29 மார்ச் 2019

சதா ரணமாகும் தேர்வுகள்

சாதாரணம்
சதா ரணமெனும் 
சகல கலா ரணமாகுவதாக
சத்தமில்லா யுத்தமொன்று

சங்கடம் தருவதாய் சிலரும்
சங்கெடுத்து ஊதுவதாக பலரும், 
என்னைப் பார் 
என் பெண்ணைபபார்
உன்னை போல் என் 
உறவில்லை என்போரும்

கற்றலை,குற்றமாக்கி
தேர்வின் புள்ளிகள்
வாழ்வின் கரும்புள்ளிகளாய்
வடுக்களாய் தங்க வைப்போரும்
தாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...!?

சாதாரணமாக கடந்தவைகளெல்லாம் 
சாதனைப்பட்டியலில் இடம் பிடிப்பதும்
சாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும் 
சாத்தானின் போதனைகளாய் கடப்போம்.

நீ நானாகவும்,
நான நீயாகவும் 
அவன் அவளாகவும்
அவள் அவனாகவும்
ஒப்பீடு தப்பீடாய் 
பட்டறிவும்,படிப்பறிவும்
பட்டம் போல் வானம் தொடும், 
காலமது அதை உணர்த்தும்

தேர்வென்பதன் வெற்றிகளால் கொக்கரிப்போர் 
வாழ்க்கை தேரென்பதை இழுக்க
முடியாதோராய்..... ?

கற்றறிந்தோர் முயலாமையினால் 
முடங்கி விட............!?
பட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க 
முயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,

தோற்றவர்கள் வீழ்ந்ததில்லை
வென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம், 
காலம் மாறும் காட்சிகள் கலையும், 
கலைந்த கனவுகள் 
தொலைந்த இரவுகள
கனவாகிப்போகும்,

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. 
நம்பிக்கை எங்கள் தும்பிக்கை!

அவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.
மனித ஆற்றல் சக்தி வாய்ந்தது, 
தினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை. 
நீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்
வாழ்க்கை உங்கள் வசப்படும்........!

#சதா_ரணமாகும்_தேர்வு


27 மார்ச் 2019

பெண்ணியமும் எமது பெண்களும் ........!?

ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.
ஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.
டேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.
30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.
40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.
வன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .
ஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.
அதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள். 
ஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.

சட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.
ஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும், 
பெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.
பெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.
உலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.
உலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ, 
எதனால் நாம் உயர்ந்து நின்றோமோ 
அதுவே சீரழிக்கப்படுகின்றது.
சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.
உலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது . 
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
எதற்கு அஞ்சா திண்மை
தெளிந்த சிந்தனை.
கல்வி
பொருளாதாரம் 
பணிவும்,பண்பும்
அன்பும்,அறனுமே.

நாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\ண்டிய உரிமையும் இதுவே.
ஆனால்..............!?
நாம் வாழ்வோமா? வீழ்வோமா?❤️
❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

தமிழ் நாட்டு கல்வியும், சிந்தனைகளும்....!!!!

தமிழ் நாட்டில் கல்வி விடயத்தில் ஏன் இத்தனை குழப்பம் என எனக்கு புரியவில்லை?
தேர்வினை எதிர்கொள்ள இயலாத மாணவர்கள்.... ?
பதறித்துடிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்......?
முடியாது,இயலாது,கடினம்,கஷ்டம் என சொல்லி நெகடிவ் அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் பின்னனி என்ன?
மாணவர்கள் கல்வி சார்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வுத்தாளில் வருகின்றதா?
மாணவர்கள் செயல்முறை இல்லாமல் மனன முறையில் கற்றலை பெறுகின்றார்கள் எனில் இதில் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வகையில் இருக்கின்றது?
மக்களில் சிலர் இன்னமும் ஆரம்ப கல்வி,அடிப்படை கல்வி என பேசிக்கொண்டிருப்பதை காணும் போது இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் எனும் குழப்பம் வருகின்றது?

இந்திய அரசின் கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கென தனி பாட திட்டங்களையும், தேர்வுத்தாட்களையும் தயாரிக்கின்றதா?
பள்ளிப்பாடத்தில் அரசு பாடத்திட்டம் கடினமாக இருந்தாலும் ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள்?
பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்ப்படுத்தாதது ஏன்?

அரசு பாடத்திட்டங்களை காலத்துக்கேற்ப மாற்ற வேண்டும்,உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீனத்துவத்துக்கு ஏற்ப கல்விதிட்டங்கள் மாற்றமடைய வேண்டும் என்பதுடன் மாறும் சூழலுக்கேற்ப பிராக்டிகல் வாழ்க்கை முறையை கல்வியின் மூலம் உணர்த்த வேண்டும்.
அடிப்படையே அனைத்தும் தவறென்கின்றோமா?
அரசு அரசு என அரசின் மேல் எல்லாப்பழியையும் இட்டால் சமூகத்துக்கான் கடமை என்ன? தனிமனிதர்கள் கடமை என்ன?
எனக்கு புரியவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை மறந்து எல்லாவற்றையும் அரசு செய்யட்டும் என எதிர்பார்ப்பது எவ்வகையில் நன்மையை தரும்,
இப்படியே பேசிக்கொண்டிருந்தால், தமிழ் நாடு இந்தியாவில் பின் தங்கிய மாநிலமெனும் பட்டியலில் இடம் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நமக்குள் பலர் தமிழ் நாடு கல்வியில் முன்னேறி இருப்பதாகவும், முன்னனியில் இருப்பதாகவும் கருத்தை கொண்டுள்ளார்கள்.
ஆனால் நிதர்சனம் வேறு ....!!!!
கடந்த 2011 எடுக்கப்பபட்ட சென்சஸ் கருத்துக்கணிப்பில் தமிழ் நாடு இந்திய அளவில் கல்வியில் 14 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கல்விச்சூழல் இன்னமும் பின்னோக்கி சென்றிருக்க வேண்டும். முன்னேறிச்சென்றிருக்கும் வாய்ப்புக்கள் இல்லை.
உலகத்தில் தனி நபர் தன்னிறைவு பட்டியலில் 2014 /2016 ஆண்டுகளில் 122 இடத்தில் இருந்த இந்தியா , 2018 / 133 இடத்தை பின்னோக்கி சென்றிருக்கும் போது தமிழ் நாட்டு கல்வியும் பின்னோக்கி தான் சென்றிருக்கும். ஆட்சி நிர்வாகம் மட்டுமல்ல, மக்கள் சிந்தனைப்போக்கும் சீரற்றதாக இருக்கின்றது.
உண்மை நிலை உணராது, மேம்போக்காக நாங்களும் வளர்கின்றோம் எனும் போலித்தனமான மாயைக்குள் தாங்களும் சிக்கி, மக்களையும் சிக்க வைப்பது ஏன்?
வீண் கௌரவம், வரட்டு பிடிவாதமே உன் இன்னொரு பெயர் தான் தமிழ் நாட்டு தமிழரோ?
இந்தியாவில் தமிழ் நாடு தான் கல்வியில் முன்னனியில் இருக்கின்றது எனும் வெற்றுப்பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அதை நம்பிக்கொண்டிருக்கும் மக்களையும் என்னவகையில் சேர்ப்பது எனவும் புரியவில்லை.
உலகை ஆண்ட பரம்பரை எனும் வரலாற்றை கொண்ட ஆதித்தமிழனின் தொன்மை மிகு சிறப்பை இனி வரும் காலத்தில் சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
மக்களே..........!!!!
தூங்கியது போதும் 
விழித்தெழுங்கள்


எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் எனும் பட்டியல் ஆங்கிலத்தளத்தில் இந்தியாவில் 14 ஆவது இடத்தில் தமிழ் நாடு இருப்பதாக சொல்கின்றது. ஆனால் தமிழ மொழிபெயர்ப்போ 21 ஆவது இடத்துக்கு அதை நகர்த்தி விட்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இக்கால தமிழர்கள் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். எதையும் சரியான தரவுகளோடு ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் எவருக்கும் ஆர்வமில்லை. வரலாற்றில் கரும்புள்ளிகளாக தற்கால தமிழர்கள் பதிவாகுவார்கள் என்பது மட்டும் உண்மை. எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்


பேஸ்புக் பதிவு 

26 மார்ச் 2019

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!! World Happiness Report 2018

மோடி அரசின் ஐந்தாண்டு சாதனை....!!!!
World Happiness Report 2018
தனி நபர் வருமானம், சுதந்திரம், சமூகம், பொருளாதாரம் எனும் அடிப்படையில் தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்திய மக்கள் 2014 / 2016 ஆண்டுகளில் 122 ஆவது இடத்தில் இருந்தார்கள்.
🔻மிஸ்டர் மோடிசாரின் ஆட்சியில் வேகமாக பின்னேற்றம் பெற்று 🇮🇳⬇️2018 / 133 ம் இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.😎😢
உலகத்தில் மொத்த நாடுகள் 156.
🇨🇭🇮🇳🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇱🇰🇹🇨🇬🇧🇵🇰🇱🇧🇱🇷🇧🇮🇰🇭🇮🇳🇮🇳
2018 ஆண்டு கணக்கெடுப்பில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில்  
1.பின்லாந்து
2.நோர்வே
3.டென்மார்க்
4.ஐஸ்லாந்து
5. சுவிஸர்லாந்து 
ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் நான்காம் இடத்திலிருந்த பின்லாந்து 2018 ஆம் ஆண்டு ⬆️முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
அவுஸ்ரேலியா 10 
ஜேர்மனி 15 
அமெரிக்கா 18
பிரிட்டன் 19 
சிங்கப்பூர் 
எனும் வரிசையில் இலங்கை வாழ் மக்கள் ⬆️ 116 ஆவது இடத்தை பிடித்து கொள்கின்றார்கள் / நான்கு தசாப்தங்கள் உள் நாட்டு யுத்தங்களை சந்தித்தும் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை இந்திய மக்களை விட முன்னேறி இருக்கின்றது என்பதை இக்கணிப்பு உணர்த்துகின்றது.

இலங்கை 🇱🇰
2014 / 2016 ஆண்டுக்கணக்கெடுப்பில் 120 இடத்திலிருந்த இலங்கை ⬆️ 2018 /116 இடம் நோக்கி முன்னேறி இருக்கின்றது.

ஊழலில் மட்டுமே இலங்கை இந்தியாவை விட முன்னேறி இருக்கின்றது.ஊழலை குறைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் முதல் 100 நாடுகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்து விடலாம்.
பாகிஸ்தான் 🇵🇰 2014 / 2016 ஆண்டுகளில் 80 ஆவது இடத்தில் இருந்தது. ⬆️ 2018 / 75 ஆம் இடம் பிடித்திருக்கின்றது.
இந்தியாவுக்கு கீழே 23 நாடுகள் இன்னும் இருக்கின்றது.நமக்குக் கீழேயும் உள்ளவர் கோடி என்பதை நினைச்சு பார்த்து நிம்மதி தேடுவோம் என்கின்றீர்களா? 😍
உள்நாட்டு உற்பத்தி,
தனிநபர் வருமானம் 
சமூகம் சார்ந்த ஆதரவுகள் 
ஆரோக்கியமான வாழ்க்கை திட்டமிடல்
வாழ்க்கைத் தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
பெருந்தன்மை
ஊழல் குறித்த புரிந்துணர்வு,

என்பவற்றின் அடிப்படையில் இக்கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாங்களும் முன்னேறி இருக்கின்றோம், சுந்தர் பிச்சை கூகுளில் இருக்கார், நாசாவில் எங்க விஞ்ஞானிகள் இருக்காங்க, ஒலிம்பியாரிட்டில் எங்க பசங்க வேலை செய்கின்றார்கள்,ராக்கெட் விட்டோம், ஐடியில் நாங்கள் தான் பெஸ்ட் / உங்களை ஏமாற்றிக்கொள்ள போகின்றீர்களா?
வறட்டுகௌரவம் பார்த்து இருப்பு நிலையை இழக்காமல் இனியேனும் சுதாகரித்து கொள்ளுங்கள்.
தேசபக்தி,தேசியம் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நாட்டின் வளர்ச்சியே கிழ் நோக்கி சென்று கொண்டுள்ளது. அகக்கண்களை நன்றாக திறந்து உலகத்தில் நடப்பதை உணருங்கள்.

2018 / 122 மொசாம்பிக் 
2018 / 144 ஜிம்பாபே
கூட தன் நாட்டின் பேரழிவுகளை உடனுக்குடன் தரவேற்றி நடப்பு நிலையை உலகறிய செய்யும் போது தமிழ் நாட்டு தமிழர்கள் கற்காலம் நோக்கிப்ப்யணிப்பதும் ஜாதி,மதம் என பிரிந்து ,வீண் பெருமைகள் பேசி, கல்வி முதல் அனைத்திலும் பின் தங்கி இருப்பதை அடுத்த பதிவில் காணலாம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 🇮🇳

எனக்கு சக்தி எல்லாம் பிறக்கவில்லை. 
தலைச்சுத்தி தான் வருகின்றது.


22 மார்ச் 2019

ஒரு பிடிச்சோற்றின் முன் ...!

வண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க
நெல்மணிக்கதிர்கள் தாகத்தில் தவிக்க
கரிசல் பூமியின் கதறல் கேட்டு 
இனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க
பருத்திச்செடியோ செம்மண்ணின் சூட்டால் 
சுழன்று வெடித்து சுக்கு நூறாக 

வளமான மண் தேடி விவசாயி அலைய
உயிரான நீர் வளம் உருக்குலைந்திட
விசமாக்கும் வித்தையை களமாக்க துடிக்கும்

அடப்பாவி மனிதா....!
ஒரு பிடிச்சோற்றின் முன் ....!
ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ 
உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய்....!

மூவிரண்டாய் மூழ்கி இருந்தும் 
அடி முதல் முடி வரை விரவிப்பரந்தும் 
அங்குசமின்றி ஆளுமை செய்தும் 
அணைகளை உடைத்து தடைகளை கடந்தும் 
அலைகளால் அலைக்கழித்தும் 
பொங்கிப்பெருகி காட்டாறாய் ஓடி 
நாணிடும் நங்கை போல் கொஞ்சி நடந்து 
கங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி
காவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ?

இயற்கை தன் வளங்களை காக்க போராடுவதை
புயலாகி, சுனாமியாகி, பூகம்பமாகி நம்மை எச்சரித்தாலும் மனிதன் அதன் வலிகளை உணராமல் போகின்றான்

எங்கோ எவருக்கோ எனும் வேடிக்கைதனை களைந்து 
எம் வளங்களை காக்கும் கடமைதனை உணராமல் கடந்தோமானால் 
படம் சொல்லும் சேதிகள் நம் சிந்தனைக்கே....!
எமது சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்ல போவது என்ன ....?

எதிர்காலத்தில் எம் வளங்களும்....!?



 
 
 
 
 
 
 
 
 
படங்கள் நன்றி இணையம். 
 

21 மார்ச் 2019

வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

ஆங்கோர் அபலை 
கடலைலை போலே 
அங்குமிங்கும் பரிதவிக்க 
ஊருக்குள் யோக்கியராய் 
உத்தமராய் வேஷமிட்டு 
உள்வீட்டு உடைசல்களை
உடைத்தெறிய வழிதெரியா 
நீதிமான் போதனைகள்
நீயறிவாயா பெண்ணே....!

உனக்கென நானிருப்பேன் 
உள்ளமெல்லாம் உன்நினைவே
உணர்வை யள்ளித்தெளித்து 
உயர்வது வென்றுரைத்து
சத்தியம் தானென்றும் 
நித்தியம் நீ என்பார். 
தடையகற்றி தாண்டி விடும்
வழிகள் பல சொல்லிடுவார்
விதி யொன்றை உனக்காகச் சமைப்பார்

தங்கு தடையில்லாமல் 
தாராளமாய் வாழ்தல் 
தவறில்லை என்றுரைப்பார்
உன் வழி இதுவெனவே
தனி வழியை பரிந்துரைப்பார்.
தன்னகத்தில் கறையில்லை
நிறைகுடம் தானென்பார்.
கலங்கிடும் காரிகையவளை 
காதலெனும் மாயையால் வீழ்த்தி 
காமத்தில் முழ்கடிப்பார்.
காமத்தை தூதுவிடும் காளையர்கள்

காதலதில் கறையுண்டென்றுணர்ந்து 
புறம் தள்ளி பறந்தோடி வா பெண்ணே
புது விடியல் உனக்குண்டு பெண்ணே
வாழ்க்கையது வாழ்வதற்குத்தான் பெண்ணே
வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

19 மார்ச் 2019

ராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா? தொடர்ச்சி

ராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா? எனும் தலைப்பில் நான் இட்ட பதிவில்Mythily Kasthuri Rengan சூழல் சார்ந்து தான் உணர்ந்ததை பதிவாக்கி இருந்தார். பல கேள்விகளையும் கேட்டிருந்தார். அப்பதிவில் முன் வைக்கப்பட்ட வைகளுக்கான பதில்களை தேடுமுன் தனி மனிதர்களின் சமூகக்கடமை எப்படியானது என பார்க்கலாம்.
இரு பதிவுகளில் லிங்கும் பின்னூட்டங்களில் இணைக்கின்றேன்.
என் சூழல் சார்ந்த அனுபவப்பதிவு என்பதனாலேயே எழுத்தில் திடமாக என்னால் கேள்விகளை கேட்க முடிந்தது.ஊகங்களின் அடிப்படையில் பல விடயங்களை அணுகுவதற்கும், அல்லது, யாரோ ஒருவர் சொன்னதை கண்ணை மூடி அப்படியே நம்புவதற்கும் முன்னால் அனுபவம் பெரும் ஆசான் அல்லவா?
நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது தேடும் வெற்றிப்பாதையை விட மகத்தானது அல்லவா? .
எங்கள் கிராமங்க்ளில் மாற்றம் உருவாக்கியதில் எந்த தலைவரும் இருந்ததில்லை. அக்காலத்தில் தலைவன் என ஒருவனும் இல்லை. அதன் பின்பும் 2004 சுனாமியில் ஊரே தரை மட்டமாகி, அரசு உதவிகள் சரியாக கிடைக்காத நிலையில் மாடிவீடுகள், மாளிகைகள் பலவும், வங்கி, வைத்தியசாலை,1 தொடக்கம் 5 வரையான ஆரம்ப பாடசாலை நான்கு, உயர் தர பாடசாலை என அனைத்து சமூக சீர் உயர்வுக்கு பின்னும் தனி நபர்கள் தம் சமுதாய கடமை உணர்ந்த உதவிகள்,ஆதரவு இருக்கின்றது. எங்கள் கிராமங்கள் நகரங்களுக்கு இணையான / அதை விட மேம்பட்ட வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. எப்படி சாத்தியமானது?
எனது ஊர் என்பது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில், பெரிய கல்லாறு😍.
பின்னூட்டங்களில் தொடர்கின்றேன். ஊரின் இன்றைய வளம், நிறைவை கூகுள் மேப் 2010 எடுத்த புகைப்படங்களினூடாக இணைக்கின்றேன்.
1.சமூக மாற்றங்கள் என்பது அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு மாத்திரமல்ல, ஒவ்வொரு தனி மனிதனும் தன் கடமையை உணரும் போது தான் சாத்தியமாகின்றது. நம் முன்னோர் காலத்தில் அரசன் என ஒருவன் நாடாள இருந்தாலும் கிராமங்கள் தோறும் பஞ்சாயத்து என அமைப்பை ஏற்படுத்தி,கிராம முன்னேற்றம், குளங்களை தூர்வாரல், பொது நிலங்களை பாதுகாத்தல்,பயன் படுத்தல்,கோயில்களை பராமரித்தல்,பாதைகளை செப்பனிடுதல், என சுயாதினர்களாக இயங்க விட்டிருந்தார்கள். அதற்கான் பொருளாதார தேவைகளை அந்தந்த மகக்ளே பகிர்ந்தும் கொண்டார்கள்.
தும்மினால் அரசு, துவண்டாலும் அரசு, என எல்லாவற்றையும்ம் அரசு மட்டுமே செய்யட்டும் எனும் மேம்போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. தலைவன் என ஒருவன் அவர்களுக்குள் இருக்கவில்லை. அந்தந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி, குழு அமைத்து முடிவெடுத்து தாம் சார்ந்த சூழலை,காலத்துக்கு தக்க படி மாற்றிக்கொண்டார்கள்.
இன்றைக்கும் பல கிராமங்களில் ஊடறுக்கும் குளங்கள், ஏரிகள், வானுயந்து நிற்கும் ம்ரங்கன், வாய்க்கால்களின் பின்னனியில் பல தனி மனிதர்களின் சமூகம் சார்ந்த நீண்ட கால பின்னோக்கிய திட்டமிடல் சிந்தனையே நிரம்பி இருந்திருப்பதை காணலாம்.
2. இலங்கை எனும் குட்டி தீவில் வாழும் மக்களே, யுத்தம், உரிமைப்பறிப்பு என நசுக்கப்பட்டும், முவின மக்கள், மதம் எனும் இன, மத பேதம் கடந்தும், தமக்கான சமூகம் சார்ந்த முன்னேற்றம்,தேவைகளை அரசினை எதிர்பார்க்காமல் அல்லது முழுமையாக தங்காமல தம் கடமை உணர்ந்து தம் சூழலை தற்பாதுகாக்க,முற்போக்கோடு உருவாக்க முடிந்திருக்கும் போது தமிழர்களின் தமிழ் நாட்டில் இருந்த வளங்களையும், ஆற்றல்களையும், ஒற்றுமையையும் இழந்து நிற்கும் இயலாமை, பிரிவினை எனும் நெருப்பில் எரிவது ஏன்?
3.உங்கள் கிராமங்கள், சக மக்கள், குறித்த மாற்றங்களை எங்கோ இருக்கும் ஒரு நபர் / தலைவர் எடுக்கும் முடிவுக்குட்பட்டதாக இருக்க வேண்டுமெனும் நிர்ப்பந்தம் ஏன்?
தமிழ நாட்டில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத எவ்ரோ ஒருவர் தலைவர் எனும் பெயரில் சொல்வதை மட்டும் எப்படி நம்புகின்றீர்கள்? பின் தொடர்கின்றீர்கள்?
நான் மீண்டும் சொல்கின்றேன்மா,மாற்றம் என்பது ஒரே நாளில் வாரத்தில், வருடத்தில் சாத்தியம் இல்லை. குறைந்தது இரண்டு தலை முறை பின்னோக்கிய திட்டமிடல்கள் தேவை.
அதற்கு நாம் இதுவரை விட்டிருக்கும் தவறுகளை அலசி ஆராய்ந்து காயப்போட்டால் தான் ஓரள்வேனும் சரியான பாதை நோக்கிய இலக்கை நோக்கி இனியேனும் திரும்ப முடியும்.
ஔவையாரின் பாடலை பாருங்கள்.
வரப்புயர நீர் உயரும் 
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்...

இந்த பாடல் என்பள்ளிக்காலத்தில் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்தில் இருந்தது. வரப்புயர எனில் கிராமங்களில் விவசாய நிலங்களில் நீர் நிறைந்திருந்தால் விவசாயம் செழிக்கும், விவசாயம் செழித்தால் அதனூடான் சமூகத்தின் வாழ்வாதாரம் நிறைவாகும், கிராமங்கள் உயரும் போது நகாங்களும் மேன்மை அடையும், பல நகரங்களின் முன்னேற்றம், நாட்டை முன்னோக்கிய பாதையில் செலுத்தும், இதன் பின்பே மன்னன் என்பவனின் உயர்வும் உண்டு. இது தான் அக்கால மன்னர்களின் வெற்றிக்கு பின்னிருந்த அடிப்படை.
ஆனால் இன்று நடப்பது என்ன?
எங்கோ ஒரு அரசன்,அல்லது தலைவன் சொல்வதை கேட்பதும் வழி நடத்துவதாக நினைப்பதும், அவன் அவன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே தனக்காக பவரை உபயோகிக்கும் போது அவனவன் சுய விருப்பு வெறுப்பும் நம் மேல் திணிக்கப்படுகின்றது என்பதை சிந்திப்பதில்லை.
நாம் வாழும் சூழலுக்காக முடிவை நாம் தான் கூடிப்பேசி எடுக்க வேண்டும். நமக்கான தீர்வை தலைவன் ஒருவன் தருவான் என்பது தன் கடமை உணரா மனிதனின் மெத்தனப்போக்கு என்பேன் நான்
அத்தனை காலம் ஏன்?
இன்றைய சூழலில் பொள்ளச்சி பெண்கள் என பெண்களை அரசியல் சதுரங்கத்தின் பகடைகளாக்கி கொண்டிருக்கும் தலைவர்கள் எப்படி மக்களின் வழிகாட்டிகளாக இருந்திருக்க முடியும் என் ஏன் சிந்திக்க மறுக்கின்றோம்? நம் தேவைகளை குறித்து அக்கறைப்படாமல் தன் தேவைக்கு பயன் படுத்தி அடிமைப்படுத்துவோரா நமக்கு விடுதலை பெற்று தர போகின்றார்கள்?
உனக்கும் என்னைப்போல் ஆறறிவு தன உண்டு. உன் தேவையை நீயே சிந்தித்து, உன் சூழலுக்கு தக்கபடி முடிவெடுத்து, உன் சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல், அதற்காக அனைத்து உதவியும் நான் என் செல்வாக்கை கொண்டு செய்கின்றேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம் என எந்த தலைவனாவது சொல்கின்றானா? நானா நீயா என அவனவனுக்குள் தங்களை பிரமாண்டப்படுத்தும் எவனும் எமக்கு தலைவனாக இருக்க முடியாது. கூடாது.
ஆதரவோ.எதிர்ப்ப தலைவன் என முன் வரும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒருவகை குறிக்கோள் இருக்கின்றது. தாம் எடுத்த முடிவுக்கு மக்களை ஆட்டலாம் என நினைப்பிருக்கின்றது. குரங்காட்டி கையில் இருக்கும் சாட்டைகளை கையில் வைத்து கொண்டு ஆடுரா ராமா ஆடு என்கின்றார்கள்.
நாங்கள் ஐந்தறிவு மிருகங்களாக் ஆடுகின்றோம். கல்வி, ஜாதி, பெண் விடுதலை என்பது என்ன என்பதெல்லாம் படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய மாற்றங்கள்.
🔴முதல் தலைமுறைக்கு கல்வியின் அடிப்படையை புரிய வைத்து, இரண்டாம் தலைமுறைக்கு கல்வியின் நோக்கம் பரவலாக்கப்பட்டு,உணர்த்தி, மூன்றாம் தலைமுறையில் அனைவருக்கும் கல்வி முழுமையாக கிடைக்க செய்திருந்தால், நான்காம் தலைமுறை தானாகவே ஜாதி என்றொன்றில்லை எனப்தை உணர்ந்திருக்கும்.
நான்கு தலைமுறைஎன்பது ஒரு தலைமுறைக்கு 15 வருடங்கள் எனும் ணக்கில் ஒரு பிள்ளைகான அடிப்படை கற்றலுக்குரிய காலம், கிரகித்தலின் அடிப்படையில் மட்டுமே சத்தியம்.
ஒரு மனிதர் தன் 15 வயதுக்குள் எவையெல்லாம் கற்கின்றானோ அதுவே அவனை வாழ் நாள் முழுமைக்கும் வழி நடத்தும், ஒரு குழந்தை தன் ஐந்து வயதுக்குள் காண்பதும்,கேட்பதும் அவன் சிந்தனைகளை தீர்மானிக்கும்.
உங்கள் சூழலில் விடுதலை மாற்றம் என சொல்லி சொல்லி எதையேனும் முழுமையாக மாற விட்டிருக்கின்றார்களா? எரிந்த நெருப்பில் எண்ணெய் உற்றி இன்னமும் பெரு நெருப்பாக்கி கொண்டிருக்கின்றார்களா?
இன்றைக்கு நீங்கள் காணும் சூழலுக்கான் விதை எங்கே என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் கேள்விகளுக்கான பதில்களுக்கு முன் இது நம் கடனையை நாம் உணர வைக்க பகிர்ந்தேன்.
மீதி பதில்களோடு தொடர்வோம்.

தொடர்புடைய இணைப்புக்க்ள் 




18 மார்ச் 2019

நாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா?

பெண் விடுதலை என்றால் எமக்குள் நினைவு வருபவர் பாரதியார். பாரதியார் விரும்பிய பெண் சுதந்திரம் அல்லது பெண் விடுதலை எப்படிப்பட்டது என்பதை இப்பதிவில் ஆராயலாம்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”

ஆணும் பெண்ணும் நிகரானவர்களாக ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் நிறைந்ததே பெண்ணியம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருவரும் நிகரானவர்களாகும் போது தான் உலகம் தளைக்கும் என்கின்றார்.பெண்மை எனும் மென்மைக்குள் அனைத்தையும் ஆளும் சக்தியே பெண் என்கின்றார்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களும் பெண்கள் நற்குணங்களாய் கடைப்பிடிக்கப்பட்ட சமூகத்திலிருந்து பாரதியாரின் குரல் உரத்தொலிக்கின்றது.
நாணும் அச்சமும் நாய்கட்கு வேணுமாம்”
தேவையற்ற பயம், கூச்சம், தயக்கம்  தீமையான காரியங்கள் பல உருவாக காரணமாகி விடுவதனால் தீமை செய்கிற ஒருவன் வெட்கி தலைகுனிந்து [*நாணுவதற்கு] பதில் ஒரு நல்லவன், நன்மை செய்பவன் தலைகுனிந்து நிற்கக்கூடாது.நாணமும் அச்சமும் நாய்களுக்கு உரியதே என மிக கடுமையாக கூறி பெண்கள் தீய காரியங்களை எதிர்த்து நிற்க தயக்கமே கூச்சமோ,பயமோ படக்கூடாது என்கின்றார் பாரதியார். / ஆண்களுக்கும் தான்😍

“ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்!”
அறிவு,அறம், வீரம் எனும் நற்குணங்களை கொண்ட பெண்களால் பெண் சுதந்திரம் மேன்மை பெறும் என்கின்றார்.
பெண் சுதந்திரம், விடுதலைப்போராளிகளாக பாரதியார் பாடிய பாடல்களை மேடை தோறும் எடுத்தாள்வோருக்கு பாரதியார் காட்டிய பெண் விடுதலை எத்தகையது என்பதை குறித்த தெளிவுகள் இன்மையினால் இன்றைய பெண்களின் விடுதலை என்பது தடம் மாறி போய் விட்டிருக்கின்றதெனலாம்.
பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் 

🔘பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.
🔘அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 
🔘வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். 
🔘உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள் 
🔘பால்ய விவாகத்துக்குட்படுத்தப்பட்டார்கள்.

அதனால் தான் பாரதியார் சொல்கின்ரார்.
“அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்”

மனிதர்களுக்குள் ஜாதி அடக்குமுறைகள், 
ஆறறிவு கொண்ட மனிதர்களை அடக்குவோர் பித்தர்கள். பல கட்டுப்பாடுகளை விதித்து மனிதர்களை கட்டுப்படுத்தும் நெறிகளை 
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும் என்கின்றார். பெண்ணை மட்டுமல்ல மனிதர்களை ஒடுக்கும் அனைவரையும் சாடுகின்றார்.உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏற்றத்தாழ்வுகளை வன்மையாக கண்டிக்கின்றார் பாரதி.

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

புதுமைப்பெண்களின் பேச்சில் இனிமையும்,செயல்பாடுகளில் மெய்யும் இருக்க வேண்டும். பொய்மை இருக்ககூடாது,வயதுக்கு தகுந்த படி அவர்கள் தம் அறிவினை வளர்த்து சமூகத்துக்கு முன்மாதிரியாக் வாழ்ந்து காட்ட வேண்டும்.
தன் சுயம் இழக்காது நேர்மையாக நிமிர்ந்து நின்று, பிரச்சனைகளை நேருக்கு நேர் அணுகி, தேவையான நேரத்தில் தன் குரலை உரத்து எழுப்பி, தம் வளர்ச்சியின் இடையூறுகளைக் களைந்து, தம்மைஊக்குவித்துக் கொள்ளவும், தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடுபவளாகவும் வாழ அநீதிகளை கண்டு அஞ்சாமையை திமிர்ந்த ஞானச்செருக்கு நமக்கு தரும் போது பெண்கள் என்றுமே எவருகும் மிரண்டு பயந்து அடங்கி போக தேவை இருக்காது என்கின்றார் பாரதீ.

ஆம ! பாரதி எமக்குள் தீயை தான் விதைக்கின்றார். சமூகத்தின் அநீதிகளை சுட்டெரிக்கும் தீயாக பெண்கள் மாற வேண்டும் என்கின்றான் பாரதி
நம்மை ஆராய்வோம ! சிந்திப்போம் !

பாரதி தேடிய பெண் சுதந்திரம் எத்தகையது?
அடுத்த பதிவில் தொடரலாம்.

இதையும் தொடரலாம்.