02 மார்ச் 2016

தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!

பல புதிய பதிவர்களையும்,பழைய பதிவர்களையும், நமக்கு பிடித்தமான பதிவர்களையும்  நம் வலைப்பூ மூலம் அறிமுகப்படுத்திடும் அருமையான வாய்ப்பு!

தொடரும் தொடர்பதிவர்கள் எனும் தலைப்பில் மீண்டும் வலையுலகை வலம் வரும் தேரோட்டம்! வளரும் கவிதை முத்து நிலவன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுக்குள்ளது!

அவரே எஸ்ரா,  மாலன், சு.ப வீரபாண்டியன், நந்தினி,சரபோஜி, வைசாலிசெல்வம்,,ஜோசப்பின் என நான் அறியாத பலரை அறிமுகமாக்கி இருந்தார், அதிலும் ஜோசப்பின் எனும் சகோதரியின் பதிவாய் அவர் இணைத்திருந்த பதிவு உணர்வுக்குவியலாய் கண்ணீரில் நனைய வைத்தது! 

மற்றவர்களை இன்னும் தொடரவும், படிக்கவும் இயலவில்லை எனினும் நேரம் வாய்ப்பும் போது நிச்சயம் படிப்பேன்! 

முத்து நிலவன் அவர்களின் தொடர் அழைப்பில் நான் ஒன்று சொல்வேன் மீரா, செல்வக்குமார்அவர்கள்தொடர்ந்தார்,மீரா. செல்வக்குமார் எனக்குப்பிடித்தவை எனும் தலைப்பில் நெற்கொழுவன், கில்லர்ஜி, என் ராஜ பாட்டை, உழைப்பாளி, ஒருஊழியனின்குரல்.,காவிரிமைந்தன்,இஸ்லாமியப்பெண்களளைத்தொடர்ந்து எ ஆல்ப்ஸ்தென்றலையும் இயல்பான தமிழ் என அறிமுகத்துடன் பகிர்ந்து அவர் அறிமுகமாக்கிய வலைப்பதிவர்களையே தொடரும் படி வேண்டியும் இருந்தார்,  
அனைவர் வலைப்பூவையும் நுனிப்புல் மேயாமல்  நேரம் வாய்க்கும் போது அனைத்தையும் படித்து விட வேண்டும் என குறித்துக்கொண்டேன். 

இந்த தொடரின் படி நானும் பத்து வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி என்பதனால் இதில் குறிப்பிடாமல் விடுபடுவோரை எனக்கு பிடிக்காதோ என  கேட்கக்கூடாது என  பதிவுக்கு முன்பே சொல்லி விட்டேன்,

எண்களின் வரிகள் கொண்டு எழுத்துக்களை மதிப்பிட்டேன் என்றோ வரிசைப்படுத்தினேன் என்றோ எண்ண வேண்டாம்1 

ஈழத்துப்பித்தன் எனும் பெயரில் 11 வயதில் நாட்டை விட்டு சுவிஸுக்கு புலம்பெயர்ந்தாலும்  தன் தாய் மண்ணை மட்டுமல்ல தமிழையும் மறக்காது என்னை ஆச்சரியப்படுத்தும் அருமையான தம்பி.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்   பிறந்து  வளர்ந்து படித்து 25 வயதுக்கு பின் புலம்பெயர்ந்த  பலர் தமிழை துச்சமென நினைக்க , தமிழறியாதோராய் நடிக்க, தன்னூரை தன் வலைப்பூவுக்கு பெயராய் இட்டு ஊருக்கும் உறவுக்கும்  புகழ் சேர்க்கும் தம்பி! சிறு வயதில் வந்து தமிழை மறக்காததை இட்டு எனக்குள் கொண்டிருந்த இறுமாப்பை நச்சென கொட்டி அக்கா நான் 11 வயசில் இங்கே வந்திட்டன், எனக்கு என் அம்மா தான் தமிழ் சொல்லித்தந்தவ என  தன்னை குறித்து அறிமுகப்படுத்திய போது  வியந்தேன். இவர் பதிவுகள் தொடர உங்கள் ஆதரவையும், உற்சாகத்தையும் கொட்டுங்கள் உறவுகளே! 

2. அவர்கள் உண்மைகள் - மதுரைத்தமிழன் 
அவர்கள் உண்மைகளின் பதிவுகளில் கொட்டப்படும் அரசியல் கருத்துகள் நிரம்ப பிடிக்கும்,ஊருக்கு போனால் ஏயார் போட்டில் வைத்தே கடத்துவார்கள் என பயந்து தன்னை மறைத்து தைரியமாய் அரசியலை வாங்கு வாங்கென வாங்கும் வல்லவர், சில பல  அருமையான நல் ஆலோசனைகளை எனக்கு ஆரம்ப முதல் வழங்கியதன்  மூலம் நல்லவராகவும்,அறிமுகமாகி இருக்கின்றார்.

மனைவியிடம் தினமும்  பூரிக்கட்டையால்  அடி வாங்குவதாய் சொல்லும் இவர் என்னை சுவிஸுக்குவந்து  சந்திக்கும் நாளில் நிஜமாகவே மனைவி
யிடம் பூரிக்கட்டையை கொடுத்து அடி  போட வைத்து  அதை வீடியோ
வாகவும் புகைப்படமாகவும் எடுத்து பதிவில் போட வேண்டும் என என் ரகசிய சபதத்துக்கும் சொந்தக்காரராயிருக்கின்றார். இந்த ரகசிய சபத விடயத்தை நீங்கள் யாரும் அவரிடம் சொல்லி விடாதீர்கள்.. 

3.. மனசு - குமார்!
எங்கள் தங்க மனசு குமார், வார்த்தைகளால் ஊஞ்சல் கட்டுவார்,வலைப்
பூவுக்குள் என்னை அழைத்து வந்து எனக்கென வலைப்பூவை திறந்து என்னை வழி நடத்தியதனால் என் வலைப்பூ ஆசானும் ஆனவர்! இவரின் கிராமத்து எழுத்துக்களை படிக்கும் போது அந்த சூழலுக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும் படி எழுத்தில் மண் வாசனை இருக்கும், அறிமுகம் இல்லாமல் பல வருடங்களாக  குமாரின் தொடர் கதைகளுக்கு நான் விசிறி!  நீங்களும் படித்து பாருங்கள். 

4. சிந்தையின் சிதறல்கள் -நேசமுடன் ஹாசிம்!
மார்க்கப்பற்றும் சமுதாயசீர்கேடுகளை  குறித்தும் தன் எண்ணத்தில் தோன்றுவதை விதையாக்குபவர், சீதனக்கொடுமைக்கெதிரான இவர் எழுத்துக்களும் செயல்பாடுகளும் வியக்க வைக்கும் படி இருக்கும். 
2011 ம் ஆண்டிலிருந்து சேனைத்தமிழ் உலா  இணைய தளத்தின் தலைமை நடத்துனராய் இருந்து அத்தளத்தின் மேன்மைக்குரிய தூண்களில் ஒருவராய் இருக்கும் தம்பி!

5. சின்னவள் -சூரியா!
பெயருக்கு ஏற்ப வயதிலும் சின்னவள் தான்! 15 வயதில் சுட்டிப்பெண்ணாய் தன் எண்ணத்தை கோர்வையாக்கி சிரிக்க வைக்கும் இவள் எழுத்து எனக்கு நிரம்ப பிடிக்கும். முயற்சித்தால் எல்லோராலும் எழுத முடியும், ஆனால் நகைச்சுவையாக எவர் மனமும் நோகாது எழுத  இவள் போல் சிலரால் மட்டுமே முடியும்., துன்பத்தை துக்கமாக உணரவைக்காது சிரிக்க சொல்லி மலைக்க வைக்கும் பெரிய எழுத்துக்களுக்கு சொந்தக்காரியாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க நீங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள். 

பதிவுகளில்  எதிர் விவாதங்களுக்கு சொந்தக்காரராய் இருப்பவர், ஒரு பதிவரின் மறைவுக்காக இவரின் இரங்கல் செய்தி இவரின் உள்ளான மனதை புரிய வைக்கும்,தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என்று பலர் இருக்க சமுதாய சிந்தனை கருத்துக்களை எழுதுவதால் இவர் பதிவுகளையும் பிடிக்கும், விவாதம்செய்து மாட்டிக்கொண்டு விழிக்க என்னால் முடியாது என்பதால்  என் கருத்துக்களை அரசியல் தவிர்த்த பதிவுகளுக்கு மட்டுமே இடுவேன், ஹாஹா!   

 வலைப்பூவின் தலைப்புத்தான் இப்படி! ஆனால் எழுத்துக்களில் விளையாட்டு இல்லவே இல்லை,எதிர்கால கலெக்டராகும் இலக்கில் சென்று கொண்டிருக்கும் இவளின் பதிவுகளை படித்தால்  18 வயதில் இத்தனை சிந்தனைகளை கொண்டிருக்கும் இவள்  போன்றோரால் சமுதாயம் சீர் பெறும் என நம்பிக்கை ஊற்றப்படுகின்றது. சில பல கருத்துக்களும் உதவிட நினைக்கும் நல்ல உள்ளமுமாய் இவளை அறிய பதிவில் சென்று படித்து பாருங்கள்.

8. தோட்டம் - சிவா
இயற்கையோடு ஒன்றிய காய்கறிகளை விளைவித்து  தன் அனுபவத்தை அனைவரும் பயனடைய பகிர்பவர்.நான்கைந்து வருடம் முன் தக்காளி, அவரை,கத்தரி,பீற்றூட்எனஎன்வீட்டுபல்கணியில்விதைத்துபயனடைந்தாலும் அதன் பின் ஆர்வம்  இல்லாததால் விட்டு விட்டேன். இப்போது இவரின் பதிவுகளை படித்ததிலிருந்து இந்த வருடம் சம்மரில் எங்க வீட்டு பல்கணியில் தோட்டம் போடுவது என முடிவு செய்து இருக்கின்றேன்,  உங்களுக்கும் படங்கள் பார்வைக்கு கிடைக்கும். 

பிரபல்யமான எழுத்தாளர், நான் இவரின் தொடர்களின் நீண்ட நாள் வாசகி !

பேஸ்புக்கில்  பைந்தமிழ் சோலை எனும்  வெண்பாக்களை இயற்ற கற்பிக்கும் குருப்பில் அறிமுகமானார். இலங்கையை சேர்ந்த இவரின் வெண்பாக்கள் படிக்கும் போது உணர்வுக்குள் புகுந்து உள்ளத்தை ஊருடுவும் விதமாய் இருக்கும். அத்தனை அருமையாய் வார்த்தைகளை கையாண்டு எழுதுகின்றார்.  

சான்றாய் ஒரு கவிதை பகிர்கின்றேன். படித்து பாருங்கள்!
கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும் 
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !
கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -

தொடர்வார்கள்எனும்நம்பிக்கையில்என்னால்அன்புடன்அழைக்கப்படுபவர்கள்!

1.அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -
2.இணுவையூர் மயூரன் 
3.ரிலாக்ஸ் வருண் 
4.அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்
5.ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன் 
6.சுவாதியும் கவிதையும் சுவாதி
7. நேசமுடன் ஹாசிம் 

நன்றி!

33 கருத்துகள்:

  1. மிக்க நன்றி அக்கா என்னையும் அறிமுகம் செய்ததற்கு என் வலைப்பூ மீண்டும்,புதுப்பொலிவு பெற்றதற்கு உங்கள் ஊக்கமே முக்கிய காரணம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மட்டும் போதாதுப்பா!தொடரவும் வேண்டும்!ஒதுங்கி இருக்காமல் தொடருங்கள்.

      நீக்கு
  2. அருமையான அலசல் அக்கா நான் மட்டும் இல்லை என்னோடு பலர் கலையுலகில் ஜொலிக்கிறார்கள் நான் கண்டேன் அவர்களை நீங்களும் அடைந்து மகிழுங்கள் என்று வழிகாட்டுவதாய் அமைந்த இப்பதிவு புதிய பழைய நண்பர்களை மீட்டிப் பார்த்திட ஏதுவாக அமைந்துவிட்டது மிக்க நன்றிகள்

    தங்களின் அலசலில் என்னையும் உள்வாங்கிக் கொண்டு எனக்கும் ஒரு இடம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மட்டும் போதாதுப்பா!தொடரவும் வேண்டும்!ஒதுங்கி இருக்காமல் தொடருங்கள்.

      நீக்கு
  3. அருமையோ அருமை...என் பிள்ளைகளை தாங்கள் அறிமுகப்படுத்தியதுக்கு முதற்கண் நன்றி...
    உங்கள் ரசனையும் வியக்கவைக்கிறது..
    பால்மணம் மாறாமல் அயல்நாடு சென்று 26 வருடங்களாய் தமிழோடு வாழும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் மகிழ்ச்சி செல்வா சார், உங்கள் பதிவில் என்னை அறிமுகம் செய்ததுக்கும் நன்றி!

      நீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு வாழ்த்துகள் கவிதை நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கில்லர்ஜி சார்

      நீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துகள்..நான் இனிதான் தொடரணும்...மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடருங்கள்மா!உங்கள் வருகைக்காக் நன்றிமா!

      நீக்கு
  7. புதிய அறிமுகங்கள் சில! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவரும் நான் விரும்பித் தொடரும்
    அருமையான பதிவர்களே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி சகோதரி , அருமையான பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. // நல்லவராகவும்,அறிமுகமாகி இருக்கின்றார்.///

    நம்பாதீங்க இந்த மதுரைத்தமிழன் மோசமான ஆளு அவனுடைய தளத்திற்கு போகாதீங்க கருத்தும் சொல்லாதீங்க அவன் அசிங்க அசிங்கமா எழுதுவான் அப்படின்னு நான் சொல்லவில்லை ஊருக்குள்ள நல்ல வேஷம் போடும் சிலர் சொல்லுவாங்க .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்!நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்!உண்மையைத்தவிர வேற வார்த்தை இல்லை என எனக்கும் தெரியும் சாரே!

      நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரென்உ, ஒன்று மனச்சாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி என்பது தெரிந்தால் அனைவரும் நல்லவர் தான் சார், நான் என்னைபோல் தான் அனைவரையும் நினைப்பேன்! ஒருவரை புரிய பல வருடம் பழகிட தேவையில்லை என்பதும் என் புரிதல்.

      நீக்கு
  11. பலர் எனக்குப் புதியவர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அறிமுகப்படுத்தியவர்களில் சிலர் (ம.த.,மனசு)ஏற்கெனவே புகழ்பெற்றவர்கள்தான். மற்றவர்களைப் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அதைவிட, இந்தப் பதிவை எப்படி எழுதவேண்டும் என்று அவரவர் பெயருக்குள்ளேயே இணைப்பைத் தந்து வரிசைப்படுத்திய வடிவம் வெகுநேர்த்திம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் வருகைக்காக நன்றி ஐயா!உங்கள் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  13. ஆஹா அருமையான வேலைதான்,, எனக்கு நிறையபேர் புதுசு தான் எனக்கு,, அனைவருக்கும் வாழ்த்துக்கள், அவர்கள் பதிவை இனி தான் படிக்கனும், தங்கள் பல புதிய பதிவர்கள் அறிமுகம் எனக்கு, நன்றி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதுமா! தொடர்ந்தும் வருகை தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு என் நன்றிகள்

      நீக்கு
  14. சிலர் புதியவர்கள். வாழ்த்துகள்!!! சகோ! தங்களுக்கும் அறிமுகம் ஆனவர்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி சார்,நன்றிகளும்!

      நீக்கு
  15. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    நானும் இருக்கேன் போல...
    சூப்பர் அக்கா...

    பதிலளிநீக்கு
  16. நானும் எழுதிட்டேன் அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் கருத்தும் இட்டேன் பா!

      நீக்கு
  17. பல புதிய பதிவர்கள் ..

    சின்னவள் தளம் சூப்பர் ...

    வாழ்த்துகள்..

    தொடர்கிறேன் உங்கள் தளத்தை ....

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!