30 செப்டம்பர் 2020

மீண்டும் மீண்டு வந்தேன் - 2



இது இரக்கம், பரிதாபம், ஆறுதல் தேடும்  விளம்பரப் பதிவல்ல, விழிப்புணர்வுப் பதிவு என்று ஒவ்வொரு பதிவிலும் சொன்னாலும், பதிவில் இருக்கும் positive  கருத்துகளை கண்டு கொள்ளாமல் ஓய்வு எடு என்று சொல்லி கொண்டு தான் இருக்கின்றார்கள். 

எனக்கு OP முடிந்து நாளையுடன் 50  நாள்கள் மருத்துவர்கள் கொடுத்திருந்த ஆறு வாரம் தீவிர  சிகிச்சை தேவைப்படும் எனும் கால எல்லைக்கு முன்பே  30 நாள்கள் ( நான்கு வாரம் )  ஹாஸ்பிடலில். இருந்து வீட்டுக்கு வந்து நானே சமைத்து, உறவுகள் உதவியோடு மூன்று பார்ட்டி க்கு உணவு தயார் செய்து கொடுத்து ( கை கால் பலம் பெறும் வரை பிடி ஊன்றி நடக்கின்றேன், இன்று பிசியோ தெரபி   முடிந்து  வியர்க்க விறுவிறுக்க 25  நிமிடங்கள் சைக்கிளும் ஓடினேன்)  புரிந்து கொள்ளுங்கள். 

கொரோனா தடைகளால் வீடு, ஹாஸ்பிடல், பிசியோ தெரபி தவிர சும்மா தான் இருக்கின்றேன். நேரம் குவிந்து கிடக்குது. 

கடந்து வந்த அனுபங்களை இங்கே எழுதுகின்றேன் என்பதை உணர்ந்து தொடர்ந்து வரும் பக்க விளைவுகளிலிருந்தும் மீண்டு வரும் படியான தன்னம்பிக்கை, தைரியம் தரும் வார்த்தைகளையும் எனக்கு கொடுக்க முடிந்தால் கொடுங்கள்.🏋️‍♂️🪂🌹

என் பதிவுகளின் மூலம் உங்களுக்கு நான் உணர்த்த நினைப்பது புரிகின்றதா..? அல்லது இது வேண்டாத வேலை ...-அவசியமில்லை என்று நினைக்கின்றிர்களா..?  

உடலில் ஏற்படும் சில காரணங்கள் நம் உடலில் ஏதோ ஒரு பிரச்சனைக்கான ஒரு எச்சரிக்கை மணி என்று அறிந்தோர் குறைவு.  உதாரணமாக கை, கால் மரத்து போவது, காது அடைப்பது ( பக்கவாதத்தின் அறிகுறியாகவும் இருக்கும்) 

தொடர் இருமல் இதயம் நுரையீரலில் எதோ சரி இல்லை என்றும் சொல்லும். ஆனால் நாங்கள் சாப்பாடு சரியில்லை, செரிக்கல்லை, காத்து நிற்குது என்று எங்களுக்குள் தீர்வுகள் தேடி தீராத வியாதிகளையும் இழப்புகளையும்தேடி கொள்கின்றோம். 

யாராவது திடீரென விழுந்தார், உணர்விழந்தார், உடல் செயலிழந்தது ( ஸ்ட்ரோக்) மரணித்தார் என்று அறியும் போதெல்லாம் ( சிலருக்கு பிரின்சஸ் இளவரசனின் தந்தை மரணம் நினைவுக்கு வருகின்றதா..? )  இவர்களுக்கும் என்னை போல் உடல் அறிகுறிகளை உணர்த்தி இருக்குமே..? என்  கண்டு கொள்ளாமல் போனார்கள் என்று  நினைத்து வருந்துவேன். இருந்தாலும் இந்த நோயிலிருந்து ஓரளவு குணமானால் தான் அடுத்தவர்களுக்கு ஆறுதலோ, ஆலோசனையோ, விழிப்புணர்வோ தரும் தகுதி எனக்கு உண்டு  என்று புரிந்து அமைதியாக என்னை நானே ஆய்வு செய்யும் சோதனை எலியாக மாற்றி கொண்டேன். 

அது மட்டும் இல்லாமல்   உடலில்  ஒரு பிரச்சினை வந்தால் அதுகுறித்து  முழு மருத்துவ அறிவியல் தெளிவும் விளக்கமும் தெளிவாக தமிழில் கிடைப்பதும் இல்லை . ஆங்கிலம் அல்லது ஜேர்மன் மொழியில் தேடி அறிந்து கொள்வேன். அதனால் மருத்துவமனைக்கு முன் மட்டும் அல்ல அதற்கு பின் வரும் அனுபவங்களை  தமிழில் எழுத வேண்டும் என்று மூளைக்கு பதிவு செய்து அனைத்தையும் கவனித்து விழித்திருக்கும் போது குறித்து கொண்டும் வந்தேன்.

கடந்த ஐந்து வருடங்களாகவே ( தலையில் ட்யூமர் கண்டு பிடிக்கு முன் என் உடல் உணர்த்திய எச்சரிக்கைகள், அதை நான் உணர்ந்து கொண்ட விதம் ட்யூமர் என்ற கண்டு பிடிப்புக்கு பின்  மருத்துவர்களின் ஆலோசனை ஆதரவு , என் உடல் நிலை மாற்றங்கள், உணர்வுகள், சிகிச்சைகள்,  நான் எதிர்கொண்ட சிரமங்கள், வலிகள் குறித்தும் இதிலிருந்து மீண்டும் மீண்டு வந்தேன் என்று பாமரருக்கும் புரியும் படி எழுத வேண்டும் அதனால் வருடம், தேதி, நேரங்கள் என்று கூட சிறு சிறு குறிப்புகளும், எனக்கான சிகிச்சைகளுக்குரிய Report எனக்கும் ஒரு copy  தேவை என்று வாங்கி சேகரித்து, உடனுக்குடன் அதில் குறிப்பிட்டிருக்கும் ஜேர்மன் மொழி மருத்துவ வார்த்தைக்கு விளக்கம் இணையத்தில் தேடி அவ்வப்போது எழுதி save  செய்து வந்திருக்கின்றேன். 

OP க்கு முன்னும் பின்னும் சிகிச்சை மருந்துகள் குறித்தும் அது ஏன்? எதற்கு ? என்று கேட்டு தெரிந்தும் தெளிந்து மருத்துவர்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். எதிர்பாராத சில பின்னடைவுகள், பக்கவிளைவுகள் ஏற்பட்டு திடிரென்று நியூரோ பிரிவிலிருந்து 

கார்டியோ எமெர்கென்சி க்கு கொண்டு சென்று ( ஹார்ட் அடைப்பு ) ஒரு நாள் முழுதும் இருந்த போதும் பயப்படவே 

இல்லை. என்னை எனக்குள் ஆராயும் ஆர்வமே இருந்தது என்றால் நம்புவீர்களா? 

உடம்பெல்லாம் வயர்கள் சுற்றி படுக்கையில் கிடக்கும் என்னிடம் ......நீ பயப்பிடுகின்றாயா..? என்று கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் கேட்ட போது .. 

இல்லை, Keine Angst ... ஆனால் இந்த பரபரப்பும் சிகிச்சையும் என் என்று புரியவில்லை என்று தான் சொன்னேன். அந்த நேரத்தில் உறவுகள் அறிந்தவர் யாரும் அருகில் இல்லை. ஆனால் என்ன நடந்தாலும் அதை எழுதி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரணும் எனும் சிந்தனையில் தெளிவாக இருந்தேன். அதே போல் ஏன் OP க்கு பின் எனக்கான சிகிச்சை குறித்தும், திடீர் அபாயங்கள் நேரம் என் எது நல்லதோ அதை என் நியூரோ சர்ஜன் முடிவெடுக்கும் உரிமையையும் எழுதி கொடுத்து இருந்தேன். அந்த நம்பிக்கையை அந்த மருத்துவர் இன்று வரை நிறைவேற்றுகின்றார்.

நாக்குள்ளே நமக்கு என்ன மாற்றம் ஏற்படுகின்றது என்ற கவனிப்பும், விழிப்புணர்வும் , மருத்துவர்கள் தரும் சிகிச்சை குறித்து தெளிவும் இருந்தால் முன்னெச்சரிக்கையால் பல  இழப்புகளை தவிர்க்க முடியும். 

அதிலும் ஒரு பெண்ணாக என் வயதும் நோய் குறித்த அனுபவங்களும், உணர்வும் பல பெண்களுக்கு விழிப்புணர்வை தந்து தன்னை தானே கவனிக்க வேண்டும் எனும் உணர்வை தரும்  என்றும் நம்புகின்றேன். 

“ஆணுக்கு நோய் வந்தால் கிடைக்கும் அக்கறையும், கவனிப்பும் பெண்களுக்கு கிடைப்பது இல்லை “

அழுதாலும் அவள் தான் பிள்ளை பெற வேண்டும்..?  வலித்தாலும் அவள் தான் சமைக்க, துவைக்க வேண்டும் எனும் நிலைமையே இன்னும் இருக்கின்றது. 

பெரும்பாலான பெண்கள் கணவன், பிள்ளை, சொந்த பந்தம் என்று மீந்ததை தின்று, கிடைப்பதை உடுத்தி அனைத்தையும் சகித்து தன்னை தானே சரியாக கவனிப்பது இல்லை. 40 வயது வரை உடலளவில் அவளை எதுவும் பெரிதாக உறுத்துவதும் இல்லை. ஆனால் அதன் பின் மெனோபாஸ் சார்ந்த பிரச்சனைகளோடு பிற நோய்களும் சேரும் போது அவளுக்கு இரண்டந்தனை ஆதரவும், கவனிப்பும் தேவை பட்டாலும் அதை புரிந்து கொள்வார் இல்லை. உரிமைகள் மட்டும் இல்லை. வலிகளின் வேதனை வேதனைகளை கடந்து வர தேவையான அன்பும், அரவணைப்பும் கூட ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்றே போல் கிடைப்பது இல்லை. குடும்ப கௌரவம், வெட்கம், மான அவமானம் என்று  பெண்களும் தங்கள் பிரச்சனைகளை உறவுகள், நண்பர்களிடமும் சொல்வதும் இல்லை என்பதையும் அழுத்தமாக என் எழுத்துக்களில் பதிவு செய்ய விரும்புகின்றேன். ( உடனே என் சொந்த சோக கதை என்று ஆறுதல் என்று யாரும் கிளம்பு வேண்டாம் ) வீட்டுக்கு வீடு வாசப்படி, எல்லா வீட்டிலும் அடைசல்கள் நிறைந்து கிடக்கின்றன. கொஞ்சம் தெளிந்து உணருங்கள் போதும்.

எங்களை நேசித்து எங்களுக்காகவும் கொஞ்சம் வாழ்வோம் “ 

https://www.facebook.com/100000786292216/posts/3279369752099202/?extid=LNsC3C1wSrol6xQH&d=n

மீண்டும் வருவேன்..🌻

28.09.2020

❤️ நிஷா ❤️

28 செப்டம்பர் 2020

சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க ...💕💞💖


பச்சரிசி சோறு ... உப்பு கருவாடு…

சின்னமனூரு வாய்க்கா சேறு  கெண்ட மீனு

குருத்தான மொள கீர, வாடாத சிறு கீர 

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது... 

அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது..!


பாவக்கா கூட்டு பருப்போட சேத்து

பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு

சிறுகால வருத்தாச்சு 

பதம் பாத்து எடுத்தாச்சி ...

கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா

தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குதய்யா..

நித்தம் நித்தம் நெல்லு சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு

என்ன இழுக்குதையா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு

வந்து மயக்குதையா...


பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு

பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு

சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்

அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல

அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல..❤️


குரக்கன் மா ( கேழ்வரகு) தேங்காய்ப்பூ சேர்த்து புட்டு சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க ...💕💞💖

பாடலை ரசிக்க இங்கே click செய்யுங்கோ 

https://youtu.be/P-spsz3PaSU







26 செப்டம்பர் 2020

மீண்டும் மீண்டு வந்தேன்..1

 SP பாலசுப்ரமணியம்..! 

நம் எல்லோருக்கும் மிகப்பெரிய முன் எச்சரிக்கையை விட்டு சென்றிருக்கின்றார். 

ஒவ்வொரு அடிகளிலும் வாழ்க்கை எங்களுக்கு புதிய கற்றலை தருகின்றது. 

இவ்வருட ஆரம்ப முதல் கொரோனாவில் பல பிரபலங்களை, மருத்துவ அறிவியல் சார்ந்தோரை இழந்திருந்தாலும்..... SP  அவர்களின் மரணம் பலரை நிலைகுலைய வைத்திருக்கின்றது என்பதை தொடரும் பதிவுகள் மூலம் உணர முடிகின்றது.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஊரையும் உலகையும் பாதுகாக்க இறைஞ்சிய மனிதரின் கடைசி புகைப்படம் என் கண் முன்..... நிழலாடுகின்றது . அவர் வயதுக்கு எத்தனை வலிகள், வேதனைகள்..😓

கிட்ட தட்ட  சம காலத்தில் நானும் என் ட்யூமர் OP க்கு பின் மூன்று வாரங்கள்  வென்டிலேற்றார் உதவியோடு தான் படுத்திருந்தேன். என் சுவாசத்தில் ஓட்சீசன் 82 / 84  என்றளவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இரத்த அழுத்தமும் ( 120 / 170 ) முதல் வாரங்களில் 200 க்கும் மேல்... ஒன்றுக்கு நான்கு BP  கவர் மாற்றி மாட்டி ( கவர் ஊதி பெருகும்). 

( Side  Effekt இதயத்தின் அடைப்பும் நுரையீரலின் அழுத்தம் ட்ரிட்ட்மென்ட் குறித்தும்  இன்னொரு பதிவில் எழுதுகின்றேன்) 

இடது பக்க காதுக்கு பின் பக்கம் தலையில் முடியை கட் செய்து ( வழித்து )  உள்ளங்கை நீளம் மண்டையில் வெட்டி கட்டியை வெளியே எடுத்து,  காதை மீண்டும் கேட்க வைக்கும் முயற்சியாக சிறு காந்தம் போல் ஒரு கருவி உள்ளே  வைத்து பொருத்தி தையல் போட்டு இருந்தார்கள். 

அதனால் காயத்தினாலோ  உள்ளே வைத்த கருவியால் ( நெகடிவ் ) இன்ஸ்பெக்சனோ ஆக கூடாது, காய்சசல் வர கூடாது என்று இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெம்பறேச்சரும், ஒரு நாளைக்கு மூன்று தடவை இரத்தம் குத்தி எடுப்பதும், தினம் ஊசியுமாக ( ஒரு கட்டத்தில் 

ஊசியை கண்டாலே என் உடலும் கை காலும் நடுங்க ஆரம்பித்து விட்ட்து ) 

எழுதும் போது எல்லாமே இலகுவாக தோன்றுகின்றது. அனுபவிக்கும் போது அதன் கொடுமை ... தூங்க முடியாது, சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஒருவகை குமடடல் .. வாந்தி எடுக்கணும் போலிருக்கும், ஆனால் வாந்தி எடுக்க போதுமான உணவு இல்லை. அரை மயக்க நிலையில் வலி தாங்க ஆண்டிபயாடிக் மருந்துகளுமாக வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்று உணர்ந்த காலங்கள் அவை. ( மருத்துவ சிகிச்சை நேரம் நான் என்னை புலைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ) 

OP க்கு முன் இருந்ததை விட அதிக தலை சுற்று. நடக்க முடியாது, சக்கர நாற்காலி, எல்லாத்துக்கும் ஒருவர் உதவி தேவையாக இருந்தது.  இதற்கிடையில்  வலுவிழக்கும் வலது பக்க கை, கால்களுக்கு ஒரேயடியாக செயல் இழந்து விடாமல் ( Strok Golden Time ) வலிக்க வலிக்க பயிற்சி.... 

புஷ் பண்ணு... நீ தானாக நடக்கணும் என்றால் முயற்சி செய் என்று நாளுக்கு நாலு தடவை வெவ்வேறு உடல் அசைக்கும் பயிற்சி. கடந்து எழுந்து நிற்கின்றேன்🏋️‍♂️

இன்னும் முழு பெலம் காலுக்கும், கைக்கும் வரவில்லை என்கின்றார் என் பிசியோ. ( I can do ) ஆனாலும் வீட்டினுள நடக்கின்றேன், சமைகின்றேன். கடந்த வாரம்  கேடடரிங் Party ( 125 + 100  + 50 ) என் கணவர் பிரபா, தங்கை கணவர் ஜீவா, டேனியல், சுதா உதவியோடு செய்தோம். தங்கை dali ,அவள்  மாமி, மகள், மகன், இன்னும் சர்ச்  நண்பர்கள் உதவுகின்றார்கள். 

மருத்துவர்கள் நீ முயன்றால் உன்னால் முடியும், கொஞ்சம் காலமெடுத்தாலும் முடியும் என்று நம்பு என்று சொன்னார்களே அன்றி எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை இன்று வரை தரவில்லை. 

எனது வயது, எனது உணர்வு, எனக்காக நான் சேர்த்து கொண்ட positive எனெர்ஜி, மருத்துவ,அறிவியல் அறிவும் , என் உடல் குறித்த தெளிவும் மருத்துவர்களின் கவனிப்பும் தாதிபணியாளர்களின் பொறுமை, அன்பு, அக்கறையும் , இன்னும் இந்த உலகத்துக்கு  செய்யும் கடமை நிறைவேறவில்லை எனும்  இறைவனின் சித்தமுமாக மீண்டும் வந்திருக்கின்றேன். 

எனக்கு கொரோனா இது வரை இல்லை. இனியும் என்னையும், என் உடல் நிலையையும், கொரோனாவின் விளைவுகளையும் நன்கு அறிந்து இருப்பதால் 

என்னால் இயன்ற தற்பாதுகாப்பு முயற்சிகளோடு அரசின் சட்டத்தினை  ஒழுங்காக கடைப்பிடித்து  வருகின்றேன். 

SP அவர்களின் மருத்துவமனை கடைசி புகைப்படம்  பார்க்கும் போது அவர் மருத்துவ சிகிச்சை காலங்களில் எத்தகைய வலிகள், சிரமங்களை எதிர் கொண்டிருப்பார் என என்னால் உணர முடிகின்றது. ஒரு வகையில் இத்தனைக்கு பின்னும் அவர் உடலை வதைக்காமல்  ஊசி , வலி மருந்து மாத்திரை யிலிருந்து விடுதலை எனும்  நிம்மதி தான் தோன்றுகின்றது. அவர் உடல் தான் இங்கே இல்லை. ஆனால் முன்னதை விட இனி அவர் குரல் ஓங்கி ஒலிக்கும். 

இறுதி மாதங்களில் கொரோனாவை வெல்வோம்..   என்று எமக்கு நம்பிக்கை தர பாடினார், பேசினார். 

கொரோனா...அணுவை விடவும் சிறியது

அணுகுண்டை போல் கொடியது

சத்தமில்லாமல் நுழைவது

யுத்தமில்லாமல் அழிப்பது

என்று உணர்ந்து பாடியவருக்கு அந்த அரக்கனிடமிருந்து தப்பிக்க முடியாமல் போனது . 🖤 எத்தனை போர்கள் மனிதன் கண்டான். அத்தனை போர்களிலும் அவனே வென்றான் என்று பெருமை பேசும் மனிதனுக்கு அணுவளவான வைரஸ் இடமிருந்து தற்காத்து கொள்ள முடியாமல் ..... தானே தான் அழிந்து போகின்றான் மனிதன்..! 

அவனால் இயற்கையையம் வெல்ல முடியவில்லை, அவன் உருவாக்கிய செயற்கையையும் வெல்ல தெரியவில்லை. உயிர்களை அழிக்கும் ஆயுதங்கள், போர்களில் வெல்வதை சாதனை என்று வெற்று பெருமை பேசுகின்றான். பணம், பொருள், புகழ் இருந்தென்ன பயன்..! அத்தனையும் காலுக்கு தூசாகி விடுகின்றது. 

நாளைய உலகின் நாயகமே

கரோனாவையும் கொன்று முடிப்பான்

கொள்ளை நோயை வென்று முடிப்பான்..? எனும் நம்பிக்கை தர பாடியவருக்கு தானும் இங்கே விதியாவோம் என்றுதெரிந்திருக்காது🖤. 

இந்த நம்பிக்கை நிறைவேறும தான். அதற்குள்  எத்தனை உயிர்களை பலி கொன்று முடிப்பான்....? 

அடுத்தடுத்து தொடரும்  சில விடயங்கள் மனதை பாரமாக அழுத்துகின்றன. இந்த உலகத்து மக்களுக்கு நல்லது செய்தோர், அர்ப்பணிப்பாய் வாழ்ந்தோர் வயது வேறு பாடு இன்றி விடை பெறுகின்றார்கள். பிரபலங்கள் என்பதால் அவர்கள் இழப்புக்களை மீடியாக்கள் வெளிக்கொண்டு வருகின்றன . நாங்கள் அறியாமல். நமக்கு தெரியாமல்.. மருத்துவ  வசதி இன்றி எத்தனை பேர்  பரிதவிக்கின்றார்களோ? 

உலக சுகாதார துறை மற்றும் நாடுகளின் சுகாதார அமைச்சுக்களின் அறிக்கைகளின் படி இவ்வருடம் மார்ச் மாதம் lock down  ஆரம்பிக்கப்படட போது கொரோனா வைரஸ் பரவிய வேகத்தை விட அதி வேகமாக பரவுகின்றதாம். ஆனால் பொருளாதார சரிவை சமாளிக்க முடியாத நிலையில் கொரோனாவோடு வாழும் நிர்பந்தம்  மக்களுக்கு உருவாகி இருக்கின்றன. 

அரசினால் சட்டம்  போட தான் முடியும். அது எங்கள் உயிர்களுக்கான ( வலிகளுக்கான) 

பாதுகாப்பு முயற்சி என புரிந்து கொண்டு எங்களை பாதுகாத்து கொள்வோம். கொரோனா வந்தால் மீண்டு விடுவோம் என்று நம்பிக்கை வேண்டும் என்றாலும் அந்த மீட்சிக்கு பின் விளைவுகள் உண்டு என்று உணர்ந்து கொரோனா வராத படி எச்சரிக்கையாக வாழ்வோம்.

அது தான் SP  அவர்களுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

🔹

இதை எழுதுவது இதை வாசிப்போர் உணரவும், விழிப்புணர்வுக்கும் தான். தமிழில் எழுதுகின்றேன், மருத்துவ அறிவியல் சொல் தெரியும் என்றெல்லாம் புரியாத சொல்களை  வெளிப்படுத்தாமல் என் பதிவை வாசிக்கும் ஆங்கிலம் தெரியாத கிராமத்தவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே பேசும் தமிழில் எழுதி இருக்கின்றேன். 

சோகம், கவலை ரியாக்ஷன் வேண்டாம் 

Take  care / take  Rest  தவிர்த்தல் நல்லது 

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் 🙏

நன்றி : நிஷா 

26.09.2020 


#COVID19

#அறிவியல் அறிவோம்

#அனுபவம்  பகிர்வோம்.. 

https://www.facebook.com/100000786292216/posts/3269928976376613/?extid=wMDljxsin4IAZIq7&d=n



ஓட்சிசன் வென்டிலேற்றார் 


நடமாடும் போது கொண்டு செல்லும் ஓட்சிசன் வென்டிலேற்றார் ( உணவு உண்ணும் நேரம் தவிர மீதி நேரங்களுக்கு) 

மருத்துவம் படித்தால் மட்டும் தான் ...?

 எனக்கொரு டவுட்டு...? 

கொஞ்சம் clear பண்ணுங்கோ..!

கஷ்டப்படும், ஒதுக்கப்படும்  தனி நபரோ, குடும்பமோ, சமூகமோ தங்களை முன்னேற்றி கொள்ள மருத்துவம் படித்தால் மட்டும் தான் முடியும் என்ற புரிதல் தமிழர்களுக்கு எப்போது உருவானது..? 

படிப்பில் மருத்துவ படிப்பு தான் உசத்தி... அதை படித்தால் தான் குடும்பத்துக்கு விடியும்... சமூகத்துக்கு சேவை செய்ய முடியும் என்று சிறு பிள்ளை மனதினுள் புகுத்தி விரக்தியில் 

தற்கொலை செய்யும் வரை அழுத்தம் கொடுத்து எப்போதுமே போராட்டம், பதட்ட  மூவ்மெண்டில் சமூகத்தை வைத்திருக்க பாடுபடும் எத்தனை பேர் மருத்துவம் படித்தவர்கள்..? 

மருத்துவம் படித்ததனால் தன் குடும்பம், சமூகம் முன்னேற்றம் கண்டது என்பதற்கு முன்மாதிரியாக, எடுத்து காட்டும் படி படிப்பு முடிந்து கிராமங்களை நோக்கி சேவை செய்ய அல்லது சமூகம் சார்ந்த முன்னேற்றமே இலக்கு எனும்  நோக்கத்தில் பணி செய்வோர் எத்தனை பேர் என்றும் சொல்லுங்களேன்..! 


வாழ்க்கையில் முன்னேறணும் என்று நினைத்தால்  டாகடர் ஆகி ஸ்டெதற்க் கொப்  பிடித்தால் தான் முடியும் என்று இல்லை. 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. அவன் அறிவு பேராயுதம். ஒரு புல்லுக்கட்டு கூட போதுமாம்..! என்னமோ சொல்லணும் என்று தோணுது . அவ்வளவு தான்🤼‍♀️🤼‍♀️🤼‍♀️

நெல்லி காயும் சொல்லி செல்லும் ..!

 நெல்லி காயும் சொல்லி செல்லும் 

கடந்து வாழ்ந்த வாழ்வதனை 💞💖

செல்வி அன்டி வீட்டு முற்றத்தில் மார்கழி பனி இரவின் மழைக்காற்றுக்கு தானே கனிந்த நெல்லி பழங்களும், காய்களும், கெப்புகளுடன் பிஞ்சும்  தரையெங்கும் நட்ஷத்திரங்கள் போல் வீழ்ந்து பரவி கிடக்கும். தானாய் வீழ்ந்த காய் பொறுக்கியதில் தின்றது போக  மரத்தையும் ஆட்டி, பொலு பொலுவென்று விழும் போது எட்டி பிடிக்கும் கிளையதையும் உலுக்கி அணிந்திருக்கும் சட்டையை மடியாக்கி  அள்ளி சென்று பள்ளிப்பை பக்கதினுள் ஒளித்து... 

ஜாம் காய்ச்சலாம் என்பதும் தெரியாது.

இன்றறியும் விடடமின் சத்தென்றும் தெரியாது ..!

வாய்க்கு ருசி , பசிக்கு பொரி

உப்போடும், உவப்போடும் 

தின்ன தின்ன சலிக்காது... !

வாய் கூசும்.. நா புளிக்கும் ..! 


நாங்கள் வாழ்ந்தோம்..! 

ஒரு காலம் தானாய் வளர்ந்தோம்..! 🏋️‍♂️🤼‍♀️🪂🤼‍♂️ 


🌻🙏😍 அல்லி அன்ரி யின் அம்மா வீட்டு நெல்லி மரமும்  செல்வி அன்ரி வீட்டு நெல்லி மரமும் எங்கள் பசியும் தாகமும் தீர்த்தது என்றால் மிகையில்லை.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்..!

ஒரு வார்த்தை  

ஒரு பார்வை 

ஒரு பாடல் 

எங்களை நேசிப்போர் சிந்தனையில் நாங்கள் யாராக இருக்கின்றோம் என்பதை உணரும் நொடி ..💞💞❤️🥰

“”ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்” 💕💕

ஒரு பாட்டு .. அதை தேர்வு செய்து ..புகைப்படங்களோடு எடிட் செய்து .... ஆயிரம் வார்த்தைகளில் புரிய வைக்க முடியாததை இசையோடு இயைந்து வரும் வார்த்தை வரிகளில் உணர்த்த எத்தனை பேரால் முடியும்..? 

என் Op க்கு முன் ஒரு வீடியோ சென்ட் பண்ணி இருந்தார்  Mohamed Musammil

அப்போது இருந்த மன  நிலையில் எதையும் பார்க்கல, கேட்க தோணல.. நேற்று inbox  ஆராயும் போது தற்செயலாக வீடியோ பார்வைக்கு வந்ததும் 💃🪂🪂🪂


யாரோ எழுதிய பாடல் வரிகளை 

யாருக்கோ கோர்த்து  

எத்தனை positive அலைகளை கிளப்ப முடியுமோ... அத்தனை ஜில்லிப்பும்....நேற்று  நான் உணர்ந்தேன்.


ஆமாம் ....!💃💃

“ பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்

கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்”💖💞

❣️❣️..  நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏Mohamed Musammil


நீங்களும் கேட்டு பாருங்கள்.

ஊரெங்கும் போகும் உன் ராகங்களே..!


ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா..?

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம். 

இது ஆகாயம் பூக்கள் தூவும் காலம் ..

🖤

அழுகையை கண்ணோடு 

அடக்கிட நினைக்கையில் 

நானும் எனக்கென 

கண்ணீரை வடிக்குது 

வடிக்குது வானம்

🖤

பாடும் நிலாவே ...!

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ..?

🖤

மலரே  மௌனமா ..?

மௌனமே வேதமா..?

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? 

பாதி ஜீவன் கொண்டு தேகம்

வாழ்ந்து வந்ததோ?

🖤

எந்தன் மூச்சும் இந்த பாட்டும் 

அணையா விளக்கே..! 

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே..!

போகும் பாதை தூரமே 

வாழும் காலம் கொஞ்சமே...! 

இந்த தேகம் மறைந்தாலும் 

இசையாய் மலர்வேன் ..! 


ஆம்..! 

வரிகளுக்கு உயிரூட்டி, உயிர்ப்பித்த உன்னிசைக்கு  மரணம் இல்லை.

பாடும் நிலாக்களின்

பயணங்கள் முடிவதில்லை ..!

 #S_P_பாலசுப்பிரமணியம் 🙏💞


பார்த்தீபன் கனவு எங்கே பலிக்கிறது..?

      திலீபன்...! 

பார்த்தீபன் கனவு எங்கே பலிக்கிறது..? 

மருத்துவ கல்லூரி மாணவனாக  Doctor க்கு படித்து இன்று எதோ ஒரு நாட்டில் பேரோடும் புகழோடும், காசோடும் , நிம்மதியாக, வளமாக வாழ வேண்டியவர். 

 உரிமை, உடமை, தன மண், தமிழ் மண்  விடுதலைக்கக அகிம்சை வழியில் (. மகாத்மா ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் எனும் அகிம்சை போராட்டத்தில் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்தாராம்)  கிடைக்கும் என்று தன் வாழ்வையும், கல்வியையும்,  எதிர்காலத்தையும்  அர்ப்பணித்தார் 💔 #திலீபம்

எம்மக்கள் கௌரவமாக வாழ  வேண்டும். என்று அநீதிக்கு எதிராக  நீதி கேட்டு  உயிரை கொடுத்ததுக்கு நன்றி கடனாக தான் “ கல்லாமல் கல்லாவில் காசு போட்டு  கௌரவ கலாநிதி பட்டங்களும், விருதுகளும்”   கொடுத்து எங்கள் கல்வி மீதான  மதிப்பையும் தரமிறக்கும் பணியில்.... (   விருது, புகழ், பட்டம் எனும் போதைக்குள் சிக்கி  நடக்கும் அநீதிகளை கண்டும், காணாமல் நமக்கென்ன என்று கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ) 

இதெல்லாம் காசு கொடுத்து கிடைக்கும் என்றால் திலீபன் போல் கெட்டிக்கார மாணவர்களின் உயிர்களை எதுக்கு பணயம் வைக்கணும்..? 

வருடத்துக்கு ஒருதடவை நினைவு கூறலும், அஞ்சலியுமாக  கடந்து செல்லாமல் அவர்களின் உயிர்தியாகங்களுக்கான காரணங்களை உணர்ந்து தற்கால  அநியாயங்களை குறித்தும் அக்கறை கொள்ளுங்கள் 

“  பல்லாயிரம் பேரின் உயிர்தியாகங்களை அர்த்தமற்றதாக்கி கொண்டிருக்கின்றோம்” 

🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥