31 மே 2020

கொரோனா வைரஸ் வென்டிலேட்டர் என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

கொரோனா வைரஸ் வென்டிலேட்டர் என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

ventilation நோயாளிக்கு போதுமான காற்றை தானாக இழுக்க முடியாதபோது சுவாசிக்க உதவும்  மருத்துவ சாதனங்களை வென்டிலேட்டர்கள், சுவாசக் கருவிகள் அல்லது சுவாச இயந்திரங்கள் என்று அழைக்கிறார்கள், 

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, கோவிட் -19 நோயாளிகளில் 80% பேர் - கொரோனா வைரஸால் ஏற்படும் நோய் - மருத்துவமனை சிகிச்சை தேவையில்லாமல் குணமடைகிறார்கள்.ஆனால் ஆறில் ஒருவர் கடுமையான நோய்வாய்ப்படுகிறார்.

இந்த கடுமையான சந்தர்ப்பங்களில், வைரஸ் நுரையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது, இதனால் உடலின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசிக்க கடினமாகிறது.

இதைத் தணிக்க, ஆக்சிஜன் அதிகரித்த அளவுடன், நுரையீரலுக்குள் தள்ள  காற்றோட்டம் ( ventilation ) பயன்படுத்தப்படுகிறது.

வென்டிலேட்டரில் ஒரு ஈரப்பதமூட்டி உள்ளது, இது காற்று விநியோகத்தில் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் சேர்க்கிறது, எனவே இது நோயாளியின் உடல் வெப்பநிலையுடன் பொருந்துகிறது.

நோயாளிகளுக்கு சுவாச தசைகள் தளர்த்த மருந்து கொடுக்கப்படுகிறது, எனவே அவர்களின் சுவாசத்தை இயந்திரத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

எளிமையாகச் சொன்னால்....! 

• நோய் தொற்றால் உங்கள் நுரையீரல் செயலிழக்கும்போது வென்டிலேட்டர் உடலின் சுவாச செயல்முறையை எடுத்துக்கொள்கிறது. ஆக்ஸிஜன் ஹூட்கள் நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கின்றன.

• இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி மீட்க நேரம் தருகிறது.

இரண்டு வகையான மருத்துவ ventilation உள்ளது. அவரவர் பாதிப்புக்கு ஏற்றபடி பல்வேறு வகையான மருத்துவ காற்றோட்டம் ( ventilation )  பயன்படுத்தப்படலாம்.


1 . முதல் சந்தர்ப்பத்தில், முழு ஆக்கிரமிப்பு அல்லாத காற்றோட்டம் ( Non invasive ventilation  ) கொண்ட  முகமூடி, நாசி முகமூடி அல்லது ஹெல்மெட் மூலம் மென்மையான அழுத்தத்தின் கீழ் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. நோயாளி சுவாசிப்பதை சாதனம் உணரும்போது இந்த அழுத்தம் தற்காலிகமாக பின்வாங்குகிறது.

ஒரு பேட்டைப் பயன்படுத்தி ஒரு வகை சிபிஏபி காற்றோட்டம், அங்கு அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் ஒரு வால்வு வழியாக செலுத்தப்படுகிறது, இது வைரஸின் வான்வழி பரவும் அபாயத்தைக் குறைக்கிறது. 

2. இரண்டாவது காற்றோட்டத்தின் மற்றொரு வடிவம் Mechanical
ventilation - நோயாளியின் காற்றுப்பாதையில் இருக்கும்  குழாய்  இயந்திரத்தினால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் அல்லது சிபிஏபி - நோயாளியின் காற்றுப்பாதைகளை தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்கிறது, 

தீவிர சிகிச்சையில் Intensive Care Units (ICUs)  வெண்டிலெடடார்  உயிரைக் காப்பாற்ற  இந்த இரண்டு வென்டிலேட்டர்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர்.

🔹 லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முகமூடிகள், நாசி முகமூடிகள் அல்லது ஊதுகுழல்களைப் பயன்படுத்தி காற்றோட்டம் கொடுக்கப்படலாம், அவை காற்று அல்லது ஆக்ஸிஜன் கலவையை நுரையீரலுக்குள் தள்ள அனுமதிக்கின்றன. உள் குழாய்கள் தேவையில்லை என்பதால் இது "ஆக்கிரமிப்பு அல்லாத" காற்றோட்டம் ( Non invasive ventilation) என்று அழைக்கப்படுகிறது.

🔹 கடுமையான பாதிப்புள்ளோருக்கு 
உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.வெளியார் யாரும் உங்களைப் பார்க்க வர முடியாது.  இயந்திரத்துடன் இயந்திரம் போல் ஒரு அறையில் தனியாக இருப்பீர்கள்.

24மணி நேரமும் மருத்துவபணியாளர் கண்காணிப்புடன்  வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தும் போதும் ஆபத்துகள்இருந்தபோதிலும் சில சமயங்களில் வென்டிலேட்டர் "நோயாளிக்கு ஆக்ஸிஜனைப் பெறுவதற்கான ஒரே வழி" யாகவும் இருக்கின்றது.

தொடரும் பாதிப்புகள் 
*****************
இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம்.  

இந்த காரணத்தினால் தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.







28 மே 2020

Swiss : Lock down நிபந்தனைகள் நீக்கப்படுகின்றன ..!

Swiss 
28.05.2020 

பொருளாதாரத்திற்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க Lock down  நிபந்தனைகள் நீக்கப்படுகின்றன 

சுவிட்சர்லாந்து முன்னோடியில்லாத வகையில் கோவிட் -19 கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து படிப்படியாக தளர்த்திக் கொண்டிருக்கிறது.

🔹 மே 28 : 
அனைத்து மத சேவைகளும் ( சர்ச், கோவில்)  கொண்டாட்டங்களும் அனுமதிக்கப்படும்.

🔹 மே 30 :
 30 பேர் வரை கூடும்கூட்டங்கள்னு. மதிக்கப்படுகின்றன

🔹 ஜூன் 6 : 
300 பேர் வரை பொது மற்றும் தனியார் நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகின்றன,

உணவகங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும், மிருகக்காட்சிசாலைகள், திரையரங்குகள், சினிமாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் முகாம் மைதானங்களும் அதே தேதியில் மீண்டும் திறக்கப்படும்.

🔹 ஜூன் 15 :
ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, 
◾️ ஆனால் இத்தாலிக்கு எல்லைகளைத் திறப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

🔹 ஜூன் 19 :
"அசாதாரண நிலைமை" மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை அதிகாரப்பூர்வமாக முடிவடையும் 

🌻 ஜூலை 6 ஆம் தேதிக்குள் பிற ஷெங்கன் மண்டல நாடுகளுடன் இயக்க சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்.
( school  Holiday ) 

🌻 சமூக இடைவெளி  மற்றும் சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களை இன்னும் வலியுறுத்துகிறது.

🌻 முகமூடி அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.



26 மே 2020

Hegas Catering, Best Indian,Srilanken & Swiss Food Services.


2006  யூன் மாதம் என் மகளின் 5 th Birthday பார்ட்டி யில்  விதை ஊன்ற பட்டது . அதன் பின் 15 க்கும் மேற்படட வருடங்கள் சுவிஸுல் சகல பகுதிகளுக்கும், கேட்டரிங் ஈவண்ட்ஸ் பொறுப்பெடுத்து  2000, 1500 , 1000  க்கும் மேற்படடவர்கள் கலந்து கொண்ட திருமணம், பூப்புனித நீராட்டு   பிறந்த நாள் விழாக்களை நடத்திய அனுபவம் உண்டு.

100 விருந்தனர் கலந்து கொள்ளும் விழாக்கள் இதுவரை  500 க்கும் மேல் நடத்தி இருக்கின்றேன். ஒவ்வொரு விருந்தும், விழாவும் என் சொந்த  விருந்தென்னும் அக்கறையும் அர்ப்பணிப்பும் முழு மனத்தோடான செயல் பாடும் எங்கள் சார்பில் விடும் தவறுகளுக்கு சாக்கு போக்கு சொல்லாத மன்னிப்பும்  உணர்ந்து திருந்துவதும்  வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதால்  வெற்றிகளை தக்க வைத்து கொண்டுள்ளேன்.

நான் எதிரிகளை உருவாக்குவது இல்லை, என்னை எதிரியாக நினைத்து கொள்வோரை குறித்து கவலை படுவதும் இல்லை  ( மதியாதார், புரியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் 🌻) 

நிறுவன  கருத்தரங்குகள், சர்ச் கூட்டங்கள், சுற்றுலா பயணிகளுக்கான உணவு ஒப்பந்தம், சினிமா சூட்டிங் குரூப்புக்குரிய உணவு  என்று வெவ்வேறு பட்ட அனுபவங்களும் நிரம்ப கிடைத்து இருக்கின்றது. 

உள்ளுர் சுவிஸ் மக்கள், நிறுவனங்கள், சர்ச் கூட்ட்ங்களுக்கும். எங்கள் தமிழ் மக்களில் பலரையும் தொடர் வாடிக்கையாளராக பெற்றிருக்கின்றேன்.  பத்து, பதினைந்து வருடத்துக்கு முந்திய வாடிக்கையாளர்களும்  இன்று வரை தங்கள் வீட்டு விஷேசம் என்றால் எங்களிடம் தொடர்ந்து பொறுப்பை தரும் படி அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றி கொண்டிருக்கின்றேன்.

நிறுவனம் ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் போதிய  அனுபவமின்மை மற்றும் மனிதர்களின் சூது புரிந்து கொள்ளாமையினால் சில சறுக்கல்கள், தவறுகள் விட்டிருந்தாலும்  அதை அனுபவ பாடங்களாகவே உணர்ந்து மீண்டும் அந்த தவறு ஏற்படாத படி திருத்தி கொண்டுள்ளேன் .

ஒருவர், பத்துபேர், ஆயிரம் பேர் என்றாலும் உணவின் சுவையும் பொருள்களின் தரமும் மக்களின் ஆரோக்கியம் குறித்த தனிப்படட அக்கறையும்,அன்றன்று உடனே சமைத்து என் நேரடி கண்காணிப்பில் ஒவ்வொன்றையும் செய்வதும் அன்றிலிருந்து இன்று வரை மாற்றாமல் இருக்கின்றேன். இல்லை என்று சொல்லாமல் கலந்து கொள்வோர் எல்லோருக்கும் உணவு கொடுக்கணும், இது எங்கள் சிறப்பு தகுதி.

அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு எங்கள் உழைப்புக்கு அதிக ஓர்டர்களை பொறுப்பு எடுப்பது இல்லை. நம்பி தந்த ஓடர்களை ஏனோதானோ என நடத்தியதும் இல்லை.
(இதை என் Facebook  நண்பர்களாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள்😍.)

🔻 ஊரவர், உறவினர் என  போட்டி
பொறாமைகள், முன் சிரித்து பின் 
முதுகில் குத்துவோர்,  
🔻 ஒரு பக்கம் காது கேட்பதில் இருக்கும் குறைபாடுகளினால் எதிர்கொள்ளும் தொலைபேசி தொடர்பாடல் சங்கடங்கள், கேலிகளும், சீண்டல்களும், 
🔻 பெண் தானே இவளால் என்ன செய்ய முடியும் எனும் இளக்காரங்கள் கடந்தும் 

என்னை நம்பி தங்கள் வீட்டு விஷேசங்களை ஒப்படைத்து ஆயிரக்கணக்கில் அட்வான்சும் கொடுத்து நல்லுள்ளங்கள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டே வந்தன, இன்று வரை என்னை  எதிர் நீச்சல் போட வைக்கும் அன்பு வாடிக்கையாளர்கள், நண்பர்கள் என்னுடன் இணைந்து பயணிப்பதனால் என் உடல் குறைகள் எனக்கு பெரிதாக தோன்றியது இல்லை. 

 13  வயதில் ( 1987 ) 2 மாடி உயரத்திலிருந்து விழுந்து வலிகள்நிறைந்து கண், காது, தலை என பல உபாதைகளோடு  1990 சுவிஸ் அரசிடம் மருத்துவ உதவி கோரிக்கையோடு வந்தேன். சுவிஸ் அரசின் மாற்று திறனாளிகளுக்கான உதவிகளை பெற்று உழைக்காமல் வாழும் வாய்ப்பு எனது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு, பத்து வருடங்கள் முன் உதவி தொகைக்கு 
ஒப்புதல் கிடைத்த  போதும்  எனக்கு  உடலில் தான்  குறைபாடே தவிர சிந்தனையில் இல்லை என்று அரசின் உதவிகளை மறுத்து, மற்றவர் இரக்கம், பரிதாபத்துக்கு இடம் கொடுக்காமல் சுயமாக உழைத்து பிழைக்கின்றேன். இது வரை என் இயலாமை கூறி ஒரு சதமும் அரசின் உதவி கேட்டது இல்லை . 

வாழ்க்கையில், வியாபாரத்தில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது 
என் மனதில் என்றும் எவர் மேலும் பொறாமையோ போட்டி உணர்வோ தோன்றியதில்லை. 

எந்த குறையுமில்லாதவர்கள்  அடுத்தவர் கையேந்தி வாழ,  தினம் வலிகளோடு போராடி பலரை வாழவைக்கும் என்னை விட எனக்கு யாரும் ரோல் மாடல்கள் இல்லை 
யாராவது என்னிடம் சாதனை பெண் யார் என்று கேட் டால்  நிஷாவாகிய நானே 
என்று சொல்வேன் 😇

நான் நான் தான்...,! ❤️ எனக்கென கிடைக்கணும் என கடவுள் நிச்சயித்தது  அதன் காலத்தில் எனக்கு கிடைக்கும்.
அதுக்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை ❣️❣️ இலட்சங்களில் சம்பாதித்தாலும்  என் இலட்சியம் தடையானது இல்லை ..! என்றும் எளிமையான நிம்மதியான வாழ்க்கையை விரும்புகின்றேன் 🙇‍♀️

எனக்குள் இருக்கும் உரமும், உண்மையும்
நேர்மையும் , தன்னம்பிக்கையும்  என் அம்மா, அப்பா வளர்ப்பில் கிடைத்தது என்றாலும் அதை மெருகூட்டியவர்கள் எனக்கு கிடைத்த Swiss மேலதிகாரிகள் , நண்பர்கள் 🙏

எனது மேலதிகாரிகள் தோழிகளானது எனக்கான வரம் 🙏 நான் அந்நிய மொழியில் புரிந்து கொள்ள, கற்றுக்கொள்ள 
சிரமப்படும் போதெல்லாம் வலிகளில் முலையில் முடங்கி விடாமல்  உன்னால் முடியும் என்றே ஏற்றி வைத்து தினம் ஒவ்வொரு புதிய ஜெர்மன் மொழி சொல் கற்பித்து, ஜெர்மன்  பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகம் வாசிக்க ஊக்கப்படுத்தி வேலையோடு தொழிற்கல்வி. கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்து வேலை வீட்டு ஈவண்ட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்க முன்பே தங்கள் நண்பர்கள் மூலம் விருந்துகள் பரிந்துரைத்து மேலே செல் நிஷாந்தி என்று என்னை மெருகூட்டினார்கள். 

தமிழ் மக்களை மட்டும் அல்ல சுவிஸ் வாடிக்கையாளர்களை நான் நிறுவனம் தொடங்கும் முன்பே பெற்றிருந்தேன் இன்று வரை அவர்களின் ஆதரவு தொடர்கின்றது என்பதுடன் எனக்கான வெற்றி பாதையின்  பயணத்தில் முன் ஒளியாகவும்  இருக்கின்றார்கள். 

என்னை உற்சாகப்படுத்தி வாழ வைக்கும் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் 

தொடர்ந்தும் அனைவர் ஆதரவும் வேண்டி நிற்கின்றேன் 🙏 

❤️ உங்கள் வீட்டு விஷேசம் எப்போதும் நம்ம வீட்டு விசேஷமுங்க ..❤️

கடந்த காலங்களில் நாங்கள் செய்த பார்ட்டிகளின் புகைப்படங்கள் பகிர்கின்றேன் 🌻

Nisha : 
WhatsApp,  Messenger 
00 41787230259

Praba ;
Call: 0041 79  916 87 17 

Gmail: :






























25 மே 2020

ஹெல்ப் மீ

என்னால் என் பதிவுகளில் comment செய்வோருக்கு பதில் comment செய்ய முடியல்ல

யார் பதிவுக்கும் comment  போட முடியவில்லை 😭

Switzerland, Ballenberg திறந்தவெளி அருங்காட்சியத்தில் ஒரு நாள்

Ballenberg, Freilichtmuseum der Schweiz

Ballenberg is an open-air museum in Switzerland

இங்கே சுவிட்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 100 - 150  ( 141, Schweizer Jura) stammt aus dem Jahre 1763 ) வருடங்களுக்கு முந்தைய  வரலாற்று கட்டிடங்கள், பூர்வீக பண்ணை விலங்குகள், அசல் தோட்டங்கள் மற்றும் வயல்களை ஒரு முழு கிராமிய தோற்றத்தில்  109 அசல் கட்டடங்கள் சுவிஸின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் அப்படியே தத்ரூபமாக பாதுகாத்து வருகின்றார்கள்.

அதே விறகடுப்பு, குப்பி விளக்கு & சிம்னி விளக்கு,கரி அயன்பாக்ஸ்
கைத்தறி  ஆடு, கோழி மிருகங்கள் பறவைகள்  என்று அப்படியே நாங்கள் ஊரில் வாழ்ந்த சூழல் கண் முன் நிற்கும். நாம் நடந்து கொண்டிருக்கும் போது  நம்மூர் தெருக்கள் போல் கோழியும் தாராவும்  நாயும்,குறுக்கே கடக்கும்

பிள்ளைகளுக்கு இனிய அனுபவம் கிடைக்கும். நான்  முதல் தடவை போன போது  எங்கள் கிராமிய சூழலை அங்கே கண்டேன், உணர்ந்தேன்.

இப்படி இருந்த நாடா 100 வருடத்தில் இப்படி மாறி நவீனமாகி வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது எனும் ஆச்சரியம் அந்த இடத்தை சுற்றி பார்த்து வெளியில் வரும் எமக்குள் தோன்றுவது நிச்சயம்

இந்த இடத்தில முழுதும் ரசித்து சுத்தி பார்க்க ஒரு முழு நாள் தேவை படும் , ஊரை சுத்தி  நடக்கணும், ஒய்வு எடுத்து  ஆறுதலாக இயற்கையோடு ஒரு நாள் அழகாக்கி தரும் இடம்

Interlaken வாருங்கள் சுத்தலாம்

சுத்தி முடிந்து பசியோட வந்தால் Hegas Catering, Best Indian,Srilanken & Swiss Food Services
சாப்பாடு சுட சுட இருக்கும் 🌻😂

மேலும் விபரமாக இங்கே எழுதி இருக்கேன்


🙏 நிஷா


















கோடை விடுமுறைக்கு ❤️ INTERLAKEN ❤️ வாருங்கள் ...

கோடை விடுமுறைக்கு ❤️ INTERLAKEN ❤️
வாருங்கள் ...🏕🏝🏖🏘⛰🌋⛱

Top Tourist area in Switzerland

கோடை விடுமுறை நாட்களை அழகான மலைக் கிராமத்து சூழலில் 

❣️ வாகனப்போக்குவரத்தும், நெரிசலும் இல்லாத இதமான தட்பவெப்பம் , செவிக்கு இனிமையாக அசையும் அமைதியான பச்சை வர்ணவயல்  நிலங்கள், பார்க்கும் இடமெல்லாம் பூந்தோட்டங்கள், 
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வெண்பனி முகடுகளிலிருந்து தவழ்ந்து வரும்
சுத்தமான மலைக்காற்று..! 

❣️ Brienzersee and  Thunersee  எனும் இரு பெரும் நதிகளின் கப்பல் பயணம் 

❣️ நதி நீராடல் : அவ்விடமே இறைச்சியும்சோளன் சுட்டு சாப்பிடும் வசதி 

❣️ மலைகளின் அடிவாரத்திலிறந்து மலை உச்சி நோக்கிய  கேபிள் கார் பயணம் அங்கிருந்து  Rodel Bahn விளையாட்டுகள் 

❣️ 150  வருட தொன்மை மிகு கிராமம் ( மியூசியம் ) ஒரு முழு நாள் சுற்றி பார்க்க வேண்டும். அப்படியே எங்கள் சொந்த கிராமத்து வாழ்க்கைக்கு சென்று மீண்டு வருவோம்.
❣️ பாராகிளைடிங்
❣️ மலை ஏற்றம் was ich 
❣️ குதிரையில் பயணம் 
❣️ குழந்தை முதல் பெரியவர்கள் வரை அலுத்து சலிக்காத உல்லாச உணர்வு 
❣️ ஊர் சுற்றி அலுத்து களைத்து வந்தால்  சுத்தம்,தரம்,ஆரோக்கியம் நிறைந்த  நாவுக்கு சுவையான உணவு 

• காலை 
• மதியம் லஞ்ச் பாக்கெட் ( விரும்பினால்) 
• இரவு சுடசுட பிரியாணி, கொத்துரொட்டி, இடியப்பம், புட்டு , இட்லி தோசை சட்னி சாம்பார்,  அப்பம் என  நீங்கள் விரும்பும் உணவுகள் அனைத்தும் 

நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி 12.50 
SFr. தொடக்கம்  14.50 SFr க்குள் 
கிட்ஸ் ஸ்பெஷல்: 7.50 SFr.
Chicken nuggets Pommes 

🌻 அனைத்தும் ஒழுங்கு செய்து தருகின்றோம். 

Note: 
🍔 உணவு தேவைக்கு : 
best and First ( முன் கூட்டிய ஆர்டர்) 

⛺️ தங்குமிடம் விரும்பினால் குரூப் அல்லது தனி நபர்கள் தேவைக்கு ஏற்றபடி ஒழுங்கு செய்து தருகின்றோம் ( இணையத்தில் பார்த்து  புக்கிங் செய்வதை விட குறைவாக நேரில் சென்று பேசி )  விலை விபரம் அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் இருக்கும்.தங்குமிட ஒழுங்குக்குரிய பணம் மட்டும் அவ்விட உரிமையாளருக்கு கொடுத்தால் போதும் ( எங்கள் சேவைக்கு  கமிஷன் வேண்டாம்) 

WhatsApp மெசேஜில்  அல்லது Gmail மூலம் ஜேர்மன், Tamil , English  மொழிகளில் எழுத்தில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் தொடர்புலக்கம் கொடுத்தால் நாங்கள் போன் செய்து பேசி தெளிவு படுத்துவோம். 

Contact: Praba & Nishanthi 

WhatsApp : 0041 78 723 0259 
Phone : 0041 79  916 87 17

உங்களின் ஆதரவு வேண்டும் ....!

நன்றியோடு 
உங்கள் நிஷா 🙏
















🎁  வெளிநாடுகளில் ( இலங்கை உட்பட ) இருக்கும்  Facebook நண்பர்கள் அல்லது உள் நாட்டில் இருக்கும் நண்பர்கள் எனது பதிவை ஷேர் செய்து அதன் மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி எங்களை தொடர்பு கொண்டால் அதை அவர்களும் நீங்களும்
உறுதிப்படுத்தினால் உங்கள் தகவல் பகிர்வுக்காக உணவுக்கான மொத்த செலவில் 10%  discount  தருவேன் என்று உறுதி தருகின்றேன்.