26 நவம்பர் 2020

இயக்கம் - உத்வேகம் - பார்வை - 1

 #motivation_inspiration_VISION 2021

நேற்று ஒருவர் நாங்கள் ஜூம்  மீட்டிங் போட்டோமே என் யாரும் கலந்துக்கல்ல  ..? அப்போது எல்லோரும் என்ன செய்தார்கள்..? சோம்பேறி சமூகம் என்கின்றார்? 

உண்மையில் யார் சோம்பேறிகள்? உடலில் வலுவும்,உளவியல் வளமும்  இல்லாமல்  அன்றாடம் உணவுக்கே அல்லாடி உழைத்து தின்ன பாடுபடும் அவர்களா..? இல்லை நாங்களா?

நாங்கள் எங்களை வைத்து எங்களை போல்  வாழ்க்கை வாழும் மக்களை குறித்த யோசித்து அடித்தட்டு மக்களுக்கு ஐந்தும் பத்தும் கொடுப்பதோடு எங்கள் தர்மங்களினை குறித்த பெருமிதத்தில் குற்ற உணர்வுகளை மறைத்து விடுகின்றோம். 

ஆனால்...? 

இன்டர்நெட்,you Tube Vidio , Facebook, Online zoom Meeting லிங்க் பார்த்து புரிந்து கொள்ளும் அறிவுத்திறன் கொண்டோருக்கான திட்டமும் இது இல்லை. சேத்தில் இறங்கி  முள்ளுக்குள்ளும், புல்லுக்குள்ளும் நடந்து உடலில் வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கத்துக்கானது. இந்த மாதிரி திட்டங்களை நான்கு சுவற்றுக்குள் ஏசி அறைக்குள் இருந்து செய்வோருக்கு விளக்கப்படுத்தி பிரயோசனம் இல்லை. 

உழைத்து பிழைக்கும் ஆற்றலுள்ள பயனாளிகளுக்கு புரிய வைக்கணும். உதவி செய்யணும்.  கை தூங்கி விடணும். அவர்களுக்கு இத்திட்டவரைபும் தெரியாது. விண்ணப்பம் நிரப்பும் பெயரில் ஒருவருக்கு 1000 Rs ரேட் போட்டு வருமானம் சம்பாதிக்கவும் தெரியாது. நிலத்தில் இறங்கி உழைக்க மட்டும் தான் தெரியும். 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியல்ல என்றால் தெரியாது என்று தெளிவாக சொல்லணும் தவிர அப்பாவி மக்களை குற்றம் சொல்லி கிளப்பி விட கூடாது. உண்மையில் எங்களில் அநேகருக்கு நாங்கள் இருக்கும் அபாயமான நிலை புரியவில்லை. கொரோனாவுக்கு பின் வரும் உலகின் நெருக்கடி புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு தரப்போகும்  சிக்கல்களின் தன்மை  உணரவில்லை. அவனவனுக்கு அவன் நாடும், மக்களுமே முக்கியம். 

மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்தால் மனிதாபிமானம், புரிந்துணர்வு எல்லாம் குப்பைக்குள் போகும் என்பதை மார்ச் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவில்லை என்பதற்க்காக சுவிஸ் நாட்டுக்குள் மருந்துகளும், உணவுப்பொருள்களையும் விடாமல் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன் நாடுகள் தங்கள் எல்லைகளில் பல வாரங்கள் தடுத்து வைத்திருந்ததை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

சமூகத்துக்கு  மீட்சி தேவை என்றால் முழு சமூகமும் ஒத்துழைக்கணும். தூங்கி கொண்டிருக்கும் அனைவரும் எழும்புங்கள்..! 🔥🔥🔥🔥

இயக்கம் - உத்வேகம் - பார்வை - 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!