30.04.2020
இன்று வியாழன் அதிகாலை 5.50 இருந்து சொறிக்கல்முனை கிராமத்தில் 380 Kg கத்தரிக்காய்
27.04.2020
திங்கள் இரண்டாம் கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராம விவசாயிகளிடமிருந்து 1117 Kg கத்தரிக்காய் (1Kg -25/ )
25.04.2020
கடத்த சனிக்கிழமை முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து கத்தரிக்காய் 1Kg 20/= மற்றும் வெண்டிக்காய் 1Kg 30/= க்கும் 650 Kg மரக்கறிகள் இது வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து இருக்கின்றார்கள்
⬇️d
திடீர் ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையினை முடங்கி போட்டது
உள்ளூர் விவசாய உற்பத்திகள் வெளியூருக்கு செல்ல முடியாமல் தேங்கி விரயமாவதாக தினம் ஒரு விவசாயியின் குரல் வலியோடும் வெளி வருகின்றது.
ஒரு பக்கம் உணவு இல்லை ..!
இன்னொரு பக்கம் அதிக விளைச்சல் பயன் படுத்துவோர் இல்லை....!
இரண்டையும் சமநிலை படுத்தும்கடமை அப்பகுதி அதிகாரிகளுக்கு உண்டு.
இப்பிரச்சனைக்கு மிக எளிதான தீர்வுகளை முன்னெடுத்து வழி காட்டி இருக்கின்றார்கள் எங்கள் இளையோர்..!👏
வினோஜ் குமார் பல்கலை பல்கலை கழக மாணவன், இளம் விஞ்ஞானி
இவர் தலைமையில் சிறு குழுவொன்று தன்னார்வலர்களாக இணைந்து ஊரடங்கு கால நிவாரணப்பணிகளை மேற்கொண்டு
வருகின்றார்கள்
கடந்த சில தினங்களில் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க சென்றிருந்த போது மரக்கறிகள் ( வெண்டி மற்றும் கத்தரி ) விற்கப்படாமல் பாதைகளில் கிடப்பதைக் கண்டு பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
அவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு சிறப்பான தீர்வு ஒன்றையும் இந்த இளம் தன்னார்வலர்கள் மூலம் செயல் படுத்தி இருக்கின்றார் 😇
அதனையடுத்து ஒவ்வொருவரும் நாளும் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து காரைதீவில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இருவரும் இணைந்து இளம் தன்னார்வலர் குழுவுக்கு வழி காட்டி விவசாயிகள் மற்றும் மக்கள் தேவைகளை சரியான நேரத்தில் தெளிவாக சமப்படுத்தி இருக்கின்றார்கள்.👏😇
அதே போல் ஏனைய பகுதி விவசாய உற்பத்தி பொருள்களையும் மக்கள் தேவைகளையும் காலமறிந்த் இணைக்கும் பணியில் அதிகாரிகள் தம் கடமைகளை உணர்ந்து செயல் படலாமே?
•
நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்களான இளையோர் நேரடியாக விவசாய தோட்ட்ங்கள் சென்று தானே தமக்கு தேவையானதை பறித்து கொள்வதால் வேலையாள் ஆள் கூலி இல்லாமல் நேரடி கொள்வனவு விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருவருக்கும் நஷ்டம் இல்லாமல்
இருக்கும்.
உடனுக்குடன் பறித்து கொள்வதால் நன்கு ஐந்து நாள்கள் வைத்து சமைக்கலாம் என்பதால் நிவாரண பொருளில் பருப்பு மின் ரின் போன்ற இறக்கு மதி பொருள்களை தவிர்த்து உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முன் உரிமை கொடுக்கலாம்.
டிப்ஸ் 🙇🏻
நன்நீர் நிறைந்த அகன்ற பாத்திரத்தில் கத்தரிக்காய் போட்டு வைத்தால் வாடாமலும் அழுகாமல் இருக்கும் , இலங்கையில் நாங்கள் வாழ்ந்த போது கத்தரிக்காய் மலிவான காலத்தில் வாங்கி கிணற்றில் போட்டு தினம் தேவைக்கு எடுத்து சமைப்போம்
இவ்வாறான திடடமிடட சீரான செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவிப்பதும் பகிர்ந்து பரப்புவதும் இன்னும் பலருக்கு விழிப்புணர்வை தரும்.
இப்படியான முன் மாதிரிகளை பின் பற்றுவோர் தங்கள் காலத்துக்கு ஏற்ற சிறந்த செயல் பாடுகளை பகிருங்கள். பலருக்கு அது வழிகாட்டிடலாக இருக்கும்
Nisha 🙏