய்ப்பை  தர முடியும். வர இருக்கும் ஆபத்தை நேருக்கு எதிர்வு கொள்ள பயந்து நடப்பு நிலை அறியாமையால் சிக்கி கொள்ளாதீர்கள். 

இங்கே எழுதுவது உங்கள் எங்கள் நன்மைக்கு தானே தவிர இதனால் எனக்கு ஒரு வருமானமும் இல்லை. 

அவ்வளவு தான்..

02.11.2020 

#அறியாமையினால் இழப்புகள் தான் அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!