இனிமேல் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த எந்த செய்தியும் அறிவதில்லை, எழுதுவது இல்லை, அவரவருக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் வரணும்? எனும் முடிவோடு ஐந்து நாள் எதையும் பார்ககாமல் ஒதுங்கி இருந்தேன்.
இன்று ஒன்றுக்கு நான்கு பேர்
அக்கா..! நிலைமை மோசமாகுது, கிராமங்களிலும் கொரோனா வைரஸ் positive உறுதிபடுத்துகின்றார்கள். எங்கள் ஊருக்குள்ளும் வந்து விட்டது. எங்கள் தெருவில் ஒரு குடும்பத்துக்கு பாசிட்டிவ். அக்கா பக்கத்துக்கு வீட்டில் கொரோனா பொசிட்டிவ் உறுதி படுத்தி எங்க தெருவே இப்போ Block செய்திருக்காங்க. நாங்கள் என்ன செய்வது என புரியல்ல பயமாக இருக்குது ஏதேனும் நம்பிக்கை,வழி காட்டல் தரும் படி எழுதுங்கோ எனும் வேண்டுகோள்..! எழுதுகின்றேன் ✍️✍️
அவர்களுக்கு சில பதிவும் லிங்கும் அனுப்பி விட்டேன். இங்கே அது தேவையில்லை .
ஆனால்...!
தமிழ் நாட்டில்...?
கடந்த மூன்று நான்கு மாதத்தில் என் தமிழ் நாட்டு நண்பர்கள் பலர் பதிவுகள் அவர்களின் கொரோனா வைரஸ் குறித்த அறிவியல், அறிவார்ந்த புரிதல்கள் குறித்து தெளிவாக புரிந்தும் கொண்டேன்.
அது ....!
மருத்துவர்கள் சொல்வது தான் வேத வாக்கு, Facebook பதிவில் 100 லைக் விழுந்தால் ஆதாரமில்லாதவைகளை உண்மை என நம்புவார்கள். பரப்புவார்கள். நாலு பேருக்கு இலவச உதவி செய்கின்றேன் என்று சொல்லி கொண்டால் போதும்.செய்திகளுக்கு ஆதாரம், ஆய்வு குறித்தெல்லாம் தேவையில்லை.
ஈழத்தமிழர் என்றால் அழுவாச்சி காவியம் பாட தான் லாயக்கு எனும் எண்ணம் தமிழ் நாட்டில் பலருக்கும் உண்டு. இலங்கை மக்கள் தமிழ் நாடடவர் எழுதும் பதிவுகளை உள் உணர்ந்து வாசிப்பது போல் தமிழ் நாட்டு தமிழர் ஈழத்து மக்கள் பதிவுகளை உணர்வதில்லை தொப்புள் கொடி உறவென ஈழத்தவர் காட்டும் கரிசனம், உரிமை உணர்வு மட்டுமல்ல அவர்களுக்கும் அறிவும் ஆற்றலும்உ
ண்டென தமிழ் நாடடவர் புரிந்து கொள்வதும் இல்லை. அழுது புலம்பி, யுத்தம், சோகம், அழிவு கஷ்டம் என்று எழுத தான் லாயக்கு என நினைப்பும் பலருக்குள் இருக்கு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள Covid -19 காலங்கள் உதவி இருக்குது. ( Arul Kumar SP ஐயா மன்னிக்கவும் இது உங்களுக்கு அல்ல )
உலகின் முக்கிய மொழிகள் பேச வாசிக்க தெரிந்த அறிவியல், விஞ்ஞான, மருத்துவ தகவல்களை தேடி அறியும் ஆர்வம் கொண்டவர்கள் தரும் ஆதார அனுபவ தகவல்களை கொஞ்சமேனும் நம்பனும். ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி என முக்கிய மொழிகளில் Covid - 19 குறித்து அந்தந்த நாடுகளின் சுகாதார துறை வெளியிடட அறிக்கைகள், விஞ்சான அறிவியல் விளக்கஙகள், மரபணு மாற்றங்கள் குறித்தெல்லாம் தமிழுக்கு மாற்றி பகிர்ந்தோம். அதில் என்ன இருக்கு என வாசித்தாவது உண்மை நிலை புரிந்து கொள்ள முயற்சி.....ஜஸ்ட் ஒரு செய்தியை அறியும்ஆர்வம் கூட பலருக்குள் இல்லை.
கொரோனா வைரஸ் செய்தி ஒன்றுமே நாங்கள் வாசிப்பது இல்லை. எங்களுக்கு பயமாக இருக்கின்றது, கதை அட்டை பகிருங்கோ, கதை சொல்லுங்கோ புகைப்படம் போடுங்கோ என சிந்தனையை திசை திரும்புவதாக உலகத்தின் உண்மை நிலைமறைத்து தமக்கென போலியான உலகத்தை உருவாக்கி கொண்டோர் அநேகர்..! எந்த நேரத்தில் எதை செய்யணும் என அறிவு இல்லாதவர்கள் வாழ்க்கை குறித்து எத்தனை நீதிக்கதை படித்தாலும் அத்தனையும் வீண் தான்
மருத்துவர்கள் தான் கொரோனாவைரஸ் குறித்த தெளிவான விழிப்புணர்வு பதிவு தருவார்கள் என்பது இல்லை. உண்மையில் மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை, பதட்டத்தில் அவர்களுக்கும் covid -19 குறித்த தற்பாதுகாப்பு தெளிவு குறித்து தேடி அறியும் மன நிலை, நேரம் இருக்குமோ என்னமோ?
வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் எனும் நம்பிக்கை போல் டாக்டர் சொன்னால் மட்டும் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புவதும், கானல் நீரை உண்மை என எழுதி, கற்பனை உலகை உருவாக்கி, கொரோனவா அது ஒண்ணுமில்லை, எங்க பாரம்பரியம் உணவு முறை காப்பாற்றும் எனும் நம்பிக்கை கொடுத்த அசட்டை தனம், எங்கள் நாட்டின் அழுக்கு தூசி.துரும்பு போதுமான நோய் எதிர்ப்பை உருவாக்கி இருக்கும்.. soooo ... நோ panic ... நோ பயம் என சும்மா தோணுவதை எல்லாம் ஆதாரமே இல்லாமல் எழுதும் பதிவெல்லாம் 100 , 1000 லைக் விழுந்தால் முக்கியமானது. உண்மை சொல்வது என்று நம்பி....🙆♀️!
எத்தனை பேர் பதிவை படித்து உண்மை உணர்ந்து லைக் போடுகின்றார்கள் என்பதை சிலரின் பதிவு போட்ட நொடியில் விழும் லைக் உணர்த்தும். கண்ணதாசன் நிரூபித்தது போல் இங்கே படைப்பின் கருத்தை விட படைத்தவனுக்கு ஜால்ரா செய்யவே பெரும் ஆட்டு மந்தை கூட்டம் உண்டு.
அம்மை நோய் தொற்று உருவான போது கடவுளின் கோபம் என அக்கால மக்களை நம்ப வைத்து வேப்பிலை கட்டி வீட்டுக்குள் அமர வைத்து காப்பாற்றிய மூத்தோர் வாழ்ந்த சமூகத்தில் இத்தனை அறிவியல் வளர்ந்த பின்னும் மக்களுக்கு தற்கால பரவும் நோய் கொடுத்த தெளிவை உருவாக்க முடியவில்லை என்றால் உங்கள் வளர்ச்சியும், பெருமையும் எத்தகையது என இனி என்றாலும்
ஆராய்ந்து கொள்ளுங்கள்
இணையத்தில் அதிலும் Facebookil எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு தர முடியாது எனும்சப்பை காரணம் வேண்டாம். இதே இணையத்தில் நீங்கள் எழுதுவதை நம்பி நிவாரணம் எனும் பெயரில் பல இலட்சம் நிதி சேர்க்க முடியும் போது ஒவ்வொரு சோத்து பார்சலோடும் அந்த உணவு கொடுக்கும் நிலை ஏன் உருவானது எனும் விழிப்புணர்வும் சேர்த்து உருவாக்கி இருக்க முடியும்.
அதுக்கு தான் அரசு lockdown அறிவித்தது.
ஆனால் நடந்தது என்ன?
• உலக உணவு துறை ஒரு பக்கம் பசி பஞ்சம்.
• உலக சுகாதார நிறுவனம் கொள்ளை நோய்
• ஒருபக்கம் வெட்டுக்கிளி மில்லியன் டன்கணக்கில் உணவு விளைச்சலை நாசமாக்குது
•சூரியனில் என்னமோ கோளாறு, அதனால் இனி வரும் காலம் காலநிலை மாறும், அதனால் விவசாயம் செழிக்காது, உற்பத்தி குறையும் என நாசாவும் உலக சூழலியல் துறையும் கத்துது.
எவன் என்ன சொன்னால் எனக்கு என்ன? எனக்கு மூணு வேளை சோறு முக்கியம். இது தான் முக்கியம்..!
அவனவன் பிழைப்பே அந்தரத்தில் நிற்கும் போது எதிர்காலமே இல்லாமல் வாழ்வா சாவா எனும் ஆபத்து சூழ்வதை உணர்ந்து எழுதியோரையும் panic, பதட்டம், பயம் என சொல்லி மிரட்டி அடக்கி...! எல்லோரும்அறிவாளிகளாகி வருமுன் காக்கும் எந்த வித முன் எச்சரிக்கையும் இல்லாமல் உண்மையை, உள்ளதை சொல்லி புரிய தெளிய வைக்காமல், போகும் போக்கில் அடித்து விட்ட்தான் நிலை இன்று ஏழை அப்பாவிகள் மேல் விடிந்திருக்கு🤷♀️.
COVID - 19 நோய் பாதுகாப்பு, பரவல் தடுப்பு எனும் முக்கிய விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்பது சட்டம் போடுவது, திட்டங்களை அறிவிப்பதுடன் ஆரம்பித்தாலும் அதன் வெற்றி என்பது மக்கள் தரும் ஒத்துழைப்பில் புரிதலில் தொங்கி நிற்கின்றது.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் மட்டும் குறியாக இருந்து மக்கள் உயிர்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் கொரோனா வைரஸ் நோய் பரவி 1000 பேரை சாக விட்டு lockdown அறிவித்தது.. அதுக்கு நேர்மாறாக இந்தியா, இலங்கை நாடுகள் ஆரம்பத்திலேயே lock down போட்டு உலக நாடுகளின் பாராட்டை பெற்றது. ஆனால் அரசின் இந்த முயற்சி ஏன் என்று புரிந்து கொள்ளும் தெளிவற்ற சமூகப்போராளிகளை பின் பற்றும் அறியாமை கொண்ட மக்கள் lockdown காலம் என்பது இனி வர போகும் நெருக்கடி மிகுந்த காலத்துக்கான முன்னோடி என்றும்
புரிந்து கொள்ளாமல் , திட்டமிட காலம் இல்லாத நெருக்கடி நிலையில் நாட்டின். வசதி வாய்ப்பு, மக்கள் தொகை, மருத்துவ வசதிக்கு மக்களை பாதுகாக்க lockdown அறிவிப்பு தவிர வேறு வழி இல்லை என்றும் தன்னை சூழ போகும் அவசர ஆபத்து குறித்த முன் நோக்கம் இல்லாமல்,மக்கள் மத்தியில் lockdown குறித்த எதிர்ப்பை உருவாக்கினார்கள்.
நோய் குறித்த விழிப்புணர்வு கிராமத்து மக்களுக்கு செல்லவும் இல்லை. கற்றோர் அதிகம் வாழும் சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்களுக்குள் போதுமான விழிப்புணர்வு உண்டென நம்பிக்கையும் சிதறுகின்றது .
சென்னை இல் என்ன நடக்குது?
சென்னையிலிருந்து கொத்துக்கொத்தாக மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நகர்வதால் Panic அதிகமாகி பயமும் பதட்டமுமே நிறைந்து 15 day’s Quarantäne and Mask கொரோனா Virus பாதுகாப்பு கவசம் எனும் நம்பிக்கையோடு. பெரும்பாலோனோர் வைரஸ் நோய் காவுவதை குறித்த தெளிவு இல்லாமலே இடம் பெயர்வின் மூலம் நோய் காவிக்கொண்டே தம்மை சமூக பொறுப்பாளர்களாக நியாயப்படுத்தி கொள்கின்றார்கள். இவர்கள் அறிந்து தான் தம் செயலை நியாயப்படுத்துகின்றார்களா?
ஐரோப்பாவில் நோய் தொற்று பரவுகின்றது என்பதை அதன் விளைவுகளை இழப்புக்களை ஆரம்ப முதல் சமூக அறிவியல், அரசியல், பொருளாதார நிலைகளோடும், ஒவ்வொரு நாட்டின் வளங்கள், வசதிகளோடும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து நுறு ஆண்டுகளில் இதே போல் கொள்ளை நோய் கொடுத்த இழப்புக்களையும் தேடி அறிந்து, நாங்கள் அறிந்ததை எங்கள் மக்களுக்கு அறிவித்து பாதுகாக்கணும், அவர்களை எச்சரிக்கணும்.அவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கணும் என எத்தனை வேண்டல்கள்...!
செருப்பால் அடிக்கவில்லை என்பதை தவிர அத்தனையும எங்களை நோக்கி ஏவப்படடன. ஓவர் பரப்புரை, நெகடிவ் வதந்தி, பெரிய பெரிய கட்டுரை ..Panic என எத்தனை கிண்டல் அதுக்கு வேற விளக்கம் என தொடர்ந்த மன உளைச்சலுடன் இலங்கையில் விழிப்புணர்வை உருவாக்கியதில் நாங்கள் குழுவாக வெற்றி கண்டோம் எனும் உண்மை இந்த இடத்தில இதை வாசிக்கும் தமிழ் நாட்டு நண்பர்களுக்கு புரியனும். எங்கள் பதிவுகள் 100, 1000 like share ஆகவில்லை. ஆனால் அதை வாசித்த பத்து பேர் மகத்தான ஆளுமைகளாக அரசு, சுகாதார துறை, மருத்துவ துறை சார்ந்த முடிவுகள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுகளை தெளிவாக எடுக்கும் வலிமை கொண்டவர்களாக தங்களையும் மக்களையும் பாதுகாத்து கொண்டார்கள்.
தமிழ் நாட்டில்...?
ரெண்டு வரியில் குரலுக்கு பத்து வரி விளக்கம் தேடுவோருக்கு நீண்ட பதிவு கட்டுரை சொந்த சோகம் என்றால் உச்சு கொட்டி படிப்பார்கள். தங்கள் உயிர் வாழ்வாதாரம் குறித்து ஆராய்ந்து அறிய மனதில்லை. பத்திரிகை, தொலைகாட்சி களின் தலைப்பு செய்திக்குள் மொத்ததையும் அடக்கி கொண்டார்கள்.
இன்று செய்திக்கு தலைப்பாகி நிற்கின்றார்கள்...😭!
தலைக்கு மேல் கத்தி தொங்குது என்று கத்தினோம். யாரும் கண்டுக்கல்ல. இனி கத்தி எங்கே தொங்கினாலும் நாங்கள் கத்தி பயனும் இல்லை...🤷♀️!
COVID - 19 குறித்து தெளிவை அடைந்தவர்கள் வீடடை விட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்து கொள்கின்றார்கள். அறியாமையும் தெளிவும் இல்லாத 90 % தமிழ் நாட்டு தமிழர்களுக்கு இன்னமும் தங்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியின் ஆபத்து குறித்து புரிய இல்லை.....🖤!
🔹
நோய் மேலும் பரவாமல் அனைவரும் பாதுகாக்க பட கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் சுகாதாரத்துறையும், இராணுவமும், காவல் துறையும் இணைந்து கொள்ள வேண்டும்
தமிழ் நாட்டு அரசு உடனடியாக இராணுவத்தை களமிறங்கி இடம்பெயரும் மக்களை தடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் இன்றைய நிலையில் தீர்வாக இருக்கும்
இதுவே வழி..!
•
COVID-19 pandemic in India
Map of confirmed cases per million residents
18.06.2020
COVID-19 pandemic in India
Map of confirmed cases (as of 18 June 2020)
COVID-19 pandemic in India
Map of active cases (as of 18 June 2020)
COVID-19 pandemic in India
Map of deaths due to the pandemic (as of 18 June 2020)
Nisha
19.06.2020