ஜல்லிக்கட்டு அவசியமா இல்லையா என்பது இன்றைய கேள்வி அல்ல. ஜல்லிக்கட்டுக்கான தடை எமது இளையோரின் மனத்தடைகளை உடைத்து பொங்கி சிலிர்த்தெழும்ப வைத்திருக்கின்றதே. அது மட்டும் பேசப்படு பொருளாகட்டும்.
இந்த ஒன்றுபடல் இந்த உணர்ச்சி உத்வேகம்.இன்றைய சூழலில் எமது சமூதாயத்துக்கு அவசியமானது என்பதனால் இன்றைய எமது வெற்றியும் இது தான்.
இந்த ஒன்றுபடல் இந்த உணர்ச்சி உத்வேகம்.இன்றைய சூழலில் எமது சமூதாயத்துக்கு அவசியமானது என்பதனால் இன்றைய எமது வெற்றியும் இது தான்.
உலகத்தமிழினம் இதுவரை காணாத எழுச்சி இது. இன மத பேதம் மறந்து தமிழனாய் உரத்து குரல் கொடுக்கும் காலமும் இது தான்.
தம் தேவைக்காக இதுவரை ஒன்று பட்டு குரல் கொடுக்காத ஒரே இனம் நாம் தான். நமது அடிப்படை தேவைகளை கூட கேட்டுப்பெற வக்கற்றவர்களாக எப்போதும் எவருக்கேனும் அடிமைப்பட்டுக்கிடக்கும் அடிமைகளை சிலிர்த்தெழும்பிடும் குரல் இது.

தலைவன் என வழிகாட்ட எவனும் இல்லாமலே எமது சிங்கங்கள், வன்முறைகள் இன்றி, அறப்போராட்டமாக தம் உரிமைக்காக போராட முடியும் என நிருபித்திருக்கும் நாட்கள் இவை.
என்ன செய்தாலும் எத்தனை குட்டினாலும் தமிழன் குனிவானே தவிர நிமிரவே மாட்டான்எனும்ஆளும் அதிகார வர்த்தத்தினருக்குமான சாட்டையடி போராட்டம் இது. ஜாதி, மதம் எனும் பெயரில் பிரிந்தே கிடைப்பவர் தானே என தூசாய் எம்மை நடத்த நினைத்தவர்களுக்கு முகத்தில் கரி பூசிய நாட்கள் இவை.
சீரும் சிறப்புமான தமிழினம் தன்னை வழி நடத்தக்கூட தன்மானமிக்க தமிழன் இல்லாமல் தவிக்கிறதே எனும் இன உணர்வோடு கலங்கிய பல இலட்சம் தமிழுணவாளர்களை உயிர்ப்பிக்க வைத்த நாட்கள் இவை.
தொழில் நுட்ப வளர்ச்சி எனும் பெயரில் தம் தேசத்து குப்பைகளை கொட்டி எம் தேசத்து மண்ணையும் மக்களையும் மலடாக்க நினைக்கும் மேற்குலகின் அகம்பாவத்தினை அறுந்தெறிந்த நாட்கள் இவை.
அடக்கப்படும் உரிமைகளுக்காக கிளர்த்தெழும்பப்படும் உணர்வுகளை திசை திருப்ப முயலும் சதிகாரர்களை இனம் கண்டு அவர்களை துரத்தி அடிக்க முடியும் என உணர்வைத்தந்த நாட்களும் இவையே.
இந்த ஆரம்பத்தினை எமக்கான உரிமைகளை தட்டிக்கேட்கும் குரலாக , சமூதாய அவலங்களுக்காக உரத்து ஒலிக்கும் குரலாக மாற்றிட வேண்டியது எமது ஒவ்வொருவரின் கடமையும் தான்.
எந்த அரசியல் வாதிக்கும் பின்னால் செல்லாமல், சினிமாவின் பளபளப்புக்களை முன் நிறுத்தாமல் தமிழன் எனும் உணர்வில் மட்டும் சிலிர்த்தெழும்பி இருக்கும் எமது இளம் காளைகளுக்கான ஆக்கபூர்வமான உந்து சக்தி நாம் தான்.
போராட்டங்கள் எப்படியும் வெடிக்கலாம். அதை பாட்டாளி மக்களின் தேவைக்கானதாக சர்வாதிகாரத்துக்கு எதிராக திசை திருப்பி எடுப்பதும் உண்மை உணர்வாளர்கள் கைகளில் தான் உள்ளது. . எவ்வித பின்புலமுமின்றி இயல்பாக எழுந்த போராட்டத்தினை நம் தேவைகளுக்கான தாக ஒலிக்க வைப்பதும் நம் கைகளில் தான்.

ஆம்....!
ஜல்லிக்கட்டு தடை எனும் பெயரில் ......... தமிழருக்கான அடக்குமுறை..... தடை அதை உடை..... என இளையோரும், பெரியோரும் வயது வேறுபாடின்றி ஒருமனதோடு இணைந்து தமிழர் எனும் இன உணர்வில் ஜாதி மத பேதம் களைந்து ஒன்று பட்டு நிற்கும் தருணம்.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல சமூக அவலங்களுக்காகவுமான உரிமைக்குரல் உரத்து ஒலிக்கட்டும்.
இந்த ஒன்றுபடல் நல்ல ஆரம்பமாகட்டும். வேகத்தினை விட விவேகமும் அவசியம் என்றுணர்ந்து இத்தனை ஆற்றல்களும் திசை மாறி சிதறடிக்கப்படாதிருக்க வேண்டும் எனும் மன உணர்வோடு இணைவோம்.
இளைஞர் சக்தி ஆற்றலில் சக்தி. இத்தனை ஆற்றுமைப்படுத்தல்களையும் சரியாக பயன்படுத்தி வழி நடத்திட களத்தில் போரிடுவோருக்கு அகத்தில் சக்தி தரும் ஊற்றாகிட ஒன்று சேருங்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு.
தலை நிமிர்ந்து சொல்லும் நாட்கள் வரும்.
ஒலிக்கட்டும் முரசு.
விடியல்கள் தூரமில்லை.