19 ஜூலை 2020

உளவியல் ஆலோசனை சொல்வோர்..!

உளவியல் ஆலோசனைகளுக்கு முக்கிய அடிப்படை கட்டுப்பாடு இரகசியம் காப்பது..  பெயர் சொல்லாமல் என்னுடன் பேசிய ஒருவருக்கு இப்படி பிரச்சனை .. இப்படி ஆலோசித்தேன்... அறிவுரைத்தேன் என எழுதி ... அதன் மூலம் தன் மீதான பிம்பத்தை பெரிதாக உருவாக்கும் சுய விளம்பர பிரியர்கள் அதிகமாக உலவுகின்றார்கள். 

( ஆலோசனை கேட்கும் நபரும் நண்பர் லிஸ்ட் என்பதை மறந்து  அவர் பெயர் சொல்லாமல் எழுதினாலும் அவருக்கு தன் பிரச்சனை இப்படி பொதுவில் பேசு பொருளானது ..   இனி மேல்  தனது பிரச்சனை, கவலையை இன்னொருவரிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுக்கான 
நம்பிக்கையை தகர்க்கும், அந்த நபரை தெரிந்த வேறு நபர்கள் வாசிக்கும் போது இது இன்னாரின் பிரச்சனை என புரிந்து கொள்வர்..  )

உளவியல் ஆலோசனை சொல்வோர் அதுக்கு முன்மாதிரிகளாக வாழ்ந்து காடடனும் எனும் புரிதல் இல்லாமல் பலர் இவ்வாறான பதிவுகளுக்கு கிடைக்கும் பிம்பத்தை நம்பி வீட்டில் பூச்சி களாக விழுந்து சிக்கலை தேடி கொள்கின்றார்கள். அவர்களின் பதிவுகளை, commentகள் வாசித்தால் 90 % அரசியல் வாதிகள் ரேஞ்சில் புகழ் மாலை ஆஹா.. ஓஹோ என்றிருக்கும்.. தவிர அவர் பகிர்ந்த விடயம் சார்ந்து இன்னொருவர் கேட்கும் ஆலோசனைகளுக்கு பதில் இருக்காது. இங்கே தங்களை உளவியல் ஆலோசகராக வெளிப்படுத்தும் பலரும் இன்னொரு நபரின் பிரச்சனைக்கு வழிகாட்டும், ஆலோசனை சொல்லும் முன்மாதிரிகளாக இல்லை.. உளவியல் ஆலோசனை செய்வதற்குப்படித்த பலருக்கு அத்தகைய நான் பார்த்தளவில் உளவியல் ஆலோசனை செய்வதற்குப்படித்த பலருக்கு அத்தகைய ஆலோசனை அவசியமாக உள்ளது என்பதே கசப்பான உண்மை😞

கவுன்சிலிங் தவறில்லை.. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இல்லை .   பலருக்கு  எதோ ஒரு வகையில் ஆறுதல், அன்பு, ஆலோசனை தேவை படுகின்றது.. அதை யாரிடம் பெற்று கொள்கின்றோம் என்பதில் தான் கவனமாக இருக்கணும். மன அழுத்தத்துக்கான கவுன்சிலிங் குறித்து நானும் எழுதி இருக்கேன்.. ( ஒரு நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மையில் சக மனிதர்களை உளவியல் சார்ந்து அணுகும் முறையையும் சேர்த்தே கற்று கொள்ளவேண்டும்.. அவ்வாறான அனுபவத்தை பகிர்ந்துள்ளேன் ( என்னிடம் பேசுங்கள் என்று சொல்லவில்லை.. அது என் வேலையும் இல்லை ) 

எங்கள் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாக இது இருக்கின்றது. தற்கொலை, கொலை என அதிகரித்து வருகின்றது. உலகளவில் நடக்கும் தற்கொலைகளில் பெரும்பான்மை டிப்ரேஸிவ் மன அழுத்தத்தினால் என்கின்றது மருத்துவ அறிவியல் ஆய்வுகள்.. நாலு சுவற்றுக்குள், வீட்டுக்குள் அடைபட்டு வாழும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு இணையதளத்தில் எழுதுவது, கிடைக்கும் கமெண்ட், நண்பர்களின் பாராட்டு ஊக்குவிய்ப்புகள் மன அழுத்தத்துக்கு வடிகாலாக இருக்கின்றது. அதே நேரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படட நபருடன் மட்டும் பேசி ஆலோசனை சொல்லி அவர்களை மாற்றி விடலாம் என ...... ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னும்  உங்களுக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லை என்றால் என்னுடன் பேசுங்கள், பேசினால் சரியாகும் என்பது போன்ற பதிவுகள் தவறானது. 

மன அழுத்தத்துக்கு கவன்சிலிங் தேவை ....  ஆனால் அது நேரடி மன நல மருத்துவர் மற்றும் மருத்துவர் உடன் இணைந்து பாதிக்கப்படும் நபர், குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை செய்யும் இடத்து மேலதிகாரிகளுடன் பேசி அனைவர் ஒத்துழைப்புடன்  பேசி.. பேச விட்டு உள்ளத்திலிருக்கும் அழுத்தத்தை ஒன்று மில்லை என மீட்டு எடுக்கும் முயற்சியாக இருக்கணும். 

பிரச்சனை இல்லை என மூடி மறைக்காமல் தீர்வுகளை தேடுவது முக்கியம்.. Face  book  மூலம் கிடைக்கும் தீர்வுகள்  நிரந்தரமில்லை எனும் உணர்தல் அதை விட முக்கியம்.

Nisha



18 ஜூலை 2020

ஆடிக்கூழின் வாசம்...!

ஆடிக்கூழ் ..🥣🥣

ஆடி வெள்ளி தேடி உன்னை 
நானடைந்த நேரம் 
கோடி இன்பம் நாடி வந்தேன் 
ஆடிக்கூழின் வாசம்.. 

ஆடிப்பிறப்பில் கூடி 
ஆடி,ஓடி விளையாடி 
இடித்துப் புடைத்து வறுத்த பயறை  
நீருள் அமிழ்த்தி  அவித்து,
தீட்டிய  தவிட்டு பச்சை அரிசி 
இடித்து தூளாக்கி, மாவாக்கி 
அரித்து  வறுத்து  
தேங்காய்ப்பாலில் கரைத்து 
அவியும் பயறுடன் கலந்துழாக்கி  
அடி கருகாமல் கிண்டி கிளறி 
பனங்கட்டி, தேங்காய் சொடடை
சில்லுகளாக வெட்டி கலந்து 
உப்பும், மிளகும், சீரகமும் பதமாய் சேர்த்து 
பக்குவமாய் இறக்கி வைத்தேன்..! 

ஊரை நாடி, உறவைத் தேடி 
ஊரோடு உறவாடி 
பாடிக்களித்து பரவசமாகி 
ஆடிக்கூழ்  குடிக்க வாரீரோ..?





10 ஜூலை 2020

சுவிஸில் Interlaken பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..!

சுவிஸில் சுற்றுலாவின் முதன்மை நகரங்களில்  தூங்காத நகரம் எங்களூர் Interlaken  பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..!

 Interlaken nach Bern, Basel  நோக்கி    பயணிக்கும் ரயிலும் நானும் ....🦜🦜

                                    Interlaken West பேருந்து நிலையம்



Interlaken West   Train  நிலையம்








சுவிஸில் பொதுப்போக்குவரத்தை பயன் படுத்தும் எல்லோரும் இன்று (06.07.20 ) முதல் மாஸ்க் அணியவேண்டும்..!  சுவிஸ் அரசின் அறிவிப்பு

பெப்ரவரி மாதத்துக்கு பின் பொதுப்போக்குவரத்தில் ஒரு பயணம்..!

சுவிஸ் post auto  முன் இருபக்க இருக்கைகளில் யாரும் அமர முடியாது. ( சாரதிக்கு Distanz )

Das per 6. Juli 2020 angepasste Schutzkonzept im öffentlichen Verkehr orientiert sich an den Massnahmen des Bundesrates und bleibt bis auf Weiteres bestehen. Es wird jeweils angepasst, falls die Strategie des Bundesrats dies erfordert oder falls es während der Umsetzung notwendig wird.





அழகான காலைப்பொழுது ..! 
அழகான காலைப்பொழுது
06.07.2020


COVID - 19 சுவிஸ்லாந்தில்.... !

Swiss 
08.07.2020

கடந்த 24 மணி நேரத்திற்குள் 129 புதிய  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Basel-Stadt, Basel-Landschaft, Aargau und Solothurn   மாநிலங்களில் கிளப்புகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகள் உட்பட விருந்து விழா     நிகழ்வுகளில், 300 க்கு பதிலாக வியாழக்கிழமை (ஜூலை 9) முதல் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நிலைமை மோசமாகுமானால் மீண்டும் எல்லை கட்டுப்பாடுகள் இயல்பு நிலை மாற்றங்கள் குறித்து அறிவிப்பும் வரலாம். 

அதிக ஆபத்துள்ள நாடுகளில் ஒன்றில் தங்கள் விடுமுறையை செலவழிக்கும் எவரும் சுவிட்சர்லாந்திற்கு திரும்பிய பின் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பாக விமானம் மற்றும் எல்லைக் கடப்புகளில் அவதானிக்கப்படுவார்கள். நாட்டிற்குள் நுழைந்த பிறகு அவர்கள்  கன்டோனல் அதிகாரிகளுக்கு  அறிவிக்கவும் வேண்டும்.

தடை செய்யப்படட 29 நாடுகளுக்கு சென்று திருப்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலத்துக்கு காப்புறுதியோ, ஊதியமோ வழங்கபடாது. ( ஸ்வீடன், செர்பியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை அடங்கும் ) 

சுவிஸ்லாந்தில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆபத்து மற்றும் தடை செய்யப்படட நாடுகளின் விபரம்: 

அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பொலிவியா, பிரேசில், சிலி, டொமினிகன் குடியரசு, Honduras, ஈராக், இஸ்ரேல், கேப் வெர்டே( Cape Verde), கத்தார், கொலம்பியா, கொசோவோ, குவைத், மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ஓமான், பனாமா, பெரு, ரஷ்யா, சவுதி அரேபியா அரேபியா, சுவீடன், செர்பியா, தென்னாப்பிரிக்கா, Turks- uns Caicos-Inseln,, அமெரிக்கா மற்றும் Belarus ஆகியவை ஆபத்தான பகுதிகளில் உள்ளன.
https://www.nau.ch/politik/bundeshaus/coronavirus-diese-lander-sind-auf-der-risikoliste-65735952?utm_campaign=amp_article&utm_source=65739860_body

ரயிலும் நானும் ... சுவிஸுக்கு வாறிங்களோ?

ரயிலும் நானும் .. எங்க ஊருக்குள் போகும் பாதை
ஒருபக்கம் மலை
மறுபக்கம்  நதி..

சுவிஸுக்கு வாறிங்களோ?

வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்க
நான் எதிர்பாராத செம்ம 
Situation❤️❤️
Really Subrice words🌻
Song and video Editing Mohamed Musammil


போவோமா  ஊர்க்கோலம்..💃





03 ஜூலை 2020

depression ... அழகான ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி..!

01.07.2020 
லண்டன் வாழ் இலங்கை தமிழர் குடும்பத்தின்  அழகான ஐந்து வயது மகளை  கத்தியால் குத்தி கொன்ற பின் தன்னையும் குத்தி தற்கொலைக்கு  முயற்சித்த தாய்..! 


Mother 'killed daughter, five, before stabbing herself in the stomach' in bloodbath at London home.


அதிகரிக்கும் #மனஅழுத்த நோயாளர்களும்  தொடரும்  கொலை, தற்கொலைகளையும் எமது தமிழ்ச்சமூகம் எவ்வாறு அணுகுகின்றது? 

சமூகத்தின் மீதான அக்கறை ஒவ்வொரு கொலை அல்லது  தற்கொலை க்கு பின் மட்டும் பேசப்படாமல் எதனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றது எனும்  தேடல்கள் அவசியம் என்பதை இனி என்றாலும் உணர்வோம்.தான் செய்வதை உணராதவளாக மிக கடுமையான மன அழுத்தத்துக்குள்ளாகி  கணவரால், உறவுகளால் புரிந்து கொள்ளப்படாமல்  கைவிடப்படடவளாக இந்த  தாய்    தான் பெற்ற  செல்வத்தை கொல்லும் வரை தூண்டபட யார் அல்லது எது காரணம் ? 

என்னுடைய இந்த பதிவுகளை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.  

depression - பகுதி 2 

Posatpartum depression : 
நான்காம் நிலை ... . தற்கொலை உணர்வு தூண்டப்படுவதால் மிகவும் ஆபத்தானது.  செத்து விடலாம் எனும்  கொலை, தற்கொலை உணர்வுகள் தூண்டப்படும். சிலர் தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்திடவும் 

#depression - பகுதி 1 

#மனஅழுத்தம்

Depression.. மனஅழுத்தமா? அது ஒன்றுமே இல்லை..!

குடும்பம், கணவர், மனைவி, குழந்தைமீது அக்கறை அன்பு கொண்டோர் இந்த பதிவை நிதானமாக வாசியுங்கள் 

இது எச்சரிக்கை பதிவு..! 

லண்டனில் வாழும் 35  வயது இலங்கை தமிழ் பெண் சுதா..! இரு குழந்தைகளின் (10,5 வயது ) தாய் தன் ஐந்து வயது செல்ல மகளை  கத்தியால் குத்தி தன்னையும் குத்தி இருக்கின்றாள். பிள்ளை அவ்விடம் இறந்து போனாள்.தாய்  ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலை க்கு கொண்டு போய்  ஐந்து மணி நேரமும் ஆப்ரேஷனின் பின் பிழைத்து இருக்கின்றாள்.

இவ்வாறான சம்பவங்கள் எமது சமுகத்தில் தொடர்கதையாகின்றன..! 

பிள்ளையின் தாய் சுதா தனக்கு கேன்சர், தான்  இறந்து விடுவேன் என்று பயந்து  வெளிப்படுத்தி இருக்கின்றாள்  ( கான்சர் அவருக்குள் இருந்திருக்குமானால்  உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய பெண்..! ஆனால் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை . உடல் பாகங்களில் வலி  தொடர்ந்து. அதன் மனப்பிரமையாக  தனக்கு தானே முடிவெடுத்திருக்கலாம் அல்லது நெருங்கிய இரத்த உறவில் யாருக்கும் கான்சர் இருந்து அது தனக்கும் வரும் எனும் பயம் உருவாகி இருக்கலாம் ) 

▪️ தான்  சாகும் போது  பிள்ளையையும் கூட்டி போவேன் என்றும் சொல்லி இருக்கின்றாள். தான்  இல்லை என்றால் பிள்ளை வாழ்வு என்னவாகும் எனும் அச்ச  உணர்வு உருவான காரணம்  என்ன? அந்த பயத்தை வளர விட்டது ஏன் ? இந்த விடயத்திலும் அவள் கணவர் மீதான அவள் நம்பிக்கை குறித்து கேள்வி எழுகின்றது. 

இந்த பெண் மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ளும்படி தனக்குள்  தானே பேசி கொள்வாள் என்கின்றார்கள். இவர் உணர்வை புரிந்து தகுந்த மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தால்  தனக்கு வருத்தம் எனும்  பயத்துக்கு பின்னணியை மனோதத்துவ கவுன்சில்ர் அவருடன் பேசி  புரிந்து அதுக்கு தகுந்த ஆலோசனை சொல்லி இருப்பார்.

🖤 சுதாவின் பயம் கணவரால், உறவுகளாலும் கண்டு கொள்ள படவில்லை என்பதன் வெளிப்பாடாக  குழந்தையின் உயிர் பலியாகி இருக்கின்றது. தனக்கு பின் தன்  பெண் பிள்ளைக்கான பாதுகாப்பு குறித்த  பிள்ளை மீதான அதீத பாசம் பிள்ளையை கொலை செய்யும் உணர்வை தூண்டி இருக்கின்றது. அவரின் நோய்  குறித்து அறிந்து கொள்ள விரும்பாத இந்த சமூகமும் அது தன்  மேல் போர்த்தி கொண்டிருக்கும்  போலி ( பிரஸ்டீஜ்) கௌரவமும் தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்த வியாதியை  குணப்படுத்த அக்கறை கொள்ளாத  அவர் கணவரும்   உணர வேண்டியவர்கள்.

சுதா திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றார் என விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலான பெண்கள் இவ்வாறான மனப்பிரமையினுடாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு  இருக்கின்றார்கள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் தான் செய்வதை உணராமல்  அந்த நேர உணர்வு தூண்டல்  எப்படி இருக்குமோ அதை செய்வார்கள். யாரோ  உத்தரவிடுவது  போல்.. எடு .. குத்து.. குதி என தம்மை அறியாமல் அவர்களை உள்ளுணர்வு இயங்க வைக்கும்.  உளவியலில் மிக ஆபத்தான நிலை இது. அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. அவர்கள் குற்றவாளிகளும் இல்லை.

ஊரில் சொந்த பந்தம் உறவுகள் என்று வாழ்ந்ததால் இப்பிரச்சனை பெரிய அளவில் தெரியவில்லை.ஒருவர் இல்ல என்றால் ஒருவர் வந்து  போய்  சின்ன மனஸ்தாபங்கள் பெரிதாகாமல் பார்த்து கொண்டார்கள். வெளி நாட்டில் அப்படி இல்லை. சின்ன சின்ன குழப்பங்கள் பலூனுக்குள் அமுக்கும் காற்று போல் வெடித்து  சிதறுகின்றன.

மனைவி, மகள் என்று பாதிக்கப்பட்டிருக்கும் அந்த தகப்பனை குற்றம் சொல்வது எனது நோக்கம் இல்லை. நிச்சயம் அவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஈடு  செய்ய முடியாத இழப்புக்கள் இவை..! அதே  நேரம் அவரின் தவறுகள் உணர்த்தப்படாமல்  உணர்ச்சி நிறைந்த வெறும் பரிதாபத்தை விரயமாக்குவதில் எனக்கு விருப்பமில்லை.அவரை போல் பல ஆண்கள், கணவர்கள் உங்கள் வீட்டிலும் தாய், மனைவி  இவ்வாறு பாதிக்கப்பட்டு அடங்கி கிடக்கலாம் என்பதை உணருங்கள். இந்த தாய் மற்றும்  குழந்தையின் இடத்தில உங்கள் மனைவி, பிள்ளைகளை நினைத்து பாருங்கள். இது தவிர்க்கப்பட முடியாத பிரச்சனை என்று நினை க்கின்றீர்களா? நீங்கள் யாருக்காக இரவும், பகலும் ஓடி உழைக்கின்றீர்கள்?

பல ஆண்களுக்கு தன்  மனைவிக்கும் மனம் ஒன்று  உண்டு என்று உணர்ந்து கொள்வது இல்லை. இது தவறு என்று ஆண்கள் உணரணும் எனும் உண்மையை  புரிந்து கொள்வோர் உணர்ந்து கொள்ளுங்கள். உனக்கென்ன குறை எனும் ஒரு வார்தைகில் வீட்டு பெண்களின் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் கடந்து விடுகின்றீர்கள். அவளுக்கு என்ன. பிரச்சனை என்பது காது கொடுத்து கேட்டு அதற்காண தீர்வுகளையும் தேடுங்கள். குடும்ப பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் மனத்துக்குள் புதைத்துகொள்ளாதீர்கள்.உங்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

#மனஅழுத்தமா? அது ஒன்றுமே இல்லை எனும் கருத்தும் அதற்கு பல பெரிய மனிதர்களின்  ஆதரவும் அதை நம்பும் மனிதர்களின்  புரிதல்களும் மாறவில்லை என்றால்  என்றால் சுதாக்களும், சாயகிகளும் உருவாகி கொண்டேன் செல்வார்கள்.

#Depression
#மனஅழுத்தம்

Depression.. எங்களுக்கு நீ வேண்டும் .. !

„ எங்களுக்கு நீ வேண்டும் .. 
உனக்காக எங்களுக்காக நீ வாழ வேண்டும்“ 

இந்த பதிவில் குறிப்பிடட விடயங்களை  30-45  வயதுக்குள் இருக்கும் ஆண்களும், பெண்களும் ஆழமாக சிந்தித்து பாருங்கள். உங்களில் பலர் இதே உணர்வை கடந்து இருப்பீர்கள்.உங்கள்  அனுபவ கருத்துகள் எங்கள் சமூகத்துக்கு விழிப்புணர்வை உருவாக்கும் என நம்பினால் இங்கே கருத்திடுங்கள். உங்கள் வீட்டில், அருகில் உறவினர், நண்பர்கள் என பலர் தனக்கு என்ன நடக்குது என்கிற உணரும் தன்மை இல்லாமல் வாழலாம். அவர்களுக்கு உதவுங்கள். 

மனச்சோர்வு என்பது துக்கம் அல்லது ஆழ்ந்த சோகம் போன்றதல்ல. மனச்சோர்வு என்பது ஒரு  நோய் - உயிருக்கு ஆபத்தானது - மனச்சோர்வு நீடித்தால்சிகிச்சையளிக்கப்பட வேண்டும் சிகிச்சை பொதுவாக மருந்து, பேச்சு சிகிச்சை அல்லது இரண்டின் கலவையாக இருக்கும்.இந்த சிகிச்சைகள் மனச்சோர்வுடன் தொடர்புடைய மூளையில் ஏற்படும் மாற்றங்களை இயல்பாக்கும்.

எம்மவர்களின்  பெண்கள் வெளி நாடு வந்ததிலிருந்து தனக்கென தனி விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் பிள்ளைகள், கணவர் என தான் தன் வீடு என்று வாழ்வார்கள்.  20 - 25  வயதில் திருமணமாகி  35 - 40  வயதுகளில் பிள்ளைகள் பத்து முதல் டின் ஏஜ் வயதுக்கு வளர்ந்து  தாயின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அது வரை அம்மாவே எல்லாம், அம்மாக்கு எல்லாம் தெரியும் என சொன்னவர்கள் அம்மாவுக்கு தான் வாழும் நாட்டின் மொழி தெரியல்ல, அம்மாவுக்கு டீச்சர் உடன் பேச முடியல்ல,  அம்மா உனக்கு ஒன்றும் தெரியாது என ஆரம்பிப்பார்கள். பெரும்பாலான கணவன் மார்கள் தன் மனைவி தனக்காக, பிள்ளைக்காக  தான் வீட்டில் இருந்து எல்லாம் கவனித்தாள் என்ற உணர்வில்லாமல் ஓமடா அம்மாக்கு ஒன்றும் தெரியாது என பிள்ளைகளுடன் ஒத்து ஊதி அவளின்  மன அழுத்தத்துக்கு ஆரம்ப காரணம் ஆகுவார்கள். யாரும் இதை அறிந்து திடடமிட்டு செய்வது இல்லை.. ஆனால் அது அறியாமையும் இல்லை என்பது தான் சிக்கலை உருவாக்கி விடுகின்றது. 

வேலைக்கு போகும் பெண்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சனையாக இருக்கும். வேலை செய்யுமிடம் தரும் அழுத்தம், தொடர்ந்து ஒரே வேலை, இயந்திரத்தனமான வாழ்க்கை முறை யாருக்காக இதையெல்லாம் செய்யணும் எனும் சோர்வை உருவாக்கும் போது  தனக்கு பிரச்சனை தரும் விடயங்களை தவிர்க்க தெரியாமல் தடுமாறுவார்கள்.  

கை,கால், முதுகு, இடுப்பு,தலை  என  உடல் வலிகள் உருவாகும். (தன்னை ஒதுக்கும் குடும்பத்தின் அன்பை தேடும் ஒரு அந்தர மன உணர்வு இல்லாத வலிகளை இருப்பதாக உணர வைக்கும்) செக்அப் செய்தால் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனால் வலி தொடரும்.உடலில் வலி என  மருத்துவரிடம் போய் வலிக்கு  கொடுக்கும் மாத்திரையே  தொடர்ந்த உடல் வலி, அசதி, தூக்கம், சோகம், பசியின்மை மற்றும் எடை இழப்பு,  அதிக பசி மற்றும் எடை அதிகரிப்பு, ஆற்றல் இழப்பு, மந்தமான உணர்வு, அமைதியின்மை, எரிச்சல் என்று பல பக்கவிளைவாக தொடர்ந்து  டிப்ரெஷன் உணர்வுக்குள் இழுத்து கொண்டு போகும்.  யாரும் வ்ந்து கதைத்தால் சுய இரக்கத்தில் அழுகை வரும். கண்ணீர் வரும். மனசு சோர்வாக இருக்கும். படிப்படியாக தன்னை யாருக்கும் பிடிக்கல்ல, யாருக்கும் பிரயோசனமில்லை என்று நினைப்பில் தன்னையே வெறுத்து விடுவார்கள்.நோயாளி வலி இல்லாமல் தூங்க வேண்டும் என்று பாவிக்கும்  மருந்து அதிகரிக்கப்பட்டாலும் அவர்கள் சிந்தனையை மாற்றி  மனநிலையில் முன்னேறவில்லை என்றாகும் போது தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள்.

தொடர்ந்து உடல் வலி, தலை வலி என்று நாள் பட்ட டிப்ரெஷன் நோயாளிகளுக்கு  தரும் மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து பாவிக்கும் முன் வாசியுங்கள். அதை தொடர்ந்து பாவிக்க வேண்டுமா என  நீங்கள் சிந்தியுங்கள்.  உங்களுக்கு நோய் இன்னதென கண்டு பிடிக்க வில்லை.. ஆனால் வலி தொடர்கின்றது. உடல் சோர்ந்து ஒத்துழைக்க மறுக்கிறது என்று உணர்ந்தால் வலி மாத்திரை எனும்  டிப்ரெஷன்குளிசையை பாவிக்க வேண்டாம் என்பது தான்.  ( நான் நட்பு  ரீதியில்  பரிந்துரைப்பது) நான் சொன்னதன் பின்பு  அவர்கள் பாவிக்கும் குளிசை பின் விளைவுகள் குறித்து வாசித்து உணர்ந்து  குளிசை எடுக்காமல் மீண்டு வந்த பலர் என் நண்பர்களாக இருக்கின்றார்கள்..! 

அம்மா, அப்பா, சகோதரம், கணவர். பிள்ளைகள், ஊர் உறவு என சிந்தித்து  மற்றவருக்கு என்று வாழாமல் நீங்கள் உங்களுக்காக ரசித்து வாழனும் என உணருங்கள். அதே போல் கணவனும் பிள்ளைகளும் தன் மனைவி, அம்மா தங்களுக்கு முக்கியம், அவள் தான் எல்லாம், அவளை நேசிப்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்.

 „ எங்களுக்கு நீ வேண்டும் .. 
உனக்காக எங்களுக்காக நீ வாழ வேண்டும்“ 

இது தான் அவள் மீண்டு வரும் ஒரே நம்பிக்கை..! 


#மனஅழுத்தம் எவ்வாறெல்லாம் ஆரம்பிக்கும்  தொடர்ந்து அலசுவோம்...! 
#Depression