03 நவம்பர் 2020

CIVID 19 கடந்து வாருங்கள் .

உங்களுக்கு தலையில் மிக முக்கியமான இடத்தில ஒரு கட்டி வளர்கின்றது. அதனால் மிக கடுமையாக பாதிக்கபடுகின்றீர்கள். உங்கள் உடல் பலவீனம் அடைகின்றது. உடலில் சில பகுதிகளில் இயக்கம் குறைகின்றதை உங்களால் உணர முடிகின்றது. திடிர் திடீரென உங்கள் நினைவுகள் மறைந்து மயக்கம் வருகின்றது. 

உங்கள் மருத்துவர்கள் அந்த கட்டியை வெளியே எடுக்க தயங்கி ஐந்து வருடங்களுக்கும் மேல் வெல்வேறு மருத்துவ முறைகளில் முயற்சி செய்கின்றார்கள்.  முடிவில் இனி வேறு வழி இல்லை..! 

கட்டி உள்ளே இருந்தாலும் உடல் பகுதிகள் தன்  இயக்கத்தை இழந்து விடும் எனும் இறுதி சில  நாட்களுக்குள் நிரம்ப பேப்பரில் கையெழுத்து பெற்று  கொண்டு ( உயிரும், உடலும் மருத்துவர் வசம்)  பெரிய  ஆபரேஷனுக்கு தயாராகுகின்றீர்கள்.

காலை ஏழு மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை மிக நுணுக்கமாக ஆப்ரேசன்.

அடுத்து நான்கு நாள் இன்டெரசிங் கேர் ( ICU )  24  மணி நேர கண்காணிப்பில் உடல் அசைக்காமல் படுக்கையில் வைக்கபடுகின்றீர்கள். அனைத்தும் படுக்கையில்...!  நான்காம் நாள் முடிவில் பிஸியோ தெரபிஸ்ட் உதவியோடு எழுந்து நிற்க முயற்சி செய்து ஒரு பக்கமாக சரியும் போது ... மீண்டும் சோதனை.. வலது கையம், காலும் மரமாகி  போய் இருக்கின்றது. உங்களுக்காக சக்கர நாற்காலி வருகின்றது. 

நீங்கள் எப்படி உணருவீர்கள்..? 

நான்....நிஷா🌻🌻

என்னால் முடியாதா டாக்டர்..? 

நீ நினைத்தால் முடியும். ஆனாலும் காலம் வேண்டும். நாங்கள் உதவி செய்கின்றோம். நீ முயற்சி செய்...!

💦💦💦💦 முயற்சித்து வெற்றி பெற்று என்மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கின்றேன்.☃️☃️

இது கதை அல்ல..! 

நிஜம்..! 

ஆம், நான் தான் முயற்சிக்கணும். மருந்து மாத்திரை உதவுமே தவிர நானே  முயற்சி செய்யணும் எனும் நிலையிலும் வாழ்க்கையை, இயற்கையை ரசிக்க உங்களால் முடியுமா? 

என்னால் முடிந்தது என்பதனால் தான் உங்களுக்கும் சொல்கின்றேன். உங்களாலும் முடியும். நான் ஏழு கடல் கடந்தேன். உங்கள் முன்  ஒரு கடல் தான் இருக்கின்றது. கடந்து வாருங்கள் 

💘 ஒட்டு மொத்த சமூகமும் COVID 19   நோய் தொற்று வேகத்தில் சோர்ந்து, பயந்து போய் கிடக்குது. இந்த சூழலில் சுய முன்னேற்றம், எதிர்காலம் சார்ந்த ஆலோசனைகளை விட எங்களை நாங்கள் உற்சாகமாக வைத்திருக்கும் வழிமுறைகளை தேட வேண்டும். மனித மனங்களுக்கிடையில் போராட்டம் சூழும். சகிப்பு தன்மை குறையும். சண்டை,சச்சரவு, குழப்பம் வரும். 

💝 ஆனால் ஒன்றை நினைவில் வைத்திருங்கள். பிரச்சனை எங்களுக்குள் மட்டும் இல்லை. எல்லோருக்கும் உண்டு. எங்களை அவர்கள் இடத்தில நின்று யோசித்து  கொஞ்சம் பொறுமை நிறைந்த  புரிதல் போதும். 

யோசித்து பாருங்கள் ...! 

03.11.2020

கடந்து வாருங்கள் 

1 கருத்து:

  1. சுருக்கமாக எனும் மனதில் பதியும்படி நிறைவாக...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!