1)குமார்:ஏக்கா நீ சொல்ற ஜோக் எல்லாம் நல்லா இருக்கும் போல இருக்குதே.எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க.
நிஷா: அட நீ வேறப்பா இப்ப அவங்க சிரிக்கல்லன்னா திரும்பத்திரும்ப ஜோக் சொல்லுவேன் என்று சொன்னேனா...அதுதான் சிரிக்கின்றார்கள்!
குமார்:அப்படியா ஹாஹாஹா ஹோஹோ ஹிஹிஹி
2)நிஷா:ஏன்பா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
முஸம்மில்: அத ஏன் கா கேக்குற, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்கக்கா!!
3)நிஷா:திருமணப்பந்தலில் இருக்கும் பணததை ஈ மொய்க்கும்.
ஏன் தெரியுமா..
குமார்:தெரியாதே ஏன்...?
நிஷா:அதுதான் மொய் பணமாச்சே
4)நிஷா:உங்களுக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?,
வருண்:தெரியுமே,ஆனால் சில இடங்களில் மட்டும் தான் நீந்துவேன்.
நிஷா:அப்படியா எங்கே?
வருண்:அதுவந்து...........முழங்கால் அ்ளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மாத்திரம்
5)நிஷா : மகாகவி பாரதி தெரியுமா?
கில்லர்ஜி :தெரியுமே !
நிஷா : யார்னு சொல்லுங்க பார்க்கலாம்...?
கில்லர்ஜி :மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
6)நிஷா: மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல!
அது என்ன?
குமார்: ...............?????
நிஷா: தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
7)நிஷா:இவர் தான் மார்கெட் தச்சர்.
கில்லர்ஜி : தலைவரா..
நிஷா : மார்க்கெட்டிலே வேலை செய்யும் தச்சர் அவ்வளவுதான்
8)நிஷா:தும்பியாரே ஆந்திராவிலிரு்ந்து தமிழ் நாட்டுக்கு குதிரைகள் வரும் போது வரிக்குதிரையா மாறி விடுகின்றதே. தெரியுமா?
முஸம்மில்:எப்படிக்கா??
நிஷா:தமிழ் நாட்டு பார்டரில் வரி போட்டிருப்பாங்களே அதனால் இருக்கும்.
9)மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாக நம்ம மதுரைத்தமிழன் சாரும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும்?
10)பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்!
அட! இதை நீங்க வேறு எங்காவது படித்திருந்தால் என்னிடம் கேட்காதீர்கள்.
நானே என் பதிவு பலதை என்னுடையதுன்னு என தெரியாமலே வேறெங்கோ படித்து இருக்கின்றேன்!
இதுவும் 2010 ன் மீள் பதிவே!
பெயர்கள் ச்ச்ச்ச்சும்மா மாற்றினேன் யாரும் கோபித்துகொள்ளாதிங்கப்பா!

