15 நவம்பர் 2020

“ எலிபண்ட் “ தமிழ் தான்..!

 “ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

சுவிஸில் பிறந்த எங்கள் பிள்ளைகளுக்கு கிண்டர் கார்டன் ல் புதிய  சொல் கற்பிக்கும் போது ஜேர்மன் சொல்லுக்கு தமிழில் என்ன என்று கேட்பார்கள். ஒரு  தடவை மகனிடம் யானை பொம்மையை காட்டி இதுக்கு பேர் என்ன என்று கேட்க அவன் “ எலிபண்ட் “ என்று சொல்ல டீச்சர் அது இல்லை தமிழில் சொல் என்று திரும்ப திரும்ப கேட்க “ எலிபண்ட் “சொல்லி இருக்கார். 

“ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

வீட்டில் எப்படி சொல்வாய்..? 

“ எலிபண்ட் “  தான்..!

அம்மா சொல்லி  தந்தது என்றும் சொல்லி இருந்திருக்கார். 

டீச்சர் அம்மாவிடம் திரும்பவும் கேட்டு வா என்று சொல்லி அனுப்பி இருந்தார். என்னிடம் வந்து கேட்டான்.  

“ எலிபண்ட் “ என்றேன் அம்மா 😂

மகன் : இல்லை...! தமிழில் என்ன..? 

 “ எலிபண்ட் “ தமிழ் தான்..! 

மகன் நான்கு வயதில்  “ யானை” படம் வரைந்து எழுதிக்கொண்டு Kinder Garden போனார்..! 

பிறகு parents மீட்டிங் ல் எங்களிடமும் உன் பிள்ளைக்கு நிரம்ப சொல்லுக்கு தமிழ் தெரியல்ல .. English சொல் சொல்ரான்.. தமிழில் சொல்லி கொடு என்று சொல்லி இப்போ மகன் (23) நல்ல தமிழ் பேசுவான். 

மகன் 18  வயதுக்குள்  நான்கு மொழியில் முழு தேர்ச்சி  பெற்று இருந்தான்.

தமிழ் 

ஜேர்மன் 

ஆங்கிலம் 

பிரெஞ்சு 

ஒருவர்  தாய் மொழியை சரியாக கற்றிருந்தால் ஏனைய மொழிகளை பேச எழுத  இலகுவாக இருக்குமாம். சுவிஸ் அரசு தாய்மொழி கல்விக்கு தனி கவனம் எடுக்குது.    சுவிஸில் பிறந்து வளர்ந்த எங்கள்  பிள்ளைகள் தமிழ் பேசும் ஆரம்ப உத்வேகம் இது தான். பெற்றோர் ஒத்துழைத்தோம்

ஒரு  குழந்தையின் முதல் மொழி தாய்மொழியாக  இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் தாய் மொழி கல்விக்கு கவனம் கொடுங்கள். தாய் மொழியை ஒதுக்கி தரணியை வெல்ல முடியாது.

மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!