மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூன் 2020

Depression : பகுதி 1

Depression : பகுதி 1


1994 ல் என்னுடன் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் panni புரிந்த நெருங்கிய தோழி திடீரென காணாமல் போனாள். எங்கே என்றேன்.நம்ம ஊர் அங்கோடை போல் இங்கே இருக்கும் Hospital லின் பெயர் சொல்லி அங்கே அட்மிட் என்றார்கள் 

மூன்று மாதம் பின் வந்த போது உடல் பருத்து சோகமாக வந்தாள். என்னவென கேட்ட்டேன் Depression என்றாள். அப்டின்னால் என்ன வருத்தம் என்று கேட்டேன். 21 வயதில் அப்போது இந்த நோய் குறித்து புரியவில்லை😭.  அடுத்த மாதம் தற்கொலை  செய்து கொண்டாள். . நான் அறிந்த முதல்  Depression இழப்பு.

2000  ஆண்டில் என் கண் மருத்துவர் முதல் நாள் ஐந்தரைக்கு எனக்கு கண் check  up  செய்தார். சோகமாக இருந்தார். விடிந்து பேப்பர் பார்த்தால்  விடிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. காரணம் Depression🖤

அதன் பின் பலர் பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் யாரையும் விட்டு வைக்கல்லை. ஏதோஒரு வகையில் மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருந்தது. இருக்கின்றது. தற்கொலைக்கு பின் காதல் தோல்வி, வேலையிட முதலாளி மாறியதால் புது முதலாளி கொடுத்த அழுத்தம், குடும்ப பிரச்சனை என பைத்திய காரருக்கு ஹாஸ்பிடல் ல் அட்மிட்  திடீர் திடீரென செத்து போனார் என செய்தி வரும். இப்படி யாரோ எங்கோஎன அன்றாட செய்திகள் போல் கடந்து வந்து கொண்டிருந்தேன். 

2011 ல் நானும் இரண்டு வருடம் போராடித்தான் மீண்டேன். நான் ஈவண்ட்ஸ் பார்ட்டி நிறுவனம் தொடங்க முன்  ( 1997-  2012 )  14  வருடம்  ஹோட்டல் மானேஜிமென்ட் வேலை செய்த போது ஒரு கட்டத்தில் வேலை செய்த எல்லோருக்கும் கை வலி, தலை, முதுகு வலி என்று டீம்  இல் அனைவருக்கும் ஏதோ ஒரு வலி. ஸ்கேன் க்கெல்லாம் அகப்படாத வலி. பிசியோ தெரபி செய்தாலும் பயனில்லை. எல்லோருக்கும் வலி என்றானதும் தீர்வு தேடி ஹோட்டல் சார்பில் மனோதத்துவம் சார்ந்த கோர்ஸ் ஒன்று மூன்று மாதம் நடத்தினார்கள்.

அதனோடு நான் ஹொஸ்பிடலிலும் இரண்டு மாத கோர்ஸ் ஒன்றும் செய்திருந்தேன்.
இரண்டிலும் எங்கள் பகுதி பிரபல மனோதத்துவ சிறப்பு  மருத்துவர் பாடம் நடத்தினார். மன அழுத்தத்துக்கும் உடலில் ஏற்படும் வலிகள், வெளிப்படையான மாற்றங்கள், வெளிப்படுத்த படாத உணர்வுகள் அழுத்தமாகி வெடித்து சிதறும் நிலை என பலவகை கற்றல்கள் கிடைத்தன. 

உடல் உள வலிகள் ஏன் எதனால் உருவாகின்றன? எப்படி மீண்டு வரலாம் என்று அருமையான விளக்கம் தந்தார். மன அழுத்தம் என்றதும் எம்மவர்கள் பைத்தியம், லூசு என்று கிண்டல் கேலி செய்வது போல் இது ஒதுக்கப்படும் பிரச்சனை இல்லை. 

Depression  ஒரு வகை நோய்..  பிரஷர், டயபட்டீஸ் நோய்களைப்போல ஒரு நோய். உடல் உறுப்புக்களுக்கு உருவாகும் நோய்கள் போல் உளவியல் சார்ந்து எதிர்கொள்ளும் நோய்.Depression  எனும் ஆழ்மன அழுத்தம் உருவாக எமது சமூகமும், சுழலும், நமது மனதும் அடிப்படை காரணங்களாக இருக்கின்றது. 

இது தான் எனும் நோய்க்காரணம் கண்டு பிடிக்கப்படாத பல வலிகள்,வேதனைகளுக்கு காரணம் நம்ம மனசு. 

ஆம் ... ! நம்ம மனசு இங்கே நமக்கு வலிக்குது என்றால் வலிக்கும், வலிக்கல்லை நான் ஸ்டெடி என்றால் நிமிர்ந்து  நிற்கும். 

முடியும் என்றால் முடியும்..! 
முடியாது என்றால் முடியாது ..! 
அவ்வளவு தான்..!🌻

வாழ்க்கை ரெம்ப சிம்ப்பிள். ❣️உங்களுக்குள் ஆயிரம் உடல் குறைபாடு இருக்கலாம். ஆனால் அது குறை என்று நீங்கள் நினைத்தால் தான் குறை. அதை விட நிறைவை தரும் பலது எமக்குள் ஒளிந்திருக்கே என தேட ஆரம்பித்தோம்என்றால் வாழ்க்கையில் தினம் தேடல்கள் புதிதாகி கொண்டே இருக்கும். 

எப்பவும் உயரத்தில் ஒரே இடத்தில இருக்க முடியாது. ஏறணும் அல்லது இறங்கணும்

குப்புற விழவும்வேண்டும் 
அப்ப தான் திரும்பவும் மேலேறும் போது முன்னிருந்த உயரத்தை விட பத்தடி இன்னும் உயரமா ஏறுவோம். 

ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் எதோ ஒரு தோல்வி வலி இருக்கும்...! எல்லா தற்கொலைக்கு பின்னும் Depression  இருக்குமா?

பதிவில் விபரமாக பார்க்கலாம்...! 

Depression : 
குறித்து ஆளாளுக்கு எழுதுறதை பார்க்கும் போது பலர் இந்த பிரச்சனை என்னமோ நாலு பேர் ஆலோசனையில் சரியாகிரும் என மேலோட்டமா, லேசா புரிந்து கொண்ட மாதிரி இருக்கின்றது 

"இது பெரிய பிரச்சனையில்ல, தியானம் பண்ணு, , புத்தகம் வாசி, பாட்டுக் கேளு, எப்பவும் அழுது வடியாமல் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கோ, நல்லாச் சாப்பிட்டுட்டு நித்திரை கொள்ளுங்கோ, ஏதும் கஷ்டமா இருந்தா யாரிடமாவது மனம் விட்டுப் பேசி இருக்கலாம். எனக்கு சொல்லி இருக்கலாம், எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசுங்கோ இப்படி பலப்பல..!

Depression பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஆழ்மன அந்தரங்க பிரச்சனை ஒரு நாளில் பேசி முடிவுக்கு வரும் விடயமா ? அடுத்தவர் ஆலோசனை வார்த்தைகளை கேட்கும் சுய உணர்வில் இருப்பாரா? 

மனதில் இருப்பதை வெளிப்படுத்தி பேசும்படி  ரகசியம் காக்கும் நம்பிக்கையை இந்த சமூகமும், இங்கே எழுதும் கவுன்சிலர்களும் தருகின்றார்களா? என்பதும் இங்கே கேள்விக்குரியது. 

ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் Depression,  ஆலோசனை, அன்பு, கவுன்சிலிங் என எழுதி கடக்கின்றோம் 

Depression  :
உலக மக்களில் சுமார் 15% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சிகிச்சை தேவைப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆண்கள் மற்றும் இளைஞர்களை விட இரு மடங்கு அதிகமாக Depression நோயால் பாதிக்கப்படுகின்றனர். 

மனச்சோர்வு பெரும்பாலும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட வயதுகளில் ஏற்படுகிறது.

❤️ Depression னில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நாம் யாருக்காகவும் இல்லை , நமக்காக வாழனும். என்னால் எல்லாம் முடியும் என நம்பனும்.  ரோபோ போல்  தொடர்ந்து வரும் வாழ்க்கையை மாற்றி பயணிக்கணும். நமக்கு பிடித்ததை செய்யணும் எனும்  உள்ளார்ந்த உணர்தலுடனான உள்ளுணர்வை தட்டி எழுப்பி , அடக்கி வைக்கப்பட்டிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து,  அழுந்தி கிடக்கும் மன உணர்வை அவர்களுக்கு பிடித்தமானபடி( இசை, வாசிப்பு, தோட்டம், உலாத்தல், எழுத்து, பயணம், நண்பர்களுடன் உரையாடல் ) என மாற்றி பயணிக்க வழி காட்டுதல்கள் தேவை

❤️ பாதிக்கப்படும் நபர் தன்னை தான் உணர்ந்து  மீண்டு வரணும் எனும்  முயற்சியும் அதற்கு பக்கபலமாக உறவுகளின் புரிதலும்  நீ எப்படி இருக்கின்றாய் எனும் உளமுணர்ந்த விசாரிப்பு அன்புக்காக ஏங்கும் ஒருவரின் உள்ளதை மென்மையாக வருடி  வாழ வேண்டும் எனும் ஆசையை உருவாக்கும் வரை தொடர்ந்து முயற்சி தேவை. 

Nisha l
20.06.2020 

அடுத்த பதிவையும் படியுங்கோ


Facebook : 

19 ஜூன் 2020

COVID - 19 சுகாதாரத் தொழில்களில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி சொல்வோம் .,!

ஸ்விட்சர்லாந்து  சொல்கின்றது:
" Thank  you "," நன்றி "," danke"
" merci ",grazie"," grazia" 
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

DIE SCHWEIZ SAGT
Es ist Zeit, "danke", "merci", "grazie", "grazia" zu sagen. 

20.03.2020 -  12.30 Uhr -  60 Sekunden lang. 

நாளை வெள்ளிக்கிழமை, மதியம் 12:30 மணிக்கு ஒரு நிமிடம் / 60 வினாடிகள் 

எங்கள் விட்டு பால்கனிகளில் நின்றோ யன்னல் கதவினை திறந்தோ 

👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எமது கரங்களை தட்டி நன்றி சொல்வோம் 

 24 மணிநேரமும் சுகாதாரத் தொழில்களில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

" Thank  you " ," நன்றி " , " danke", "merci", "grazie", "grazia" zu sagen. 

ஒற்றுமை என்றால் என்ன என்பதைக் காண்பிப்போம்। 

பெரியவர்கள், சிறியவர்கள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரிடமிருந்தும் கைதட்டல் 
தொடர்ந்து ஒரு நிமிடங்களுக்கு 
( வேலைத்தளங்களில் வேலை நிறுத்தி) அனைவரும்  பங்கேற்போம் 

நாங்கள் மோசமாக பாதிக்க பட்ட்தாக  உணரும்போது இரவும் பகலும் எங்களுக்காக இருப்பவர்களுக்கு, நமக்குத் தேவைப்படும்போது, ​​நாம் வேதனையில் இருக்கும்போது, ​​நாம் பயப்படும்போது, ​​அவநம்பிக்கையுடன்,  உதவியைத் தேடும்போது, ​

தாம் பாதிக்கப்படுவோம் என அறிந்தும் தன  உயிரை துச்சமாக்கி  அர்ப்பணிப்புடன் பணி செய்யும் அற்புதமானவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மனைகளில்  தாதியர், மருத்துவர்கள், உதவியாளர்கள் முதியோர் இல்ல பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம் 

( இதே நேரம் எமது பாதுகாப்பு பணியில்  இராணுவம், காவல் துறை, உணவுப்பொருள் விற்கும் கடை பணியாளர்கள், தெருக்களை துப்பரவு செய்யும் பணியாளர்கள், பொதுப்போக்கு வரத்து பணியாளர்களுக்கும்  எமது கரங்களை தட்டி நன்றி சொல்வோம் ) 

சுவிஸ்  நன்றி சொல்கின்றது ❤️
சுவிஸ் மக்கள் நன்றி சொல்கின்றோம்❤️
இந்த பூமி வாழ் மக்கள் அனைவரும் ❤️
" Thank  you " ," நன்றி " , " danke", "merci", "grazie", "grazia" 

அனைவரும் இணைந்து கொள்ளலாம் 
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

உலகின் பல நாடுகளிலும் சம நேரத்தில் கைதட்டி நன்றி பாராட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

- Nisha 

Dieser Applaus von Ihnen allen, Gross und Klein, Alt und Jung, soll jenen Menschen gelten, die Tag und Nacht für uns da sind, wenn wir sie brauchen, wenn wir Schmerzen haben, wenn wir Angst haben, verzweifelt sind, Hilfe suchen, verletzlich sind: 

Den Krankenpflegerinnen und -pflegern, den Ärztinnen und Ärzten, den Assistentinnen und Assistenten 
All jenen wunderbaren Menschen, die in unseren Spitälern, in den Arztpraxen, in den Apotheken und Pflegeheimen immer für uns da sind, wenn es uns schlecht geht। Wenn wir am Verwundbarsten sind।

#dieschweizsagtDANKE #MERCI #GRAZIE #GRAZIA #THANKYOU #நன்றி




மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH)   Anaesthesiology இன்ஸ்டிடியூட்டில் பல மூத்த மருத்துவர்கள் மற்றும்  பி.ஜி மருத்துவர்கள் பட்டதாரிகள் கோவிட் -19 
Positive உறுதிப்படுத்த பட்டுள்ளனர்./ 11.06.2020 

ஏப்ரல் மாதத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதயவியல் துறையின் பல பி.ஜி மருத்துவர்கள் மற்றும் பணியாளர் , செவிலியர்கள் கொரோனா virus positive உறுதிப்படுத்த பட்டிருந்தனர். 

தற்போது  Anaesthesiology இன்ஸ்டிடியூட்டின் இரண்டு தலை மை மருத்துவர்கள் & மொத்தம் 14 பி.ஜி. மருத்துவர்கள், முன்னர் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட  பாதிக்கப்பட்டுள்ளனர்.


ராஜிவ் காந்தி மருத்துவமனைகில் மட்டும் மருத்துவ துறை சார்ந்தோர்  100 பேருக்கும் மேல் covid  19  தொற்று உறுதி பட்டிருக்கின்றது என்கின்றார்கள் / 12.06.2020  ) 

• 

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துறைத் தலைவர்கள் உட்பட 15 மருத்துவர்களுக்கும் தொற்று உறுதி பட்டிருக்கின்றது 

• 

சென்னை மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர் விடுதியில் மருத்துவ மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 42 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது./ 12.06.2020 


Europa  Covid 19  lockdown  ஆரம்ப நிலையிலேயே மார்ச் 16  தொடக்கம் கொரோனா Virus அறிகுறிகள் இருந்தால்  வீட்டில் தனியே இருக்கும் படியும் குடும்ப மருத்துவரிடம் தொலைபேசியில் ஆலோசனை பெறும் படியும். மருத்துவருடனான நேரடி  சந்திப்புகளை தடை செய்தது . மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது..மருத்துவமனைக்கு போன் செய்து முன் அறிவிப்புடன் அவர்கள் சொல்லும் இடத்துக்கு செல்ல சொன்னார்கள். 

அதுவும் கடுமையாக விமரிசிக்க பட்டது. covid  19  நோய் பரவலை பொறுத்த வரை அப்போதும் இப்போதும் அது சரியான திட்ட மிடல் என்றே கூறினேன் 

இந்த நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம். 

Swiss சின்ன நாடு . நிலப்பரப்பு குறுகி சனத்தொகை அடர்த்தி மிகு தேசம் என்பதால் ஆரம்பமே கட்டுப்பாடுகளை விதித்தது .இருந்தும் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை அடைந்த நாடுகளில் முன்னணியில் இருந்தது. காரணம்  சமூக இடைவெளி பேணும் படி குடியிருப்புகள் தூரமாக இல்லை.இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தம் மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பில்லாமல் பாதுகாத்து கொண்டது. 

கோவிட் -19 காரணமாக முழு உலகமும் கடினமான சூழலை எதிர்கொள்கிறது. பல நாடுகள் தற்காலிக பராமரிப்பு மையங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன, அங்கு நோயாளி - மருத்துவ குழு   இடையிலான தூரம் குறையக்கூடும். இதன் காரணமாக மருத்துவ குழு பாதிக்கப்படலாம். 

மருத்துவக் குழுவைப் பாதுகாப்பதற்காக ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது. காற்றோட்டமான பாதுகாப்பு அறையை உருவாக்குவதுதான் யோசனை. 

மேலும் விபரங்களுடன் வழி காடடல்களும் இந்த லிங்கில்


#Save_Medical_Staff in the War with Covid -19





மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

தமிழ் நாட்டில் நோய் மேலும் பரவாமல் அனைவரும் பாதுகாக்க பட ...!

இனிமேல் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த எந்த செய்தியும் அறிவதில்லை, எழுதுவது இல்லை, அவரவருக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் வரணும்? எனும் முடிவோடு  ஐந்து நாள் எதையும் பார்ககாமல் ஒதுங்கி இருந்தேன்.

இன்று ஒன்றுக்கு நான்கு பேர்
அக்கா..! நிலைமை மோசமாகுது, கிராமங்களிலும் கொரோனா வைரஸ் positive உறுதிபடுத்துகின்றார்கள். எங்கள் ஊருக்குள்ளும் வந்து விட்டது. எங்கள் தெருவில் ஒரு குடும்பத்துக்கு பாசிட்டிவ். அக்கா பக்கத்துக்கு வீட்டில் கொரோனா பொசிட்டிவ் உறுதி படுத்தி எங்க தெருவே  இப்போ Block செய்திருக்காங்க. நாங்கள் என்ன செய்வது என புரியல்ல பயமாக இருக்குது ஏதேனும் நம்பிக்கை,வழி காட்டல் தரும் படி  எழுதுங்கோ எனும் வேண்டுகோள்..! எழுதுகின்றேன் ✍️✍️

அவர்களுக்கு சில பதிவும் லிங்கும் அனுப்பி விட்டேன். இங்கே அது தேவையில்லை .

ஆனால்...! 
தமிழ் நாட்டில்...?

கடந்த மூன்று நான்கு மாதத்தில் என் தமிழ் நாட்டு நண்பர்கள் பலர் பதிவுகள் அவர்களின் கொரோனா வைரஸ் குறித்த அறிவியல், அறிவார்ந்த புரிதல்கள் குறித்து தெளிவாக புரிந்தும் கொண்டேன்.

அது ....! 
மருத்துவர்கள் சொல்வது தான் வேத வாக்கு, Facebook  பதிவில் 100 லைக் விழுந்தால்  ஆதாரமில்லாதவைகளை உண்மை என  நம்புவார்கள். பரப்புவார்கள். நாலு பேருக்கு இலவச உதவி செய்கின்றேன் என்று  சொல்லி கொண்டால் போதும்.செய்திகளுக்கு  ஆதாரம், ஆய்வு குறித்தெல்லாம் தேவையில்லை.

ஈழத்தமிழர் என்றால் அழுவாச்சி காவியம் பாட தான் லாயக்கு எனும் எண்ணம் தமிழ் நாட்டில் பலருக்கும் உண்டு. இலங்கை மக்கள்  தமிழ் நாடடவர் எழுதும் பதிவுகளை உள் உணர்ந்து வாசிப்பது போல்  தமிழ் நாட்டு தமிழர் ஈழத்து மக்கள் பதிவுகளை  உணர்வதில்லை தொப்புள் கொடி உறவென ஈழத்தவர் காட்டும் கரிசனம், உரிமை உணர்வு மட்டுமல்ல அவர்களுக்கும் அறிவும் ஆற்றலும்உ
ண்டென தமிழ் நாடடவர் புரிந்து கொள்வதும் இல்லை. அழுது புலம்பி, யுத்தம், சோகம், அழிவு கஷ்டம் என்று எழுத தான் லாயக்கு என நினைப்பும் பலருக்குள் இருக்கு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள Covid -19  காலங்கள் உதவி இருக்குது. ( Arul Kumar SP ஐயா மன்னிக்கவும் இது உங்களுக்கு அல்ல  )  

உலகின் முக்கிய மொழிகள்  பேச வாசிக்க தெரிந்த  அறிவியல், விஞ்ஞான, மருத்துவ தகவல்களை தேடி அறியும் ஆர்வம் கொண்டவர்கள் தரும் ஆதார அனுபவ தகவல்களை கொஞ்சமேனும் நம்பனும். ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி என முக்கிய மொழிகளில் Covid - 19  குறித்து அந்தந்த நாடுகளின் சுகாதார துறை வெளியிடட அறிக்கைகள், விஞ்சான அறிவியல் விளக்கஙகள், மரபணு மாற்றங்கள் குறித்தெல்லாம் தமிழுக்கு மாற்றி பகிர்ந்தோம். அதில் என்ன இருக்கு என வாசித்தாவது உண்மை நிலை புரிந்து கொள்ள முயற்சி.....ஜஸ்ட் ஒரு செய்தியை அறியும்ஆர்வம் கூட பலருக்குள் இல்லை. 

கொரோனா வைரஸ் செய்தி ஒன்றுமே நாங்கள் வாசிப்பது இல்லை. எங்களுக்கு பயமாக இருக்கின்றது, கதை அட்டை பகிருங்கோ,  கதை சொல்லுங்கோ புகைப்படம் போடுங்கோ என சிந்தனையை திசை திரும்புவதாக உலகத்தின் உண்மை நிலைமறைத்து  தமக்கென போலியான உலகத்தை உருவாக்கி கொண்டோர் அநேகர்..! எந்த நேரத்தில் எதை செய்யணும் என அறிவு இல்லாதவர்கள் வாழ்க்கை குறித்து எத்தனை நீதிக்கதை படித்தாலும் அத்தனையும் வீண் தான் 

மருத்துவர்கள் தான் கொரோனாவைரஸ் குறித்த தெளிவான விழிப்புணர்வு பதிவு தருவார்கள்  என்பது இல்லை. உண்மையில் மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை, பதட்டத்தில் அவர்களுக்கும் covid -19  குறித்த தற்பாதுகாப்பு தெளிவு குறித்து தேடி அறியும் மன நிலை, நேரம் இருக்குமோ என்னமோ? 

வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் எனும் நம்பிக்கை போல் டாக்டர் சொன்னால் மட்டும் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புவதும், கானல் நீரை உண்மை என எழுதி, கற்பனை உலகை உருவாக்கி,  கொரோனவா  அது ஒண்ணுமில்லை, எங்க பாரம்பரியம் உணவு முறை காப்பாற்றும் எனும் நம்பிக்கை கொடுத்த அசட்டை தனம், எங்கள் நாட்டின் அழுக்கு தூசி.துரும்பு  போதுமான நோய் எதிர்ப்பை உருவாக்கி இருக்கும்.. soooo ... நோ panic ... நோ பயம் என சும்மா தோணுவதை எல்லாம் ஆதாரமே இல்லாமல் எழுதும்  பதிவெல்லாம்  100 , 1000 லைக் விழுந்தால் முக்கியமானது.  உண்மை சொல்வது என்று நம்பி....🙆‍♀️!

எத்தனை பேர் பதிவை படித்து உண்மை உணர்ந்து லைக் போடுகின்றார்கள் என்பதை சிலரின் பதிவு போட்ட நொடியில் விழும் லைக் உணர்த்தும். கண்ணதாசன் நிரூபித்தது போல் இங்கே படைப்பின் கருத்தை விட படைத்தவனுக்கு  ஜால்ரா செய்யவே பெரும் ஆட்டு மந்தை கூட்டம்  உண்டு.

அம்மை நோய் தொற்று உருவான போது கடவுளின் கோபம் என அக்கால மக்களை நம்ப வைத்து வேப்பிலை கட்டி வீட்டுக்குள் அமர வைத்து காப்பாற்றிய மூத்தோர் வாழ்ந்த சமூகத்தில் இத்தனை அறிவியல் வளர்ந்த பின்னும் மக்களுக்கு தற்கால பரவும்  நோய் கொடுத்த தெளிவை உருவாக்க முடியவில்லை என்றால் உங்கள் வளர்ச்சியும், பெருமையும் எத்தகையது என இனி என்றாலும்
ஆராய்ந்து கொள்ளுங்கள்

இணையத்தில் அதிலும் Facebookil  எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு தர முடியாது எனும்சப்பை காரணம் வேண்டாம். இதே இணையத்தில் நீங்கள் எழுதுவதை நம்பி நிவாரணம் எனும் பெயரில்  பல இலட்சம்  நிதி சேர்க்க முடியும் போது  ஒவ்வொரு சோத்து பார்சலோடும் அந்த உணவு கொடுக்கும் நிலை ஏன் உருவானது எனும் விழிப்புணர்வும்  சேர்த்து உருவாக்கி இருக்க முடியும்.

அதுக்கு தான் அரசு lockdown அறிவித்தது. 

ஆனால் நடந்தது என்ன? 

• உலக உணவு துறை ஒரு பக்கம் பசி பஞ்சம். 
• உலக சுகாதார நிறுவனம் கொள்ளை நோய்
• ஒருபக்கம் வெட்டுக்கிளி மில்லியன் டன்கணக்கில் உணவு விளைச்சலை  நாசமாக்குது 
•சூரியனில் என்னமோ கோளாறு, அதனால் இனி வரும் காலம் காலநிலை மாறும், அதனால் விவசாயம் செழிக்காது, உற்பத்தி குறையும் என நாசாவும் உலக சூழலியல் துறையும் கத்துது.

எவன் என்ன சொன்னால் எனக்கு என்ன? எனக்கு மூணு வேளை சோறு முக்கியம். இது தான் முக்கியம்..! 

அவனவன் பிழைப்பே அந்தரத்தில் நிற்கும் போது எதிர்காலமே இல்லாமல் வாழ்வா சாவா எனும் ஆபத்து சூழ்வதை உணர்ந்து  எழுதியோரையும்  panic, பதட்டம், பயம் என சொல்லி மிரட்டி அடக்கி...! எல்லோரும்அறிவாளிகளாகி வருமுன் காக்கும் எந்த வித முன் எச்சரிக்கையும் இல்லாமல் உண்மையை, உள்ளதை சொல்லி புரிய தெளிய வைக்காமல், போகும் போக்கில் அடித்து விட்ட்தான் நிலை இன்று ஏழை அப்பாவிகள் மேல் விடிந்திருக்கு🤷‍♀️. 

COVID - 19  நோய் பாதுகாப்பு, பரவல் தடுப்பு எனும் முக்கிய விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்பது சட்டம் போடுவது, திட்டங்களை  அறிவிப்பதுடன் ஆரம்பித்தாலும் அதன் வெற்றி என்பது  மக்கள் தரும் ஒத்துழைப்பில் புரிதலில்  தொங்கி நிற்கின்றது. 

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் மட்டும் குறியாக இருந்து மக்கள் உயிர்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் கொரோனா வைரஸ் நோய் பரவி 1000  பேரை சாக விட்டு  lockdown  அறிவித்தது.. அதுக்கு நேர்மாறாக இந்தியா, இலங்கை நாடுகள் ஆரம்பத்திலேயே lock down போட்டு உலக நாடுகளின் பாராட்டை பெற்றது. ஆனால் அரசின் இந்த முயற்சி ஏன் என்று புரிந்து கொள்ளும் தெளிவற்ற சமூகப்போராளிகளை  பின் பற்றும் அறியாமை கொண்ட மக்கள் lockdown  காலம் என்பது இனி வர போகும் நெருக்கடி மிகுந்த காலத்துக்கான முன்னோடி என்றும்
புரிந்து கொள்ளாமல் , திட்டமிட காலம் இல்லாத நெருக்கடி நிலையில் நாட்டின். வசதி வாய்ப்பு, மக்கள் தொகை, மருத்துவ வசதிக்கு மக்களை பாதுகாக்க lockdown  அறிவிப்பு தவிர வேறு வழி இல்லை என்றும் தன்னை சூழ போகும் அவசர ஆபத்து குறித்த  முன் நோக்கம் இல்லாமல்,மக்கள் மத்தியில் lockdown குறித்த எதிர்ப்பை உருவாக்கினார்கள். 

நோய் குறித்த விழிப்புணர்வு கிராமத்து மக்களுக்கு செல்லவும் இல்லை. கற்றோர் அதிகம் வாழும் சென்னை போன்ற பெரு நகரங்களில்  மக்களுக்குள் போதுமான விழிப்புணர்வு உண்டென நம்பிக்கையும் சிதறுகின்றது . 

சென்னை இல் என்ன நடக்குது? 

சென்னையிலிருந்து கொத்துக்கொத்தாக மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நகர்வதால் Panic அதிகமாகி பயமும் பதட்டமுமே நிறைந்து  15 day’s Quarantäne and Mask கொரோனா Virus பாதுகாப்பு கவசம்  எனும் நம்பிக்கையோடு. பெரும்பாலோனோர் வைரஸ் நோய் காவுவதை குறித்த தெளிவு இல்லாமலே இடம் பெயர்வின் மூலம் நோய் காவிக்கொண்டே தம்மை சமூக பொறுப்பாளர்களாக நியாயப்படுத்தி கொள்கின்றார்கள். இவர்கள் அறிந்து தான் தம் செயலை நியாயப்படுத்துகின்றார்களா? 

ஐரோப்பாவில் நோய் தொற்று பரவுகின்றது என்பதை அதன் விளைவுகளை இழப்புக்களை ஆரம்ப முதல் சமூக அறிவியல், அரசியல், பொருளாதார நிலைகளோடும், ஒவ்வொரு நாட்டின் வளங்கள், வசதிகளோடும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து  நுறு ஆண்டுகளில் இதே போல் கொள்ளை நோய் கொடுத்த இழப்புக்களையும் தேடி அறிந்து, நாங்கள் அறிந்ததை  எங்கள் மக்களுக்கு  அறிவித்து பாதுகாக்கணும், அவர்களை எச்சரிக்கணும்.அவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கணும் என எத்தனை வேண்டல்கள்...! 

செருப்பால் அடிக்கவில்லை என்பதை தவிர அத்தனையும எங்களை நோக்கி ஏவப்படடன. ஓவர் பரப்புரை, நெகடிவ் வதந்தி, பெரிய பெரிய கட்டுரை ..Panic  என எத்தனை கிண்டல் அதுக்கு வேற விளக்கம் என தொடர்ந்த மன உளைச்சலுடன் இலங்கையில் விழிப்புணர்வை உருவாக்கியதில் நாங்கள் குழுவாக வெற்றி கண்டோம் எனும் உண்மை இந்த இடத்தில இதை வாசிக்கும் தமிழ் நாட்டு நண்பர்களுக்கு புரியனும். எங்கள் பதிவுகள் 100, 1000  like  share ஆகவில்லை. ஆனால் அதை வாசித்த பத்து பேர் மகத்தான ஆளுமைகளாக அரசு, சுகாதார துறை, மருத்துவ துறை சார்ந்த முடிவுகள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுகளை தெளிவாக எடுக்கும் வலிமை கொண்டவர்களாக தங்களையும் மக்களையும் பாதுகாத்து கொண்டார்கள்.

தமிழ் நாட்டில்...? 

ரெண்டு வரியில் குரலுக்கு பத்து வரி விளக்கம் தேடுவோருக்கு நீண்ட பதிவு  கட்டுரை சொந்த சோகம் என்றால் உச்சு கொட்டி படிப்பார்கள். தங்கள் உயிர் வாழ்வாதாரம் குறித்து  ஆராய்ந்து அறிய மனதில்லை. பத்திரிகை, தொலைகாட்சி களின் தலைப்பு செய்திக்குள் மொத்ததையும் அடக்கி கொண்டார்கள். 

இன்று செய்திக்கு தலைப்பாகி நிற்கின்றார்கள்...😭!

தலைக்கு மேல் கத்தி தொங்குது என்று கத்தினோம். யாரும் கண்டுக்கல்ல. இனி கத்தி எங்கே தொங்கினாலும்  நாங்கள் கத்தி பயனும் இல்லை...🤷‍♀️!

COVID  - 19  குறித்து தெளிவை அடைந்தவர்கள் வீடடை விட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்து கொள்கின்றார்கள்.  அறியாமையும் தெளிவும் இல்லாத  90 % தமிழ்  நாட்டு தமிழர்களுக்கு இன்னமும் தங்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியின் ஆபத்து குறித்து  புரிய இல்லை.....🖤! 

🔹

நோய் மேலும் பரவாமல்  அனைவரும் பாதுகாக்க பட  கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் சுகாதாரத்துறையும், இராணுவமும், காவல் துறையும் இணைந்து கொள்ள வேண்டும் 

தமிழ் நாட்டு அரசு உடனடியாக இராணுவத்தை களமிறங்கி இடம்பெயரும் மக்களை தடுத்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் இன்றைய நிலையில் தீர்வாக இருக்கும் 

இதுவே வழி..! 






 COVID-19 pandemic in India
Map of confirmed cases per million residents
18.06.2020
 COVID-19 pandemic in India
Map of confirmed cases (as of 18 June 2020)


COVID-19 pandemic in India
Map of active cases (as of 18 June 2020)

COVID-19 pandemic in India
Map of deaths due to the pandemic (as of 18 June 2020)



Nisha 
19.06.2020 

12 ஜூன் 2020

Coronavirus Vaccine Tracker

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு  ( கோவிட்  19 )  எதிராக 135 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள். 

அந்த ஆய்வுகள் குறித்து   நியூ யார்க் டைம்ஸ் தொடர்ந்து  பதிந்து  வருகின்றார்கள்.

SARS-CoV-2 முதல் தடுப்பூசி பாதுகாப்பு சோதனைகள் ( மனிதர்களுக்கு ) மார்ச் மாதத்தில் தொடங்கியது.


புதுவகை தடுப்பூசி கண்டு பிடிக்க பலவருடம் ஆராய்ச்சிகள் தேவை என்றாலும் covid  19  க்கு ஒரு வருடத்துக்குள் தடுப்பூசி கண்டு பிடித்து விடுவோம் என்று ஆய்வாளர்கள் சவால் விட்டு தொடர்கின்றார்கள் 

இது வரை எந்த  முன் நகர்வும் இல்லை 

யாரும் அங்கே இங்கே மருந்து ஊசி கண்டு புடிச்சாச்சு என்று சொன்னால் அதை பகிர முன் 
இந்த லிங்க் ஒருக்கா எட்டி பாருங்கோ..! 
தப்பில்லை 🌻

Face book: 


10 ஜூன் 2020

கொரோனா வைரஸ் - இது தான் யதார்த்தம்..!

தயவு செய்து 

நம்பிக்கை தருகின்றோம் என ஆதாரம் இல்லாத. நிரூபிக்கப்படாத  பார்வேட் செய்திகளை  சும்மா தகவலுக்கு என்றாலும் பகிர்ந்து மக்களை careless ஆக்காதீர்கள். 

கொரோனா வைரஸ் நோய் பரவல், பாதிப்புகள், மருத்துவ வசதிகள், உதவிகள் குறித்த  உங்கள் நாட்டில். மாநிலத்தில், மாவடடம், ஊரில் இன்னும் உண்மை நிலை என்னவோ அதை மட்டும் எழுதுங்கள் 

எந்த அதீத நம்பிக்கையும் வேண்டாம்..! 

உண்மை கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. யதார்த்தம் என மக்கள் உணர வேண்டும். 

அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை, பூச்சாண்டி காட்டி ஏமாற்றுவது போல் தமிழ் மட்டுமே பேசவும் வாசிக்கவும் ( பலருக்கு அதுவும் தெரியாது ) தெரிந்த அப்பாவிகளை ஏமாற்றாதீர்கள். 

தேசத்தின் மீதான பக்தி எல்லோருக்கும் வேண்டும். அதற்காக  உலகின் சனத்தொகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நாட்டில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழை மக்களை பெருமளவில் கொண்ட தேசத்தில்  சமயோசிதம், வருமுன் காக்கும் திட்டமிடல் என்று எதுவும் இல்லாமல் பொறுப்பில்லாத  அரசாங்கத்தின் செயல் பாடுகளில் தொடரும் தவறுகளை  சுட்டி காடடாமல் தங்க கூண்டுக்குள் பத்திரமாக வாழ்ந்து கொண்டு கண் மூடித்தனமான ஆதரவு தருவது தவறானது.  உங்களின் அதீத நம்பிக்கை பல அப்பாவிகளின் உயிருக்கு விலை வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் 

அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், தன் கடமை தவறும் போது சுட்டிக்காட்டிடவும் தட்டி கேட்கவும் தேசத்து மக்களுக்கு உரிமை உண்டு. 

மக்கள் தமது நியாயமான  உரிமைக்காக போராடிக்கொண்டே இருக்கணும், மக்களை எப்போதும். பதட்டமாக  அலைய விடணும் என்று சின்ன சின்ன விடயங்களில் கூட கூரிய நோக்கம் இல்லாத அரச நிர்வாகத்தின் செயல் பாடுகளையும், புள்ளி விபரங்களின் ( 60 %அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆதரவு கருத்து )  அடிப்படையில் அரசு எல்லாம் சரியாக செயல் படுகின்றது என்னும் பிடிவாதத்துடன் தவறு உணர்த்தாமல்  கண்ணை மூடி கொண்டு கடப்பீர்கள் என்றால்   கொரோனா virus பரவலால் வரும்  விளைவுகளுக்கு நீங்களும் பலியாகுவீர்கள். 

இதுவரையான உங்கள் அரசியல், மத, இன பாதுகாப்புகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்த் எவரையும் தனித்து பிரித்து காப்பாற்ற போவதிலகை. உங்களால் எங்கும் ஓடி ஒளிய முடியாது, எந்த நீதி மன்றமும் உங்களை விடுவிக்காது. 

ஊர் கூடி சமூகமாக உணர்ந்து இணைந்து செயல் பட்டால் தான் நீங்களும் நீங்கள் நேசிப்போரும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

கொரோனா வைரஸ்  நோய் குறித்து எடுத்து கொண்டால் ....! 

Positive  thinking, பயம் பரபரப்பு,வதந்தி தவிர்ப்பதாக கூறி உண்மையை மறைத்து போலியான தகவல்களை வெளியிட்டு  நோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, போதுமான வசதிகள் உண்டு , கொரோனா வைரஸ் எல்லோரும் பயப்படுத்தும்படி  நோய் இல்லை என்றும், முகமூடி அணியுங்கள்  நோய் தொற்றாது  எனும் தீவிர பிரச்சாரமும் அப்பாவி மக்களுக்குள் ஒரு வித அசட்டு தனத்தை உருவாக்கி இருக்கின்றது.

அரசு lockdown  அறிவிக்க  காட்டிய வேகம் விவேகத்தை அதன் பின்னரான மக்கள் பாதுகாப்பு, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைக்கான தீர்வு, திடீர் ஊரடங்கில் தம் தொழில் மற்றும் பல காரணங்களால் இடம் பெயர்ந்தோருக்கு சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லும் போக்குவரத்து வசதிகள் குறித்து எந்த நம்பிக்கை, உத்தரவாதமும் தரவே இல்லை. 

ஐரோப்பாவில் Lock  down  காலத்தில் 
• கொரோனா வைரஸ் என்றால் என்ன? 
• அதன் பாதகங்கள் என்ன? 
• கொரோனா வைரஸ் தொற்றினால் எப்படிஅதிலிருந்து மீண்டு வர முடியும்? 

• நோய் மேலும் பரவாமல்  நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன ? 

• நோய்ப்பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனி நபரும் உணர வேண்டியது என்ன? 

சமுகப்பரவல் நோய் பரவலாக்கம் குறித்து பல விழிப்புணர்வு கருத்துகளுடன் பொருளாதார இழப்பினால்  நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்ள போகும் சிரமங்கள், அரசின் கடமை, பொறுப்பு , மக்கள் உணர வேண்டிய உண்மை நிலை என அனைத்துமே பொது வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்ட்து .

இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், போன்ற பெரிய தேசங்களும் சுவிஸ் போன்ற சின்ன நாடுகளுடன். இலங்கை கூட பல விவசாய மானியம், மக்கள் தற்சார்பு என பல 
திட்டங்களினுடாக மக்களை நெறிப்படுத்தியது 

இது தான் யதார்த்தம்..! 
அரசின் நிர்வாகத்தால் இவ்வளவு தான் முடியும்..! 

மக்களே புரிந்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்று நாட்டின் பிரதமர் அமைச்சர்கள் அறிவித்து கொண்டே இருந்தார்கள்.

🔺முகமூடி அணிந்தால் நோய் தொற்றாது என்பது இல்லை, நோய் பரவல் கொஞ்சமே கொஞ்சம் மட்டுப்படும் என்பதோடு 

🔺இது வரை மருந்து கண்டுபிடிக்கல்ல என்றாலும் கண்டு பிடித்தாலும் அது அனைத்துலக மக்களுக்கும் பாவனைக்குவர  குறைந்தது ஒரு இரு வருடம் தேவை 

🔺 நாட்டின் பொருளாதார இழப்பினுடே உயிர் பாதுகாப்புக்கென lockdown தொடர முடியாது

🔺 ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளிகளையும் தற்பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கணும் என்று இன்று வரை  நாட்டு மக்கள் பேசும் மொழிகளில் அறிவித்து கொண்டே இருக்கின்றார்கள். 

அரசும், தனி மனிதர்களும்  தங்கள் சமூகக்கடமை உணர்ந்து செயல் படுகின்றார்கள். நம்பிக்கை தருகின்றோம் என்று இல்லாததை இருக்கின்றதெனும் மாயவலை பிம்பம் உருவாக்கி மக்களை ஏய்க்கவில்லை, ஏமாற்றவும் இல்லை 

உலக அதிகாரங்களும், வல்லுநர்கள் ஆய்வாளர்களும்  இந்த ஒரு ( 2 ) 
வருடத்தினுள் கொரோனா வைரஸ் எவ்வகை உயிர்இழப்பை உருவாக்கும் என்று அறிந்தே இருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் நோய்க்கு தொற்றாமல் தடுக்க தனி நபர் சுய கட்டுப்பாடு பாதுகாப்பு இருந்தாலும் நம்மை சார்ந்தோரும் சமூகமும் அதே கட்டுப்பாடு ஒழுங்கு முறை கடைப்பிடிக்க வில்லை என்றால் மொத்த சமூகமும் பாதிப்படையும். 

⚫️ நோய் தடுக்கும் மருந்தோ, வந்த பின் காக்கும் மருந்தோ மாத்திரையோ மருத்துவமனைகளில் இல்லை. சாதாரண காய்ச்சல் வலி  மாத்திரை கூட எல்லோருக்கும் ரேஷன் செய்து பார்மசிகளில் கட்டுப்படுத்தி விற்றார்கள். ஆரம்பத்தில் ஃப்ளு க்குரிய அண்டிபயாடிக் கொடுத்து  நோயாளிகளுக்கு வேறு பல புதிய பிரச்சனைகள் உருவானதால் எந்த ஆண்டிபயாடிக் மருந்தும் எடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்கள். 

⚫️ முடிவுகள் மாறி கொண்டே இருந்தன. Who  வழி காட்டல்  என்பது ஆரம்ப நிலையில் தான் இங்கே இருந்தது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாடு எதிர்கொண்ட  வைரஸ் பிறழ்வுக்கேற்ற வகையில் பாதிக்கபடும் நோயாளிகளுக்கு தோன்றும் அறிகுறிகளை அவதானித்து ஆராய்ந்து தமக்கு என தனி  வழி முறையை பின் பற்றி கொண்டது 

⚫️ போதுமான மருத்துவ உபகரணம் இல்லை. Corona virus தீவிரமாகி நுரையீரல் அழற்சி , மூச்சு திணறும்  சுவாசம் தடை படும் போது செயற்கை முறையில் சுவாசிக்க உதவும் கருவி வென்றிலேற்றார் என்பார்கள், இந்த இயந்திரம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில்   ஐந்து இலட்சம் என்கின்றார்கள். மே மாத கணக்கெடுப்பின் படி முழு இந்தியாவுக்கும் 60000  ( அறுபது ஆயிரம் மட்டுமே ) இந்த இயந்திரம் இருந்தது. ( தமிழ் நாட்டில் எத்தனை வென்றிலேற்றார் உண்டு என்பதை குறித்த விபரம் என்னிடம் இல்லை ) 

⚫️ ICU வில் தீவிர சிகிச்சை என்றால் அந்த இயந்திரத்தின் குழாயை  சுவாசிக்க சிரமப்படும் நோயாளியின் வாய்க்குள் விட்டு தொண்டை குழிக்குள்ளால் ஊடறுத்து நுரையீரலை செயற்கையாக இயங்கும் படி பொருத்தி விட்டால்  அந்த நோயாளி உயிர் பிழைக்கும் அல்லது உயிர் இழக்கும்  நாள் வரை 24  மணி நேர கண்காணிப்பு சிறப்பு பணியாளர் ( கடினமான பணி) மெஷினின் இயங்கு நிலை மற்றும் நோயாளிக்குரிய ஏனைய கவனிப்பு படுக்கை பராமரிப்பு ( லிங்க் பாருங்கள் )  என்று ஒவ்வொருவருக்கும்  தனி கவனிப்பு தேவை. 

🖤 ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு  நோய் தீவிரமாகுமானால்  ஒரே வென்றிலேட்டர்  மூலம் எல்லோருக்கும் சுவாசத்தை கொடுக்க முடியாது. ஏழு தொடக்கம் பத்து நாளும் ஒருவருக்கு ஒரு வென்றிலேற்றார் இயங்கும். அவ்வாறாயின் போதுமான வென்றிலேற்றார் அதை இயக்கும் பணியாளர்கள் தேவை. ஆனால் இல்லை . வளர்ந்த செல்வந்த நாடுகளிடம்  போதுமான வென்றிலேற்றார் இல்லை. வென்றிலேற்றார் இயக்கும் பணியாளர்களும் போதுமாக இல்லை. 

அவ்வாறான நேரத்தில் யாருக்கு உயிர் வாழும் உரிமையை கொடுக்கணும் எனும் தீர்மானத்துக்கு மருத்துவமனை மருத்துவர் குழு முடிவெடுக்கும் இக்கடடான நிலை இங்கே உருவானது. இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் முதியோருக்கு சிகிச்சை கைவிடப்பட்டு, இளையோருக்கு முதன்மை எனும் முடிவை மருத்துவமனை ( சுகாதார துறை அனுமதியுடன் ) எடுத்திருந்தது.

அடுத்து முக்கிய கவனிப்பு 

🔴 சீனாவில் உருவான Covid 19  எனும் கொரோனா வைரஸ் தான் பரவி செல்லும் இடத்தின் சூழலுக்கு ஏற்றபடிபிறழ்வடைகின்றது. 

இயற்கை, கால நிலை, வெயில் குளிர் உணவு எனும் நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து கொண்டு மாறிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தால் இதற்கான தடுப்பு மருந்து ( வாக்சின்) கண்டு பிடித்தாலும் அது அந்த நேரத்து பிறழ்வடைந்த வைரஸை தடை செய்யுமா?  கட்டுப்படுத்துமா?  என்பதே இன்றைய ஆய்வாளர்களின் பெறும் குழப்பமாக இருக்கின்றது.  

இந்தியாவில் வெப்ப நிலை, பாரம்பரிய உணவு, இயற்கையாக  தூசிகளினுடான புழக்கத்தில் உருவாக்கி இருக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கு ஏற்ற மாதிரி வைரஸ் பிறழ்வடைந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்ய சொல்லவில்லை. 

எங்களுக்கு ஒன்றும் நடக்காது .வைரஸ் ஒன்றுமே இல்லை என்று அசட்டை தனம் வேண்டாம்.சமூக விலகல் , மாஸ்க் , கைகளை சோப்பு போட்டு கழுவுதல், அதிகம் வெளியில் அலையாமல் பொது போக்குவரத்தை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை  முக்கியமாக விடடமின் சி & டி சேமித்து கொள்ளுங்கள். 

உங்கள் தைரியம் தலை காக்கும்💚

Facebook link 

31 மே 2020

கொரோனா வைரஸ் வென்டிலேட்டர் என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

கொரோனா வைரஸ் வென்டிலேட்டர் என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

ventilation நோயாளிக்கு போதுமான காற்றை தானாக இழுக்க முடியாதபோது சுவாசிக்க உதவும்  மருத்துவ சாதனங்களை வென்டிலேட்டர்கள், சுவாசக் கருவிகள் அல்லது சுவாச இயந்திரங்கள் என்று அழைக்கிறார்கள், 

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, கோவிட் -19 நோயாளிகளில் 80% பேர் - கொரோனா வைரஸால் ஏற்படும் நோய் - மருத்துவமனை சிகிச்சை தேவையில்லாமல் குணமடைகிறார்கள்.ஆனால் ஆறில் ஒருவர் கடுமையான நோய்வாய்ப்படுகிறார்.

இந்த கடுமையான சந்தர்ப்பங்களில், வைரஸ் நுரையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது, இதனால் உடலின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசிக்க கடினமாகிறது.

இதைத் தணிக்க, ஆக்சிஜன் அதிகரித்த அளவுடன், நுரையீரலுக்குள் தள்ள  காற்றோட்டம் ( ventilation ) பயன்படுத்தப்படுகிறது.

வென்டிலேட்டரில் ஒரு ஈரப்பதமூட்டி உள்ளது, இது காற்று விநியோகத்தில் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் சேர்க்கிறது, எனவே இது நோயாளியின் உடல் வெப்பநிலையுடன் பொருந்துகிறது.

நோயாளிகளுக்கு சுவாச தசைகள் தளர்த்த மருந்து கொடுக்கப்படுகிறது, எனவே அவர்களின் சுவாசத்தை இயந்திரத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

எளிமையாகச் சொன்னால்....! 

• நோய் தொற்றால் உங்கள் நுரையீரல் செயலிழக்கும்போது வென்டிலேட்டர் உடலின் சுவாச செயல்முறையை எடுத்துக்கொள்கிறது. ஆக்ஸிஜன் ஹூட்கள் நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கின்றன.

• இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி மீட்க நேரம் தருகிறது.

இரண்டு வகையான மருத்துவ ventilation உள்ளது. அவரவர் பாதிப்புக்கு ஏற்றபடி பல்வேறு வகையான மருத்துவ காற்றோட்டம் ( ventilation )  பயன்படுத்தப்படலாம்.


1 . முதல் சந்தர்ப்பத்தில், முழு ஆக்கிரமிப்பு அல்லாத காற்றோட்டம் ( Non invasive ventilation  ) கொண்ட  முகமூடி, நாசி முகமூடி அல்லது ஹெல்மெட் மூலம் மென்மையான அழுத்தத்தின் கீழ் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. நோயாளி சுவாசிப்பதை சாதனம் உணரும்போது இந்த அழுத்தம் தற்காலிகமாக பின்வாங்குகிறது.

ஒரு பேட்டைப் பயன்படுத்தி ஒரு வகை சிபிஏபி காற்றோட்டம், அங்கு அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் ஒரு வால்வு வழியாக செலுத்தப்படுகிறது, இது வைரஸின் வான்வழி பரவும் அபாயத்தைக் குறைக்கிறது. 

2. இரண்டாவது காற்றோட்டத்தின் மற்றொரு வடிவம் Mechanical
ventilation - நோயாளியின் காற்றுப்பாதையில் இருக்கும்  குழாய்  இயந்திரத்தினால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் அல்லது சிபிஏபி - நோயாளியின் காற்றுப்பாதைகளை தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்கிறது, 

தீவிர சிகிச்சையில் Intensive Care Units (ICUs)  வெண்டிலெடடார்  உயிரைக் காப்பாற்ற  இந்த இரண்டு வென்டிலேட்டர்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர்.

🔹 லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முகமூடிகள், நாசி முகமூடிகள் அல்லது ஊதுகுழல்களைப் பயன்படுத்தி காற்றோட்டம் கொடுக்கப்படலாம், அவை காற்று அல்லது ஆக்ஸிஜன் கலவையை நுரையீரலுக்குள் தள்ள அனுமதிக்கின்றன. உள் குழாய்கள் தேவையில்லை என்பதால் இது "ஆக்கிரமிப்பு அல்லாத" காற்றோட்டம் ( Non invasive ventilation) என்று அழைக்கப்படுகிறது.

🔹 கடுமையான பாதிப்புள்ளோருக்கு 
உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.வெளியார் யாரும் உங்களைப் பார்க்க வர முடியாது.  இயந்திரத்துடன் இயந்திரம் போல் ஒரு அறையில் தனியாக இருப்பீர்கள்.

24மணி நேரமும் மருத்துவபணியாளர் கண்காணிப்புடன்  வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தும் போதும் ஆபத்துகள்இருந்தபோதிலும் சில சமயங்களில் வென்டிலேட்டர் "நோயாளிக்கு ஆக்ஸிஜனைப் பெறுவதற்கான ஒரே வழி" யாகவும் இருக்கின்றது.

தொடரும் பாதிப்புகள் 
*****************
இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம்.  

இந்த காரணத்தினால் தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.







13 ஆகஸ்ட் 2019

எம்.ஆர். ஐ ஸ்கானர் (MRI - Magnetic Resonance Imaging), சி.ரி ஸ்கானர் (CT – Computerized Tomography)

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கானர் (MRI - Magnetic Resonance Imaging), சி.ரி ஸ்கானர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து பல குழப்பங்களும்,விவாதங்களும் தொடர்ந்தன.
அதை தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் thangamuthu sathiyamoorthy) CT scan தனனர்வலர்களின் நிதிப்பங்களிப்பிலும் MRI அரசின் நிதி உதவியிலும் யாழ் போதனா வைத்திய சாலைக்கு வழங்கப்பட இருக்கின்றன எனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
(CT scan ) Computerized Tomography scan
(MRI) Magnetic Resonance Imaging
இரண்டுக்குமான வித்தியாசங்களை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வோம். குழப்பங்களும் நேராது.

மருத்துவ இயந்திரங்கள். உபகரணங்கள் குறித்ததான விளக்கங்களை தமிழில் பதிவாக்கும் கடமைகளும் எமக்குண்டென உணர்வோம்.
😍😍 நீண்ட பதிவாயிருந்தாலும் அவசியமானது என்பதனால்; படியுங்கள்.
CT scan, (MRI) இரண்டுமே மனிதனின் உடல் உட்பாகங்களுக்குள் நுழைந்து உள் உறுப்புக்களின் செயல்பாட்டையும், அதன் உருவமைப்பையும் புகைப்படமாக்கி மருத்துவர்களின் ஆய்வுக்கு உதவி செய்கின்றன.இரண்டுமே ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து என்றாலும், சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொன்றையும் ஒரு சிறந்த தேர்வாக மாற்றக்கூடிய வேறுபாடுகள் உள்ளன.
Magnetic resonance imaging (MRI) (காந்த அதிர்வு இமேஜிங்) ரேடியோ அலைகளையும்
Computerized Tomography (CT scan) சிடி (கம்ப்யூட்டட் டோமோகிராபி) ஸ்கேன்களும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகின்றன.
(MRI) Magnetic Resonance Imaging

ரேடியோ அலைகள் மற்றும் காந்தங்களைப் பயன்படுத்தி, உடலுக்குள் இருப்பதை காண உதவுகின்றன. உடலுக்குள் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்பார்வைக்கு தெரியாத நுண்ணிய சிக்கல்களைக் கண்டறிய (MRI) பயன்படுத்தப்படுகின்றன:

மூட்டுகள்
மூளை
மணிக்கட்டுகள்
கணுக்கால்
மார்பகங்களை
இதயம்
இரத்த குழாய்கள்

ஒரு நிலையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அதிர்வலைகள் மூலம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நீர் மூலக்கூறுகள் இயந்திரத்தில் இருக்கும் ரிசீவருக்கு அனுப்பப்பட்டு புகைப்படம் எடுக்கபப்டுகின்றன். தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த புகைப்படங்களின் மூலமாக உடலில் உள் பாகத்திலிருக்கும் சிக்கல்கள் கண்டறிந்து கொள்கின்றார்கள்.
(MRI) 
-இயந்திரத்தின் இயக்கம் பெரும் சத்தமாக இருப்பதனால் நோயாளியுடனான உரையாடலில் சிக்கல் ஏற்படுகின்றது. இயந்திரம் இயங்கும் போது போது ஹெட் போன்களை அணிய பரிந்துரைக்கின்றார்கள்.

-காந்தங்கள் காரணமாக உலோகங்களுக்கு எதிர்வினைகள் / உடலினுள் உலோகப்பொருட்கள் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தால், உலோகப்பொருட்களை அணிந்து சோதனைக்குட்படுவதும் தவிர்க்கப்படுகின்றன.
- MRI சோதனைகள் நீண்ட நேரம் எடுப்பதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.
- Claustrophobia எனும் நெரிசலான தெருக்கள், பூட்டப்பட்ட அறை, இருண்ட சூழல் ,குகைக்குள் செல்வது போன்றதொரு பயத்தை தருகின்றது.
நன்மைகள்
+ MRI உடலுக்குள் அசாதாரண திசுக்கள் இருக்கிறதா என்பதை நிதானமான கண்டறிந்து, துல்லியமான புகைப்படங்களாக்கி மருத்துவர்களின் சோதனைகளுக்கு உதவுகின்றது.MRI சோதனைகளின் மூலம் உடலிலுள் இருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் மருத்துவர்களால் கண்டறிய முடிகின்றது.

- பராமரிப்பு செலவு அதிகம் என்பதனால் சோதனைக்கான செலவும் அதிகம்.

Computerized Tomography (CT scan)

சி.டி ஸ்கேன் எக்ஸ்ரேயின் ஒரு வடிவமாகும், இது ஒரு பெரிய எக்ஸ்ரே இயந்திரத்தை உள்ளடக்கியது. சி.டி ஸ்கேன் சில நேரங்களில் கேட் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. சி.டி ஸ்கேன் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறது

எலும்பு முறிவுகள்
கட்டிகள்
புற்றுநோய் கண்காணிப்பு
உள் இரத்தப்போக்கை கண்டறிய CT ஸ்கேன் உதவுகின்றது.

CT ஸ்கேன் சோதனையின் போது மேசை போன்ற நீண்ட படுக்கை ஒன்றில் படுக்க வைக்கப்பட்டு குறிப்பிட்ட உடல்பாகங்களின் மேலால் உடலுக்குள் குறுக்கு வெட்டு படங்களை எடுக்க CT ஸ்கேன் மூலம் நகர்ந்து கணனியில் புகைப்படம் எடுத்து கொள்வார்கள்.
சோதனைச்செலவு குறைவானதாக இருப்பதனால் CT ஸ்கேன் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
இருப்பினும் (MRI) சோதனையின் மூலம் தெளிவான தரவுகளை பெற முடிவதனால் மருத்துவர்கள் உடலிலுள் மறைந்திருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் கண்டுகொள்ள (MRI) பரிந்துரைக்கின்றார்கள்.

CT ஸ்கேன் 
- கருவில் இருக்கும் குழந்தைகளை பாதிப்பதனால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு CT ஸ்கேன் பரிந்துரைக்கபப்டுவதில்லை. 
-கதிர்வீச்சு சிறிய அளவிலான பாதிப்பை தரலாம்.

நன்மைகள்
+ CT ஸ்கேன் விரைவாக செயல் பட்டு உடலினுள் திசுக்கள், உறுப்புகள் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றின் படங்களை எடுக்க உதவுகின்றது.


CT scan மற்றும் MRI சோதனைகளில் ஆபத்துக்கள், பின் விளைவுகள் உண்டா? 
சில அபாயங்களை ஏற்படுத்துகின்றன. அபாயங்கள் இமேஜிங் வகை மற்றும் இமேஜிங் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.

MRI and CT scan சோதனைகள் யாருக்கு பரிந்துரைக்கப்படும்? 
நோயின் தன்மையை கண்டறிய அதன்  அறிகுறிகளை அவதானித்து MRI சோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

குடலிறக்க வட்டுகள்
கிழிந்த தசைநார்கள்
மென்மையான திசு சிக்கல்கள்
உங்கள் உள் உறுப்புகள் போன்ற பகுதிளில் இருக்கும் சிக்கல்களை அறியவும்,எலும்பு முறிவு,தலையில் ஏற்படும் தீடீர் அதிர்ச்சிகளுக்கும்  CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படும்.

உங்கள் நோய்களுக்கான சோதனைகளை குறித்து மருத்துவர் பரிந்துரைத்தால் அதைக்குறித்த மேலதிக விபரங்களை கேட்டு தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி.
ஆங்கில மருத்துவப்பதிவாக்கங்களிலிருந்து தமிழ்மொழி பெயர்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா எனும் Nishanthi Prabhakaran
புகைப்படங்கள் நன்றி ஆங்கில விக்கிமீடியா