18 நவம்பர் 2020

இளம் தொழில் முனைவோருக்கான காணி துண்டுகள் பெற விதிமுறைகள் என்ன..?


இளம் தொழில் முனைவோருக்கான ஒரு லட்சம் காணி துண்டுகள்  

15.11.2020  வரை  அரசின் காணிக்கு விண்ணப்பித்தவர்கள்  குறிப்பிட்ட  தகுதிகளுக்குள்  அடங்கிய   விண்ணப்பதாரர்களை பிரதேச செயலகம்  20  நாட்களுக்கு பின் வரும்  ஒரு  மாதத்துக்குள் நேர்முக தேர்வுக்கு அழைக்க வேண்டும். ( திகதிகள் விண்ணப்பங்கள் அளவை பொறுத்து பிரதேச செயலகம் முடிவு செய்வார்கள். உதாரணம்  5.12.2020 -  05.01.2021 ) 

இந்த திட்டத்தின் ஊடாக இலவச காணி பெற விரும்பி  விண்ணப்பித்திருக்கும்  ஒருவரை நேர்முக தேர்வுக்கு  அழைப்பது குறித்து விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவு செய்ய  பிரதேச செயலகத்தில்  தொழில் சார் வல்லுநர்கள் குழு ஒன்று உருவாக்கப்படும். 

🔷 விண்ணப்பித்தவர்கள்  அனைவரையும் நேர்முக தேர்வுக்கு அழைக்க மாட்டார்கள்.       

• உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுமானால்  எழுத்து மூலம் அதன் காரணத்தை  அறிவிக்க வேண்டும் . 


✅ செயல்பாடு மற்றும்  உற்பத்தி கொள்திறனை கருத்தில் கொண்டு காணியின் அளவை தீர்மானிப்பார்கள் என்பதால் இத்தகைய விண்ணப்பங்கள் செயதோர் நேர்முக தேர்வுக்கு செல்லும் போது அவர்களது தொழில் முறை அல்லது வேலைத்திட்டம் குறித்த. திட்ட அறிக்கையுடன்  ( project proposal ) செல்ல வேண்டும். 

🌳

இளம் தொழில் முனைவோருக்கான காணி துண்டுகள்  பெற  விதிமுறைகள் என்ன..?   

கீழிருக்கும் குறிப்புகளுக்குள் நீங்கள் இருக்கின்றிர்களா..?  

நீங்கள் சுயமாக உங்கள் முயற்சியில் எழுந்து நிற்பதற்கு தொழில் முயற்சியில் ஈடுபடும் வாலிபரா?

✓ சவால்களை தைரியமாக முறியடிப்பதற்கு முடியுமா? 

✓18 - 45 வயதெல்லைக்கு உட்பட்டவரா ( உங்கள் தொழிலை பொறுத்தவரையில் வயதில்லை நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு)

✓தற்போது உற்பத்தித் துறையில் உங்கள் தொழிலை அமைத்துக் கொண்டுள்ள ஒருவராக அதை மேலும் வளப்படுத்துவதற்கு வலுப்படுத்துவதற்கு முயற்சி செய்யும் ஒருவரா?

தேசிய சந்தையை மற்றும் சர்வதேச சந்தையை மையப்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் நபரா?

✓கூட்டாக அல்லது கூட்டுறவு முறையில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்களா?

✓விவசாயத்துக்கு உகந்த உங்கள் நிலங்கள் தீர்க்க முடியாத பிரச்சினை களுக்கு உட்பட்டு இருக்கின்றதா? 

✓உங்கள் பெயரில் நடைமுறையில் இருக்கும் உற்பத்தி சார்ந்த துறைக்கு இடப்பற்றாக்குறையா?

✓தொழில் முயற்சிக்கு குறிப்பிட்டளவு  முதலீடு செய்ய உங்களால் முடியுமா? 

உங்கள் முயற்சி மூலம் மற்றவர்களுக்கு தொழில்  வாய்ப்புக்களை உருவாக்க முடியுமா?

✓ இப்பொது செய்யும் தொழிலை மேலும்

மேம்படுத்த்தும் திட்டங்கள் இருக்கின்றதா?  

18 - 45  வயது எல்லைக்குள் இல்லாத ஒருவர்  வெற்றிகரமான தொழில் முயற்சியை  மேற்கொள்ளக்கூடிய திறமையும், உடல் வலுவும் கொண்டிருந்தால் வயது தடையாகாது. காணிக்கு விண்ணப்பித்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும் ஒருவர  ஆர்வமும் நிதி முதலீடு செய்யும் கொண்டவராக இருந்து  அனுபவமற்ற இளையோர் அனுபவம் வாய்ந்த ஒருவருடன் கூட்டு சேர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள முடியும். 

சொந்த காலில் நிற்க விரும்பும் / சுய தொழில் ஆர்வம் கொண்ட உற்சாகமான சவால்களை எதிர்கொள்ள திறன் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய  தீர்வு குழு உங்களை பல வகைகளில் சோதனை செய்யலாம். கேள்விகள் கேட்கலாம். உங்கள் ஒத்துழைப்பை பொறுத்து அவர்கள் முடிவு செய்யும் உரிமை பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🟢 தொழில்  முனைவோர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

🟢 உள் நாட்டு உற்பத்திகளை ஊக்கப்படுத்தல்,வெளி நாட்டுக்கு இறக்குமதி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்  முனைவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் 

🟢 காணியின் மேற்கொள்ள இருக்கும்  தொழில் முயற்சிக்கு தேவையான நிதி குறிப்பிட்ட அளவுக்கு  பங்களிப்பு செய்ய கூடியவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

நேர்முக தேர்விலும் நீங்கள்  தேர்ந்து எடுக்கப்பட்டால்  உங்கள ஆவணங்களை   உரிய பிரிவுக்கு அனுப்பி மூன்று  மாதத்துக்குள் உங்களுக்கான காணி வழங்கப்படும். 

பிரதேச செயலாளர் தலைமையில்  நடைபெறும் நேர்முக தேர்வின் போது உங்களிடமிருந்து  பெறப்படும் ஆவணங்கள் நீங்கள்  அதற்கு தகுதியானவரா என உறுதிப்படுத்தப்படட பின். பின்வரும் துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். 

1.பிரதேச செயலகம் 

2.மகாவலி அதிகார சபை 

3.காணி மறு சீரமைப்பு ஆணைக்குழு 

4. உரித்து சீராக்கல் ஆணைக்குழு 

5. உற்பத்திகளை விற்பனை செய்தல் 

        ▪️தொழில் முனைவோருக்கான பயிற்சி 

        ▪️ நிதி  வசதிகள் / அடகுக்கடன்

        ▪️உற்பத்திக்கான இயந்திரங்களை பெற்று கொள்ளல் 

        ▪️வேறு கோரிக்கைகள் 

காணி உரிமத்தை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகள்

அரசாங்க காணிக்குரிய விண்ணப்ப படிவங்களை   பிரதேச  செயலாளர் அனுமதி பத்திரம் / அளிப்பு பத்திரம் 

மாவட்ட காணி பயன் பாட்டு  திட்டமிடல் திணவுக்களத்தின் மூலம் நேர்முக தேர்வுக்கு  அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தற்பொழுது  மேற்கொள்ளும்அல்லது 

எதிர்காலத்தில் அமைக்க.திட்டமிடும் சகல   நடவடிக்கைகளையயும் பூர்த்தி செய்துள்ள வலுவான  தொழில் முனைவோரை தெரிவு செய்து காணி ஆணையாளர் நாயகம்,  மாகாண காணி ஆலோசகசருடன் ஆலோசித்து அவர்களுக்கு காணி அபிவிருத்தி மறு சீரமைப்பு அல்லது மகாவலி அபிவிருத்தி எல்லையில் காணி துண்டொன்று வழங்கபபடும். 

🌻இக்காணிகள் நிபந்தனைக்குட்பட்டது. விற்கவோ /  கிரயம் செய்யவோ அனுமதி இல்லை. 

விண்ணப்பித்திருக்கும் ஒருவர் உங்கள விண்ணப்பம் குறித்து தகவல்களை ( Status of the application ) கேட்டு பெரும் உரிமை உண்டு. அதற்கென நியமிக்கப்படும் தனி அதிகாரி உங்களுக்கு பதில் தர வேண்டும்.

🔴 இந்த திட்டத்தை பயன் படுத்தி  காணியொன்றை பெரும் நோக்கமாக, தொழில் முனைவோர்  எனும் பெயரில் வரும் போலியான விண்ணப்பதாரரை இனம் கண்டு உண்மையான தொழில் முனைவோர் /  தொழில் முயற்சி ஆற்றலுடையயோருக்கு காணியை பகிர்ந்து கொடுப்பது தெரிவுக்குழுவுக்கு இருக்கும்  முக்கிய எச்சரிக்கை..!

✅ இத்திட்டத்தினுடாக காணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பயிற்றப்பட்ட அபிவிருத்தி  அதிகாரிகளின் வழி காட்டுதலின் கீழ் அவர்களுக்கு தேவையான பயிற்சி, நிதி உதவிகள், உற்பத்திகள், 

சந்தைப்படுத்தல் குறித்த ஆலோசனைகளைளுடன் தேவைப்படுவோருக்கு பயிற்சிகளும் தருவார்கள். 

🟢 இந்த முயற்சியை நீங்கள் பயன் படுத்தி கொண்டால் எதிர்காலசத்தில் சொந்த நிலத்தில் பலருக்கு வேலை உருவாக்கி கொடுக்கும் இளம் தொழிலதிபராக உருவாகுவீர்கள்...! 

🔴 உடல் உழைப்புக்கு தயங்கி வெளி நாட்டு காசில் இப்படியே காலம் கழிக்க  நினைத்தால்  வடகிழக்கில் இருக்கும்  காடுகளை இராணுவத்தில்  பொறுப்பில் கொடுக்கப்பட்டு அப்போதும் நீங்களே அவர்களுக்கு  கீழ் விவசாய வேலைகள் செய்ய வேண்டும். 

உங்கள் முன்  உயர்வு தாழ்வு எனும் இரண்டும் உண்டு. நிகழ் காலத்தில் எதை தேர்ந்து எடுக்கின்றிர்கள் என்பதை  பொறுத்து  எதிர்காலம் தீர்மானிக்கப்படும் 

திட்ட அறிக்கை ( project proposal ) குறித்து அடுத்த பதிவில் ...!

Facebook  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!