23 மே 2020

நன்றி சொல்லும் நாள் விருந்தொன்று...!

எங்கள் பக்கம்  குழந்தை பிறந்து 31  ம் நாள்  விருந்து வைப்பது. ஒரு வகை நன்றி சொல்லும் சடங்கு

சிலர் ஒரு மாதம் , மூன்று மாதம் என சூழலுக்கு ஏற்ற மாதிரி ஆசீர்வாதம் நன்றி சொல்லும் நாள் விருந்தொன்று வைத்து அதுவரை உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்வார்கள்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு வகையில் தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஆரோக்கியம் வேண்டி  பிரார்த்திக்க, ஆசிர்வதிக்க  மத குருக்களை அழைப்பது உண்டு. பொதுவா கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மத்தவங்க வீட்டுக்கு  வர மாடடார்கள் என்பதால் கோயிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்வார்கள். கிறிஸ்தவ போதகர் வீட்டுக்கு வருவாங்க . குழந்தையை சர்ச்சில் பிரதிஷடை செய்வார்கள்.

இது உளவியல் சார்ந்த நம்பிக்கை.

அதுக்கு தீட்டுகழித்தல் என சில இடத்தில சொல்வார்கள்.

எங்கள் பக்கம் ( மடடகளப்பில் -  முன்னர் ) அதுக்கு தொடக்கு கழிவுன்ன்னு சொல்லிக்குவாங்க என்றாலும் அதன் பின்னணி காரணம் வேறு. (  இப்போது எப்படி என்று தெரியல்ல ) 

31  நாள் விருந்து முக்கியம்...! 
இறைச்சி சாப்பாடு , பார்ட்டி என களை கட்டும். எத்தனை கஷ்டம் என்றாலும் இந்த நாள் கொண்டாட்டம் ஒரு  வகை பாசிடிவ் அலையை உருவாக்கும் 

அப்பல்லாம் பெண்கள் பிள்ளை பிறந்து ஒரு மாதம் வரை வீட்டில் எந்த வேலையும் செய்ய விட மாடடாங்க.

கிணற்றில் நீர் அள்ளுவது 
மா இடிப்பது 
அம்மியில் அரைப்பது 
விறகடுப்பில் சமைப்பது என பிள்ளை பிறந்து ஒரு மாதம் வரை உதவிக்கு சொந்த பந்தம் வந்து நிற்கும். அதுக்கு பின்  பிள்ளை பிறப்பு, பராமரிப்பு  வந்து பார்த்து விசாரித்து பரிசு கொடுக்கும் 
  கர்ப்பகாலத்தில் விதவிதமாக உணவு சமைத்து தந்த உறவுகளுக்கு நன்றி சொல்லி விருந்து கொடுப்பார்கள்.

பிள்ளை பேறு  பார்த்த மருத்துவர்  முதல் உடனிருந்து உதவி செய்த வயதான முதியோருக்கு சேலை,  சாரம் வாங்கி கொடுப்பார்கள்.

வேலை செய்யும் ஊழியருக்கு புது துணி கொடுப்பது உண்டு.

அன்று  பிறந்த முடி எடுத்தால் பாபருக்கும் பரிசு உண்டு.

அந்த காலத்தில் குழந்தை பிறந்தால் தாய் உடுத்தும். துணி தினம் சலவை தொழில் செய்வோர் வந்து எடுத்து போய் கழுவுவார்கள்.அவர்களுக்கும் இந்த நாளில்  புது துணி சாப்பாடு காசு என கொடுப்பார்கள் 

இம்மாதிரி சடங்குகள் பாரம்பரியம் கொண்டதும்   பலருக்கு  தொழில் வாய்ப்பை உருவாக்கவும் உதவியது.

நல்லது தான். பல விடயங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வேறு பாடு உண்டு.நாங்கள் நல்லதை தொடர்வதில் தப்பே இல்லை.

இதில் தமிழ் நாட்டு பழக்க வழக்கம் இலங்கை பழக்கம் என்பதை விட அதன் பின் இருக்கும் உள்ளார்ந்த நம்பிக்கை, நன்றி சொல்லும் உணர்வு முக்கியம்

இன்னும் சுவாரஷ்யமான பின்னுட்ட்ங்கள் 


2 கருத்துகள்:

  1. எங்கள ஊரிலும் தொட்டிலில் போடும் வைபவம் என்று சொல்லி
    இதே மாதிரி செய்வார்கள்.இலங்கையில் சொந்த பந்தம் புடைசூழ இருந்த நாம் இங்கு தனியவே எல்லாவற்றையும் செய்யும் நிலமை .
    பெரும்பாலும் உங்கள் ஆக்கங்கள் படித்தாலும் இன்றுதான் கருத்து இடுகிறேன் .நன்றி நிஷா

    பதிலளிநீக்கு
  2. நன்றி சொல்லும் விருந்து. நல்ல விஷயம். தமிழகத்திலும் இப்படி சில உண்டு. 31-ஆம் நாளுக்கு பதில் இன்னும் சில நாட்கள் முன்னதாகவே செய்வார்கள் நிஷா.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!