12 நவம்பர் 2020

இலங்கை நண்பர்களுக்கு ஒரு கேள்வி

 நட்பில் இருக்கும் இலங்கை  நண்பர்களுக்கு  ஒரு கேள்வி 

உண்மையில்  உங்களுக்குள் எங்கள் தமிழ் மண், ஈழத்து நிலம், சமூகம்  மீட்சி பெறணும் என்ற அக்கறை இருக்கா..? 

இலங்கை  நண்பர்களுக்கு  இலங்கை அரசாங்கத்தின் ஒரு இலட்சம்  காணிகள்,  தொழில் முனைவோர் எனும் அறிவிப்பு..!  இதற்கு பின் இருக்கும் விளைவுகள் என்ன என்று யோசித்தீர்களா..?  . 

இந்த அரசு  நிலங்களில் பெரும்பான்மை எங்கே இருக்கு....? 


இலங்கை காடுகளின் வரைபடம் போனவருடதரவு பாருங்கள். இது வடகிழக்கை மொத்தமாக  ஆக்கிரமிக்கும் முயற்சி என்று  இனி என்றாலும் கொஞ்சம் சுதாகரித்து கவனம் எடுங்கோ..

மண்  மீட்பதும்  காப்பதும் ஆயுதம் ஏந்தி போராட்டத்தினால் சத்யமாவது இல்லை. விவேகம் வேண்டும். 

நான் இடும் #காணி சார்ந்த பதிவுகளில் உங்கள் ரியாக்சன்  கவனிக்கின்றேன். பரிதாபப்பட்டு இரக்கத்தின்  ஐந்தும் பத்தும்  கொடுத்து எப்போதும் இறைஞ்சி வாழும்

சமூகத்தை வளர்த்து விடும் பலருக்கு ஆக்கப்பூர்வமாக காரியங்களுக்கு ஆதரவு தர மனம் இல்லையா..?  

சோத்து   தட்டுக்கு கொடுக்கும் முக்கியம் எங்கள் சொத்து  காக்கவும்  கொடுங்கள்.

சமூகம் சுயமாக வாழும் படி நிமிர்ந்தால் போதும். 

ஒவ்வொருவரும்  தனித்தனியே  ஒவ்வொரு பக்கமாய் செயல்  படாமல்  இனி என்றாலும் கொஞ்சம் உணர்ந்து  ஒத்துழைப்பு  கொடுங்கோ 😍

Facebooks 

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா

12.11.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!