நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும்.
வலியைத்தரும் என்பதனால் வலி தரும் நினைவுகளை வெறுக்கின்றோமா எனில் , இல்லை என தான் சொல்வோம். வெறுப்பவைகள் நம்முள் நுழைந்து வலி தருவதாய் இருக்காது.. வெறுப்பு பல நேரம் கசப்பை தருவதால் அவை நமக்குள் நிலைக்கும் வலியை தருவதும் இல்லை. நாம் நேசிப்பவைகள் நேசிப்பவர்கள் நம்மை புரிந்திடாமல் போகும் போது இதுவும் கடந்து போகும் என சொல்தல் இலகுதான்.. !
ஆனால்..........?
இதுவும் கடந்து போகும்நிலையா இந்த உலகில் நிலைத்தவை தான் என்னே?
நிலைத்தவர்கள் தான் யாரோ?
கலையும் நினைவில் நிலையாய்,
நிலைத்து நிற்கும்
நினைவில் வலிகள் மட்டும் தானே
நிலையாய் என்றும் தொடரும்
நிலையா இவ்வுலகில் சிலையாய் நிலைத்தோரில்ல
கூறு போடும் நினைவாய் மாறும் மனித மனதில் மாறாதிருப்பதெல்லாம் தொடரும் வலிகள் தானோ?
பாதை எல்லாம் வாதை!
தெரிந்தே செல்லும் பேதை மனதை அடக்கியாள முடியா கோழை!
காதல் என்ற பெயரில் கந்தலாகும் அன்பு
காட்டும் அன்பு கூட காதலென சொல்லும்
தாகம் தீர்ந்த பின்னே தூரமாகி போகும்!
தொலைந்த நினைவை தேடியலையும் மனது கலையும் விந்தை என்னே?
சிந்தை செயல்கள் எல்லாம் மந்தையாய் ஓரிடத்தில்
விந்தை செய்யும் நிலையை கடத்தல் என்ன கடிதோ?
கானல் நீர் தான் எல்லாம்!
பொய்யாய்ப்போகும் மெய்கள்
மெய்யை துடிக்க வைக்கும்!
போதும் இந்த வேசம்,
இதுவும் கடந்தே போகும்
எனது வரிகளோடு... இந்த பாடலையும் கேட்டு பாருங்கள்.
கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனக்கிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை
கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை
ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன?
அதிகாரம் என்ன?
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே
கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது
வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்
கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை
தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே
கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனக்கிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...
உங்கள் கருத்தினை பகிர்ந்தால் மகிழ்வேன்.
கருத்துள்ள அருமையான பாடல்...
பதிலளிநீக்குரெம்ப நன்றிங்க!
நீக்குவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க!
பணம் உன்னிடம் இல்லை என்றால் நீ மனிதனே இல்லை என்று சொல்லும் காலம் இது
பதிலளிநீக்குநிஜம் தான்!
நீக்குஇதுவும் கடந்து போகும் அல்ல இதுவும் கடந்து போய்கொண்டிருக்கிறது
பதிலளிநீக்குநன்றே சொன்னீர்கள்?அனைத்தும் கடந்து போய் க்கொண்டே இருக்கின்றது.
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குபாடல் வரிகளை விஞ்சுகிறது தங்கள் வரிகளில் உள்ள வலி அருமை தொடர வாழ்த்துக்கள் !
ரசித்தமைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றிங்க சீராளன் சார்.
நீக்கு
பதிலளிநீக்குதனத்துயர் கோபம் தருவலிகள் போக்க
மனச்சாட்சி ஒன்றே மருந்து !
எதுவும் நிலைபேறில் லாததனால் வாழ்வில்
இதுவும் கடந்தேபோ கும்!
அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
சரியாக சொன்னீர்கள்.
நீக்குஉங்களின் கவிதையும் அதற்கு பொருத்தமான பாடலும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்.
நீக்குதொடர்ந்து வாருங்கள்
அருமையான கருத்து நிஷா... எந்தக் காயமும் முதல் நாள் ஆழமாகவும், மறுநாள் மேடு தட்டியும், மூன்றாம் நாள் மறைந்தும் போகும்....இதைத் தான் இதுவும் கடந்து போகும்னு சொல்வாஙளோ?
பதிலளிநீக்குநிஜம் தான் பானு.அனைத்துக்கும் காலம் சிறந்த மருந்து என இதனால் தான் சொல்லி இருப்பார்கள்.
நீக்குஅருமை அசத்தலான வரிகள் அருமையான விடயங்கள் வாழ்த்துகள் தொடர...
பதிலளிநீக்குபாடல் கேட்டு மனம் கணத்தது...
ஆமாம் பாடல் கேட்டதும் என் மனசும் கனத்து போனது.
நீக்குவருகைக்கும் தருகைக்கும் நன்றி
எவ்வளவு அழகான உண்மை நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும் உண்மை உண்மை
பதிலளிநீக்குஉண்மைதான் அக்கா வலியைத் தரும் நினைவுகள் அனைத்தையும் நாம் மறக்க நினைக்கும் போதெல்லாம் முதலில் நம் நினைவில் வருவது அந்த நினைவுகள்தான் என்னால் தாங்க முடியாத வலி என்று நான் நினைப்பது நான் யாரை நேசிக்கிறேனோ அவர் என்னைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கு நான் செய்யும் நல்லதையும் கெட்டதாய் எண்ணி என்னிடம் இருந்து வில நினைக்கும் போது உயிர் பிரியும் வலியை உணர்கிறேன்
நிலையா இந்த உலகில் நிலைத்தவைதான் என்ன என்று தொடங்கிய உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அருமை அத்தோடு வந்த பாடலும் பாடல் வரிகளும் இனிமையாக இருந்தது அருமையாக இருந்தது
பாடலில் வந்த ஒவ்வொரு வரிகளும் பிரமாதம்
தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே
மிகவும் கவர்ந்த வரிகள் இவைகள் பிரமாதம் அக்கா
இன்னும் தொடருங்கள் ஆறுதலாகவும்
சில வரிகள் கவலையாகவும் உள்ளது
மாறா அன்புடன் நண்பன்
அம்மாடி! எம்மாம் பெரிய பின்னூட்டம். என் தம்பி என்பதை நிருபிக்கின்றீர்கள். பதிவினை முழுமையாக படித்து கருத்திட்டமைக்கும் தொடந்து என்னை உறசாகப்படுத்துவதற்கும் நன்றிப்பா!@
நீக்குநல்லதொரு கருத்தை முன்வைத்திருக்கின்றீர்கள்! இதுவும் கடந்து போகும் ஆம்! அப்படித்தான் அந்தத் தத்துவத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் கடந்து கொண்டேதான் இருக்கின்றது....உங்கள் வரிகளும், பாட்டின் வரிகளும் அருமை....
பதிலளிநீக்குஇத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்றுக் கேட்கத் தோன்றுகின்றது..
துளசி சார்....
நீக்குஇத்தனை நாளா சேனையைக் கட்டிக்காத்த அக்காவை எல்லாருமா சேர்ந்து இங்க இழுத்து விட்டிருக்கோம்...
இதெல்லாம் டிரைலர்தான்... இனிமே வரப்போறதெல்லாம் மெயின் பிக்சர்... ஹா... ஹா...
இதவும் கடந்து போகும்... ஆமாம் கடந்துதான் போச்சு... அடுத்த பதிவு வந்துருச்சில்ல.... (ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா அக்கா)
பதிலளிநீக்குநல்லதொரு கருத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட பகிர்வு அக்கா... அருமை...ம் காணொளி அருமை அக்கா...
ரெம்ப நன்றிப்பா!
நீக்குஇதுவும் கடந்து போகும்..... உண்மை தான்.... பாடல் இப்போது தான் முதன் முறை கேட்கிறேன்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நிஷா.
பதிலளிநீக்குநன்றிங்க ஐயா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்.. நான் படித்த போதும் மனதில் வலிதான் வந்தது.. மனித வாழ்க்கையை அழகாக சொல்லியுள்ளீர்கள்..எல்லாமனிதர்களும் உணர்ந்தால் ஏது பிரச்சினை... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆற்றில் அடித்து செல்லும் மர கிளைகளை போலதான் வாழ்கையும் உள்ளது கிடைக்கும் நேரத்தில் நாமும் மகிழ்ந்து மத்தவரையும் சந்தோசமாக வைத்தபடிவாழ்க்கையின் போக்கில் போய் கொண்டிருக்கும் மனிதனாக........................
பதிலளிநீக்கு