மூன்று மாத ஊரடங்கில் சாதிக்க முடியாத ஒன்றை , 12 நாட்கள் ஊரடங்கில் எப்படி சாதிக்க முடியும் ? பரிசோதனைகள் அதிகம் செய்து பாதித்தவர்களை தனிமைபடுத்துவதே அதிக பலனை கொடுக்கும் ! என்றும் Face book நண்பர்Rajasimmon AB Positive பதிவு இட்டிருந்தார். இதே கேள்வி பலருக்கும் இருக்கின்றது
அவருக்கும்இ ன்னும் பலருக்கும் இந்த பதிவு
முதல் கேள்விக்கு : முடியும்...!
புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுக்க முடிந்தால் அதுவே நோய் தொற்றை கட்டுப்படுத்தும்.
இரண்டாவது கேள்விக்கு எல்லோருக்கும் சோதனை எனும்ஆரம்ப அடிப்படையே தவறான ஆரம்பம். கொரோனா வைரஸ் எல்லோருக்கும் சோதனை அவசியம் இல்லை. சாத்தியமும் இல்லை. ஆரம்ப அறிகுறி இருக்கும் எல்லோருக்கும்
கூட சோதனை அவசியம் இல்லை.
என்ன செய்யலாம்?
எல்லாமே lockdown ஆரம்ப முதல் என் பதிவுகளில் எழுதியது. மீண்டும் எழுதுகின்றேன்.
🔹 12 & 15 நாள் மிகவும் கடுமையான lockdown யாரும் வெளியே வராமல் முழு தமிழ் நாடும் அடஜிஸ்ட் சென்னை மட்டுமே என்றாலும் மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டினுள் வருமானால் புதிய நோய் தொற்றுகள் உருவாகாது தடைபடும்.
▪️ இத்தாலி இறுதி மாதங்களில் இதை தான் செய்தது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதிப்புக்குள்ளான இடங்கள் கடுமையாக்கப்படடன.
🔹 ஆரோக்கியமான உடலினுள் ஏற்கனவே உருவான தொற்றுகளும் இந்த காலத்தில் புது தொற்றை உருவாக்காமல் அதன் வீரியத்தை இழந்து கொள்ளும். 7 நாள்களின் பின் ஒருவருக்கு அறிகுறி தொடர்ந்தால் சோதனை செய்யலாம்.
🔹 நீரழிவு. இதயம். கிட்னி , உறுப்பு மாற்று, சுவாச நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோருக்கு ஆரம்ப அறிகுறிகளில் தொலைபேசி or இணையத்தின் ஊடாக மருத்துவர் ஆலோசனை அவசியம் எனில் அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவ கண்காணிப்பு போதுமானது.
🔹 எவரையும் நேரில் மருத்துவமனை வர வேண்டாம். வீட்டில் இருங்கள் எனும் அறிவிப்பு மருத்துவ துறையினரின் பணிசுமையை குறைக்கும். மருத்துவ பாதுகாப்பு துறை சேவையாளர்கள் பாதுகாப்பை குறித்தும் அரசு அக்கறை கொள்ள வேண்டும்.
🔹மருத்துவமனையில் குவியும் நோயாளர்களால் மருத்துவ பணியாளர்கள் பாதிக்க படுகின்றார்கள். மேலும் நோய் பரவுகின்றது.அங்கும், இங்கும் மக்கள் அல்லாடுவதால் காவல் துறை பணியாளர்கள் பலியாகின்றார்கள்.
🔹 முக்கியமாக அரசு நிர்வாகத்துறை தலைமைச்செயலகம். மருத்துவ துறை, காவல் பாதுகாப்பு துறை பணியாளர்கள் பாதிக்க படுவது நல்லது அல்ல
🔹 அறிகுறி இருப்போர் தங்களை மற்ற குடும்ப உறவுகளிடமிருந்து தனிமை படுத்தி கொண்டால் போதும். வீட்டில் இருக்கும் முதியோரை தனியே எப்போதும் வைத்திருங்கள்.எல்லோரும் வெந்நீர் குடிப்பது விடடமின் சி & d ஆரோக்கியமான உணவுகள் எடுத்து கொள்ளலாம்
கொரோனா வைரஸ் உலகளவில் குறைந்த வீதமானோருக்கு தான் கடும் பாதிப்பையும் 6 விதம் மரணத்தையும் ( பிற நோய் காரணிகளும் ) ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா வைரஸ் பொசிட்டிவ் என்றால் எல்லோரும்செத்து போவதும் இல்லை. எல்லோருக்கும் வென்றிலேற்றார் வைக்கும் படி கடுமையாவதும் இல்லை பலருக்கு சளி, காய்ச்சல் போல் கடந்து விடும். மருத்துவ இயந்திரத்தின் தேவை எல்லோருக்கும் அவசியம் இல்லை.
🔴 தொற்றாளர்களை தனிமை படுத்துகின்றோம் எனும் பெயரில் தனி முகாம், வீடுகளில் அடையாளமிடுதல், தெருக்களை அடைதல் எனும் சில்லி தன முயற்சிகளால் மக்கள் பதட்டம் அடைகின்றாரகள். வீடுகள் இல்லாத மக்களை முகாம்களுக்கு அனுப்பலாம்
🔴 இந்த பீதியும் பதட்டமும் ஆபத்தானது. எல்லோரும் வீட்டினுள் இருந்தால் எப்படி உணவு அத்தியாவசிய பொருள் கிடைக்கும்?
💚 வீடு வீடாக போய். ஒவ்வொருவராக சோதனை செய்ய செலவாகும் மனித & பொருள் ஆற்றலை தொழில் வாய்ப்பு இல்லாத மக்களுக்கு இந்த நாடகளுள் உணவு மற்றும் பால் பொருள்கள் வினியோகிக்கலாம். அம்மா உணவகம் , சமுதாய கூடங்களினுடான ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கலாம்
💚 அரசாங்க ஊழியர்கள் பணியாளர்கள் சம்பளத்தில் 10 தொடக்கம் 20 விதம் இவ்வாறான மக்களுக்கு மனமுவந்து உதவலாம்
💚 செத்த பின் நஷ்ட ஈடு 50 இலட்ச்சம் என அறிவிப்பது விட அந்த பணத்தில் வாழவும் ppt பாதுகாப்பு உடைகள்உபகாரணங்களுக்கும் செலவு செய்யலாம்
💚 வீட்டு சொந்த காரர்கள் வாடகை பணம் குறித்து அரசாங்கம் வங்கி லோன் மின்சாரம் போன்றவை குறித்து தெளிவாக முடிவெடுக்கும் படி கோரிக்கை வைக்கலாம்.
இன்னும் எவ்வளவோ செய்யலாம் . மனித உயிருக்கு முன் அத்தனையம் தூசி எனும் உணர்வு அனைத்தையும் செய்ய வைக்கும்.
Note
*****
சித்த மருத்துவம் அனுமதிக்கப்பட்டு விடடாலும் நோய் பரவும் வேகத்தில் மருந்துகள் தயாராக வேண்டும் நோய் பரவல் தடுக்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமாக வேண்டும். நோய் பரவிக்கொண்டே இருந்தால் அதே வேகத்தில் குணமாக்குதல் என்பதன் சாத்தியம் குறித்தும் சிந்திக்க வேண்டும் .
இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் அறிந்து கொள்ள https://alpsnisha.blogspot.com/2020/06/blog-post_22.html?m=1
Facebook. : COVID. 19 12 நாட்கள் ஊரடங்கில் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!