நீ என்னைத்தேடிவருவாய் என
கோயில் வாசலில்
உன்னிடம் யாசிப்பவனாக
காத்திருந்தேன்!
நீயோ
கண்ணை மூடிச்சென்றாய்!
நான்
என்ன செய்யட்டும்
உன் வாழ்க்கை அங்கேயே
மாற்றங்களின்றி....!!!!!!!
இப்படித்தான் கடவுள் புலம்பிட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்! நிஜமாக இருக்குமோ?
நேரம்இல்லை என்பவர்களையும்,சூழ்நிலையின் மேல்பழிபோட்டு தப்பித்துக்
கொள்ள நினைப்பவர்களையும் எனக்கு பிடிப்பதே இல்லை என சொன்னது ஒரு புறமிருக்க,இப்போதெல்லாம் எங்கள் வீட்டு கடிகாரம் வேகமாக ஓடுகின்றதோ என நினைக்கும் படி நேரமும், காலமும் ஓடி போய்க்கொண்டெ இருக்கின்றது.
தூக்கமும் துக்கமும் எது வந்தாலும் அதனதன் நேரம் மட்டும் தான் நினைவில் நிலைக்கின்றது. மீதி நேரம் எல்லாம் அடுத்து என்ன ஆர்டர் ? எங்கே? என்ன பொருட்கள் வாங்க வேண்டும்? எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்? எத்தனை பேர் வேலைக்கு வேண்டும் என சிந்தித்து சிந்தித்து கனவிலும் அதையே சொல்லி புலம்பும் படி ஆகிப்போனது என் நிலை!
ஆற அமர அமர்ந்திருந்து நான் நலம்! நீங்கள் நலமா? உங்கள் வீட்டார் நலமா? ஆடு மாடு கோழி முதல் நாய்க்குட்டி வரை நலமா? இன்று என்ன சமையல்? என்னுடையபதிவு படித்தாகி விட்டதா? இப்ப்ப்ப்ப்ப்படி யப்ப்படி கேள்விகளுக்கா பஞ்சம்.ஓரிரு மணி நேரம் அரட்டையில் ஓடியதெல்லாம் கனவோ என நினைக்கும் படி தம்பி மாரெல்லாம் தூரமாய் போய் விட்டார்கள்! எங்க குமார் உட்பட யாருமே எப்படி அக்கா இருக்கின்றீர்கள் என கேட்க மறந்து போனதையே நான் மறந்து போனேன்!
அப்பப்ப கில்லர் ஜீ மட்டும் எட்டிப்பார்த்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இட்டு விட்டு சென்றார். அவரின் ம்ம்ம் க்கும் ம்ம் ஒப்புவித்து விட்டதனால் அவரின் புதிய பதிவுக்கு கருத்திடாதது மன்னிக்கப்பட்டிருக்கும் என நம்புகின்றேன்! நான் கருத்து இடுவதற்கிடையில் அவர் இன்னும் நான்கு பதிவு இட்டாலும் இட்டு விடலாம்!
யாருடைய பதிவும் படிக்க முடியவில்லை, படிக்காததால் கருத்தும் இடம் வில்லை? படிக்காமல் எப்படி கருத்திடுவது என கில்லர்ஜி சார் கேட்பதும் எனக்கு கேட்டு விட்டது! என்ன செய்வது! அத்தனை வேலைப்பளுவில் சிக்கிக்கொண்டேன்! சும்மா இருந்த என்னை வலைப்பூவில் பதிந்திடு அக்கா என இழுத்து வந்த தங்க மனசு குமாரிடம் தான் நீங்கள் நியாயம் கேட்க வேண்டும்!இன்னும் ஒரு வாரத்தில், அல்லது மாதத்தில் நேரம் கிடைக்கும் என சொல்ல முடியாதவாறு தொடரும் வேலைகள் நடுவே எதையேனும் படித்தாலும் தட்டச்சிடவோ,கருத்திடவோ சிந்தனைகள் ஒத்துழைப்பதில்லை,
சிந்தனைக்கும் தட்டச்சிடுவதற்கும் என்ன சம்பந்தம் என ரமணி .S ஐயா கேட்டதுகூடஎனக்கு கேட்டு விட்டது!உடல் களைத்தாலும் உள்ளமும்
களைக்கும் தானே? இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோர் பதிவையும் படித்து கருத்திடுவேன் என்பது நிச்சயம் என்பதால் நான் வரவில்லை என என்னை மறந்து விடாதீர்கள் அபி ராஜசேகர் மேடம் !
ஆமாம்! நீ வரவில்லை, படிக்கவில்லை, கருத்திடவில்லை என யார் கேட்டார்கள் என அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் சார் கேட்டாலும் சரி, நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன்,
தொடர்கள் முதல் தொடராதவைகள் வரை அனைத்தையும் தொடர முடியா
மைக்காக வருந்துகின்றேன்.
நான்கு பேரை மட்டும் சொல்லி நம்மையெல்லம கண்டுக்கவே இல்லையே என நீங்கள் யாருமே நினைத்து விடக்கூடாது என்பதனால் தங்கள் கருத்திடலால் என்னை எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயத்தில் இடம் தந்து விட்ட இரகசியத்தையும் சொல்லி இன்று விடை பெறுகின்றேன்!
காலமும் நேரமும். கடவுளும் ஒத்துழைத்தால் நாளையே கூட மீண்டும் சந்திப்போம்!
**************************
படம் இணையத்தில் கிடைத்ததே!
என் பதிவை தேடி வந்தவர்களுக்காக!
நான் ரசித்த சர்தர்ஜி ஜோக்ஸ் சில! சிரிப்பு வந்தால் சிரித்து விடுங்கள்!
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.
கிளம்பும் முன் சர்வரிடம்சொன்னார்,
"வெள்ளரிக்காயைநறுக்கிகண்களில்வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே,அப்புறம் வெட்டிவேரில் நனைத்த தேங்காய் எண்
ணெயைதலைக்கு தடவினால் உன்தலைமுடியும் கருப்பாகிவிடும்."
என்று சொல்ல,குழம்பிப்போன சர்வர் கேட்டார்,
"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்டசொல்றீங்க?"
நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
அழகாயிருப்பே,அப்புறம் வெட்டிவேரில் நனைத்த தேங்காய் எண்
ணெயைதலைக்கு தடவினால் உன்தலைமுடியும் கருப்பாகிவிடும்."
என்று சொல்ல,குழம்பிப்போன சர்வர் கேட்டார்,
"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்டசொல்றீங்க?"
நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
******************************************************
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..சிங்குங்கறதாலேசும்மாவிடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”
***************************************************************